Showing posts with label சுய புராணம். Show all posts
Showing posts with label சுய புராணம். Show all posts

Monday, 11 March 2013

நாலு வரியில் (என்) நாஞ்சில் நாடு

நாஞ்சில் நாட்டில் வா(ழ்)க்கப்பட்டதால் ஆய பயன்(கள்)
 
- அவியல்
- குழல் புட்டு பயிறு பழம் பப்படம்
- மரவள்ளிக்கிழங்கு அடை தோசை
- தீயல்
- கருத்தகறி
- வறுத்து அரச்சது
- ஆப்பம் குருமா
  - ரச வடை
 
-  இலைப்பணியாரம் 
- கொழக்கட்டை ப்ரை
- கொள்ளுப்பொடி
- செவ்வாழைப்பழம் 
-  அடை  பாயாசம் , சம்பா அவல்
 
-ம் அப்பறம் .....
- அஞ்சே நிமிஷத்தில் மருங்கூர் முருகன்;  சுசீந்திரம்
தாணுமாலயன், விஸ்வரூப ஆஞ்சநேயர்;
இருபது நிமிஷத்தில் கன்னியாகுமரியம்மன்; 



- திற்பரப்பு அருவி குளியல்

 
 
அப்பறம்...

அப்பறம்...
அப்பறம்...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


(சொல்லலைன்னா தர்ம அடி விழும் என்பதால்...)
 

 
 
 
 
 
 
... கதிர் :):)

Thursday, 28 February 2013

Shake 'em up with ScootyGiri



சென்ற திங்கள் கிழமை மாலை சுமார் ஐந்து மணியளவில் நான் ஒரு யமஹா பைக்கை உடைச்சுட்டேன்.

பஸ் முழுக்க இடம் இருந்தாலும் டீனேஜ் பொண்ணுங்களை இடிச்சுட்டு நிக்கற சில பெருசுஸ் மாதிரி ஆபீசின் அவ்ளோ பெரிய பார்க்கிங்கில் என் ஸ்கூட்டி பக்கத்துல ஒருத்தன் இல்ல ர் யமஹாவை நிறுத்தி இருந்தார்.

நான் சாயங்காலம் வீட்டுக்கு போற அவசரத்துல வண்டிய எடுக்க யமஹால இடிச்சு...நம்ப மாட்டீங்க... நிஜமாவே யமஹா கீழ விழுந்துச்சு.

அப்பன்னு அங்கே ஒரு வெட்டுக்கிளி, குருவி கூட இல்ல....(எத்தனை நாளைக்கு தான் ஈ காக்கான்னு...ஒரு சேஞ்சுக்கு...) உடனே நான் என் வண்டிய அப்டியே நிறுத்திட்டு செக்யூரிடிகிட்ட போனேன்.

இந்த மாதிரி "அங்க வண்டி விழுந்துச்சு...கொஞ்சம் என்கூட வாங்க..."ன்னு கூப்பிட்டு போய் வண்டிய தூக்கி வெச்சா ...

நீங்களே சொல்லுங்க... பொதுவா ஒரு பைக் இடது பக்கமா விழுந்தா என்னவெல்லாம் உடைய வாய்ப்பு இருக்கு?சைட்  வியூ மிரர், இல்ல ரொம்ப பலமா விழுந்தா லெப்ட் இன்டிகேடர், கிக் ஸ்டார்டர், லெக் சப்போர்ட் இதெல்லாம். ஆனா இந்த பைக்ல இதெல்லாம் பத்திரமா இருக்க, ஹெட்லைட் கண்ணாடி காலி.....சுக்கு ஆயிரமா... சில்லு சில்லா... இன்னும் இந்த உவமையில் என்னவெல்லாம் இருக்கோ..அத்தனையாவும் போச்சு ..

செக்யூரிடியிடம் என் நம்பர், இமெயில் முதலானவைகளை கொடுத்து பைக்காரர் வந்தால் என்னை தொடர்பு கொள்ள சொல்லிவிட்டு வீட்டுக்கு போய்ட்டேன்;

"போன முறை நம்ம பார்க்கிங்கில் நம்ம கார்ல எவனோ கோடு ...கோடு ன்னு கூட சொல்ல முடியாது..கிட்டதட்ட ரோடே போட்டுட்டு சொல்லாம கொள்ளாம ஓடிட்டான்.டூ வீலர்க்கே இவ்வளவு ஓவர் ரியாக்சன் பண்ண ஆள் நீயா தான் இருப்ப...நல்லா வருவ ...." ன்னு கதிர்.

"யமஹா வண்டி ஹெட்லைட் கண்ணாடி எவ்வளவு இருக்கும்"ன்னு ட்விட்டர் பேஸ்புக்ல எல்லாம் விசாரிச்சுட்டு மறுநாள் ஆபீஸ் வந்தேன்.

வந்து கொஞ்ச நேரத்துலயே  எதிர்பார்த்த மாதிரி ஆபீஸ் மெசஞ்சரில் "பைக் க்ரீவன்ஸ் பத்தி பேசணும். கால் மீ" என்றொரு மெஸேஜ். கால் பண்ணிட்டு, நேர்ல பேசறேன்னு சொல்லி ஏழாவது மாடிக்கு போனேன்.அவன நீங்க பாக்கணுமே...பைக்  ஓட்றவன் எல்லாரும் அஜீத் இல்ல....அவ்ளோ தான் சொல்ல முடியும்.

நீள முடி (பையன் தான்), ப்லாரசன்ட் கலர் சட்டை, முக்கா பேண்ட், கவ் பாய் ஷூ.... (அடிச்சிட போறான்...ன்னு கொஞ்சம் தள்ளி நின்னுகிட்டே சொன்னேன்)

"இந்த மாதிரி ஒடஞ்சுட்டு...காசு குடுத்துடறேன்"

"அது சாதாரணமா கடைல வாங்கின பைக் இல்ல...ஒரு ஒரு பார்ட்டும் பாத்து பாத்து வாங்கி அசெம்பில் பண்ணது (நீயே அசெம்பில் பண்ண மாதிரி தான் இருக்க....இப்ப புரியுது....மத்ததெல்லாம் ஒடையாம ஹெட்லைட் கண்ணாடி ஒடஞ்ச மர்மம்) அந்த கண்ணாடி மட்டும் தனியா கெடைக்காது. முழு லைட்டையும் மாத்தணும். அப்றோம் ஃ ப்யூயல் டாங்க்கு நெளிஞ்சுருக்கு.
இண்டிகேட்டர் கூட வேலை செய்யலை...இப்புடி எப்டி நடந்துச்சு....எனக்கு ஆச்சர்யமா இருக்கு..." - அவன் சொல்லிட்டே போக என்கிட்டே ரீஇம்பர்ஸ் பண்ணி ஒரு புது பைக்கே வாங்க திட்டம் தீட்டற மாதிரி இருந்துச்சு எனக்கு....

"சரி மன்னிச்சுடு.ரொம்ப பக்கத்துல பார்க் பண்ணதால இடிச்சுடுச்சு...நீ உன் பைக்க காமி..நான் எதுக்கெல்லாம் காசு குடுக்கணும்ன்னு பேசி தீத்துக்குவோம்"
(ஆங்கில உரையாடல் என்பதால் ஒருமையில் மொழிபெயர்த்துட்டேன்)

"எனக்கு கூட இப்படி நடக்கலாம் ...எதுக்கு மன்னிப்பெல்லாம்...(ரொம்ப நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) இன்பாக்ட் உடைஞ்சதையே நான் கவனிக்கலை...செக்யூரிட்டி வந்து மேடம் போன் பண்ண சொன்னாங்கன்னு சொல்ற வரைக்கும்...ஹெட்லைட்ட மட்டும் மாத்தி குடு " (அவன் கூட போன் பண்ண சொல்றவங்கல்லாம் கௌசல்யா இல்லன்னு நெனச்சுருப்பான்)

"இல்ல நீயே மாத்திடு...நான் காசு தந்துடறேன்"

சொல்லிட்டு வந்துட்டேன்.

நேத்து இன்னொரு மெயில்.
"லக்கிலி அந்த கண்ணாடி கிடைச்சுடுச்சு.மாத்திட்டேன் கண்ணாடி 166/- மெக்கானிக் சார்ஜ் 66/-...நீ 200/- குடுத்தா போதும்"  (வான்டடா வந்து ஆஜர் ஆனதால எனக்கு பத்து பெர்சண்ட் தள்ளுபடி)

இன்னைக்கு பணம் குடுத்துட்டு வந்ததும் பின்னாடியே இன்னொரு மெசேஜ்.

"Appreciated…legitimate ppl are hardly ever found in this globe…thnks" (என் கால் நகம் பேர்ந்துடாம, பல்லு ஒடையாம, இருநூறு ரூபாய்க்கு போஸ்ட்க்கு மேட்டர் தேத்தி குடுத்ததுக்கு நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்..)

இன்னைக்கு ஒரு ராயல் என்பீல்ட் பக்கத்துல வண்டி நிறுத்தி இருக்கேன். ஆமா ராயல் என்பீல்ட் ஹெட்லைட் கண்ணாடி என்ன விலை?

Wednesday, 7 September 2011

தேங்க்ஸ்மா


பாண்டிச்சேரி ராஜா தியேட்டர்.
நாள்: ஆகஸ்ட் முப்பத்தொன்னு.
நேரம்: காலை ஆறேகால் மணி.

நாங்க அந்த வழியா ஒரு கல்யாணத்துக்கு போய்க்கிட்டுருந்தோம்.
"மலையோடு மோது தலையோட மோதாத...இப்படிக்கு தல In தம்பிகள்" ன்னு போஸ்டர். ஏகப்பட்ட பேர் டிக்கட் வாங்க க்யூவில் நிக்கறாங்க.

"கல்யாணத்தை கட் பண்ணிட்டு நாமளும் போய் க்யூவில் நின்னுருவோமா?"

"அட்லீஸ்ட் இந்த கூட்டத்தை படமெடுத்து ட்விட்டர்ல போடணும்."



மாயாஜால். சென்னை.

"கெடைக்காது. ரெண்டு நாள் தான் ஆகுது படம் வந்து. வெள்ளிக்கிழமை சாயங்காலம் வேற. இதெல்லாம் ஓவர் கான்பிடன்ஸ். பேசாம நேரா வீட்டுக்கே போலாம். நேரத்துக்கு வந்தோம்ன்னாவது இருக்கும்."

" ட்ரை பண்லாம் வா."

கவுண்டர்ல போய் "மங்காத்தா மூணு டிக்கட் வேணும்; இருக்கா?"

"வாங்க வாங்க, எந்த ஷோ வேணும்? 5:30, 6:15?? Which row you want sir?"

உடனே என் தம்பிக்கு போன் போட்டேன். "டேய் டிக்கட்லாம் கிட்ட தட்ட சும்மா தராய்ங்க"

"ஏண்டீ இன்னுமா நீ அஜீத் படமெல்லாம் பாக்கற?"

"என்ன தான் அஜித்தை வெறுத்துட்டாலும் அவர் படம் ரிலீஸ் ஆகறப்போ இந்த படமாச்சும் ஓடனும்ன்னு மனசுல ஒரு ஆசை வருதுடா"

"சரி பாத்துட்டு போன் பண்ணு"

Ok,  relax இதுக்கு மேல சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல், நாப்பது வயசுன்னு எல்லாம் தல இமேஜ் பாக்காதது, படத்துல கடைசில திருடனை போலீஸ் ஆக்காம போலீசை திருடனாக்குனது, வெளையாடு மங்காத்தான்னு நடன முயற்சி,நானும் மாஸ் ஹீரோன்னு foul language பேசினது, 'ஆறு மாசத்துக்கு பிறகு'ன்னு போட்டு ஹீரோயினோட பாட்டு பாடற மாதிரி டெம்ப்ளேட் இல்லாம த்ரிஷாவ அப்டியே அழுகாச்சியா கழட்டி விட்டது etc etc, இதை எல்லாம் நான் திரும்ப அரைக்க போறதில்லை.

படம் முடிஞ்சு என் தம்பிக்கு ஒரு போன் போட்டேன்.

"செம படம் டா"

-----------------

மங்காத்தா பற்றிய ட்வீட்களில் எனது பேவரைட்.

ராகவன்,அன்புச்செல்வன்,துரைசிங்கம் இவங்க எல்லாம் ட்யூட்டில இருந்தாத்தான் படம் ஓடும் விநாயக் சஸ்பென்ஷன்ல இருந்தாலே படம்ஓடும்

via @SAIALAGAPPAN.

----------------

இது ஏகப்பட்ட(எத்தின்னு எல்லாம் கேக்கப்படாது) லைக்குகள் வாங்கிய என் பேஸ்புக் ஸ்டேடஸ்.

Vinayak Mahadevan was a good one from Ajit.
---------------

சமீபத்தில் வாசித்தது 'ஒரே ஒரு துரோகம்'. வாசிக்க காத்திருப்பது 'Revolution 2020' மற்றும் 'மூன்றாம் உலக போர்' புத்தகமாக எப்போது வருமென்று.

---------------

அதே சூப்பர் சிங்கரை தான் விடாமல் பார்த்துட்டுருக்கேன். கிருஷ்ணமூர்த்தியை ரவியும், ரவியை அல்காவும் மறக்கடித்தது போல் இந்த சீசனில் அல்காவை யாரும் மறக்கடிக்க வில்லை எனக்கு. அதனால் பேவரைட் என்று யாருமில்லை.

சொல்ல மறந்துட்டேனே... பாண்டிச்சேரி கடலூர் சாலையில் டிரைவ்
பண்ணிக்கொண்டிருக்கும் போது Kathir சடன் ப்ரேக் அடித்து சொன்னார்.

"ஹே இங்க பாரு அல்கா வீடு."

Anugraha Satellite Township :)

--------------


எங்கள் கல்லூரி ஹாஸ்டல் மற்றும் என் கசின்கள் நிறைய பேர் எழுத்தாளர் ரமணி சந்திரன் அவர்களின் தீவிர ரசிகைகள். நானும் ஆரம்பத்தில் சில நாவல்கள் படித்து இருக்கிறேன். அவர் ஒரே கதையை பேரையும் ஊரையும் மாத்தி போட்டு நடு நடுவே மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு சுத்தி சுத்தி அடிக்கறாரோ என்று எனக்கு ஒரு புரிதல் இருந்தது.சில வாரங்களுக்கு முன் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக வந்து சில அத்தியாவசியமான கருத்துக்களை அனாயாசமாக சொன்னார். பெண் சுதந்திரம் என்பதில் இருக்கும் தவறான புரிதலை தாம்பத்தியத்துக்குள் நுழைக்க முயன்ற கருத்துக்களுக்கு அற்புதமாக பதிலடி கொடுத்தார். ஒரு பெண் "என் கணவர் அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்ததும் அவருடைய ஷூவை கழற்றி விடுவது எனக்கு மிகவும் பிடித்த வேலை" என்று சொல்லி எதிரணியினரின் கேலிக்கு ஆளானார். "அவரும் இத மாதிரி உங்க ஷூவை கழற்றி விடுவாரா? " என்பது எதிரணியின் கேலி கேள்வி. நம்ம எழுத்தாளர் அழகாக சொன்னார், "அந்த கணவர் தன மனைவியிடம் ஷூவை கழற்றி விட உத்தரவிட்டு அதை அந்த பெண் கடமைக்காக செய்தால் மட்டுமே இது பெண்சுதந்திர பிரச்சனை. அந்த பெண் தானே விரும்பி செய்யும் வகையில் இதை சுதந்திரத்தோடு சம்பந்தபடுத்தி விவாதிக்க வேண்டியதில்லை.அதே போல அந்த கணவர் திரும்ப அந்த பெண்ணுக்கு ஷூவை கழற்றி விட்டு தான் தன் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை, தலையை தடவி கொடுத்தலில் கூட தன் நன்றியை வெளிப்படுத்தலாம். நீ செஞ்சா நான் செய்வேன் என்பது தவறான புரிதல்"

முழு நிகழ்ச்சியும் பார்க்க விரும்புபவர்கள் இங்கே கிளிக்.

link via @sathishvasan
--------------


இடம் பாண்டிச்சேரி பீச்

ஒரு புதிதாக திருமணமான ஜோடி (ன்னு நெனைக்கிறேன்)

கணவர் வளைத்து வளைத்து மனைவியை போட்டோ எடுத்து கொண்டு இருந்தார். நான்: பாருங்க, மனைவியை ரசிச்சு ரசிச்சு போட்டோ எடுக்கறார். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும். ஹம்ம்.

கதிர்: உக்கும். டிஜிடல் காமெரா இருக்கதால எடுக்கறாய்ங்க. இதே அந்த பழைய ரோல் காமெரா வாங்கி கொடு. ஒவ்வொரு பிலிமும் காசு.ஒரு பய போட்டோ எடுக்க மாட்டான்.

---------------

எனக்கு காலை ஆறரையில் இருந்து ஏழரை ஒரு மூன்று மணிநேரமாக இருந்தால் நலம். அர்ஜூனை எழுப்புவது முதல் பள்ளிக்கு அனுப்பும் நேரம். இன்றைக்கு காலை சற்று பரபரப்பு அதிகமாகி விட்டது. நான் எழுந்திருக்க தாமதம். கீரை நேற்றே நறுக்கி வைக்காததால் தாமதம். இதனால் அவனை எழுப்புவது தள்ளி போய் கிளப்புவதில் ஒரே அவசரம். எப்படியோ வாயில் சாப்பாடை திணித்து, ஸ்நாக்ஸ் பாக்ஸ் பேக்கிங் எல்லாம் முடித்து கரெக்டாக கிளப்பி விட்டேன். கதவு வரைக்கும் போனவன் என்ன நினைத்தானோ திரும்பி பார்த்து சொன்னான். "தேங்க்ஸ்மா"
--------------

Wednesday, 22 September 2010

எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும்!

"What? All set to be decked up for 10 days?"

Yeah Yeah...Leaving tomorrow...planned fully...one function on saturday and one on sunday...bought a new face cream from lakme...5th anniversary is also falling in vacation time; may be we will chill out in the beaches of Kerala..."


நீண்ட விடுமுறைக்கு செல்வதற்கு முதல் நாள்,இப்படி கூகிள் சாட்டில் யாரிடமும் பீட்டர் விடுவதற்கு முன், சற்று யோசித்தல் நலம்.ஒருவேளை
வந்ததும் இப்படி ஒரு பதிவு எழுதும் விதி நமக்கு வாய்த்திருக்கலாம்.

"அந்த ப்ளூ கலர் குர்தா நல்லா இருக்கு. ஆனா அவ்வளவா வொர்க் இல்லை.இந்த பச்சை கலர் சுமார்.ஆனா அர்ஜுன் சைஸ்க்கு பெரிசா இருக்கே...அந்த மரூன் ஏதோ கொஞ்சம் பரவால்ல.லைனிங் இருக்குல்ல?புள்ளைக்கு குத்தக்கூடாது பாருங்க. ஸ்டோன்ஸ் கூட கொஞ்சம் வெச்சு
வொர்க் பண்ணி இருக்கலாம்...கொள்ளை வேலை வெச்சு விக்கறீங்க.வெளில பிரஷ்ஷர் குக்கர் ப்ரீ ன்னு போட்ருக்கே அந்த offer இன்னும் இருக்குல்ல?" இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு ஆயிரம் ரூபாய்க்கு கலாமந்திர் கடையில் வாங்கிய பையனின் குர்த்தாவை பெங்களூரிலேயே வைத்து விட்டு ஊருக்கு போய்விட நேரலாம். அதை போய் இறங்கியதும் உணர்ந்து விட்டாலும், "வந்ததும் பெட்டியில் என்ன குடைஞ்சுட்டு இருக்க?" என்ற கேள்விக்கு "ஒன்னும் இல்லையே" என்று பொதுவில் சொல்லி விட்டு, தனியாக கணவர் நல்ல மூடில் இருக்கும் சமயமாக பார்த்து, "என்னங்க I did one blunder" அப்படி ஆரம்பித்து, "நீங்க திட்டலைன்னா சொல்றேன்" மற்றும் இன்ன பிற முன், பின் இடை செருகல்களுடன், கணவரிடம் மேட்டரை உடைக்கும் போது, அவர் கத்தாமல், திட்டாமல், ஒரு முறைப்புடன் இந்த பிரச்சனையை கடந்து சென்றால் அன்னைக்கு கிரக நிலை சாதகமாக இருக்கிறது என்று அர்த்தம்....அன்று எந்த காரியத்தையும் நம்பி துவங்கலாம்.

ஊரில் நடக்கும் விஷேஷங்களுக்கு மட்டுமே நகை அணியும் வழக்கம் என்பதால், அவை ஊர் லாக்கரில் தூங்கிக்கொண்டு இருக்கும். வியாழக்கிழமை காலையே ஊரில் போய் இறங்கி இருந்தாலும், சனியும் ஞாயிறும் தானே விசேஷம், லாக்கருக்கு நாளைக்கு போய் கொள்ளலாம் நகை எடுக்க....என்று அலட்சியமாக இருந்து விட, வியாழன் இரவு தான் உறைக்கும், வெள்ளிக்கிழமை ரம்ஜான், சனி விநாயகர் சதுர்த்தி, அடுத்து ஞாயிறு விடுமுறை என்று லாக்கர் திறக்க வழியே இல்லை. "அப்பாடா bank போகும் வேலை மிச்சம்" என்பதான நிம்மதியும், "ஆமா நகை எல்லாம் போட்டுக்கொண்டால் மட்டும் என்ன புதிதாக...." என்பதுமாக கலந்து கட்டி கணவர் விசில் அடித்து சிரிக்கும் காட்சியை எல்லாம் சமாளிக்க நிறைய பொறுமையையும் பெங்களூரில் இருந்தே KPN இல் லக்கேஜ் காசு கொடுத்தாவது அள்ளிக்கொண்டு போய்விடுதல் முக்கியம்.

'சரி அர்ஜூன்க்கு,நல்ல பெருமாள்ல போய் ஒரு டிரஸ் வாங்கி சமாளிப்போம்' என்று அவரே பிரச்சனைக்கு தீர்வும் கண்டு கூட்டி போய், ஒரு டிரஸ்ஸையும் செலக்ட் பண்ணி விட்டு "pack பண்ணிட்டு வா..நான் பில்லிங்ல இருக்கேன்", என்று கிளம்பி விட, 'இதான் டைம்' என்று யாரும் கவனிக்கிறார்களா என்று உறுதி படுத்தி கொண்டு அப்படியே அங்கே இருக்கும் பெரிய கண்ணாடி பக்கம் போய் முகம் பார்த்தால் பார்த்தால் ஐயோ! அதிர்ச்சி...முகம் முழுக்க ஏதோ அலர்ஜி ஆனது போல...புதிதாக ட்ரை பண்ணிய lakme பல்லை இளித்து :-(
பேசாம முகம் கழுவினோமா, பொட்டு வைத்தோமா என்றில்லாமல் எதுக்கு இந்த க்ரீம் முயற்சி எல்லாம்.சரி நேரம் அப்படி.சுத்தி சுத்தி அடிக்கிறது.

அடுத்த நாள் அதிகாலை, 'குழந்தையும் கணவரும் தூங்கறாங்களே' என்ற (டூ மச்)அக்கறையில் லைட் போடாமல் நைட் லாம்ப் வெளிச்சத்தில் நாம ஏதோ வேலை செய்ய, கணவரின் மிக முக்கிய பொருள் ஒன்றை பாழ் படுத்தி விட நேரலாம்.தூங்கி முழித்ததும் முதலில் அதை தான் தேட போகிறார். "ஐயோ என்ன சொல்வது? எப்படி reaction இருக்குமோ" என்று யோசித்தது கொண்டே அவர் விழிக்கும் வரை வெயிட் பண்ணும் அவஸ்தை இருக்கிறது பாருங்கள்.அதெல்லாம் அனுபவித்தால் தாங்க புரியும்.

ஒரு வழியா எல்லாவற்றையும் சமாளித்து பங்க்ஷன் எல்லாம் முடிந்து அசதியும் அலுப்புமாக குழந்தைக்கு எதையோ ஒன்றை ஊட்டி தூங்க வைத்து, வேலையை முடித்து அக்கடா என்று தலை சாய்க்கும் போது, அது தூக்கத்திலேயே இருமி, சாப்பிட்ட கொஞ்சூண்டையும் பெட்ஷீட்டிலேயே வாந்தி பண்ணி வைக்கும்.அப்போது நம் ஒவ்வொரு செல்லிலும் படபடப்போ... சுயபச்சாதாபமோ... கோவமோ... ஏதோ ஒன்று சர்ரென்று ஏறும். வயிற்றில் ஒன்றும் இல்லாமல், காலை மூன்றரைக்கு 'அம்மா பசிக்குது' என்று அழுகை வேறு.சரி விடுங்க, இனிமேல் தான் ஹைலைட்டே இருக்கிறது.

மறுநாள் கேரளா கிளம்பலாம்,என்று ரிசார்ட்டுக்கு போன் செய்தால், "sir,id is reyiningg here. we dond suggest you com this time" என்று ஒருவர் மலையாளங்கிலத்தில் சொல்லிவிடலாம். "சரி வேறு என்ன பண்ணலாம்" என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே...கணவரின் அலுவலக விஷயமாக, மெயில் வந்து, விடுமுறை பத்து நாளில் இருந்து ஐந்தாக இளைத்து,நாளைக்கே பெங்களூர் கெளம்ப வேண்டும் என்ற நிலைமை கூட வரலாம்.

"டைம் என்பது சூர்யா படம் மாதிரி; ஓடிக்கிட்டே இருக்கும். ஆனா (கல்யாண) வாழ்க்கை என்பது விஜய் படம் மாதிரி. அத நாம தான் ஓட்டனும்"

ஐந்தாண்டாக ஓ(ட்)டிக்கொண்டு இருக்கும் வெற்றியை கொண்டாடுவதற்காக, கேரளா ப்ளான் எல்லாம் சொதப்பி விட்ட நிலையிலும், அப்படியே பைக்கில் கன்யாகுமரி போய், கால் நனைத்து விட்டு, மாங்கா சுண்டல் சாப்பிட்டு, முத்து தோடு சிப்பி வளையல் எல்லாம் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பலாம். காலங்கார்த்தால எழுந்து, போன முறை முறைத்து கொண்ட முருகனை பார்த்து ராசியாகி விட்டதும் நிம்மதி.

எது எப்படியோ, பாதி லீவில் பேக்கப் பண்ணி பஸ்ஸில் வந்து உட்கார்ந்ததும் ஆபீஸ், ஸ்கூட்டி, பெங்களூர், ப்ளாக் என்று மண்டையில் அடிபட்டவனுக்கு பழைய ஞாபகம் திரும்புவதை போல் நியாபகம் வரும் விஷயங்கள்... லேசாக தலைவலிக்கும்...

"ஏங்க தீபாவளிக்கு ஊருக்கு வர டிக்கட் கிடைக்குமான்னு ட்ரை பண்ணுவோமா..."

Thursday, 19 August 2010

வெட்டுக்கிளி(என்னை தேடுதே)

ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒன்றின் மீது ஒரு பயம், ஒரு வெறுப்பு, ஒரு ஒவ்வாமை இருக்கும். நடிகைகள் பேட்டிகளின் போதெல்லாம் சொல்வார்களே.... எனக்கு பல்லின்னா பயம். கரப்பான் பூச்சின்னா பயம்...

 

என்னுடைய தோழி ஒருத்தி. தந்தூரி சிக்கன் என்றால் சப்புக்கொட்டி சாப்பிடுவாள். ஆனால் அதே கோழி உயிரோடு இருக்கும் போது பார்த்தால், இவளை யாரோ தந்தூரி அடுப்புக்குள் தூக்கி போட்டு விட்டது போல அலறுவாள். அதுவும் கோழிகள் அதனுடைய இறக்கையை விரித்து படபடவென்று அடிக்குமே, அந்த போஸில் பார்த்தால் செத்து பிழைப்பாள். அவ்வளவு பயம். இன்னொருத்தி, அவளுக்கு புழு என்றால் பயம். பயம் என்பதை விட ஒரு விதமான அருவருப்பு. கம்பளி புழு டிஸ்கவரி சேனலில் காண்பித்தால் கூட உவ்வே என்பாள். அவள் சாப்பிடும் போது, ஒரு பேச்சுக்கு 'இன்றைக்கு வெண்டைக்காய் வெட்டும் போது புழு இருந்தது' என்று சொல்லி விட்டால், அன்று நமக்கு சாப்பாட்டில் மொத்த வெண்டைக்காய் வதக்கலும் வாய்க்கும். எனது சித்தி ஒருவர், தவளையை எங்கேயாவது பார்த்து விட்டால், அழுதே விடுவார்.

எனக்கு என்னவோ சின்ன வயசில இருந்தே வெட்டுக்கிளி என்றால் பயம். பயம் என்றால் சாதாரண பயம் இல்லை...எவ்வளவு பயம் என்று நீங்களே மேலே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வெட்டுக்கிளிகளில் இரண்டு ரகம் பார்த்து இருக்கிறேன். ஒன்று கிளிப்பச்சை கலரில் இருக்கும். இன்னொன்று மரக் கலர் என்று சொல்வாங்களே...அந்த மாதிரி பிரவுனும் சாம்பலும் கலந்த ஒரு வண்ணம். சிறுவயதில் நாங்கள் இருந்த வீட்டை சுற்றி நிறைய மரம் செடி இருந்ததனாலோ என்னவோ வெட்டுக்கிளிகள் நிறைய இருந்தன. அதுவும் சைஸ் வாரியாக..சிலது ஒரு சாண் நீளம் கூட இருக்கும். சமயத்தில் மாலை நேரங்களில் விளக்கு போட்டதும், அவைகளில் ஒன்று எங்கள் வீட்டுக்குள் வந்துவிடும் அபாயம் இருந்தது. வீட்டில் வேறு யாரும் அதை கண்டு கொள்ள மாட்டார்கள். எனக்கு மட்டும் அதை பார்த்தால் அப்படியே நடுங்கி விடும். அது ஒரு இடத்தில் சும்மா இருக்காது.அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்கும். ஒரு இடத்தில் உட்காரும். ஐந்து வினாடிகள் கூட அங்கே இருக்காது. மறுபடி பறக்கும். மறுபடி செட்டில் ஆகும். அப்படி உட்காரும் போது 'டப்' என்று ஒரு சத்தம் கேட்கும். இந்த வரியை எழுதும் போது கூட எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து கொள்கிறது பயத்தில். சில நேரம் அது நம் மீது கூட வந்து உட்காரும். என் தம்பி எல்லாம் அதை ஏதோ தூசு மாதிரி தட்டி விட்டு விட்டு வேலையை தொடருவான். நான் அது  உள்ளே நுழைந்த அந்த நிமிடமே அடுத்த ரூமிற்குள் போய் கதவை சாத்தி கொண்டு விடுவேன். என் வீட்டினர் என் மீதும் வெட்டுக்கிளியின் மீதும் இரக்கப்பட்டு அதை பிடித்து வெளியே போட ஆரம்பித்தார்கள்.

அதை பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அது பறந்து கொண்டே இருக்கும் போது ஒரு துணியை வீசி அதை பிடித்து வெளியில் எறிவார்கள். சில நேரம் அது தரையில் உட்கார்ந்தது என்றால் அதன் மீது ஒரு பாத்திரத்தை போட்டு மூடி அப்படியே நகர்த்தி கொண்டே போய் கதவுக்கு வெளியே பாத்திரத்தை திறந்து விட்டு அதே நேரத்தில் கதவையும் மூடுவார்கள். "போன முறை நான் பிடிச்சு போட்டேன் இல்ல, இன்னைக்கு நீ பண்ணு" என்பது போன்ற உரையாடல்கள் எங்கள் வீட்டில் சகஜமானது. எனது பாட்டிக்கு என் மீது மிக பிரியம். வீட்டிற்குள் அது வந்ததும் "அவ பாத்தா பயப்படுவா"ன்னு விளக்குமாறை எடுத்து கொண்டு கிளம்பிவிடும்.

யார் கையிலாவது அது மாட்டும் வரை படபடப்பாக அடுத்த ரூமுக்குள் இருப்பேன். சில நேரம் அம்மாவும் அப்பாவும் பிசியாக இருந்தால், என் தம்பியிடம் கெஞ்சுவேன். "டேய் ப்ளீஸ் டா, அதை பிடிச்சு போடுடா" என்று...அவன் அசால்ட்டாக, "நேத்து பெரிய கேக் பீஸ் நீ எடுத்துகிட்டு எனக்கு சின்னது தந்த இல்ல...போ போ பிடிச்சு போட முடியாது" ன்னு நேரங்காலம் தெரியாமல் வெறுப்பேற்றுவான்.

 'பிடிச்சு போட்டாச்சு வா..' என்ற வார்த்தை கேட்டதும் இயல்பு நிலைக்கு திரும்புவேன். இருந்தாலும் நிஜமா நிஜமா...என்று நான்கு முறை கேட்டு, யாராவது ஒருவர் சத்தியம் செய்ததும் தான் வெளியில் வருவேன்.சில நேரங்களில் பக்கத்து வீட்டுக்கெல்லாம் கூட ஓடி இருக்கிறேன்.

டிசம்பர் பூ என்று ஒன்று இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் நிறைய பூக்கும். ரோஸ், ஊதா, வெள்ளை, ராமர் கலர் என்று ஒன்று, ஊதாவில் வெள்ளை கோடு போட்டு இருக்கும். இப்படி நிறைய கலர்களில். எங்கள் தோட்டத்தில் எல்லா கலரிலும் செடிகள் இருந்தது. உடைக்கு மேட்சாக அந்த கலர் பூவை நீளமாக தொடுத்து அம்மா வைத்து விடுவார்கள். பூ பூப்பதற்கு முன் வரும் மொட்டுக்கள் கிட்டத்தட்ட பச்சை வெ.கி மாதிரியே இருக்கும். ஒரு முறை பூ பறித்து கொண்டு இருந்தேன். அந்த செடியில் ஒன்று உட்கார்ந்து இருந்து இருக்கிறது. அது தெரியாமல் நான் பூ பறிக்க, தவறி போய் என் கை அதன் மீது பட்டு விட்டது. அது பறந்து என் மீது பாய, நான் அலறிய சத்தத்தில் வீட்டிற்குள் இருந்த அம்மா அப்பா எல்லாம் தோட்டத்தில் பாம்பு ஏதும் வந்து விட்டதோ என்ற ரீதியில் பயந்து போய் ஓடி வந்தார்கள்.

அது கூட பரவாயில்லை. எட்டாவது படித்து கொண்டு இருந்த போது, எனக்கும், ஒன்பதாவது வகுப்பில் இருந்த பார்கவிக்கும் சுத்தமாக ஆகாது. எப்போதும் முறைத்து கொள்வோம். பார்கவிக்கு எனது இந்த பயம் எப்படியோ தெரிந்து போனது. ஒரு நாள் பள்ளி இடைவேளையின் போது மைதானத்தில் என் முன்னால் வந்து நின்றது பார்கவி. 'என்னையா பகைச்சுக்கற?' என்ற ரீதியில் ஒரு பார்வை. முதலில் அசராத நான், அப்பறம் தான் கவனித்தேன். அதன் கையில் ஒரு பச்சை கலர் வெ.கி."போடாதே ப்ளீஸ் ப்ளீஸ்" என்று நான் கெஞ்சி கொண்டு இருக்கும் போதே என் மீது போட்டு விட்டது. நான் அப்படியே மூர்ச்சை ஆகிவிட்டேன். முழித்து பார்த்த போது, சில பெண்கள் தண்ணீர் பாட்டிலோடு என்னை சுற்றி நிற்க, பார்கவி "ப்ளீஸ் ப்ளீஸ் டீச்சர் கிட்ட சொல்லிடாதே" என்று என்னை கெஞ்சி கொண்டு இருந்தது..

-----௦-------***--------------
திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும் கூட இந்த பயம் மட்டும் அப்படியே இருக்கிறது. 'டேய் டேய் தம்பி அத பிடிச்சு போடுடா' மட்டும் 'ஏங்க ப்ளீஸ்ங்க.. அத பிடிச்சு போட்டுடுங்க' என்பதாக மாறி இருக்கிறது.

இப்போது நாங்கள் இருக்கும் வீடு மூன்றாவது மாடி. அபார்ட்மெண்டில் நிறைய செடிகள் இருக்கின்றன. அதை பார்த்ததுமே ஓரளவுக்கு உஷாராகி கிரவுண்ட் ப்ளோரில் வீடு வேண்டாம் என்று ஓனரிடம் சொல்லி, கடைசி மாடியில் செட்டில் ஆனோம். ஆனாலும் சில சமயம் மாடி வரைக்கும் பறந்து வந்து விடுகின்றன. நானும் கெஞ்சி கொண்டே இருக்கிறேன்.

------****---------------

நேற்று ஒரு மீட்டிங் முடிந்து வீடு திரும்ப நேரம் ஆகி விட்டது. அண்டர்கிரவுண்டில் வண்டியை பார்க்கிங் பண்ணி விட்டு லிப்டுக்குள் நுழைந்து 3 என்ற எண்ணை அமுக்கினேன்.

டப்.

லிப்ட் கதவு மூடும் அந்த வினாடியில் பச்சையாக பெரிய சைசில் ஒன்று உள்ளே பறந்து வந்து லிப்டில் இருக்கும் லைட்டின் மீது உட்கார்ந்தது. விதிர்த்து போய் "ஓபன்" பட்டனை அமுக்க என் கை அனிச்சையாக நீண்டது.

சட்

.

.

.

பவர்கட்.
-----------*****------------

Saturday, 17 April 2010

ஒரு தலைப்பில்லாத பதிவு

சரியான விடையை தேர்வு செய்க,

ஒரு பெண் ட்ராஃபிக் நிறைந்த ரோட்டில் ஸ்கூட்டியோடு கீழே விழும் அந்த எதிர்பாராத தருணத்தில் அவளுக்கு முதலில் யார் நினைவு வரும்?

1.அம்மா

2.கணவன்

3.குழந்தை

விழுந்தது யார்?
நானே தான்.

எங்கே?
ஆபீசில் இருந்து வீட்டுக்கு வரும் போது.

எப்போ?
நேற்று மாலை.

எப்படி?
அது ஒரு சர்வீஸ் ரோடு. வெள்ளிக்கிழமை மாலை என்பதால் எல்லாருக்குமே வீட்டுக்கு போக வேண்டிய அவசரம்.நானும் எனது ஸ்கூட்டியில் போய்க் கொண்டு இருந்தேன். இடது ஓரத்தில் தான். அப்போது என்னை வலது புறமாக ஒரு வண்டி ஒவர்டேக் செய்யவும், நான் சற்று இடது புறமாக ஒதுங்க, என் வண்டி வழுக்கியது போல இருந்தது; பேலன்ஸ் பண்ண முயன்ற அதே சமயத்தில், இடது பக்கம் நடந்து போய்க்கொண்டு இருந்த ஒருவர்,அவருடைய வலது புறமாக ஒதுங்க,என் வண்டியின் ப்ரேக்கில் அவருடைய கை இடித்தது. குழப்புகிறதா? எனக்கும் தான். எது எப்படியோ, நான் எனது வலது பக்கமாக கீழே விழுந்து விட்டேன், வண்டியோடு...

அட, எதுவும் பெரிதாக ஆக வில்லை. இப்படி பதிவு தட்டிக்கொண்டு இருக்கிறேன் என்றால்,உருப்படியாக இருக்கிறேன் என்று தானே அர்த்தம்.
கொஞ்சம் அதிர்ச்சி, அதை விட சற்று கொஞ்சமாக, உடல் வலி.முழுதாக எழுந்து விட்டேன்.வலது பக்கம் சில கீறல்கள்.எனக்கும், என்னை விட
அதிகமாக வண்டிக்கும்... வண்டியின் வலது பக்க ப்ரேக் லிவர் உடைந்து விழுந்து விட்டது.


நான் வண்டியுடன் விழுந்து கிடந்தது, பாவம் பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிகளுக்கு தான் இடைஞ்சல் ஆகிவிட்டது. டூ வீலர்கள் அப்படியே என்னை சுற்றிகொண்டு சென்று விட்டன. நான்கு சக்கர வண்டிகளுக்கு தான் வழி ப்ளாக் ஆகி போனது. ஹாரன் அடித்து த்ள்ளி விட்டார்கள். ஹாரன்கள் சத்தம், “சரி விழுந்தாச்சு, சட்டு புட்டு ன்னு எந்திரி...'என்பதாக ஒலித்தது.

அவர்களை குறை கூறவில்லை.அவர்களிடத்தில் நான் இருந்தாலும் அதையே தான் செய்து இருப்பேனாக இருக்கும். பெங்களூரில், ரோட்டில் யாராவது விழுந்து கிடப்பதென்பது, ட்ராஃபிக் ஜாமை போல், ஒரு சகஜமான விஷயம் ஆகிவிட்டது. என் வண்டி இடித்த அந்த மனிதர் தான், அவருடைய கையை தடவிக்கொண்டே என் வண்டியை தூக்கி தந்தார்.நான் எழும் போது, உடைந்து கிடந்த ப்ரேக் லீவரை எடுத்து கொண்டேன்.வரலாற்றுக்கு நியாபக சின்னங்கள் முக்கியம் இல்லையா?

இப்படி விழுந்து எழுவதில் நமக்கும் நிறைய லாபம் இருக்கிறது தெரியுமோ? - எனக்கு நேற்று தான் தெரிய வந்தது.

- ’பரவாயில்லையே, இப்படி விழுந்து எழுந்தும் கூட, பதட்டப்படாமல், வீடு வரைக்கும் வண்டி ஓட்டிட்டு வந்த்துட்டியே’ என்று கணவரை ஆச்சர்யப்படுத்தலாம்.

- ’நான் அன்றைக்கு ஒரு நாள் நண்பர்களுடன், ஒரு ஹோட்டலில் சாப்பிட்டேன்.ரொம்ப நல்லா இருந்தது.அங்கே போய் சாப்பிடலாம் வா” கீழே விழுந்ததில் சற்று, மன வருத்தமாய் இருக்கும் நமது “ஃபீல் குட்” நிமித்தம், மாரத்தஹள்ளியின் ஏதோ ஒரு சந்தில் இருக்கும் ஹோட்டலுக்கு
போய் சூப்பர் சாப்பாடு சாப்பிட நேரலாம்.

-சாப்பிடும் போது வழக்கம் போல், “அம்மா சுச்சு..."என்று குழந்தை அழைக்க, “நீ உக்காரு, நான் அழைத்து போறேன்” என்று வழக்கத்தை மீறி நடக்கும் விஷயங்கள் நம்மை, “ஃபீல் பெட்டர்” ஆக்கலாம்.

-இனி அடுத்த நான்கு நாட்களுக்கு, போறவங்க, வர்றவங்க, ஃபோன் பண்றவங்க கிட்டயும்,ஆபிசில் காபி குடிக்கும் போதும், லன்ச் சாப்பிடும் போதும்,
“ஆக்டுவல்லி நான் அன்னைக்கு தான் மொத தடவையா வண்டிலேர்ந்து கீழ விழுந்தேன்...”
என்று கஜினி கல்பனா மாதிரி கதை சொல்லலாம்.

- ”நான் கூட இப்படித்தான் வண்டி வாங்கின புதிதில், மணல் சறுக்கி...” 
 முதல் காதல், முதல் முத்தம் ரேஞ்சில் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும்
”முதலில் விழுந்த” அனுபவத்தை கேட்கலாம்.

-இதோ இப்படி பதிவை எழுதி, பதிவைப் படிக்கும் நண்பர்களின்/உறவினர்களின், ’ஹைய்யா!’ ’ஐய்யோ!’ ’அப்படியா?’ ’என்னாச்சு?’ ’இப்போ எப்டி இருக்க?’ ’பாத்து போகக்கூடாதா?’ க்களுக்கு பதில் அளிக்கலாம்.

இப்படி எத்தனையோ லா(ப)ம்.

என்றைக்கும் இல்லாமல், நேற்று ஆபீசில் இருந்து கிளம்பும் போதே இரு நண்பர்கள், “பார்த்து போ, பத்திரம்” என்றார்கள். அவர்களுக்கு ஏதோ தோன்றியிருக்க வேண்டும்.

சரி,பதிவின் ஆரம்பித்தில் கேட்ட கேள்விக்கு விடை, குழந்தை.

Tuesday, 23 March 2010

Priya Kathiravan? உள்ளேன் ஐயா !!!

"அர்ஜுனை பற்றி எதுவும் எழுதுவதில்லையே...ஏன்?"

சாம்பிளுக்கு ரெண்டு மேட்டர் எழுதுறேன். ஏன் எழுதுறதில்லைன்னு உங்களுக்கே புரியும்.

சென்ற பெப்ரவரி பத்தொன்பதுடன் மூன்று வயது ஆகிறது. ப்ளே ஸ்கூலுக்கு போய்க்கொண்டு இருக்கிறான்.அந்த பள்ளியின் ஆண்டு விழா சென்ற வாரம் சனிக்கிழமை நடந்தது.இரண்டு முதல் நான்கு வயதான குட்டி பிசாசுகளை நடிக்க வைத்து 'ஸ்நோ ஒயிட் அண்ட் செவென் ட்வார்ப்ஸ் ' நாடகத்தை மேடையில் நிகழ்த்தினார்கள். அர்ஜுனுக்கு அதில் பிரின்ஸ் வேடம். பள்ளியில் நாடகத்திற்கான ஒத்திகைகள் ஆரம்பித்த நாள் முதல், அவன் அந்த கதையை எங்களுக்கு வீட்டில் வந்து சொல்லிக்கொண்டே இருந்தான்.

Mirror Mirror on the wall...Snowhite was in jungle...Step mother came as old woman...இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பான். ஒரு நாள் அவங்கப்பா கேட்டார்.
"ஏன்டா ஸ்டெப் மதர் ஸ்டெப் மதர் ன்னு சொல்றயே...அதுக்கு அர்த்தம் என்னன்னு தெரியுமா?"
அதற்கு அர்ஜுன் சொன்னான்.
"தெரியும்ப்பா...'படி' மதர்"

 *********************
முருங்கைக்காய் நறுக்கிக்கொண்டு இருந்தேன். வந்து தொந்தரவு பண்ணிக்கொண்டே இருந்தான்.
ஏதாவது பேசினால், அப்படியே ஆ ன்னு கேட்டுட்டு இருப்பான்... என்னையே மாதிரி....என்பதால்...

"அர்ஜுன்!நீ சின்ன புள்ளையா(??) இருக்கப்போ, முருங்கைக்காயை எப்டி சொல்வ தெரியுமா?..முக்கையா"
":-)))))))))"
"முள்ளங்கியை எப்டி சொல்வ தெரியுமா?...முங்கி"
":-))))"

அவ்வளவு தான். அன்றிலிருந்து எதை எடுத்தாலும் முதல் கேள்வி இது தான்..."அம்மா நான் சின்ன புள்ளையா இருக்கப்போ இத எப்டி சொல்லுவேன்?"
...................................

எங்கள் அலுவலகத்தில் நடந்த மகளிர் தின கொண்டாட்டங்களை பற்றி சொல்லியே ஆக வேண்டும். நடனம், பாட்டு, லக்கி draw , Best dressed woman, பெண்கள் பற்றிய ஐந்து வார்த்தை கொண்ட சுலோகம் எழுதும் போட்டி என்று ஏகத்துக்கு ஜமாய்த்தார்கள். இதில் உள்ள முதல் நாலு விஷயத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லாததால், ஐந்தாவதாக உள்ள ஐந்து வார்த்தை சுலோகம் எழுதி அனுப்பினேன்.
அதும் ஒன்றல்ல, இரண்டல்ல...ஆறு சுலோகங்கள். பொருத்தமாக படம் எல்லாம் போட்டு அனுப்பினேன்...மாதிரிக்கு இதோ இங்க ஒண்ணு.


ஆனால் பரிசு? அதை "You Too?Brutus?"என்ற ரீதியில் இரு பெண்மணிகள் தட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.

அவர்கள் எழுதியது.

"God Creates lives;Women deliver"

"Women belong to home & house" (House here means the Parliment house)

பரிசு என்னன்னு கேக்கலையே நீங்க?

Dinner for two in Le Royal Meredian.

சரி, கதிர் கொடுத்து வெச்சது அவ்வளவு தான்.
.......................................

சமீபத்தில் சுஜாதாவின் "ஒரு நடுப்பகல் மரணம்" என்ற புத்தகம் படித்தேன். மூர்த்தியும் உமாவும் ஹனிமூனுக்கு பெங்களூர் செல்கிறார்கள்.(வருகிறார்கள் என்று சொல்ல வேண்டுமோ?) மூர்த்தி கொடூரமான முறையில் கொலை செய்ய படுகிறான்.கொன்றவன் கண்ணாடியில் "Maya" என்று எழுதி வைத்து இருக்கிறான், உமாவின் முறை மாமா MAni, மூர்த்தியால் ஜாதகத்தை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்ட DivYA இருவர் மீதும் சந்தேகம் வருகிறது நமக்கு.கொன்றது யார்?என்பது தான் கதை.

நரேன்/வைஜெயந்தி, சங்கர்லால், விவேக்/ரூபலா திரில்லர்கள் நிறைய படித்து இருக்கிறேன்.பொதுவாக இந்த மாதிரி கதைகளை முடிவை தெரிந்து கொள்ளும் ஆவலில் சற்று வேகமாக வாசித்து விடுவேன். ஆனால் இந்த கதையின் சில பக்கங்களை திரும்ப திரும்ப வாசித்தேன். அதிலும் ஒரே ஒரு நாள் கணவன், முற்றும் எதிர்பாராத சூழ்நிலையில், அலங்கோலமான நிலையில் அவனுடைய பிணத்தை பார்த்த ஒரு மனைவியின் mental trauma பதிக்க பட்டிருந்த பக்கங்கள்.

"சாந்தி கல்யாணத்துக்கு வாங்கின கட்டில்...எங்க வாங்கின மணி? நல்ல ரோஸ் வுட். ஒரே ஒரு நாள் தான் யூஸ் பண்ணது...யாராவது நல்ல விலைக்கு எடுத்துப்பா...."

..................................

இன்றைக்கு CSK Vs RCB மேட்ச் பெங்களூரில். உன்னையும் அழைச்சுட்டு போறேன்னு சொல்லிட்டு இருந்தவர், கடைசி நேரத்துல 'என் கிரிக்கெட்
டீமோடு போறேன்'னு என்னை கழட்டி விட்டுட்டார்.

"Anyways Dhoni is injured and may not play today, So,நீ அங்கே எதுக்கு வரணும்?" ன்னு கேக்கறார்.

நியாயமான கேள்வி.

...............................................

ஒரு பரபரப்பான காலை 9 மணி. போக்குவரத்து நெரிசல் நிறைந்த அவுட்டர் ரிங் ரோட்.


மூன்று லேன்கள் கொண்ட ரோட்டின் நடு லேனில், ஒரு புத்தம் புது நீல கலர் ஸ்கூட்டியில் ஒரு பெண், மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில்(?) போய் கொண்டு இருக்கிறது. அது திரு திருன்னு முழிப்பது ஹெல்மெட்டையும் மீறி வெளியில் தெரிகிறது. நிமிடத்துக்கு 60 -70 முறை லப் டப் என்று துடிக்க வேண்டிய அந்த பெண்ணின் இதயம் பக் பக் என்று 200bpm இல் துடிப்பது வாகன இரைச்சலை எல்லாம் மீறி அந்த பெண்ணின் காதுகளிலேயே கேட்கிறது. கண் இமைக்கும் இடைவெளியில் அந்த பெண்ணின் வலது லேனில் ஒரு BMTC வால்வோவும், இடது லேனில் ஒரு லாரியும் ஒரே நேரத்தில் ஹாரன் அடித்த படி கடக்க, அந்த பெண் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நின்று விடுகிறது. இப்படி ஒரு காட்சி பெங்களூருவில் சில வாரங்களுக்கு முன் அரங்கேறியது. அந்த "woman on wheels" யார்?

பதிவின் தலைப்பை படித்து கொள்ளுங்கள்.

.................................

Wednesday, 17 February 2010

ரோஸ்மில்க் ஐஸ்க்ரீம்

"நிழல் விழாத கோபுரம், வளரும் நந்தி, பிரம்மாண்டமான கோவிலுக்கு அஸ்திவாரம் வெறும் ஐந்தே அடிகள் தான், காண தவறாதீர்கள் இன்று
இரவு பத்து முப்பது மணிக்கு உங்கள் சன் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் தஞ்சை பெரிய கோவில் அதிசயங்கள்"

நேற்று மாலை காதில் விழுந்த வரிகளில் என்னுள் விஸ்வரூபம் எடுத்த என் தஞ்சாவூர் நினைவுகள்...


"Change never Changes"என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு விவரம் தெரிந்து கல்லூரி இறுதியாண்டு வரை கிட்ட தட்ட பதினெட்டு வருடங்கள், மாறவே மாறாத ஒரு விஷயம் லீவுக்கு அம்மாச்சி தாத்தா வீட்டுக்கு தஞ்சாவூர் போவது.ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாம். என் தாத்தாவிற்கு என் அம்மாவோடு சேர்த்து ஏழு பெண்கள். Bank of Thanjavur இல் General manager ஆக இருந்தார்.மிகுந்த கடவுள் பக்தி உடையவர். திருநீறு பட்டை இல்லாமல் என் தாத்தாவின் முகம் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. சாமியறைக்குள் நுழைந்து விட்டால் கம்பீரமான குரலில் பாடுவார். வெளியில் வரும் போது கண்கள் கலங்கி இருக்கும். காலையில் முழு மீல்சும், இரவு டிபனுமாக இரண்டு வேளை தான் சாப்பிடுவார்.

அப்போது ஏழு கசின்கள் இருந்தோம். நான் தான் முதல். (இப்போ பன்னிரண்டு).காலாண்டு/அரையாண்டு/முழு ஆண்டு விடுமுறை என்று வருடத்திற்கு மூன்று முறை அனைவருமே அம்மாச்சி வீட்டில் கூடி விடுவோம். அத்தனை பேரும் சேர்ந்து இருக்கும் வீடு ஏதோ திருவிழா மாதிரி இருக்கும்.தாத்தா ரொம்ப கண்டிப்பானவர். காலை நாலரை மணிக்கு எழுந்து மங்கள இசை, கந்த சஷ்டி கவசம்,சுப்ரபாதம் என்று வரிசையாக போட்டு விடுவார். அதும் fullசவுண்டில். ஆறு மணிக்கு மேல தூங்க கூடாது. பெண்கள் தலை விரித்து போட கூடாது.பொட்டு வைக்காம, வளையல் போடாம இருக்க கூடாது, ஐயோ ன்னு சொல்ல கூடாது, நைட் முழிச்சு டிவி பாக்க கூடாது, ஒன்பது மணிக்கு படுத்துடனும்.இப்படி நெறைய கண்டிசன் எங்களுக்கு.

தாத்தா என்றாலே எங்கள் அனைவருக்கும் ஒரு மரியாதை கலந்த பயம் தான். அவர் அலுவலகம் கிளம்பும் வரை அமைதியாக கழியும் எங்கள் காலை.அவருடைய கார் சவுண்டு அடங்கியதும் ஆரம்பிக்கும் ரகளையை திரும்ப சாயங்காலம் கார் சவுண்டு கேட்கும் போது தான் நிறுத்துவோம்.

இப்போதெல்லாம் எனக்கு வீட்டில் நான்கு விருந்தாளிகள் வந்துவிட்டாலே சமையல் வேலையை நினைத்து மலைப்பாக இருக்கும். ஆனால் நாங்கள்
அத்தனை பேரும் கூடி இருக்கும் நாட்களில் என் அம்மாச்சி எப்போவும் சமைத்து கொண்டே தான் இருப்பார். வீட்டில் குக்கர் விசில் சத்தம் எப்போதும் கேட்டு கொண்டே இருக்கும். ஒரு பெரிய பாயிலரில் வெந்நீர் கொதித்துக்கொண்டே இருக்கும்.காலையில் எட்டரை மணிக்கெல்லாம் முழு சாப்பாடும் தயார் ஆகிவிடும். தாத்தா சாப்பிடும் போதே எங்களையும் கூட அமர்ந்து சாப்பிட சொல்வார்.அப்போ மீல்ஸ் கட்டு கட்ட ஆரம்பித்த பழக்கம் தான் இப்போ நான் ஆந்திரா மீல்ஸ் சாப்பிடுவதை பார்த்து என் கணவர் பயப்படும் நிலைமையில் கொண்டு விட்டு இருக்கிறது.

அப்போதைக்கு மூன்று சித்திகள் கல்யாணம் ஆகாமல் இருந்தார்கள். அவர்களும் எங்களுடன் சேர்ந்து கொள்ள நாள் முழுக்க விளையாடிக்கொண்டே இருப்போம். காரம் போர்டு, பரமபதம், தாயம், சீட்டுக்கட்டு என்று களைகட்டும். அதிலும் சீட்டு கட்டில் நாங்கள் விளையாடாத விளையாட்டே இல்லை. இப்போதும் கூட ஆஸ், bluff இதில் இருக்கும் அத்தனை மொள்ளமாரிதனங்களும் அத்துப்படியா இருக்க காரணம் எனக்கு மே மாத பயிற்சிகள் தான்.லதா சித்தி நன்றாக பாடுவார்கள். பாட்டு கிளாஸ் எல்லாம் போவாங்க. சினிமா பாட்டு பாட சொல்லி தருவாங்க எங்க எல்லாருக்கும். நேற்று இல்லாத மாற்றம், கண்ணுக்கு மை அழகு பாட்டெல்லாம் அவங்க கிட்ட தான் கத்துகிட்டேன். சாந்தி சித்தி தான் பாலச்சந்தர் படங்கள் மீது பைத்தியம் ஆக்கினார்கள்.வேணி சித்தி பரத நாட்டியம் கத்துகிட்டாங்க. அவங்க அப்போப்போ எங்க எல்லாரையும் வரிசையில் நிற்க வைத்து தா தை ன்னு ஸ்டெப்ஸ் சொல்லி தருவாங்க.மொட்டை மாடியில் கிராக் விழ ஆரம்பித்ததால், எங்கள் நடன பயிற்சி நிறுத்த பட்டது.

செல்லம் சித்தியை பாப்பா என்று தான் அழைப்பார்கள். அதனால நாங்க எல்லாம் அவங்களை பாப்பா சித்தி ஆக்கிட்டோம். அவங்க வீட்டுக்கு பையன் மாதிரி.கார்லாம் ஓட்டுவாங்க.நாங்கள் ஊரில் இருந்து வந்து ராணி பாரடைஸ் ஸ்டாப்பிங்கில் இறங்கும் போது கார் கொண்டு வந்து பிக்கப் பண்ண ரெடி ஆக நிற்பார்கள். பின்னாளில் ஒரு friend சொன்னா, "அட எங்க வீட்டுலயும் ஒரு பாப்பா சித்தி இருக்காங்க"ன்னு. ராஜி என்ற நாய்குட்டி
இருந்தது எங்கள் வீட்டில். பாப்பா சித்தி "ஒன், டூ, த்ரீ" சொன்னால் எங்கிருந்தாலும் ஓடி வந்து மடியில் ஏறிக்கொள்ளுமாறு அதை பழக்கி
இருந்தார்கள்.அதை பார்த்து வியந்து போய் நாங்கள் அனைவரும் ஆளாளுக்கு "ஒன், டூ, த்ரீ" சொல்லவும் அது பயந்து போய் பாத்ரூமில் ஒளிந்து கொள்ள ஆரம்பித்தது.

அம்மாச்சி வீட்டில் VCR இருந்தது. அதில் படம் போட்டு பார்ப்பது எங்களுக்கு மிகவும் பிடித்தது. வீட்டுக்கு பக்கத்திலேயே mohan videos
என்று ஒரு கடை இருந்தது. அவர்கள் வீட்டுக்கே வந்து கேசட் தருவார்கள். நாள் வாடகை பத்து ரூபாய். இது இல்லாமல் வீட்டில் சொந்தமாக சில
கேசட்கள் இருந்தது. சிம்லா ஸ்பெஷல், சகாதேவன் மகாதேவன் போன்ற படங்களை நாங்கள் எல்லாம் நூறு முறை பார்த்து இருப்போம். போர்
அடிக்கும் போதெல்லாம் , 'போடு சிம்லா ஸ்பெஷல்' என்று இந்த படங்களின் டயலாக்குகள் அவ்வளவும் மனப்பாடம். வாடகை கேசட் வாங்கும் போது சில நேரங்களில் ரஜினி படமா, கமல் படமா என்று போட்டி வந்து விடும். மொத்த குடும்பமும் உலக நாயகன் (அப்போ காதல்
மன்னன்)பக்கம்.என்னையும் சித்தி பெண் சூர்யாவையும் தவிர. நாங்கள் மெஜாரிட்டிக்காக, பக்கத்து வீட்டு பாலாஜி(இரண்டு வயசு அவனுக்கு),
எங்கள் வீட்டு ஜூலி,ஜானி எல்லாத்தையும் votingல சேர்த்து, இரண்டு கமல் படத்திற்கு ஒரு ரஜினி படம் என்ற அளவில் தேத்தி விடுவோம்.
இப்போ சூர்யா ஒரு மருத்துவ கல்லூரியில் இருந்து, "Akka, how about Endhiran on release day" என்று sms பண்ணுகிறாள்.

அம்மாச்சி வீட்டில் மரசம்பங்கி, நந்தியா வட்டை மரங்கள் இருக்கும்.செவ்வாய் வெள்ளி கிழமைகளில் காலை காபி முடித்து எல்லாரும் சேர்ந்து அதில் பூ பறிப்போம். சங்கு பூவும், செம்பருத்தியும் கூட இருக்கும். பிறகு அவற்றை எல்லாம் மாலையாக கட்டி வைப்போம். சாயங்காலம் தாத்தா வந்து குளித்து ஈர உடையுடன் வீட்டில் பூஜை செய்வார். பிறகு நாங்கள் அந்த மாலைகளை எல்லாம் எடுத்து கொண்டு பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு செல்வோம். செவ்வாய்கிழமைகளில் பிரச்சனை இல்லை. வெள்ளிக்கிழமைகளில் ஒளியும் ஒலியும் ஆரம்பித்து விடுமே என்று ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு திரும்புவோம். இவளா என் மனைவி, சக்தி-90 , ரயில் சிநேகம், குறிஞ்சி மலர் என்று அப்போதைய
சீரியல்களை பயங்கரமாக விவாதிப்போம்.

எங்கள் ரகளையை அடக்க ஒரே வழி. எங்க எல்லாருக்கும் பகல் நேரத்தில் மருதாணி இட்டு விடுவார்கள். கை கால் என்று முழுக்க மருதாணி
போட்டு, மூன்று மணி நேரம் அமைதியா ஒரே இடத்தில் இருப்போம். ராஜிக்கும் நெற்றியில் மருதாணியில் பொட்டு. அது வெள்ளை கலர் நாய்.
ஆனால் blacky க்கு மருதாணி வைக்க முடியாததால நக பாலிஷ். மருதாணி போட்ட மதியங்களில் யாராவது ஒரு சித்தி தட்டில் சாதம் போட்டு
பிசைந்து எல்லாருக்கும் ஆ கொடுப்பார்கள்.அப்போது அன்றைக்கு இரவு Doordarshan செய்திகள் வாசிக்க போவது ஆணா பெண்ணா என்று போட்டி
வைத்து கொள்வோம். இரவு நேரங்களில் சில சமயம் திருட்டு தனமாக மெல்லிய சத்தத்தில் TV பார்த்து கொண்டு இருப்போம். டிவி ஹாலில் தான்
பாய் விரித்து படுத்துக்கொண்டே பார்ப்போம். பாத்ரூம் போவதற்கு தாத்தா அவருடைய ரூமில் இருந்து எழுந்து ஹாலை தாண்டி தான் போக
வேண்டும். திடீர் என்று வந்து விடுவார். உடனே அத்தனை பேரும்(என் சித்திகளும் இதில் அடக்கம்) போர்வையை தலை வரை இழுத்து கொண்டு
உள்ளே திரு திருன்னு கிடப்போம். அவர் "டிவியை ஆப் பண்ண மறந்துட்டு தூங்குதுங்க" என்று கடிந்து கொண்டே டிவியை நிறுத்தி விட்டு போவார்.
நாங்கள் அத்தனை பேரும் சிரிப்பை அடக்க படாத பாடு படுவோம்.

இத்தனை பேருக்கும் நொறுக்கு தீனி தருவது என்பது எங்க அம்மாச்சிக்கு ஒரு நிஜ சவால்.கிழங்கு, சோளம் என்று அவித்து தருவார்கள்.பஜ்ஜி, போண்டாவில் வித்தியாசமாக பசலிக்கீரை பஜ்ஜி, முருங்கைக்காய் போண்டா என்று சத்தானதாக்குவார்கள். செய்ததையே செய்து போர் அடிக்காமல் புதிது புதிதாக கண்டு பிடிப்பார்கள். கடலை மாவில் வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் நறுக்கி போட்டு நீர்க்க கரைத்து தோசைக்கல்லில் ஊற்றி எடுத்தால் ஆம்லேட் மாதிரி இருக்கும். இது மாதிரி எங்க அம்மாச்சி கண்டு பிடித்த ஒரு விஷயம் தான் ரோஸ்மில்க் ஐஸ்க்ரீம். இதன் செய்முறை:
ரோஸ்மில்க் எசன்சை பாலில் கலந்து கொள்ளவும்.
நிறைய சக்கரை சேர்த்து கொள்ளவும்.
இந்த ரோஸ் பாலை, பிரிட்ஜில் ஐஸ் கட்டி செய்யும் அச்சுகளில் ஊற்றி, பிரீசரில் வைத்து விடுவார்கள்.
காலையில் வைத்தார்கள் என்றால், குழந்தைகள் அனைவரும் பிரிட்ஜையே பார்த்து கொண்டு இருப்போம். மதியம் மூன்று மணி அளவில் ஆளுக்கு
மூணு நாலு ரோஸ்மில்க் ஐஸ் கட்டிகளை ஒரு கிண்ணத்தில் போட்டு தந்து விடுவார்கள். எங்களுக்கு எல்லாம் ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.
விடுமுறைக்கு வந்து இருக்கும் எங்களை எல்லாம் சந்தோஷமாக வைத்து கொள்ளுவது மட்டும் தான் அவர்களுடைய ஒரே நோக்கமாக இருக்கும்.

ஒவ்வொரு விடுமுறையிலும் எங்களுக்கு மூன்று outing உண்டு. காலையில் சாப்பிட்டு விட்டு கையில் எதாவது பார்சல் எடுத்து கொண்டு தஞ்சை பெரிய(பிரகதீஸ்வரர்) கோயிலுக்கு கிளம்புவோம். கோயிலின் ஒவ்வொரு கல்லும் எங்கள் குடும்ப குழந்தைகள் அத்தனை பேருக்கும் அத்துப்படி. வராகி அம்மன் சன்னதியில் எங்கள் சித்திகள் 108 சுற்றும் போது நாங்களும் கூட ஆரம்பிப்போம். சுற்றி முடியும்போது எங்கள் எல்லாருக்கும் தலை சுற்றி இருக்கும். கருவூரார் சந்நிதிக்கு பின்னாடி இருக்கும் மரத்தில் மரப்பல்லி பார்த்தால் விசேஷம் என்று சொல்வார்கள். பல்லியை யார் முதலில் கண்டு பிடிப்பது என்று ஒவ்வொரு முறையும் போட்டி தான்.ஒவ்வொரு முறை போகும் போதும், எவ்வளோ பெரிய கோபுரம் என்று நான் வாய் பிளப்பதும், "கோபுரத்தை பார்த்து கும்பிடு, கோடி புண்ணியம்" என்று லதா சித்தி சொல்வதும் தவறாமல் நடக்கும். "ஆமா போன முறை பார்த்ததுக்கு நந்தி வளர்ந்துடுச்சு" என்று பேசிக்கொள்ளுவோம். யானைக்கு பழம் குடுத்துட்டு அப்படியே சுற்றிக்கொண்டு நடந்து சிவகங்கை பூங்காவுக்குள் நுழைவோம். பூங்கா என்றதும் ஏதோ மரமும், சறுக்கு விளையாட்டும் மட்டும் என்று நினைச்சுடாதீங்க. அது ஒரு விலங்கியல் பூங்காவும் கூட. படகு சவாரி எல்லாம் உண்டு. கையில் இருக்கும் பார்சலை பிரித்து சாப்பிட்டு விட்டு ஆரம்பிப்போம். பூங்கா முழுக்க ஒளிந்து பிடித்து, ஓடி பிடித்து என்று விளையாடி முடித்து களைத்து உட்காரும் நேரத்தில் வேர்கடலை. வாங்கி சாப்பிட்டு விட்டு மறுபடி கோவிலை ஒரு விசிட் அடித்து விட்டு வீட்டுக்கு வருவோம். ஒவ்வொரு முறையும் என் தாத்தா கேட்பார். "காலைல போன புள்ளைங்க, இப்போ தான் வரீங்களா?".இதே மாதிரி சாப்பாடு பார்சல் கட்டி கொண்டு தஞ்சாவூர் அரண்மனை ஒரு நாள். பிறகொரு நாள் காலங்கார்த்தால குளித்து முடித்து நடந்தே தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில். ஆரம்பத்தில் சில வருடங்கள் அருளானந்த நகரில் இருந்த அம்மாச்சி வீடு, அப்புறம் மெடிக்கல் காலேஜ் அருகில் மாறிய பிறகும் கூட நடந்தே போய் விட்டு நடந்தே வருவோம்.


நாங்கள் வளர வளர எங்கள் ரசனைகளும் மாறிக்கொண்டே வந்தது. பெண் பிள்ளைகள் சீட்டுக்கட்டு போய், dumbcharades,anthakshari ஆட ஆரம்பித்தோம்.தம்பிகள் கிரிக்கெட் ஆட வெளியே செல்ல ஆரம்பித்து விட்டார்கள். கல்லணை, பிச்சாவரம், பூம்புகார் என்று outing upgrade ஆனது. ஒவ்வொரு விடுமுறையிலும் ஒரு சினிமா கட்டாயம் ஆனது. அதிலும் வாலி ரிலீஸ் அன்றைக்கு போனோம்.அப்போ ரிலீஸ் அன்று படம் பார்ப்பது என்பது எங்களை பொறுத்த வரை நடக்கவே முடியாத ஒரு விஷயம், "இன்னும் போஸ்டரை கூட ஆடு திங்கலை, அதுக்குள்ள நம்ம படம் பார்க்க போறோமா?" சூர்யா குஷியில் சொன்னது.

அரசன் ஆண்டியாகி விடாமல் தன பெண்களுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்ததும் தஞ்சையில் தான். அரசன் பெற்ற ஏழு பெண்கள் ஆறாக குறைந்ததும் அதே தஞ்சையில் தான். இப்படி ரசனைகளை மட்டும் இல்லாமல், வேறு சிலவற்றையும் சேர்த்து தான் நினைவுறுத்துகிறது தஞ்சாவூர்.
ஏழெட்டு வருடங்களுக்கு  முன் தாத்தா அம்மாச்சி தஞ்சையை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பியதும், அற்று போன தஞ்சைக்கும் எங்களுக்கும் இருந்த பந்தம், அடிக்கடி நினைவுகளிலும் கனவுகளிலும் தலை காட்டும். நேற்றைய டிவி விளம்பரம் கிளறிய ஞாபகங்களில் ஆழ்ந்து இருந்த போது கலைத்தது என் கணவரின் குரல்.

"கேட்டுக்கிட்டே இருக்கேன், பதில் சொல்லாம என்ன யோசிச்சுட்ருக்க?"

"ம்,என்ன? என்ன கேட்டிங்க?"

"கடைக்கு போறேன். அர்ஜுன் ஐஸ்க்ரீம் கேக்கறான். அம்மாக்கு வனிலா, எனக்கு லிச்சி, அர்ஜுன்க்கு strawberry . உனக்கு என்ன வேணும்?"


.
.
.


"ரோஸ்மில்க் ஐஸ்க்ரீம்"

Wednesday, 10 February 2010

உப்புமா(வும்) சாம்பியன்

விதி விளையாடியது என்று சொல்வார்கள். ஆனால் என்னிடம் விதி விளையாடியதே நான் விளையாட வேண்டும் என்று தான். புரியலையா?? மேலே படிங்க...

நான் வசிக்கும் அபார்ட்மெண்டில் "அபார்ட்மென்ட் டே" கொண்டாடினார்கள். அதன் பொருட்டு நிறைய விளையாட்டு போட்டிகள். அதில் ஒன்று தான் டேபிள் டென்னிஸ் மிக்சட் டபுள்ஸ். என் கணவர் சற்று, சற்று என்ன சற்று... நன்றாகவே TT விளையாடுவார். நான் சுமார் ஏழு வருடங்களுக்கு முன், டெல்லியில் இருந்த போது, TT டேபிளை பார்த்து இருக்கிறேன். TT விளையாடுபவர்களுக்கு பந்து பொறுக்கி போட்டு இருக்கிறேன். விளையாடுபவர்கள் ரெஸ்ட் எடுக்கும் போது TT ராக்கெட்டை வைத்து "இப்படி தான் தட்டனுமா?" என்று தட்டி பார்த்து இருக்கிறேன். அவ்வளவே.அதனால் என் கணவர் என்னை பார்ட்னராக சேர்த்து கொள்ள ரொம்ப பயந்தார். பின்ன அவர் ஜெயிக்க வேண்டாமா? இங்க தான் விதியின் விளையாட்டு ஆரம்பமானது. அவருக்கு வேற பார்ட்னர் கிடைக்காமல் போனது. ஹோட்டலில் சாப்பாடு எல்லாம் தீர்ந்து போனால், உப்புமா போட்டு சமாளிப்பார்களாம். நான் உப்புமா ஆக்க பட்டேன். விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தில் என் கணவர் எனது பெயரை பார்ட்னராக போட்டு பெயர் கொடுத்து விட்டு வந்துட்டார்.

மொத்தம் நாலு அணிகள். Kathir/Priya, Ranjan/Nirja, Sudeer/Swarna, Mohit/Latha. Ranjan/Nirja தவிர மற்ற மூவரும் கணவன் மனைவியர்.அதனால் Ranjan/Nirja அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தோன்றியது.ஜனவரி இருபத்தாறு குடியரசு தினம் அன்று நாள்(!) குறித்தார்கள். எனக்கு அன்றிலிருந்து தூக்கம் போனது. விளையாடும் நேரத்தில் என் மானம் போக போகிறது என்பதற்கு மேலாக, எங்கள் அபார்ட்மென்ட் அழகிகள் மத்தியில் என் கணவருடைய இமேஜ் ஒரேடியா உயர்ந்துருமேன்னு தான் எனக்கு கவலை அதிகமா இருந்தது. "நான் காமெடி பீஸ் ஆகிட போறேனே" என்று அலுவலக நண்பர்களிடம் புலம்பினால், "பேசாம ரிடயர்ட் ஹர்ட் ஆயிடு" என்று ஐடியா குடுத்தார்கள்.

எனக்கும் TTக்கும் சம்பந்தம் கம்மி என்பதால் எங்கள் வீட்டில் ஒரே ஒரு TT ராக்கெட் தான் இருக்கும். சரி நானும் விளையாட வேண்டியதால் 25ஆம் தேதி இரவு போய், இன்னொரு ராக்கெட் வாங்கி வந்தார். "எதுக்கும் கீழ TT ரூமில் போய் practise பண்ணுங்க" - இது என் மாமியார். எனக்கு அழுகையும் சிரிப்பும் சேர்ந்து வந்தது. கீழே போனால், அங்கே Sudeer/Swarna ஜோடி படு தீவிர பயிற்சியில் ஈடு பட்டு கொண்டு இருந்தார்கள்.இப்போ எனக்கு பயம் வந்தது. "ரூல்ஸ்லாம் தெரியுமா?" - கேட்ட என் கணவரை பார்த்து பாவமா இருந்தது. இப்படி நவரசங்களில் நாலு ரசத்துடன் நானும் ஏதோ தட்டு தட்டு ன்னு practise பண்ணேன்.



"என்னோட சர்வீஸ் பாய்ண்ட்ஸ் எல்லாம் நமக்கு தான். நீ ஜஸ்ட் ball return
மட்டும் பண்ணிடு. சர்வீஸ் கரெக்டா போடு. பாத்துக்கலாம்"
என் அப்பா அடிக்கடி சொல்வார்கள். ஒரு நல்ல ஆசிரியருக்கு பெருமை முதல் மார்க் வாங்குபவனால் அல்ல...அவன் யார்கிட்ட படித்தாலும் வாங்குவான். பெயில் மார்க் வாங்கிட்டு இருக்கவனை பாஸ் பண்ண வைக்கிற மாதிரி சொல்லி தர்றது தான் உண்மையான பெருமை". என் கணவரும் ஒரு நல்ல ஆசிரியராக ஆக முயற்சி செய்து ஏதேதோ சொல்லி தந்தார்.
ஜனவரி 26.
"ஏங்க...அந்த ப்ளாக் டாப்சும், Grey ட்ராக் சூட்டும் போட்டுக்கட்டுமா?"
என் கணவர் என்னை பார்த்த "ரொம்ப முக்கியம்" பார்வையை எழுத்தில் கொண்டு வருவது கடினம் தான்.நான்கே அணிகள் என்பதால், knock out முறை வேண்டாம். "ரவுண்டு ராபின்" என்று முடிவானது. அதாவது ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணியுடனும் விளையாட வேண்டும். பாயிண்ட்ஸ் அடிப்படையில் வெற்றி நிர்ணயிக்க படும்.

முதல் ஆட்டம் Kathir/Priya Vs Mohit/Latha.
டாஸ் அவர்கள் ஜெயித்தார்கள். TT யில் டாஸ் போடுவது எப்படி என்று தெரியும் அல்லவா? டாஸ் போடுபவர் TT டேபிளுக்கு அடியில் இரு கைகளிலும் பந்தை மாற்றி மாற்றி வைத்து பின் ஏதாவது ஒரு கையில் பந்தை வைத்து கொண்டு டாஸ் கேட்பவரிடம் எந்த கையில் பந்து இருக்கிறது என்று கேட்பார். சரியாக சொன்னால், டாசில் ஜெயிச்சதா அர்த்தம். Latha serves Kathir என்றார்கள். பாவிகளா...அப்போ Mohit எனக்கு
serve பண்வார். லதாவினுடைய சர்வீஸ்கள் முடிந்து, என்னுடைய ஐந்து
சர்வீஸ்கள் முடிந்த நிலையில் நாங்கள் தான் முன்னிலையில் இருந்தோம். ஆனால் இப்போதல்லவா ஆரம்பிக்க போகிறது காமெடி.

Mohit serves Priya. பார்வையாளர்களில் இருந்த அந்த அணியின் ஆதரவாளர்கள் சற்று நிம்மதி மூச்சு விடடார்கள். முதல் ஒரு பந்து மிஸ் பண்ணிட்டேன். சுற்றி இருந்த கூட்டம் ஓஒ என்றது. சிலருக்கு உற்சாகம். சிலருக்கு கவலை. எல்லாத்துக்கும் ஓஒ தானே நம்ம ஊரில். அதுக்கு பிறகு அவருடைய நான்கு சர்வீஸ் களையும் நான் return பண்ணி விடுவேன் என்று நானே எதிர் பார்க்க வில்லை. அப்புறம் அந்த லதா எப்படி எதிர் பார்த்து இருக்க முடியும்? என்னுடைய return களை எல்லாம் 'ங்கே' என்று பார்த்து கொண்டு நின்றார்கள். பாவம். என் கணவரை திரும்பி பார்த்தால் அவர் அதற்கு மேல் அதிர்ச்சி ஆகி நிற்கிறார். என் மேல 'பாகம்பிரியாயாயாயா' ஏதும் வந்துடுச்சோன்னு அவருடைய பகுத்தறிவையும் மீறிய பயம் வந்துருக்கும் போல...இருக்காதா பின்ன...ஆக முதல் கேம் சுலபமாகவே ஜெயிச்சுட்டோம்.

அடுத்து Kathir/Priya Vs Sudeer/Swarna.கடவுள் எங்களை டாஸ் ஜெயிக்க
வைத்தார். டாஸ் போடுபவர் கேட்கவும், Sudeer "Ball in left hand" என்று சொல்லி, டாஸில் தோற்றார். Kathir serves Swarna.Swarna ஓரளவுக்கு நல்ல பிளேயர். முதல் நாள் பிராக்டிசில் என்னை செமத்தியாக ஓரங்கட்டி இருந்தார்கள்.. ஆனால் கதிரின் சர்வீஸ்களுக்கு தடுமாறினார்கள். சற்று அன்னியோன்னியமான ஆனால், சீரியசான தம்பதிகள். கணவர் சொதப்பும் போதெல்லாம் மனைவி 'ஆப்னே பில்குல் ப்ராக்டிஸ் நஹி கியா...'என்று கடிந்து கொண்டது எல்லாருக்கும் கேட்டது தற்செயலே.... முதல் கேம் அளவுக்கு சுலபம் இல்லன்னாலும் கூட, 21 -18 என்று டென்ஷன் இல்லாமல் ஜெயிச்சுட்டோம்.


அடுத்து Kathir/Priya Vs Ranjan/Nirja.இது வேலைக்காவாது என்ற நிலைமை. அந்த Nirja தான் womens singles இல் வெளுத்து வாங்கி ஜெயித்து இருந்தது. ரொம்ப சின்ன பெண்.போன முறை கடவுள் டாஸ் ஜெயிக்க வைச்சார். இந்த முறை டாஸ் ஜெயிக்க வைச்சது நான். டாஸ் கேட்கும் வாய்ப்பு எங்களுக்கு. என்னை கேட்க சொன்னார் கதிர். நம்ம strategic மூளையை உபயோகிச்சு, போன முறை வலது கையில் பந்து வைத்து இருந்தார். இந்த முறை மாற்றி தான் இருப்பார் என்ற நம்பிக்கையில் "Left " என்றேன்.இல்லாத ஸ்டைலுடன். "You won the toss" என்ற பதில் வந்தது. So Kathir serves Nirja என்றேன்."How mean" என்றது Nirja. ஸ்டைலாக."Lucky guys" சொன்னது Ranjan. 21-20 என்று மேட்ச் பாயிண்டில் வந்து கதிர் ஒரு சர்வீசில் கோட்டை விட்டு deuce ஆக்கினார். பெடரர் ஆடும் மேட்ச்களில் deuce என்றதும் ரெண்டு கண்ணையும் மூடி கொள்வேன். Advantage-Federar என்ற சத்தம் வந்தால் ஒரு கண்ணை மட்டும் திறந்து லேசா பாப்பேன். ஆனா இங்க deuceக்கு கண்ணை மூடினா என்னாவது...நம்ப மாட்டீங்க...நாலு முறை deuce ஆனது.

நாலாவது advantage - எங்களுக்கு வந்த போது என்னுடைய சர்வீஸ்.
"Focus!A proper service" - கதிர் அழுத்தமாக சொன்னதும், கை லேசா நடுங்கியது. Serve பண்ணிவிட்டு கண்ணை மூடிக்கொண்டேன். "Match won" சத்தமும் கைதட்டலும். அட மறுபடியுமா ஜெயிச்சுட்டோம். பவுல் அவுட்டில் wide போட்ட Afridi மாதிரி போயும் போயும் என்னோட சர்வீசை, தவற விட்டிருந்தார் Ranjan. மேட்ச் பாயிண்ட் எடுத்தது சாட்சாத் உப்புமாவாகிய நான். என்ன செய்வது, சில நேரங்களில் உப்புமாவும் ருசியாக இருந்து விடுகிறது.

Thursday, 21 January 2010

New house.

"synapse ஸா? அப்டின்னா?"

"ஏங்க? உங்களுக்கு வேற பேரே கெடைக்கலையா?"

"அக்கா, போன வாரம் சிஸ்டம் புட்டுகிச்சு, reinstall பண்ணா, favourites காலி. உங்க URL மறந்துட்டேன்"

"எழுதுறது தமிழ் பதிவு. பேரு மட்டும் எதுக்கு பீட்டர் தங்கச்சியாட்டம்?"

"பிரவுசிங் சென்டர் போனா, உங்க URL டைப் பண்ணுறதுக்குள்ள நாக்கு தள்ளி போய்டுது"

"உங்க பதிவு பேரை ஒருத்தன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணாம டைப் அடிச்சுட்டான்னா, நான் எழுதுறதையே விட்டுடறேன்"  - இதை சொன்னது, கலைஞர் டிவி, jayatv என்று பிசியாக பேட்டி கொடுத்து தள்ளும் ஒரு "பிரபல" எழுத்தாளர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.



இப்டி வாஸ்து பாடா படுத்துறதுனால என் பதிவு பெயர் மாற்றம் செய்யலாம் ன்னு இருக்கேன்.இந்த synapse பேரை வைக்கறதுக்கு பாடா பட்டேன். இப்போ எந்த பிரச்சனையும் வேணாம்ன்னு என் பேரையே பதிவுக்கும் வைக்கலாம்ன்னு இருக்கேன்.

http://priyakathiravan.blogspot.com/

ஆனா இதுல ஒரு சின்ன சிக்கல்.
பிளாக்கர்ல ரெண்டு options இருக்கு.

1)நம்ம பதிவு URLலை அப்டியே புது பேர்ல மாத்திடுது. மத்தபடி செட்டிங்க்ஸ், போஸ்ட, கமெண்ட்ஸ், followers ன்னு எல்லாம் safe .ஆனா, பழைய அட்ரஸ் போட்டு தேடறவங்களுக்கு "Blog not found" ன்னு பல்பு குடுக்குது. so நம்மள follow பண்ற நல்லவங்களை தவிர மத்தவங்க நம்மளை காணும்ன்னு முடிவு பண்ணிடுவாங்க.

2) நம்ம பழைய பதிவை எக்ஸ்போர்ட் பண்ணி, புது பதிவுல இம்போர்ட் பண்ணலாம். இதுல பல்பு நமக்கு. போஸ்ட் கமெண்ட்ஸ் எல்லாம் இம்போர்ட் ஆகுது. ஆனா followers இம்போர்ட் ஆக மாட்டேங்குது. என்ன கொடுமை இது?

அதுனால நான் option 1 தெரிவு பண்ணலாம்ன்னு இருக்கேன்.

பழசையும் திரும்ப register பண்ணி, "நான் புது வீட்டுக்கு போயிட்டேன்" அப்டின்னு ஒரு தகவல் மட்டும் கொடுக்கலாம் ன்னு நினைக்கிறேன். நம்மளை யாரும் தேட கூடாது பாருங்க.

இத விட வேற நல்ல ஐடியா இருந்தா சொல்லுங்க. ப்ளீஸ். உருப்படியா ஏதும் ஐடியா வரலன்னா, இந்த புது வீடு, வரும் குடியரசு தினவிழா அன்று கிரகப்பிரவேசம் செய்யப்படும்.

Sunday, 26 July 2009

ட்ரிங்! ட்ரிங்!

பயண தொடர் முடியும் வரை வேற எந்த பதிவும் எழுத கூடாது, அது அந்த தொடரின் continuity யை கெடுத்துடும் என்ற முடிவோட தான் இருந்தேன்.
ஆனால் இன்றைக்கு அந்த முடிவை மாற்றியது ஒரு டெலிபோன் கால்.


வெள்ளி இரவு, நானும் அர்ஜுனும் மட்டும் வீட்டில் தனியாக இருக்க வேண்டிய நிலைமை. துணைக்கு தம்பி வந்து இருந்தான். பக்கத்து அறையில் அவன் கதவை அடைத்து கொண்டு படுத்து விட, அர்ஜுனை தூங்க வைத்து, பிறகு இணையத்தில் பொழுதை கழித்து, பிறகு டிவி பார்த்து...என்று படுக்கும் போது கிட்ட தட்ட இரண்டு மணி. அடுத்த மூணு மணி நேரத்தில் ஒரு ரகளை நடக்க இருப்பதை கொஞ்சமும் எதிர் பார்க்காமல் தூங்க போனேன்.

பொதுவாகவே எனக்கு அதிகாலையில் வரும் தொலைபேசி அழைப்புகள்
என்றால் அலர்ஜி. அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கு. அர்ஜுன் பொறந்த பிறகு, "அவன் காலங்கார்த்தால தூக்கம் கலைந்து எழுந்தால் ரொம்ப படுத்துவான்" என்பதே அலர்ஜிக்கான முதல் காரணம் ஆகி போனது.

சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணி. வீட்டு landline போன் அலறியது கேட்டு, பதறி அடித்து எழுந்து ஓடிய நான், என்ன ஏது என்று உணர்வதற்குள் ஏதோ தடுக்கி கீழே குப்புற விழுந்து கிடக்கிறேன். சற்று நேரம் அதீத வலியை தவிர வேறு எதுமே நினைவில்லை. கத்த வேண்டும் என்று தோன்றுகிறதே தவிர சுத்தமாக குரல் வர வில்லை. நான் விழுந்த சத்தத்தில் எழுந்து விட்ட அர்ஜுன், நான் இப்டி விழுந்து கிடப்பதை பார்த்து "அம்மா பயமா இருக்கும்மா எந்திரிங்கம்மா" என்று அழுகிறான். இருக்கிற சக்தியை எல்லாம் திரட்டி எழுந்து அவன் பக்கத்தில் போய் படுத்து கொண்டேன். உடல் முழுக்க வலி பரவுகிறது. அவன் தூங்கி விட்ட பிறகு எழுந்து வந்து என்ன(வெல்லாம்) ஆகி இருக்கிறது என்று பார்த்தால், விழுந்த வேகத்தில் கட்டில் மோதி முகத்தில் இடது பாதி செவ செவ என்று ரத்தம் கட்டி போய் இருக்கிறது. ரெண்டு கை முற்றிலும் நல்ல சிராய்ப்பு. தம்பிய எழுப்பி விவரம் சொல்லி, etc etc.

கொடுமை என்னன்னா கடைசில அந்த போன் கால் attend பண்ணவே இல்லை நான்.
அர்ஜுனும் முழிச்சுட்டான். முகம் வீங்கியது தான் மிச்சம் எனக்கு.

-என்ன நீங்க இப்போதெல்லாம் அதிகமாக gChat பேசுவதே இல்லை?
சனிக்கிழமை morning கண்டிப்பாக chat செய்கிறேன்.

-Priya, Your feature test execution status is 50%. Its good though, we need to achieve 100% by 8/August.
Ok, I shall work over the weekend.

-ப்ரியா, saturday நம்ம ஆபீஸ்ல family day, நீ உன் husband கொழந்தை எல்லாம் கூட்டிட்டு வரியா?
இல்லப்பா, நான் weekend work பண்ணனும்.Kathir is out of station too. But உன் familyya கண்டிப்பா meet பண்றேன்.

இப்படி ரொம்ப பெருமையா ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி தெளித்து இருந்தேன்.
படு சொதப்பல்.

இந்த பதிவின் நோக்கம், என்னுடைய சோகத்தை சொல்வது அல்ல. infact, நான் சோகமாக இல்லை.

இன்று எனக்கு சில realisation. பகிர்ந்துக்கலாமேன்னு.

-suppose என் தம்பியும் வராமல் இருந்து, எனக்கு பட்ட அடி பலமாக பட்டு இருந்து, நினைவு ஏதும் தப்பி இருந்தால் அர்ஜுனின் கதி? பதினொரு மணிக்கு தான் வீட்டு வேலைகளில் எனக்கு உதவும் ஒரு அம்மா வந்து பார்த்து இருப்பார்கள். அதும் கதவு உள்பக்கமாக பூட்டி இருக்கும். சற்று extreme ஆன thinking தான். ஆனாலும் a very likely case. அதனால் கணவர்களே, மனைவியை தனியா விட்டுட்டு ஊருக்கு போகாதீங்க. மனைவிகளே, தனியா இருக்கும் போது சற்று எக்ஸ்ட்ரா conscious ஆக இருங்க.

-பதிவு எழுதுவதின் மிகப்பெரிய சம்பாத்யம் சுவாரஸ்யமான நண்பர்களும், சுவையான பொழுதுபோக்கும் தான் என்று நினைத்து இருந்தேன். அதை விட பெரிசா ஒண்னு இருக்கு. முன்னாடில்லாம் சின்னதா கொசு கடிச்சுதா கூட, எக்கச்சக்கமா depress ஆயிடுவேன்.ஆனா இப்போ எனக்கு படுற அடிகளையும், ரணங்களையும் கூட ஒரு அனுபவமா பாக்குற பக்குவம் கெடைச்சுருக்கு. "நகத்தை எடுத்தப்போவும், பல்லு பிடுங்கினப்போவும், இன்னைக்கு காலைல விழுந்து கிடந்தப்போவும் ப்ரியாவிற்கு எவ்ளோ தான் வலித்தாலும், பதிவர் ப்ரியா கதிரவன் நடப்பதை எல்லாம் சுவாரஸ்யமாக வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருந்து இருக்கிறாள்" என்பது இன்னைக்கு நான் தெரிஞ்சிகிட்ட அழகான விஷயம்.

With that I wish, May God Be with all of us and Guide us through things that could trip us :-)

Tuesday, 2 June 2009

பத்திரமா பாத்துக்கோங்க.

எதை?

பதில் கடைசியில்



எல்லாருக்கும் பதினெட்டு வயசில் wisdom teeth மொளைக்கும். வலிக்கும்.பதினெட்டு முடிஞ்சு சில சரி... சரி...பல வருடங்கள் ஆன நிலையில், lower wisdom teeth பக்கம் நல்ல வலி இருந்ததால், பல் டாக்டர் கிட்ட போனோம். எனக்கு தெரிஞ்சு என் முதல் Dentist visit. அவங்க செக் பண்ணிட்டு, "lower wisdom teeth ரெண்டுமே முளைக்க இடம் இல்லாததால, zig-zag க்கா முளைச்சு, அதுனால infect ஆகி இருக்கு. ரெண்டு பல்லையும் எடுத்துடறது நல்லது" ன்னு சொல்லிட்டாங்க. நம்ம தான் என்னைக்குமே ஒரு டாக்டர் சொல்றதை நம்பினது இல்லையே...இன்னும் ரெண்டு dentists கிட்ட second, third opinion கேட்டு எல்லாரும் அதையே சொல்லவும், பத்தாதுன்னு கூகிளை நாடியதில், 'wisdom teeth எதுக்கும் உதவாத உதவாக்கரை teeth, moreover wisdom teeth infection is common etc etc..எடுத்துடலாம்', என்று நம்பிக்கை அளிக்க 'சரி எடுத்துடலாம்.. என்ன போச்சு..' ன்னு முடிவு பண்ணியாச்சு.

ஏப்ரல் 30.

மே 1,2,3 என்று long weekend வந்ததால், ஏப்ரல் 30 அன்று பல் பிடுங்குவதற்கு
சுபயோக சுபதினமாகவும், surgeon கிட்ட 7-9PM முகூர்த்தமும் குறித்தாயிற்று.
'உனக்கும் wisdom க்கும் இருந்த ஒரே சம்பந்தம் இந்த பல் தான், அதுவும் போக போகுது' என்பதை போன்ற வாழ்த்துரைகளோடு, கிளினிக் போய் சேர்ந்தேன் கதிர் கூட.

'Wisdom teeth extraction is a surgical procedure. I have to give you local anesthesia. And drill your gums, Cut the bones, then extract the tooth' என்று ஏற்கனவே ஒரு கசாப்புகடைகாரர் அளவுக்கு டாக்டர் பில்டப் குடுத்து இருந்ததால் ஒரு திகிலோட தான் உக்காந்து இருந்தேன். வந்தார் surgeon. வந்தவர் நேரா enkitta வந்து, 'have you ever got an injection in your mouth?'

(வந்துட்டாருப்பா...)'No I haven't'

'Ok, It will pain a little. But then your mouth will be totally numb for the surgery. I will give you two injections on either side'

ஊசி போடும் போதே புரிந்து விட்டது. அடுத்த ஒரு மணி நேரம் ஏதோ ஒரு அவஸ்தைக்கு ஆளாக போகிறோம்ன்னு. Surgeon, அவ்ரோட attendant boy, ஒரு trainee லேடி டென்டிஸ்ட், நான், கதிர் என்று அந்த ரூம் ல அஞ்சு பேரு.

'Ok, Now tell me which teeth you want to be removed first?'

(ரொம்ப முக்யம்)'left one doctor' (அது தான் ரொம்ப வலிக்குது.மொதல்ல அத எடுங்க. அப்றோம் பொழச்சு கெடந்தா அடுத்ததை பாக்கலாம்)அப்போவே வாயில் உணர்வே இல்லாமல் மரத்து விட்டது.பேசும் போது ஏதோ மாயஜாலம் மாறி இருக்கு.

'Alright, Now I am gonna drill your teeth.'கதிர் ஆர்வமாக எட்டி பார்க்க, 'Aint you scared? Are you a doctor by any chance? Do you wanna take any video?' அப்டின்னு கேட்ட surgeon கிட்ட, 'யோவ், அவராவது பயப்படறாதாவது ...' ன்னு சொல்ல ஆசை. ஆனா வாய் எங்க இருக்குன்னே தெரியலை.

டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ன்னு சத்ததோட என் வாய்க்குள்ள drill பண்ண ஆரம்பிச்சார்.
நடு நடுல நிறுத்தி அந்த பையன் கிட்ட ஏதோ சொல்ல அவன் tube மாதிரி ஒன்ன என் வாயில நொழச்சான். drill பண்றப்போ வர ரத்தத்தை tube ல எடுக்கறான் ன்னு புரிஞ்சது. அடுத்தது cutting plier. Dental surgeons லாம் வேலை இல்லன்னா, carpenters ஆகிடலாம் போலிருக்கு. ரெண்டு பெரும் ஒரே மாறி ஆயுதம் தான் use பண்றாங்க, ஐயோ சாமி பல் எடுக்குறதுன்னா இதானா?? cutting plier வெச்சு பல்லை grip பண்ணி, ஏகத்துக்கு உலுக்குகிறார். இதே வேகத்தை apply பண்ணா ஒரு தென்னை மரத்தை கூட வேரோட சாச்சுடலாம் போலிருக்கு. ஆனா பல்லு வர மாட்டேங்குது.நான் கொஞ்சம் அசவுகரியமாக முகம் சுளிக்க, 'Mam, what you are feeling is only pressure and not pain, if you make faces like this, I will get confused'.
(அட பாவி... நீ பாட்டுக்கு confuse ஆகி வேற எந்த பல்லையாவது எடுத்துடாத)
இன்னும் கொஞ்சம் drill. மறுபடி cutting plier. Tube...நடுவுல அந்த trainee லேடி கிட்ட வேற 'are you a catholic christian?' அப்டின்னு situation க்கு சம்பந்தம் இல்லாத கேள்வி கேட்டு கொஞ்சம் கடலை போட்டுக்குறார். "IT காரங்களுக்கு நெறைய சம்பளம், நம்ம பேசாம இன்ஜினியரிங் இல்ல MBA படிச்சுருக்கலாம்" ன்னு அவங்க கிட்ட புலம்பினார்.
12th முடிச்சு, MBBS கிடைக்காத நிலையில், BDS counselling வந்த போது, "என்னை BDS அட்லீஸ்ட் சேத்து விடுங்க ன்னு வீட்டுல நான் ஸ்டிரைக் பண்ணியது நியாபகம் வந்தது.
'Yes, finished' ஒரு வழியா ன்னு பல்லை எடுத்து காட்டுனார். (அப்பாடா பாதி கெணறு தாண்டியாச்சு)

'Ok now the right tooth'.
வலது பக்கம் drill ஐ வெச்ச உடனே நான் 'ஆஆஆஅ' ன்னு கத்திட்டேன். மரண வலி.
'Some more local please' (local -> local anesthesia)
இன்னும் ஒரு ஊசி. அதுக்கும் 'ஆஆஆஆஆ'
மறுபடி drill பண்றார். மறுபடி நான் கத்துறேன்.
கொஞ்சம் கடுப்பாக, 'Mam, you cooperated for the left tooth, why now?'
'But now its paining' - செய்கை தான். காலேஜ்ல, ஸ்கூல்ல எல்லாம் dumsi வெளாடி இருக்கேனே ....:-)

'Oh is it? I would like to see the Xray Please'
(அப்போ இவ்ளோ நேரம் நீ xray பாக்கவே இல்லையா?)
அந்த attendent boy, xray ரிப்போர்ட் எடுத்துட்டு வந்து குடுத்தான்.
பாத்துட்டு சொல்றார்.'Your tooth is sitting right on the nerve, see... now I cant give you anesthesia on the nerve, which will make it permanently numb, So unless I make you completely unconscious, you need to go through this intense pain'

சொல்லிவிட்டு அவர் என்னை பாக்க, நான் கதிரை பாத்தேன்.
"கொஞ்சம் பொறுத்துக்கோ, you will be fine" பக்கத்துல வந்து நின்னுக்கிட்டார்.

ஆரம்பிச்சார் drilling. கண்ணை மூடிக்கிட்டு "ஆ ஊ " கத்தி ரகளை பண்றேன். கை கால் ல்லாம் ஒதறுது. காலை ஒருத்தர், கைய ஒருத்தர் பிடிச்சுக்குறாங்க, காலை புடிச்சு இருந்தது கதிரா இருக்கணும். (எனக்கு தெரியாதா??)
அடுத்து cutting plier வெச்சு உலுக்குகிறார், என் கண்ல தண்ணி வழிஞ்சு ஓடுது. அந்த டாக்டர் ரொம்ப கடுப்பா ஆகி, 'Mam, please cooperate' ன்னு கத்துறார்.(யோவ் டாக்டர் என் ஆயுசுக்கும் உன் முகத்துல முழிக்க மாட்டேன்)

ஒரு வழியா பத்து நிமிஷ போராட்டத்துக்கு பிறகு பல் நாலு துண்டாக உடைந்து வந்துடுச்சு.
அதுக்கு பிறகு தையல் போட்டது , ஊசி போட்டது, முகம் ஏகத்துக்கு வீங்கி 'தசாவதாரம் Fletcher' effect ல ஒரு வாரம் இருந்தது, தினமும் வேளைக்கு பத்து மாத்திரை சாப்பிட்டது, என்று எல்லாத்தையும் சொல்லணும்னா பதிவு பத்தாது.

Post surgery, கதிர் டாக்டர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தார். 'நான் பாட்டுக்கு போய் reception ல உக்காந்துட்டேன். அந்த attendant boy வந்து என்னையும் உள்ள கூப்பிட்டான் . பொது இடங்களில் என்னை பக்கத்து வீட்டு ஆள் மாதிரி treat பண்ணும் கதிர், அன்னைக்கு அதிசயமா கைய புடிச்சு, "are you ok?" ன்னு கேக்க போய், எனக்கு பாழா போன அழுகை மறுபடி வந்து தொலைச்சுது. உடனே அந்த டாக்டர் "do you want another injection?" ன்னு சீரியஸா கேக்க, டக் ன்னு சிரிச்சுட்டேன், "She is crying and laughing. This is adrenaline rush".என் xray யை வைத்து அந்த trainee க்கு ஏதோ சொல்லிக்குடுத்தார், அப்றோம் எனக்கு instructions etc.

வீட்டுக்கு வந்து "அந்த டாக்டர் கிட்ட என்ன பேச்சு உங்களுக்கு?" ன்னு கேட்டப்போ, "your wife is a brave woman, she was not scared, but the pain would be very intensive and her reaction was proportionally very less" அப்டின்ன்னு சொல்லிருக்கார். (டாக்டர் உன்னை sorry உங்களை மன்னிச்சுட்டேன்).

வீங்கின முகத்தோட நான் ஆபீஸ் க்கு வந்த நாட்களில்,
long leave இல் போயிருந்த ஒரு colleague திரும்பி வந்து, "Oh my, why did you become so fat?'என்று கேட்டதும், இன்னொரு colleague, chatல "Do you wanna drop?" என்று கேட்ட போது, ஓகே சொல்லிட்டு, ஆனால் அவர் இந்த முகத்தில் என்னை பார்த்து பயந்துட கூடாதேன்னு அவரை prep பண்றதுக்காக, "Actually my face is swollen due to a dental treatment" என்று நான் சொன்ன பதிலுக்கு, "Oh can you enter the car?" என்று அவர் கேள்வி கேட்டதும் இடுக்கண் (அதுவும் பல்வலி) வந்த போதும் என்னை வாய் விட்டு சிரிக்க வைத்தது சுவாரஸ்யம்.

Consultation போன போது, "கீழ் பல் சப்போர்ட் இல்லாத காரணத்தால மேல உள்ள wisdom teeth ரெண்டும், கீழ ஈறுகளை இடிக்கும், so அதையும் எடுத்துடறது நல்லதுன்னு" ஒரு பிட் போட்டு பார்த்தார். அப்றோமா வரேன்னு சொல்லிட்டு ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன்.


என் cousin ஒருத்தி டாக்டர், அவ சொல்லுவா, 'ஒவ்வொரு பொண்ணும் பிரசவ நேரத்துல இந்த ஒரு புள்ளயே போதும் ன்னு நெனச்சாலும், அதுக்கு அப்றோம் 'அவ்ளோவா வலிச்சுது?' ன்னு அந்த வலிய மறந்துடறதுனால தான், எல்லார் வீட்டுலயும் ரெண்டு மூணு புள்ளங்க இருக்கு' ன்னு...
ஆனா அந்த பல் எடுத்த வலி இந்த பதிவு எழுதும் போது கூட எனக்கு மறக்கலை.
அதுனால தான் சொல்றேன், பத்திரமா பாத்துக்கோங்க. உங்க பற்களை.
Dental surgeon கள் இரக்கமற்றவர்கள்.
















Monday, 16 February 2009

பட்ட கால்லயே படும்.

வெள்ளிக்கிழமை பெப்ரவரி 13 காலை 9:30

உலகத்தின் பெரும்பாலான கதவுகள் தள்ளி திறக்கும் விதத்தில் தான் இருக்கும். எங்க அலுவலகத்தின் ஓர் கதவு, அதுவும் கண்ணாடி கதவு, அதுக்கு மட்டும் விதி விலக்காக இழுத்து தொறக்கற மாறி வெச்சுருக்காங்க.
அந்த விதிவிலக்கு எனக்கு விதியாக போனது...

ஒரு மீட்டிங் க்கு நேரமாகிவிட்ட அவசரத்தில், வேகமாக நான் அந்த கதவ இழுக்க போக, டக் ன்னு ஒரு சத்தம், எங்கோ எதுவோ வலிப்பதை மாறி ஒரு உணர்வு. இருந்தாலும் பின்னாடி வந்தவங்களுக்கு எல்லாம் அங்க எந்த சம்பவமும் நிகழாத மாறி ஒரு feel குடுத்துக்கிட்டே நான் என் desk க்கு வந்து சேந்து குனிஞ்சு பாத்தா....,ஐயய்யோ என்னது இது ஒரே செவப்பா இருக்கு.என் வலது கால் பேரு விரல் நகம் பெயர்ந்து ரத்தம் வழிஞ்சுக்கிட்டுருக்கு.... கதவின் கீழ் முனை இடிச்சுருக்கு. உடனே கெளம்பி மெடிக்கல் ரூம் போனேன்.
"A glass door hit me....etc etc..."
"Its bleeding badly, u better take A TT shot"

என்னது ஊசியா? அர்ஜுன் பொறந்த அப்றோம் அந்த பக்கமே போனது இல்லையே.சரி வேற வழி இல்ல,
"Ok you give it"

நர்ஸ் ஊசி போட்டு காலில் கட்டு போட்டு விட்டு, "you better check the condition of the nail tomorrow" ன்னு சொல்லி அனுப்பிச்சுடாங்க.
நம்ம டீம் மக்கள், ஒவ்வொருத்தரா வந்து என்னாச்சு என்னாச்சு ன்னு கேட்டு, நான் பதில் சொல்லி, அவங்களும் ஜோக் அடிப்பதாக நெனச்சு, "கதவுக்கு ஒண்ணும் ஆகலையே" ன்னு கேட்டு and so on.
தலைவருக்கு போன் போட்டு விவரத்தை சொன்னா, எனக்கு ஏதோ எறும்பு கடிச்சு, அதுக்கு நான் போன் பண்ணிருக்கேன் அப்டிங்கற மாதிரி reaction.
இந்த situation க்கு எல்லாம் இருக்கவே இருக்காங்க எங்கம்மா ன்னு ஒரு போன் போட்டு அம்மா கிட்ட அம்மாஆஆஆ நீ சுமந்த பிள்ளை...சிறகொடிந்த கிள்ளை....,
"தண்ணி படாம பாத்துக்கோம்மா,ரொம்ப நடக்காதம்மா"....எல்லாம்...:-)



சாயங்காலம் அன்னைக்கின்னு எனக்கு வேலை பிச்சுகிட்டு போக, வீட்டுல drop பண்ண முடிஞ்சா எந்த colleagues கூடவும் கெளம்ப முடியாம போயி, எப்டியோ நொண்டி நொண்டி வீட்டுக்கு போயி சேந்தேன்.

சனிக்கிழமை பெப்ரவரி 14 காலை 7:30
------------------------------------
எந்திரிச்சு மெது மெதுவா பாத்ரூம் க்கு போற வழில கால்ல ஒரு இடி இடிச்சு, அம்மா ன்னு கத்த வந்தத அடக்கி, (நான் கத்தினா பின்னாடியே என் பையன் அம்மான்னு கத்திட்டு முழிச்சுடுவானே...) உள்ள நொழஞ்சா, கண்ணாடி ஸ்டாண்ட் ல பச்சை கலர் ல ஒரு குட்டி பெட்டி. பாக்குறதுக்கு நகைப்பெட்டி மாறி இருக்கு.
"அட நம்ம ஆளு எப்போலேர்ந்து இவ்ளோ romantic ஆ மாறினாரு? Valentines day க்கு ஏதோ surprise gift லாம் வாங்கி வெச்சுருக்காரே?, என்னவா இருக்கும் , தோடா மோதிரமா??" ன்னு கதவுல இருந்து கண்ணாடிக்கு போறதுக்குள்ள, (நொண்டி நொண்டி போறதுக்கு டைம் ஆகும் ல...) யோசிச்சுக்கிட்டே போயி அந்த பெட்டிய தொறந்து பாத்தா, "படுபாவிங்க, odonil க்கு எவண்டா இப்டி ஒரு பெட்டிய டிசைன் பண்ணீங்க??"
காதலர் தினத்துக்கு பரிசுகளைப் பரிமாறிக்கொண்ட காதலர்களே...நல்லா இருக்கப்பு!!!


காலை 10:30

டாக்டர் கிட்ட கொண்டு போயி கால காமிச்சு, again "I got hit at A glass door etc...etc"
கட்டை பிரிச்சு பாத்துட்டு, "பாதி நகம் ஏற்கனவே பேந்துடுச்சு. மொத்தத்தையும் எடுத்துடறது தான் நல்லது, Its A painless procedure, ஊசி போட்டு அந்த இடத்தை numb பண்ணிடுவேன், அதுக்கு அப்றோம் அந்த வெரலையே எடுத்தா கூட(??), வலிக்காது.என்ன சொல்றீங்க? "
நான் பரிதாபமா அவர பாக்க, "you carry on டாக்டர்"

"அட பாவி உங்களுக்கென்ன போச்சு? "

நகம் எடுக்கும் போது வலிக்காதுன்னு தெளிவா சொன்ன அந்த டாக்டர், anesthesia ஊசிய நகக் கண்ணை சுத்தி ஒரு அஞ்சாறு தடவ குத்த போறத பத்தி மறச்சுட்டார்.
அந்த காலத்துல எல்லாம் குற்றவாளிகளுக்கு, நகத்தை பிடுங்கி தண்டனை கொடுத்த காரணம் நல்லாவே வெளங்கிடுச்சு சாமி. வலியா அது? எழுத்தில் கொண்டு வர முடியாது.


அவர் எனக்கு ஊசி போடறப்போ ஆஆஆஆ!!!!!!! ன்னு ஒரு சத்தம்.பாத்தா அம்மாக்கு ஊசி போடறாங்களேன்னு என் புள்ள அழுவுறான். உலகத்துல நம்ம அம்மாக்கு அப்றோம் நமக்கு ஒண்ணுன்னா துடிச்சு போறது நம்ம புள்ள தான்.

ஒரு வழியா நகத்தை பிடுங்கி, கட்டு போட்டு விட்டார். வீட்டுக்கு வந்து பாத்தா லிப்ட் work ஆகலை. எத்தி எத்தி நாலு மாடி ஏறி வீட்டுக்கு போயி, சக்கரக்கட்டி படம் பாத்தேன்.I-pod ல பாட்டு கேட்டுகிட்டே இருக்கப்போ, டாக்ஸி டாக்ஸி , சின்னம்மா சிலக்கம்மா tracks லாம் வந்துச்சுன்னா என்னை அறியாம ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா என்னவோ இந்த பாட்டெல்லாம் நான் ஒரு வாட்டி கூட visuals பாத்தது இல்ல. படம் சரியல்ல ன்னு ஏற்கனவே கேள்வி பட்டு இருந்தாலும் இந்த பாட்டோட visuals பாக்கலாம் ன்னு படம் பாக்க உக்காந்தா, what A disappointment?
தல போட்டுக்குடுத்த tunes எல்லாம் எப்டி படம் ஆக்குறதுன்னு மணிரத்தினம், ஷங்கர் கிட்ட எல்லாம் படிச்சு தெரிஞ்சுக்குங்க டைரக்டர் சார்!

ஞாயிறு மாலை 6:30
--------------------------------
கலைஞர் டிவி யில் 'கடவுளின் குழந்தைகள்' என்று நான் கடவுள் குழுவின் கலந்துரையாடல். "படம் பாத்துட்டே ஒரு வாரமா எங்கயோ வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்கே நீ! you better dont watch this" ன்னு சொல்லிட்டு போன அவருடைய எச்சரிக்கைய அலட்சியம் செய்து விட்டு பாக்க ஆரம்பித்தேன். ரொம்ப கட்டுப்பாட்டுடன் தான் பாத்துகிட்டு இருந்தேன். ஆனா இளையராஜா வந்த உடன், பூஜா ஏதோ சொல்ல அதை புரிந்துகொண்டு மதுபாலா அவரை பாத்து கை கூப்பியதை பார்த்த பிறகு எனக்கு தாங்கலை. படம் பாக்குறப்போவே அவளை, அவளுடைய தாத்தாவிடம் இருந்து பிடுங்கி செல்லும் காட்சியில், "See it like A movie" என்று அவர் என்னை அழுகைய நிறுத்த சொன்னது ஞாபகம் வந்தது. ஆனாலும் நேத்து நைட் ஒரு ரெண்டு மணிநேரம் அழுது தீர்த்து முகம் வீங்கி இன்னைக்கு ஆபீஸ் வந்துருக்கிறேன். Especially, தாயான பிறகு இந்த கொடுமைகளை எல்லாம் தாங்க முடிவதில்லை.
கடவுளே! நீ எங்களுக்கு எதை புரிய வைக்க இவர்களை எல்லாம் படைக்கிறாய்?

என்னடா! வாரத்தின் முதல் நாள் வந்து இப்படி violin வாசிச்சுட்டேனே?? ஏதாவது மங்களகரமா முடிக்கணுமே பதிவ....Hmm...
Ok, என்னுடைய இந்த பதிவை tamilish இல் போஸ்ட் செய்து, அதுக்கு பத்து ஓட்டுகள் வேற கெடைச்சு, என்னுடைய பதியும் ஆர்வத்தை boost பண்ணிய ச.ந.கண்ணன் அவர்களுக்கு நன்றி மற்றும் திருமண வாழ்த்துக்கள்.




Thursday, 29 January 2009

கோயில் கொஞ்சம் போர் அடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு:-)


"When a woman gets married to a man, not only is she married to him, but to his whole family"

கடந்த வார இறுதியில் நான் உணர்ந்த உண்மை இது தான்.

ஜனவரி 26 அன்று என் மாமனாரின் அறுபதாவது பிறந்த நாள். அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதால், அதை ஒரு பிறந்த நாள் விழாவாக மட்டும் அறிவித்து, உறவினரகள்
எல்லாரையும் அழைத்து ஒரு "Get together' வைக்கலாம் என்று கதிர் க்கு ஒரு ஆசை....என் மாமனாரும் மாமியாரும் வேண்டாம் என்று மறுக்க, என் முதல் நாத்தனாரும் 'ரொம்ப பெரிய அளவில் எல்லாம் ஏதும் செய்ய வேணாம், அப்டியே செய்தாலும் சொந்த ஊரில் செய்யலாம், பெங்களூரில் வைத்து நடத்தினால் எல்லாருக்கும் ரொம்ப சிரமம் ' என்றே நினைக்க, என் இரண்டாவது நாத்தனாரும், அவரும் பிடி பிடின்னு பிடிச்சு, விழா நடத்தியே ஆக வேண்டும் என்றும் , அதுவும் பெங்களூரில் எங்க வீட்டில் வைத்து நடத்துவதாகவும் argue பண்ணி ஜெயிச்சுட்டாங்க.....

முதல் சுற்று உறவினர்களை மட்டும் அழைக்கலாம் என்று யோசித்து, எல்லாருக்கும் சொல்லியும் ஆகி விட்டது......26th திங்கள் கிழமை என்றாலும், ஞாயிறு மாலை ஏழு மணிக்கு function என்று முடிவு செய்தோம்.

நாள் நெருங்க நெருங்க எல்லாருக்குமே ஒரே உதறல். அதாவது சொந்த ஊரில் ஒரு விழா வைப்பது என்பது வெகு சுலபம். அனைவரும் விழா நேரத்துக்கு சரியா வருவாங்க, வாழ்த்துவாங்க, சாப்பிடுவாங்க, கெளம்பிடுவாங்க.மாமியார் மாமனார் சென்னை ல வெச்சு நெறைய functions பண்ணிருக்காங்க.
அர்ஜுனின் பேர் வைக்கும் படலம் கூட சென்னை ல தான் நடந்துச்சு.சென்னை ல உறவினரகள் நெறைய பேர் இருப்பதால, நெறைய advantages. ஊர்ல இருந்து வர்றவங்களை, சென்னை ல இருக்க உறவினரகள் ஸ்டேஷன் ல இருந்து pick up பண்லாம்.அவங்க வீட்டில் தங்க வைத்து கொள்ளலாம்.இந்த மாதிரி...நெறைய உதவிகள் நமக்கு கெடைக்கும்.

ஆனா பெங்களுர் ல வெச்சு பண்றதுல logistics சிக்கல்கள் நெறைய இருக்கு.எல்லாருக்கும் பெங்களுர் புதுசு. pick up பண்ணுறதுக்கும், தங்கும் இடம் எல்லாம் offer பண்றதுக்கும் இங்க வேற யார் வீடும் இல்ல.சென்னை ல இருந்தும், சொந்த ஊரிலுருந்தும் வர்ற எல்லாரையுமே நம்ம தான் பாத்துக்கணும்.அவங்களோட pick-up, drop, stay, food, entertainment என்று எல்லாமே நான், அவர், மாமனார், மாமியார் நாலு பேரும் மட்டுமே சமாளிக்க வேண்டிய challenge நெருங்க நெருங்க எங்க எல்லாருக்கும் ஒரே உதறல்.

எல்லாருக்கும் இந்த உதறல் மட்டும் தான்னா, எனக்கு எக்ஸ்ட்ரா உதறல் வேற.அதாவது திருமணம் ஆன உடனே, abroad போய்ட்டதுனால, நாங்க பெரும்பாலான குடும்ப விழாக்களை மிஸ் பண்ணிட்டோம் கடந்த மூணு வருஷமா.நடுவுல அர்ஜுனோட பேர் வைக்கும் function அன்னைக்கு, எனக்கு கைபுள்ளைக்காரி ன்னு சலுகை இருந்ததுனால, எனக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஆனால் இந்த முறை அப்டி இல்ல.

"நானும் உங்க குடும்பத்துக்குள்ள வந்துட்டேன்" அப்டின்னு நமக்கு ஒரு எடம் பிடிக்க வேண்டிய பொறுப்பு இருக்கு...
"என்ன மக்கா?"
"ஊர்ல பாட்டி தாத்தா எல்லாம் சும்மா இருக்காங்களா???" (நல்லா இருக்காங்களா வோட nagerkoil version)
"அந்த சர்வத்தை எடு" (சர்வம் - பாத்திரம்)
"அந்த போணிய எடு" (போணி - இன்னொரு பாத்திரம்)
"இந்தாம்மா...இத எல்லாருக்கும் வெளம்பு" (விளம்புதல் - பரிமாறுதல்)
"ரொம்ப வெசக்குது" (வெசக்குது - வியர்க்குது)
""ரொம்ப சடஞ்சுட்டேன்" (பலவீனமா ஆயிட்டேன்)

இந்த ரீதியிலான உரையாடல்களை எல்லாம் சகஜமா புரிஞ்சுக்கிட்டு கரெக்ட் ஆ react பண்ணனும். "அப்டின்னா??" அப்டின்னு அபத்தமா கேள்வி கேக்க கூடாது.
அப்போப்போ முடிஞ்சா இந்த வார்த்தைகளை எல்லாம் சரளமான தொனியில் பேசி,
"இது நம்ம பொண்ணு" என்ற பீலிங் வரவழைக்கணும்."கதிர் சரியான பொண்ண தான் கூட்டிட்டு வந்துருக்கான் நம்ம குடும்பத்துக்கு" ன்னு அவரோட மானத்தை காப்பாத்தணும்.

ஒரு வாரத்துக்கு முன்னாடிலேர்ந்தே வீடு களை கட்ட ஆரம்பிச்சுடுச்சு.
மாமா, அத்தை போய், தேவையான provisions எல்லாம் வாங்கிட்டு வந்துட்டாங்க.
அவர் எல்லாருக்கும் தூங்குவதற்கு பாய், தலையணை, மெத்தை, போர்வை எல்லாம் வாங்கிட்டு வந்தார். முதல் சுற்று உறவினர்கள் மட்டும் தான் என்றாலும், அதுவே ஒரு நாற்பது பேர் வந்துது எங்களையும் சேர்த்து. வீட்டுல இருக்கது ஒரு ஹால், மூணு ரூம்,அதனால எக்ஸ்ட்ரா மூணு guest ரூம் போட்டு வெச்சுகிட்டோம். ஞாயிறு இரவு மட்டும் தான் function என்றாலும், எங்களுக்கு சனி, ஞாயிறு,திங்கள் என்று மூணு நாளுமே விழா மாறி தான் தோணிச்சு. ஏன்னா எல்லாரும் சிலர் சனிக்கிழமை காலையிலும், மீதி பேர் ஞாயிறு காலையும் வருவதாகவும், பெரும்பாலானோர் திங்கள் கிழமை இரவு கெளம்புவாதகவும் சொன்னார்கள்.உக்காந்து ஒன்பது வேளைக்குமாக மெனு decide பண்ணி வெச்சோம்.வர்றவங்க எல்லாருக்கும் gift வாங்கி cover போட்டு பேரு எழுதி வெச்சோம்.


வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனா, வீடே இட்லி மாவுல மூழ்கி இருக்கு.என் மாமியார் அவ்ளோ மாவு அரச்சு தள்ளிட்டாங்க. பெரும்பாலான உணவு வெளியில் இருந்து வரவழைப்பதாக தான் பிளான், இருந்தாலும் அவசரத்துக்கு ஆகும்(??) என்று அவ்ளோ மாவு.

சனிக்கிழமை என் ரெண்டு நாத்தனார் குடும்பபும் வந்து சேர்ந்தார்கள். மீதி எல்லாரும் ஞாயிறு காலை.

என் கணவரும், மாமனாரும் சாப்பாடு வாங்கி வரவும், மாமியாரும், அவருடைய ரெண்டு அக்கா, நாத்தானர்கள், அதை எல்லாம் arrange பண்ணி எடுத்து எடுத்து குடுக்கவும் ,நானும் என் நாத்தனார்களும் பரிமாறவும் இல்ல இல்ல...விளம்பவும்....அட அட அட....:-)

என் நாத்தனார் கணவர்கள் ரெண்டு பேரும், பார்ட்டி ஹால் decoration.

ஞாயிற்றுக்கிழமை மாலை விழா இனிதே நடைபெற்றது.

-function dinner மெனு வில், தயிர் சாதமும் ஊத்தப்பமும் மட்டும் எங்களை செய்ய சொன்னார் அவர். மதியம் லஞ்ச் முடிஞ்சு எல்லாரும் சற்று ரெஸ்ட் எடுக்க போய் விட, நானும் என் நாத்தனார்களும் ஊத்தப்பமும், தயிர் சாதமும் செஞ்சோம். dinner ல ரொம்ப மிச்ச பட்டது இந்த ரெண்டு item தான்.

- என் மாமியாரின் அண்ணன் மகள் பிறவியிலேயே பேச முடியாதவர். அவருடைய ரெண்டரை வயது பொண்ணு பவித்ரா, மற்றவர்கள் எல்லாரிடமும் சகஜமாக பேசினாலும், அவளோட அம்மாவிடம் மட்டும் அவங்க மாறியே செய்கையில், தன்னுடைய தேவைகளை தெரிவித்தது எங்க எல்லாரையும் நெகிழ வைத்தது.

-"இந்த பைப் தொறந்தா வெந்நீர் வரும், இதுல தண்ணீர்,இப்டி திருப்பணும்,சூடு போதுமா பாருங்க" இந்த dialogue ஐ ஞாயித்து கிழமை ஒரு பத்து தடவை சொல்லிருப்பேன்.

-"ஏன் மூணு ரூம்லயும் western toilet இருக்கு?? " அதிகம் கேட்கப்பட்ட கேள்வி இது தான்.
"western toilet தான் actually ரொம்ப hygenic...blah blah" அவரும் சளைக்காம எல்லாருக்கும் பதில் சொன்னார்.

- மூணு நாளும் வீடு முழுக்க எச்சில் இலை, disposable tumblers, அழுக்கு துணி, செருப்புகள், பேப்பர்.ஆனால் எங்க வீடு எனக்கு அப்போ ரொம்ப அழகா இருந்த மாறி இருந்துச்சு.

-கடவுள் நம்பிக்கை இல்லாத என் மாமனார் க்கு மாமியாரின் பெரிய அண்ணன் திருநீறு இட்டு விடவும், இது தான் சாக்கு என்று வரிசையாக எல்லாரும் திருநீறு பூச ஆரம்பிக்க, நாங்களும் 'இதற்காக தானே காத்து இருந்தோம்' range ல அவர் காலில் விழ, என் மாமியார் எங்களுக்கு எல்லாம் திருநீறு இட்டு அவங்க ஆசையை தீர்த்து கொள்ள, மாமனார் பொறுமை காத்தார்.

-எப்போதும் எல்லாருக்கும் பரிமாறி முடித்து விட்டு நானும் என் நாத்தனார்களும் கடைசியில் ஒண்ணா உக்காந்து சாப்பிடறத பாத்து ஒற்றுமைக்கு பெயர் பெற்ற என் மாமியாரின் நாத்தனார், எங்களை "ஒற்றுமையா இருந்து சாப்பிடறீங்க" என்று பாராட்ட எங்க மூணு பேருக்கும் பெருமை பிடிபடலை.

-Sunday அர்ஜுனை பார்த்து கொள்ளும் பொறுப்பு என் அம்மாவிடமும், Dinner முடிஞ்சு ஐஸ் கிரீம் distribution என் தம்பியிடமும் கொடுக்க பட்டது.

-ஒரு van ஏற்பாடு செய்து எல்லாரையும் திங்கள் கிழமை பெங்களூர் Sight-seeing அனுப்பியாகி விட்டது. Lalbhag இல் flower-ஷோ, Iskon Temple என்று சுற்றிவிட்டு வந்தார்கள்.

- எல்லாரும் விழா முடிஞ்சு ஊருக்கு கெளம்ப கெளம்ப, அப்பாடா வேலை முடிஞ்சுது என்று ஆயாசம் வருவதற்கு பதிலா, "அய்யோ முடிஞ்சுடுச்சே, எல்லாரும் கெளம்பிட்டாங்களே" என்று கவலையாக இருந்தது உண்மை.

-5 seater sofa வில் என் மாமியார், அவருடைய ரெண்டு அக்கா, அண்ணன், அண்ணி எல்லாரும் சீரியல் பாக்க இடம் பிடித்து விட, என் மாமனார் Nilkama chair ஐ எடுத்து போட்டு உக்காந்து ஜோதியில் ஐக்கியம் ஆனார். மேகலாவில் இருந்து, சிவசக்தி வரை அசராமல் ரசித்து பார்க்கிறார்கள்:-)

-நேற்று ஊருக்கு கெளம்பிய என் மாமியாரின் பெரிய அண்ணன், என் மாமியாரை கொஞ்சம் வெளிய போயிட்டு எதிர்க்க வாம்மா என்று சகுனம் பாக்க, என் மாமியாரும் உடனே வெளிய போய் எதிர்க்க வந்தார், என் மாமனார் அத பாக்கலை:-)

-மற்றவர்கள் எல்லாரும் கெளம்பி விட்டார்கள். என் மாமியாரின் இரு அக்காக்கள் மட்டும் சில நாட்கள் எங்களுடன் தங்குகிறார்கள். வீட்டில் மூணு மாமியார்கள் இருப்பதால் ஆபீஸ் ல ஸ்பெஷல் permission குடுத்து இருக்கிறார்கள் எனக்கு சீக்ரம் கெளம்ப சொல்லி:-) நல்ல பொண்ணா சீன் போட நேரமே பத்தலை.

-அவரை பாராட்டுவதில் எப்போவுமே கஞ்ச தனம் காமிக்கும் என்னை , இந்த முறை அவருடைய planning and execution பிரமாதம் என்று சொல்ல வெச்சுட்டார். ஒரே நேரத்துல KR Puram, Cantonment, Majestic என்று மூன்று இடங்களில் வந்து இறங்கியவர்களை pick up செய்தது ஆகட்டும், குழந்தைகளோட வந்தவர்களுக்கும் , பயணத்தில் ரொம்ப சிரமப்பட்டு வந்தவர்களுக்கும், guest ரூம் allot பண்ணிய சாமர்த்தியம் ஆகட்டும்.சரியான நேரத்தில் சாப்பாடு எல்லாம் வரவழைப்பது, பரிமாறுவதில் எனக்கும் நாத்தனார்களுக்கும் உதவரதுன்னு பின்னிட்டாரு.

-மொத்தமாக வந்து இருந்த குழந்தைகள் ஏழு. அர்ஜுன் பயங்கர ஆட்டம்.

-குடும்பமாக எல்லாரும் சேர்வது கல்யாண மண்டபத்தில் மட்டுமே என்ற ஆதங்கம் எல்லாருக்கும் இருந்து இருக்கிறது.இப்டி மொத்த குடும்பமும் ரெண்டு மூணு நாள் சேந்து இருக்கும் வாய்ப்பு கெடச்சது பரம திருப்தி.ஏதோ ஒரு வாரமா எனக்கு விக்ரமன் படம் பாத்தா மாறி ஒரு உணர்வு.வந்தவங்க எல்லாருக்கும் எந்த குறையும் இல்லன்னு நெனைக்குறேன். God Bless.


எழுதும் போது மறந்து விட்டு போய், பின்னால் சேர்த்தது 02-February-2009
---------------------------------------------------------------------

-நான் ஒரு plate ல coffee tumbler எல்லாம்வெச்சு எடுத்துட்டு போய், எல்லாருக்கும் distribute பண்ணிட்டு இருந்தேன், உடனே என் நாத்தனார் ரெண்டு பேரும், "பொண்ணு பாக்க வந்து, coffee குடுத்து .....அப்டில்லாம் எதுவும் நடக்கலைன்னு இப்போ இப்டி குடுக்குறா" ன்னு என்னை நக்கல் அடிக்க போய், நான் வழக்கமான வாய்கொழுப்புல, "பொண்ணை புடிக்கலை ன்னு சொல்லிடுங்க, அப்டியாவது நான் தப்பிச்சுக்குறேன்" ன்னு சொன்னது நல்ல வேளை, பெரியவங்க நெறைய பேரு காதுல விழலை...:-)

-எப்போதும் என்னை வாம்மா, போம்மா என்று formal ஆக அழைக்கும் அவருடைய அத்தை, பெரியம்மா எல்லாம் இந்த முறை, "எடீ," என்று அவர்கள் பாஷையிலேயே அழைக்க ஆரம்பித்து விட, "ஆஹா நம்மளையும் ஆட்டை ல சேத்தாச்சு" என்று எனக்கு ஒரே குஷி.

Monday, 1 December 2008

வார இறுதிக்கு சென்னை சென்று இருந்தோம். நவம்பர் 29th அன்னைக்கு எனது மாமனார் தபால் துறையில் நாற்பது ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அதற்காக அவருக்கு அலுவலகத்தில் பிரிவுபச்சார விழா. எங்கள் குடும்பத்தில் அனைவரும் அவருடைய ஆபீஸ் க்கு போய் இருந்தோம்.எல்லாரும் அவரை வாழ்த்தி பேசி கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் எனது நாத்தனார் வந்திருக்க வில்லை. அவங்க ஒரு பேச்சாளர். என் மனதில், நம்ம குடும்பத்தினர் சார்பாக யாரையாவது நன்றி சொல்ல அழைத்தால், நான் போய் சொல்லலாம் என்று ஒரு எண்ணம். பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு, மைக் பக்கமே போக வில்லை...ரொம்ப out of touch .கண்ணை மூடி ஒரு ரெண்டு நிமிடங்கள் யோசிச்சு ஒரு நிமிடம் பேசுற மாறி சில வரிகள் தயார் செய்து கொண்டேன். அதற்குள் என் நாத்தனார் வந்துவிடவே, வடை பாயசத்தோட விருந்தளிக்க அவர்கள் வந்து விட்ட பிறகு, உப்புமாத்தனமா என் பேச்சு எதுக்குன்னு relax ஆயிட்டேன்....அர்ஜுன் வேறு பசி வந்து ரகளை செய்யவே, நான் விழாக்கூட்டத்தை விட்டு அகல வேண்டியதாகி விட்டது. ...அவங்க எல்லாரும் தப்பிச்சுட்டாங்க.....But you all have no choice.
நான் என்ன பேச நெனச்சேன்னு இங்க எழுதி இருக்கேன்.நீங்க படிச்சு தான் ஆகணும்....:-)

...................................................................................



அனைவருக்கும் வணக்கம்.
எனது மாமனாரை கடந்த மூன்று வருடங்களாக பரிச்சயம்.
நான் அவரிடம் பார்த்து வியந்த விஷயங்கள்...
- அவருடைய எளிமை.

-அடுத்தது, தன் பக்கம் நியாயம் இருந்தாலும் கூட, ஒரு பிரச்சினை என்று வரும் போது விவாதம் பண்ணி பெரிதாக்காமல், பிரச்சினைகளை தவிர்த்து விடும் அவருடைய சாதுர்யம்.

-அவருடைய தமிழ் ஆளுமை. ஒரு முறை அவருடைய நண்பர் தொலைபேசியில் தன்னுடைய மகனுடைய திருமண அழைப்பிதழில் அச்சிடுவதற்கு நல்ல வாக்கியங்கள் ஏதாவது சொல்லுமாறு கேட்ட போது, சற்றும் தாமதிக்காமல்

"யாயும் யாயும் யாராகியரோ நெஞ்சு நேர்ந்ததென்ன??
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன???"
என்று புறநானூற்று வரிகளை அவர் சட்டென்று சொல்ல கேட்டு நான் வியந்து போனேன்.

-அவருடைய English vocabulary skills. தினசரி ஆங்கிலம் பேசும் எங்களுக்கு எல்லாம் தெரியாத பல வார்த்தைகள் அவருக்கு சர்வ சாதாரணம்.எனக்கு திருமணம் ஆன புதிதில் எங்க wedding DVD பார்த்து கொண்டு இருந்தோம்.அதில் 'Best complements from Kith And Kin' என்று ஒரு வார்த்தை வந்தது. Kith And Kin என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை எனக்கோ என் கணவருக்கோ தெரிய வில்லை. 'சுற்றமும் நட்பும்' என்று ஒரு போடு போட்டார் என் மாமனார். நான் அசந்துட்டேன்.

- அவருடைய வேலையின் மீது அவருக்கு இருக்கும் dedication. நானும் என் கணவரும் IT துறையில் வேலை செய்கிறோம். அதிக வேலை பளு இருக்கும் நேரங்களில், வழக்கத்தை விட அதிகமான நேரம் அலுவலகத்தில் செலவிட நேரும் போது, ரொம்ப அலுத்துக்குவோம். ஆனால், being a PRI, மாங்கு மாங்கு ன்னு வெயிலும், மழையிலும் அலைந்து திரிந்து வேலை செய்து விட்டு வந்தாலும் ஒரு நாள் கூட தன் வேலையை பற்றி ஒரு அலுப்பு அவரிடம் தென் பட்டதே இல்லை...

'தனக்கு மாதா மாதம் சம்பளம் தரும் வேலை' என்பதை தாண்டி தபால் துறை மீது அவருக்கு ஒரு ஈடுபாடு இருப்பது உண்மை. கடந்த வருடம் நாங்க டென்மார்க் ல இருந்தப்போ ஒரு மூணு மாதம் அவர் அங்கே வந்து இருந்தார். அப்போ நாங்க வெளில செல்லும் போது, எங்க போஸ்ட் ஆபீஸ் அல்லது போஸ்ட் பாக்சை பார்த்தாலும் அவர் ரொம்ப உற்சாகமாகி விடுவார்.எங்க வீட்டுக்கு போஸ்ட் டெலிவரி பண்ண வரும் ஒரு போஸ்ட் வுமனை friend ஆக்கி கொண்டு, அங்க உள்ள போஸ்ட் ஆபீஸ் க்கு சென்று, அவர்களின் செயல் முறைகள் எல்லாத்தை பத்தியும் தெரிஞ்சுக்கிட்டு, நிறைய புகைப்படங்கள் எல்லாம் எடுத்து வந்தப்போ அவருடைய அந்த ஈடுபாடு ரொம்ப evident ஆ தெரிஞ்சுது.

அவருக்கு இந்த நாற்பதாண்டு கால அழகான அனுபவத்தை தந்த தபால் துறைக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அவர் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். ஆனால் எனக்கு கடவும் நம்பிக்கை நிறைய உண்டு. அவருடைய ஓய்வுக்காலம் அமைதியுடன் அமைய கடவுளை பிரார்த்திக்கிறேன்.
நன்றி, வணக்கம்.
..................................................................................

நான் எப்டி 'எங்க அப்பா இல்லன்னா நான் இன்னைக்கு இப்டி இல்ல' ன்னு சொல்லுவேனோ, அதே மாறி என் நாத்தனார், என் மாமனாரை பத்தி சொல்லுவாங்க....
அர்ஜுன் க்கு என் அப்பாவிடம் ஆங்கிலம் படிக்க குடுத்து வைக்கலைன்னு இதுக்கு முன்னால் ஒரு post ல சொல்லி இருந்தேன். ஆனா என் மாமனாரிடம் தமிழ் படிக்க குடுத்து வைத்து இருக்கிறான்.

.....................................................................................

And this post is undoubtedly dedicated to(No prizes for guessing) my Father in law, as a small gift for his retirement. This is wishing for him, peace,health and happiness today and everafter.

..................................................................................



பின்னால் சேர்த்தது 07Jan2009
சமீபத்தில் என் கணவர் இந்த பதிவை என் மாமனாரிடம் காட்டி இருக்கிறார்.அவர் குடுத்த கமெண்ட்:
"மொதல்ல அந்த பாட்டு புறநானூறு இல்ல...அடுத்தது lyrics மொத்தமும் தப்பு....இத படிச்சவங்க யாரும் சுட்டி காட்லையா???"
மானம் போச்.சொன்னதோட இல்லாம ஒழுங்கான வரிகளை எழுதி குடுத்து இத மாத்திடுன்னும் சொன்னாரு.அந்த வரிகள் இதோ:
"யாயும் ஞாயும் யாராகியரோஎந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்யானும் நீயும் எவ்வழி அறிதும்செம்புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
--- குறுந்தொகை -40