Friday, 19 June 2009

See you!

"வியாழன், வெள்ளி ரெண்டு நாளும் நீயும் அர்ஜுனும், வேற ரூம்ல போய் தூங்குங்க. நான் நல்லா தூங்கினா தான் சனிக்கெழமை டிரைவ் பண்ண முடியும்."

-

"நெக்ஸ்ட் ஒரு வாரம் நீ என்னை எந்த டென்ஷன் படுத்தவும் கூடாது, இல்லன்னா மொத்த கதையும் கந்தல்"
"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், அது எனக்கு ரொம்ப கஷ்டம். முயற்சி பண்றேன்"

-

"எனக்கு இளையராஜா hits, அர்ஜுன்க்கு jingle bells, அம்மா,அப்பாக்கு கண்ணதாசன் ஹிட்ஸ் எல்லாம் எடுத்து வெச்சுக்கோ, நீ தான் DJ."
-

"உன்னோட blouse இன்னும் தெக்கலையாம். நாளைக்கு வர சொல்லிருக்கா, உன் டெய்லர் சல்வார் லாம் அட்லீஸ்ட் தந்துட்டானா?"
"தந்துட்டான்ம்மா, சரி நாளைக்கு நீங்களும் அப்பாவும் போய் blouse வாங்கிட்டு வந்துடுங்க"
-

"Hey priya, have you transferred all the work to her?can she handle when you are not here?"
"yes, I did, and she can. Also, I will be on my mobile(லீவை cancel எதுவும் பண்ணிடாதீங்க தாயீ!!)"
-

"அர்ஜுன் க்கு fever கொறையலைன்னா நாளைக்கு கெளம்ப வேணாம், sunday காலைல கெளம்பலாம்."
-
"இந்த முறையாவது போயிட்டு வந்து ஒரு நல்லா பதிவு எழுதுவியா trip பத்தி?? எப்போவும் போல போங்கு blog எழுதாம??"

"நீங்க தான் என் blog போங்குன்னு சொல்றீங்க, பெரிய பெரிய ஆளுங்க எல்லாம், நான் நல்லா பதிவு பண்றதா சொல்றாங்க தெரியுமா?"

"யாருடீ பெரிய ஆளு? நீங்களா ஒரு பத்து பேரு சேர்ந்து அதுல ஒருத்தங்களை பெரிய ஆளு ன்னு சொல்லிக்குறீங்க, ஆளாளுக்கு மாத்தி மாத்தி உன் பதிவு நல்லா இருக்கு, உன் பதிவு நல்லா இருக்குன்னு சொல்லிக்குறீங்க"
"Grrrrrr அட போய்யா"
-

சரி எதுக்கு இவ்ளோ பில்டப்? சொல்ல வந்தத சொல்லிடறேன். நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி. ஒரு திருமண விழாவுக்காக ஊருக்கு போறோம். synapse க்கு ஒரு வாரம் லீவ்.அடுத்த monday பாக்கலாம். 'அப்பாடா' என்று பெருமூச்சு விடுபவர்கள், இந்த வாரம் முழுதும், படு மொக்கை பதிவுகளாக படிக்க கடவது.

-

Wednesday, 17 June 2009

பாட்டு போட்டி - 2

"பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும் முடிவில் இருவரும் வென்றாக வேண்டும்."

"இதில் யார் தோல்வியுறும் போதும் அது தான் வெற்றி என்றாகும்"

தல ஒரு பாட்டுல சொன்னதையே கொஞ்சமா மாத்தி போட்டு இன்னொரு பாட்டுல சொல்லிருக்காரு.

என்ன பாடல்கள் என்று யோசித்து சொல்லுங்கள். ரொம்ப சுலபம் தான். அதுனால கூகிள் பண்ண கூடாது.

response பொறுத்து, நெறைய lyrics கேள்விகள் கேட்கலாம் என்று எண்ணம்.

Wednesday, 10 June 2009

இதை ஆரம்பிச்சது யாருங்க?

இன்னைக்கு 'synapse' க்கு என்ன ராசிபலன்னு பார்க்கணும்.
இட்லிவடை,ச.ந.கண்ணன் ன்னு எல்லாரும் link பண்றாங்க. திட்டுறாங்களோ, பாராட்டுறாங்களோ, அதுக்கெல்லாம் நம்ம எங்க கவலைப்பட்டோம்!

பொதுவாவே இந்த தொடர்பதிவுகள் பக்கம் போறது இல்ல நான். ஆனால், இந்த முறை "நீங்க இன்னைக்கு night க்குள்ள இந்த பதிவை பாஸ் பண்ணலைன்னா, இன்னொரு பல்லு புடுங்கும் நிலைமை வரட்டும்' என்று கண்ணன் சபித்ததால் (ரொம்ப பயந்துட்டேங்ண்ணா!!!)...

இதுக்கு முன்னாடி தொடர்பதிவுகள்ல கோர்த்து விட்டவங்க மன்னிச்சுக்கோங்க. 'அப்போல்லாம் எழுதலை, இப்போ மட்டும் என்ன' ன்னு சண்டைக்கு வராதீங்க. என்ன பண்ணுறது, சில பேரு ரொம்ப மெரட்டி வேலை வாங்குறாங்க. :-(
Violence works at times.





உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
இந்திராகாந்தியோட பேரு இந்திரா ப்ரியதர்ஷினி. எங்கப்பாவுக்கு இந்த பேரு புடிச்சுதா, இல்ல அவங்களை புடிக்குமா தெரியலை. எனக்கு ப்ரியதர்ஷினின்னு வெச்சு, அப்றோம் அது சுருங்கி ப்ரியா ஆயிடுச்சு.

உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
பிடிக்குமே.

அய்யோ மொத கேள்விக்கு பதில் சொல்றதுக்குள்ளயே நாக்கு தள்ளுது. இன்னும் எத்தனை இருக்கோ தெரியலை...

கடைசியாக அழுதது எப்போது?
இப்போ தான் அழுகை வருது.

உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
ரொம்ப.

பிடித்த மதிய உணவு?
பொதுவாவே உணவுன்னாலே ரொம்ப பிடிக்கும். இதுல மதிய உணவு என்ன, மாலை உணவு என்ன?

நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
கேள்வியே புரியலை. வேறு யாரோடயாவது தானே நட்பு வெக்க முடியும்? நம்ம கூடவேவா வெக்க முடியும்?

கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
கடல்ல குளிச்சது இல்ல.அருவியில் குளித்தது பிடித்தது. கூட்டமில்லாத போது.

ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
அது யாரை பாக்குறேங்கறதை பொறுத்தது. I mean, அர்ஜுனை பாத்தா எங்கயாவது விழுந்து காயம் பண்ணி வெச்சுருக்கான்னு ...
கதிரை பாத்தா, ஏதாவது செஞ்சுட்டு திருட்டு முழி முழிக்குறாரான்னு ...etc etc.

உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
புடிச்ச விஷயம்: எனக்கு எது தெரியும் எது தெரியாது என்ற பலம், பலவீனங்களை உணர்ந்து இருப்பது, புடிக்காத விஷயம்: தெரியாத விஷயங்களை தெரிஞ்சுக்கணும் ன்னு ஆர்வம் இல்லாமல், தெரிஞ்சதை வெச்சே குப்பை கொட்ட முயற்சிப்பது.

இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
எங்கப்பா.

நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
யாரு பாவத்தையும் கொட்டிக்க வேணாம்ன்னு நெனச்சேன். இருந்தாலும் ஏதோ ஒரு முயற்சியின் பொருட்டு இந்த தொடர்பதிவு ஆரம்பித்து இருக்கும் அதை ஏன் உடைப்பானேன் என்று...சம்பந்தப்பட்டவர்கள் சாபம் கொடுப்பதானால் கண்ணனுக்கு போய் சேரட்டும்.
ராஜி,Maddy,ரிதன்யா,Truth: கண்டிப்பாக எழுதுவார்கள் என்று நம்புவதால்.
இவங்க கிட்ட புடிச்ச விஷயம் சொல்லணுமா? ஏற்கனவே இங்க சொல்லிருக்கேன்.

உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
அபியும் நானும்

பிடித்த விளையாட்டு?
கண்டிப்பாக கிரிக்கெட் அல்ல.

கண்ணாடி அணிபவரா?
ரொம்ப முக்கியம். இருந்தாலும் தொடர்பதிவுல போட்டு தாக்குறீங்க. முடி.....ய....ல....

எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
இங்க சொல்லிருக்கேன்.

கடைசியாகப் பார்த்த படம்?
அருந்ததீ. இட்லிவடை போட்ட மார்க் பாத்து, அடிச்சு பிடிச்சு படம் பாத்து ஏமாந்தேன். ஆனா அனுஷ்கா சூப்பர்.

என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
P&I guide.இருங்க இத எங்கயும் தேடாதீங்க, எங்க கம்பெனி propriatory book. ஒரு installation பண்ணிக்கிட்டு இருக்கேன் இத படிச்சு. விகடன் குமுதத்துக்கே நேரம் இல்லையாம். இதுல என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?.....என் விதி.


வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். ஏன் ஏன் இப்டில்லாம்?
சரி கொஞ்சம் எமோஷனலா ஒரு பதில் சொல்றேன். அம்மா வீட்டை விட்டு சென்ற அதிக தொலைவு புருஷன் வீடு. சரி சரி, விடுங்க, நீங்க இப்டில்லாம் கேள்வி கேட்டா வேற எப்டி பதில் சொல்லணும்??

உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
தெரியலையே.

உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
'ஏற்றுக்கொள்ள முடியாத' அப்டின்னு எல்லாம் இல்ல.ஏன்னா நானே ரொம்ப நல்லவ இல்ல.ஆனா சிலர் ரொம்ப 'பிட்டு' போடறப்போ மனசுக்குள்ள சிரிச்சுப்பேன்.

உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
அம்மா வீட்டுக்கு போவதே அப்படி ஆகிவிட்டதால், இப்போதைக்கு புடிச்ச சுற்றுலா தலம் அம்மா வீடு தான்.

எப்படி இருக்கணும்னு ஆசை?
நிம்மதியா.

மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
நான் தான் மனைவி. என் கணவர் நான் இல்லாதப்போ செய்யறதையே தான், இருக்கப்போவும் செய்கிறார், கொஞ்சம் கூட பயம் இல்ல. என்ன பண்ண?

வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க?
நான் என்ன சொல்லுறது. அதன் ரொம்ப முன்னாடியே சொல்லிட்டாங்களே...அதுவும் ஒரே வார்த்தையில். வாழ்வே மாயம்.

அப்பாடா முடிஞ்சுது.

Tuesday, 2 June 2009

பத்திரமா பாத்துக்கோங்க.

எதை?

பதில் கடைசியில்



எல்லாருக்கும் பதினெட்டு வயசில் wisdom teeth மொளைக்கும். வலிக்கும்.பதினெட்டு முடிஞ்சு சில சரி... சரி...பல வருடங்கள் ஆன நிலையில், lower wisdom teeth பக்கம் நல்ல வலி இருந்ததால், பல் டாக்டர் கிட்ட போனோம். எனக்கு தெரிஞ்சு என் முதல் Dentist visit. அவங்க செக் பண்ணிட்டு, "lower wisdom teeth ரெண்டுமே முளைக்க இடம் இல்லாததால, zig-zag க்கா முளைச்சு, அதுனால infect ஆகி இருக்கு. ரெண்டு பல்லையும் எடுத்துடறது நல்லது" ன்னு சொல்லிட்டாங்க. நம்ம தான் என்னைக்குமே ஒரு டாக்டர் சொல்றதை நம்பினது இல்லையே...இன்னும் ரெண்டு dentists கிட்ட second, third opinion கேட்டு எல்லாரும் அதையே சொல்லவும், பத்தாதுன்னு கூகிளை நாடியதில், 'wisdom teeth எதுக்கும் உதவாத உதவாக்கரை teeth, moreover wisdom teeth infection is common etc etc..எடுத்துடலாம்', என்று நம்பிக்கை அளிக்க 'சரி எடுத்துடலாம்.. என்ன போச்சு..' ன்னு முடிவு பண்ணியாச்சு.

ஏப்ரல் 30.

மே 1,2,3 என்று long weekend வந்ததால், ஏப்ரல் 30 அன்று பல் பிடுங்குவதற்கு
சுபயோக சுபதினமாகவும், surgeon கிட்ட 7-9PM முகூர்த்தமும் குறித்தாயிற்று.
'உனக்கும் wisdom க்கும் இருந்த ஒரே சம்பந்தம் இந்த பல் தான், அதுவும் போக போகுது' என்பதை போன்ற வாழ்த்துரைகளோடு, கிளினிக் போய் சேர்ந்தேன் கதிர் கூட.

'Wisdom teeth extraction is a surgical procedure. I have to give you local anesthesia. And drill your gums, Cut the bones, then extract the tooth' என்று ஏற்கனவே ஒரு கசாப்புகடைகாரர் அளவுக்கு டாக்டர் பில்டப் குடுத்து இருந்ததால் ஒரு திகிலோட தான் உக்காந்து இருந்தேன். வந்தார் surgeon. வந்தவர் நேரா enkitta வந்து, 'have you ever got an injection in your mouth?'

(வந்துட்டாருப்பா...)'No I haven't'

'Ok, It will pain a little. But then your mouth will be totally numb for the surgery. I will give you two injections on either side'

ஊசி போடும் போதே புரிந்து விட்டது. அடுத்த ஒரு மணி நேரம் ஏதோ ஒரு அவஸ்தைக்கு ஆளாக போகிறோம்ன்னு. Surgeon, அவ்ரோட attendant boy, ஒரு trainee லேடி டென்டிஸ்ட், நான், கதிர் என்று அந்த ரூம் ல அஞ்சு பேரு.

'Ok, Now tell me which teeth you want to be removed first?'

(ரொம்ப முக்யம்)'left one doctor' (அது தான் ரொம்ப வலிக்குது.மொதல்ல அத எடுங்க. அப்றோம் பொழச்சு கெடந்தா அடுத்ததை பாக்கலாம்)அப்போவே வாயில் உணர்வே இல்லாமல் மரத்து விட்டது.பேசும் போது ஏதோ மாயஜாலம் மாறி இருக்கு.

'Alright, Now I am gonna drill your teeth.'கதிர் ஆர்வமாக எட்டி பார்க்க, 'Aint you scared? Are you a doctor by any chance? Do you wanna take any video?' அப்டின்னு கேட்ட surgeon கிட்ட, 'யோவ், அவராவது பயப்படறாதாவது ...' ன்னு சொல்ல ஆசை. ஆனா வாய் எங்க இருக்குன்னே தெரியலை.

டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ன்னு சத்ததோட என் வாய்க்குள்ள drill பண்ண ஆரம்பிச்சார்.
நடு நடுல நிறுத்தி அந்த பையன் கிட்ட ஏதோ சொல்ல அவன் tube மாதிரி ஒன்ன என் வாயில நொழச்சான். drill பண்றப்போ வர ரத்தத்தை tube ல எடுக்கறான் ன்னு புரிஞ்சது. அடுத்தது cutting plier. Dental surgeons லாம் வேலை இல்லன்னா, carpenters ஆகிடலாம் போலிருக்கு. ரெண்டு பெரும் ஒரே மாறி ஆயுதம் தான் use பண்றாங்க, ஐயோ சாமி பல் எடுக்குறதுன்னா இதானா?? cutting plier வெச்சு பல்லை grip பண்ணி, ஏகத்துக்கு உலுக்குகிறார். இதே வேகத்தை apply பண்ணா ஒரு தென்னை மரத்தை கூட வேரோட சாச்சுடலாம் போலிருக்கு. ஆனா பல்லு வர மாட்டேங்குது.நான் கொஞ்சம் அசவுகரியமாக முகம் சுளிக்க, 'Mam, what you are feeling is only pressure and not pain, if you make faces like this, I will get confused'.
(அட பாவி... நீ பாட்டுக்கு confuse ஆகி வேற எந்த பல்லையாவது எடுத்துடாத)
இன்னும் கொஞ்சம் drill. மறுபடி cutting plier. Tube...நடுவுல அந்த trainee லேடி கிட்ட வேற 'are you a catholic christian?' அப்டின்னு situation க்கு சம்பந்தம் இல்லாத கேள்வி கேட்டு கொஞ்சம் கடலை போட்டுக்குறார். "IT காரங்களுக்கு நெறைய சம்பளம், நம்ம பேசாம இன்ஜினியரிங் இல்ல MBA படிச்சுருக்கலாம்" ன்னு அவங்க கிட்ட புலம்பினார்.
12th முடிச்சு, MBBS கிடைக்காத நிலையில், BDS counselling வந்த போது, "என்னை BDS அட்லீஸ்ட் சேத்து விடுங்க ன்னு வீட்டுல நான் ஸ்டிரைக் பண்ணியது நியாபகம் வந்தது.
'Yes, finished' ஒரு வழியா ன்னு பல்லை எடுத்து காட்டுனார். (அப்பாடா பாதி கெணறு தாண்டியாச்சு)

'Ok now the right tooth'.
வலது பக்கம் drill ஐ வெச்ச உடனே நான் 'ஆஆஆஅ' ன்னு கத்திட்டேன். மரண வலி.
'Some more local please' (local -> local anesthesia)
இன்னும் ஒரு ஊசி. அதுக்கும் 'ஆஆஆஆஆ'
மறுபடி drill பண்றார். மறுபடி நான் கத்துறேன்.
கொஞ்சம் கடுப்பாக, 'Mam, you cooperated for the left tooth, why now?'
'But now its paining' - செய்கை தான். காலேஜ்ல, ஸ்கூல்ல எல்லாம் dumsi வெளாடி இருக்கேனே ....:-)

'Oh is it? I would like to see the Xray Please'
(அப்போ இவ்ளோ நேரம் நீ xray பாக்கவே இல்லையா?)
அந்த attendent boy, xray ரிப்போர்ட் எடுத்துட்டு வந்து குடுத்தான்.
பாத்துட்டு சொல்றார்.'Your tooth is sitting right on the nerve, see... now I cant give you anesthesia on the nerve, which will make it permanently numb, So unless I make you completely unconscious, you need to go through this intense pain'

சொல்லிவிட்டு அவர் என்னை பாக்க, நான் கதிரை பாத்தேன்.
"கொஞ்சம் பொறுத்துக்கோ, you will be fine" பக்கத்துல வந்து நின்னுக்கிட்டார்.

ஆரம்பிச்சார் drilling. கண்ணை மூடிக்கிட்டு "ஆ ஊ " கத்தி ரகளை பண்றேன். கை கால் ல்லாம் ஒதறுது. காலை ஒருத்தர், கைய ஒருத்தர் பிடிச்சுக்குறாங்க, காலை புடிச்சு இருந்தது கதிரா இருக்கணும். (எனக்கு தெரியாதா??)
அடுத்து cutting plier வெச்சு உலுக்குகிறார், என் கண்ல தண்ணி வழிஞ்சு ஓடுது. அந்த டாக்டர் ரொம்ப கடுப்பா ஆகி, 'Mam, please cooperate' ன்னு கத்துறார்.(யோவ் டாக்டர் என் ஆயுசுக்கும் உன் முகத்துல முழிக்க மாட்டேன்)

ஒரு வழியா பத்து நிமிஷ போராட்டத்துக்கு பிறகு பல் நாலு துண்டாக உடைந்து வந்துடுச்சு.
அதுக்கு பிறகு தையல் போட்டது , ஊசி போட்டது, முகம் ஏகத்துக்கு வீங்கி 'தசாவதாரம் Fletcher' effect ல ஒரு வாரம் இருந்தது, தினமும் வேளைக்கு பத்து மாத்திரை சாப்பிட்டது, என்று எல்லாத்தையும் சொல்லணும்னா பதிவு பத்தாது.

Post surgery, கதிர் டாக்டர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தார். 'நான் பாட்டுக்கு போய் reception ல உக்காந்துட்டேன். அந்த attendant boy வந்து என்னையும் உள்ள கூப்பிட்டான் . பொது இடங்களில் என்னை பக்கத்து வீட்டு ஆள் மாதிரி treat பண்ணும் கதிர், அன்னைக்கு அதிசயமா கைய புடிச்சு, "are you ok?" ன்னு கேக்க போய், எனக்கு பாழா போன அழுகை மறுபடி வந்து தொலைச்சுது. உடனே அந்த டாக்டர் "do you want another injection?" ன்னு சீரியஸா கேக்க, டக் ன்னு சிரிச்சுட்டேன், "She is crying and laughing. This is adrenaline rush".என் xray யை வைத்து அந்த trainee க்கு ஏதோ சொல்லிக்குடுத்தார், அப்றோம் எனக்கு instructions etc.

வீட்டுக்கு வந்து "அந்த டாக்டர் கிட்ட என்ன பேச்சு உங்களுக்கு?" ன்னு கேட்டப்போ, "your wife is a brave woman, she was not scared, but the pain would be very intensive and her reaction was proportionally very less" அப்டின்ன்னு சொல்லிருக்கார். (டாக்டர் உன்னை sorry உங்களை மன்னிச்சுட்டேன்).

வீங்கின முகத்தோட நான் ஆபீஸ் க்கு வந்த நாட்களில்,
long leave இல் போயிருந்த ஒரு colleague திரும்பி வந்து, "Oh my, why did you become so fat?'என்று கேட்டதும், இன்னொரு colleague, chatல "Do you wanna drop?" என்று கேட்ட போது, ஓகே சொல்லிட்டு, ஆனால் அவர் இந்த முகத்தில் என்னை பார்த்து பயந்துட கூடாதேன்னு அவரை prep பண்றதுக்காக, "Actually my face is swollen due to a dental treatment" என்று நான் சொன்ன பதிலுக்கு, "Oh can you enter the car?" என்று அவர் கேள்வி கேட்டதும் இடுக்கண் (அதுவும் பல்வலி) வந்த போதும் என்னை வாய் விட்டு சிரிக்க வைத்தது சுவாரஸ்யம்.

Consultation போன போது, "கீழ் பல் சப்போர்ட் இல்லாத காரணத்தால மேல உள்ள wisdom teeth ரெண்டும், கீழ ஈறுகளை இடிக்கும், so அதையும் எடுத்துடறது நல்லதுன்னு" ஒரு பிட் போட்டு பார்த்தார். அப்றோமா வரேன்னு சொல்லிட்டு ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன்.


என் cousin ஒருத்தி டாக்டர், அவ சொல்லுவா, 'ஒவ்வொரு பொண்ணும் பிரசவ நேரத்துல இந்த ஒரு புள்ளயே போதும் ன்னு நெனச்சாலும், அதுக்கு அப்றோம் 'அவ்ளோவா வலிச்சுது?' ன்னு அந்த வலிய மறந்துடறதுனால தான், எல்லார் வீட்டுலயும் ரெண்டு மூணு புள்ளங்க இருக்கு' ன்னு...
ஆனா அந்த பல் எடுத்த வலி இந்த பதிவு எழுதும் போது கூட எனக்கு மறக்கலை.
அதுனால தான் சொல்றேன், பத்திரமா பாத்துக்கோங்க. உங்க பற்களை.
Dental surgeon கள் இரக்கமற்றவர்கள்.