Friday, 23 April 2010

IPL - Unplugged

அப்போது இந்த கேபிள், செட்டாப் பாக்ஸ், டிஷ் டிவி, டைரக்ட் டு ஹோம் இது மாதிரி ஏதும் கிடையாது. ஆண்டெனாவை மட்டுமே நம்பி இருந்த சமயம்.வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் சரியா இரவு 7:50க்கு ஆரம்பிக்கும். நாங்கள் எல்லாம் சென்னை தொலைகாட்சி நிலையத்தில் இருந்து வெகு தூரத்தில் இருந்தவர்கள். அதிலும் எங்கள் வீட்டில் இருந்ததோ ஒரு ப்ளாக் அண்ட் ஒயிட் டிவி. "Orson " என்று ஒரு மாடல். இப்போ மாதிரி கரெக்ட் டயத்துக்கு எல்லாம் டிவியை டக்குன்னு ஆன் பண்ணோமா, நிகழ்ச்சிய பார்த்தோமான்னு எல்லாம் இருக்க முடியாது.

நிகழ்ச்சி நேரத்துக்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே டிவி போட்டு, அதுல இருக்கற டியூனரை கிட்ட தட்ட, ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கற ரீதியில் சுத்து சுத்துன்னு சுத்தி, (ஆண்டனாவை ஆட்டிய கதைகள் எல்லாம் இருக்கின்றன) அப்படி நம்ம டிவி பக்கத்துல இருந்து சுத்தறப்போ, நாம உக்கார்ந்து பார்க்க போகும் இடத்தில் ஒருத்தர் நின்று கொண்டு, 'இப்போ லேசா தெரியுது', 'ஐயோ இப்போ போய்டுச்சு', 'இப்போ பரவால்ல', 'லெப்ட்ல திருப்பு', 'ஐயோ ரொம்ப திருப்பிட்ட',  'மறுபடி மெதுவா ரைட்ல திருப்புன்னு' எல்லாம் instructions கொடுப்பார்.நாமளும் அதை எல்லாம் செஞ்சோம்னா ஒரு வழியா டிவியில் மங்கலாக உருவமும், லேசாக பேச்சு குரலும் உயிர் பெற ஆரம்பிக்கும்.இப்படி செட் பண்ணி 'வயலும் வாழ்வும்'ல இருந்தே பார்க்க ஆரம்பிச்சா தான், ஒளியும் ஒலியும் பார்க்க பிராப்தம். ஒரு வேளை நம்ம மறந்து போய் 7:45க்கு தான் டிவி போடறோம்ன்னு வெய்யுங்க. வெறும் புள்ளி புள்ளியா தான் தெரியும். டியூனரை சுத்தி முடிக்கறதுக்குள்ள முக்கியமான ஒன்றிரண்டு பாட்டுகள் போய் இருக்கும்.

சரி, அப்போதாவது Orson டிவி - ஆண்டனா காம்பினேஷன், ஒளியும் ஒளியும் வேண்டி ஒரு மணிநேரம் முன்னதாகவே டிவி பார்த்தோம் என்றால்,
இப்போது எங்கள் வீட்டில் Bravia - Big Tv காம்பினேஷனிலும் அதே கதை தான். எட்டு மணிக்கு வரப்போற மேட்ச்க்கு ஏழு மணியில் இருந்தே செட்மாக்ஸ் போடப்பட்டு, ரிமோட் ஒளித்து வைக்க பட்டு, எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் மட்டுமின்றி எக்ஸ்ட்ரா லார்ஜ் இன்னிங்க்ஸ், எக்செட்ரா இன்னிங்க்ஸ் என்று எல்லாத்தையும் பார்த்து வைக்கிறோம்.

அந்த வகையில் ஊரே சியர் லீடர்ஸ்,கத்ரீனா கயிப்,ரம்யா ஸ்பந்தனா,
சசி தரூர் / லலித் மோடி நடந்தது என்ன?
விஜய் மல்லையா மகன் /  தீபிகா படுகோனே நடப்பது என்ன? இப்படி கிரிக்கெட்டை தவிர மற்ற எல்லாவற்றையும் விவரித்து கொண்டு இருக்கும் இந்த சூடான வேளையில், நான் கவனித்த சில சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த பதிவு.

-
மும்பைக்கும் பெங்களூருவிற்கும் செமிபைனல்ஸ் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருக்கும் போது, சுனில் கவாஸ்கர் மைக்கை பிடித்து பேசிக்கொண்டு இருந்தார்."மும்பை அணியின் வீரர்கள் எல்லாம் செமத்தியா வெளையாட முடிவோட இருக்காங்க. உற்சாகமா இருக்காங்க. அவங்களுக்கு என்னன்னா, அவங்க பீல்டில் செய்யும் சாகசங்களுக்கு சுத்தி இருக்கற மக்கள் கூட்டம் கை தட்டுறத விட, மேட்ச் முடிஞ்சதும் டிரெஸ்சிங் ரூமில் அவங்களோட கேப்டன் சச்சின் "Well done boy" என்று தோள்ல தட்ட போற தட்டு தான் முக்கியம்..."

பின்ன சும்மாவா?

-

இவர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். ரொம்ப அழகா இருக்கிறார் என்று எல்லாம் சொல்ல முடியாது. பையனாக போய் விட்டதால், கோட் சூட் தான் போட்டுக்க முடியும். மந்திரா பேடி மாதிரி முயற்சி ஏதும் பண்ண முடியாது. ஆனாலும் அவருக்கென்று ஒரு fan - base. அவர் பேசும் கிரிக்கெட் டெக்னிகல் விஷயங்கள் எனக்கு சம்பந்தம் இல்லை என்றாலும், அவருடைய ஆங்கில உச்சரிப்பு, லாவகமாக பேசுவது, டைமிங் ...என்று "யார்ரா இது?" என்று திரும்பி பார்க்க வைத்தவர். கௌரவ் கபூர். MI - RCB செமி பைனல்சின் போது, பீல்டில் இருந்து கொண்டு ஸ்டுடியோவில் இருந்த எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் டீமிடம் சொல்கிறார்.
"The crowd is roaring such that I could barely hear what I even think"

அட!

-

அடுத்ததாக the best thing that I like about IPL.

இவர்கள் டிவியில் வரும் போதே, அப்படியே பிடித்து வெளியில் இழுத்து "இந்தா என் கூட வெளையாடு..."என்று வீட்டில் வெச்சுக்கலாம்ன்னு இருக்கும்.!
இவர்கள் வரும் காட்சிகள் முடிந்து போனதும்,ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்த ஐஸ்க்ரீம் முடிந்து போய் விட்டதை போல் தோன்றும்.
Zoo-Zoo.
வோடபோன் செல்லங்கள்.
அதிலும் ஒரு zoo-zoo புலிக்கூண்டுக்குள் போய் விழுந்து விடும் பாருங்கள். அந்த மூட்டை கட்டின முகத்தில் என்ன உணர்வை காட்ட முடியும்? பாடி லாங்குவேஜிலேயே பயந்து காமிக்கும். அட்டகாசம்.

இவர்களை மொத்தமாக இங்கே கண்டு களியுங்கள்.

-
 எனக்கு பொதுவாக டிவியில் விளம்பரங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும்.

சமீபத்தில் ஒரு கேள்வி பதில் படித்தேன்.
அதில் இவ்வாறாக இருந்தது, "அரை நிமிடமே ஓடும் விளம்பரங்களில் கூட ஒரு குட்டி கதை இருக்கும் போது, இரண்டரை நிமிடங்கள் ஓடும் திரைப்படங்களில் கதையே இல்லாமல் போவது ஏன்?"

ஒரு முறை ராஜீவ் மேனன் சொல்லி இருந்தார் ஒரு பேட்டியில், "ஒரு விளம்பர படம் எடுக்கும் போது எது மிகவும் சவாலான விஷயம்?" என்ற கேள்விக்கு...

"ஒரு விளம்பர படம் ஆரம்பித்த சில நாட்களுக்கு அறுபது நொடிகள் ஓடுகிறது என்று வைத்துக்கொள்ளுவோம்;. அதற்குள் ஒரு கதை சொல்லி இருப்போம். சில நாட்களுக்கு பிறகு அதை ஆறு நொடிகள் மட்டும் ஓட கூடியதாக குறைத்து விடுவோம். சவால் என்னவென்றால், அந்த படம் ஆறு நொடிகளாக குறைந்த பிறகும் கூட, மொத்த கதையையும் அடக்கியதாக இருக்க வேண்டும்"  A subset as the set itself.

 நான் எந்த புது விளம்பரம் பார்க்கும் போது இது எனக்கு நினைவு வரும். "இதில் எந்த ஆறு வினாடிகள் அந்த subset க்கு பொருத்தமாக இருக்கும்?" என்று யோசித்துக்கொண்டே பார்ப்பேன்.

IPL பிரேக்குகளில் அக்ஷய்குமார் வரும் LG infinia LED டிவி விளம்பரம்.

அக்ஷய் வீட்டுக்கு ஒரு பெண்ணோடு வருவார்.

"Welcome to my home, you know I dont' get too many people to my home" என்று பீட்டர் விட்டபடி.

ஒரு பெரிய கண்ணாடி சுவருக்கு பின்னால், ஒரு formula one car, Race bike நிற்கும்.

அக்ஷய் சர்வ சாதாரணமாக சொல்வார், "my toys ...for when I get to tour"

இன்னொரு கண்ணாடி சுவருக்கு பின்னாடி பீச் இருக்கும்...

"My private beach" ன்னு அலட்சியமாக சொல்வார்.

பிகர் அப்படியே தொறந்த வாய் மூடாம எல்லாத்தையும் பார்த்துட்டு வெளில கெளம்பினதும், இவர் வந்து ரிமோட் பட்டன்களை அமுக்குவார்.

கண்ணாடி சுவர் மாதிரி இருந்ததெல்லாம் LED டிவிகள் .

'Clarity beyond clearity' என்ற காப்ஷனுடன் விளம்பரத்தின் அடுத்த ஸீன்.முதல் முறை பார்க்கும் போது, உண்மை தெரிந்த அந்த நொடி தான் நாம் விளம்பரத்தை உண்மையாக ரசிக்க ஆரம்பிப்போம்.
(அனேகமாக இது தான் அந்த ஆறு நொடிகளாக இருக்க கூடும்)
கண்ணாடி சுவருக்கு பின்னால் ஹெலிகாப்டர் நிக்கும்.
"I hate traffic jam "ன்னு சொல்லும் அக்ஷயின் குரலில் ஒரு நக்கல் தெறிக்கும்..(yeah its me!!!ன்னு 'தூள்'ல விவேக் சொல்வாரே ...நமக்கு அந்த மாதிரி ஒரு நச் இம்பாக்ட் கிடைக்கும்)

அடடா...என்னவொரு கற்பனை.

விளம்பரத்தை இங்கே பாருங்கள்.

-

11 comments:

Deepa Ram said...

ஹாய் பிரியா..
இருக்கற IPL FEVER போதாதுன்னு நீங்க IPL unplugged டைட்டில் வெச்சி கலக்குறீங்க.நான் onsite ல இருப்பதால் லைவ் matches பார்க்க முடியாது, but within a day IPLYOUTUBE ல பார்க்க முடித்து.
LETS HOPE FOR THE BEST FOR சென்னை சூப்பர் கிங்க்ஸ் விக்டரி.
a bit disappointed about Hayden's form in this IPL season, hope he will rock with his Mongoose bat in the finals.watever people say about gambling and other stuff..cricket been rooted within many of us.
Cheers to Chennai Superkings.

ஜெய்லானி said...

கிரிக்கெட்ட வச்சே ஒரு பதிவா ம்.. கலக்குங்க...

Unknown said...

Hi Priya.....
Hey Chennai Super kings Won the IPL...yahooooooooo......hmmmm guess Chennai fan's will be delighted.

மங்குனி அமைச்சர் said...

//பையனாக போய் விட்டதால், கோட் சூட் தான் போட்டுக்க முடியும். மந்திரா பேடி மாதிரி முயற்சி ஏதும் பண்ண முடியாது. ///

இப்ப ஏன் மந்திரா பேடி இன்யபக படுதினிக?

♥Manny♥ said...

Nice Post... Nice to read from the beginning to last without getting Bored...you have a good writing style...

Anonymous said...

Enga poiteenga priya??Romba naala kaanom?

Subha said...

nanum pakkuren..summa side le visits mattum increase agitte irukku..but no post...edhellam selladhu selladhu....visits count ha reset pannu...

ஜெய்லானி said...

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

நாஞ்சில் பிரதாப் said...

எழுத்துக்கள் முழுவதும குறும்புகள் கொப்பளிக்கிறது.... I like it :))

Sanjai Gandhi said...

//(yeah its me!!!ன்னு 'தூள்'ல விவேக் சொல்வாரே ...நமக்கு அந்த மாதிரி ஒரு நச் இம்பாக்ட் கிடைக்கும்)//

அடப்பாவி.. அடப்பாவி.. நான அடிக்கடி சீரியசா சொல்ற வாக்கியம் இது.. குறிப்பா, மொபைலில் பேசும் போது.. இனி இதை சொல்லும் போதெல்லாம் அதில்ல ஞாபகம் வரும்.. அவ்வ்வ்வ்வ்..

Sanjai Gandhi said...

மிச்சம் ஆன 3 ரூபாய்ல நான் ஐச்க்ரீம் சாப்டேன்.. ஆஆஆஆஆஆ..