Saturday 17 April 2010

ஒரு தலைப்பில்லாத பதிவு

சரியான விடையை தேர்வு செய்க,

ஒரு பெண் ட்ராஃபிக் நிறைந்த ரோட்டில் ஸ்கூட்டியோடு கீழே விழும் அந்த எதிர்பாராத தருணத்தில் அவளுக்கு முதலில் யார் நினைவு வரும்?

1.அம்மா

2.கணவன்

3.குழந்தை

விழுந்தது யார்?
நானே தான்.

எங்கே?
ஆபீசில் இருந்து வீட்டுக்கு வரும் போது.

எப்போ?
நேற்று மாலை.

எப்படி?
அது ஒரு சர்வீஸ் ரோடு. வெள்ளிக்கிழமை மாலை என்பதால் எல்லாருக்குமே வீட்டுக்கு போக வேண்டிய அவசரம்.நானும் எனது ஸ்கூட்டியில் போய்க் கொண்டு இருந்தேன். இடது ஓரத்தில் தான். அப்போது என்னை வலது புறமாக ஒரு வண்டி ஒவர்டேக் செய்யவும், நான் சற்று இடது புறமாக ஒதுங்க, என் வண்டி வழுக்கியது போல இருந்தது; பேலன்ஸ் பண்ண முயன்ற அதே சமயத்தில், இடது பக்கம் நடந்து போய்க்கொண்டு இருந்த ஒருவர்,அவருடைய வலது புறமாக ஒதுங்க,என் வண்டியின் ப்ரேக்கில் அவருடைய கை இடித்தது. குழப்புகிறதா? எனக்கும் தான். எது எப்படியோ, நான் எனது வலது பக்கமாக கீழே விழுந்து விட்டேன், வண்டியோடு...

அட, எதுவும் பெரிதாக ஆக வில்லை. இப்படி பதிவு தட்டிக்கொண்டு இருக்கிறேன் என்றால்,உருப்படியாக இருக்கிறேன் என்று தானே அர்த்தம்.
கொஞ்சம் அதிர்ச்சி, அதை விட சற்று கொஞ்சமாக, உடல் வலி.முழுதாக எழுந்து விட்டேன்.வலது பக்கம் சில கீறல்கள்.எனக்கும், என்னை விட
அதிகமாக வண்டிக்கும்... வண்டியின் வலது பக்க ப்ரேக் லிவர் உடைந்து விழுந்து விட்டது.


நான் வண்டியுடன் விழுந்து கிடந்தது, பாவம் பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிகளுக்கு தான் இடைஞ்சல் ஆகிவிட்டது. டூ வீலர்கள் அப்படியே என்னை சுற்றிகொண்டு சென்று விட்டன. நான்கு சக்கர வண்டிகளுக்கு தான் வழி ப்ளாக் ஆகி போனது. ஹாரன் அடித்து த்ள்ளி விட்டார்கள். ஹாரன்கள் சத்தம், “சரி விழுந்தாச்சு, சட்டு புட்டு ன்னு எந்திரி...'என்பதாக ஒலித்தது.

அவர்களை குறை கூறவில்லை.அவர்களிடத்தில் நான் இருந்தாலும் அதையே தான் செய்து இருப்பேனாக இருக்கும். பெங்களூரில், ரோட்டில் யாராவது விழுந்து கிடப்பதென்பது, ட்ராஃபிக் ஜாமை போல், ஒரு சகஜமான விஷயம் ஆகிவிட்டது. என் வண்டி இடித்த அந்த மனிதர் தான், அவருடைய கையை தடவிக்கொண்டே என் வண்டியை தூக்கி தந்தார்.நான் எழும் போது, உடைந்து கிடந்த ப்ரேக் லீவரை எடுத்து கொண்டேன்.வரலாற்றுக்கு நியாபக சின்னங்கள் முக்கியம் இல்லையா?

இப்படி விழுந்து எழுவதில் நமக்கும் நிறைய லாபம் இருக்கிறது தெரியுமோ? - எனக்கு நேற்று தான் தெரிய வந்தது.

- ’பரவாயில்லையே, இப்படி விழுந்து எழுந்தும் கூட, பதட்டப்படாமல், வீடு வரைக்கும் வண்டி ஓட்டிட்டு வந்த்துட்டியே’ என்று கணவரை ஆச்சர்யப்படுத்தலாம்.

- ’நான் அன்றைக்கு ஒரு நாள் நண்பர்களுடன், ஒரு ஹோட்டலில் சாப்பிட்டேன்.ரொம்ப நல்லா இருந்தது.அங்கே போய் சாப்பிடலாம் வா” கீழே விழுந்ததில் சற்று, மன வருத்தமாய் இருக்கும் நமது “ஃபீல் குட்” நிமித்தம், மாரத்தஹள்ளியின் ஏதோ ஒரு சந்தில் இருக்கும் ஹோட்டலுக்கு
போய் சூப்பர் சாப்பாடு சாப்பிட நேரலாம்.

-சாப்பிடும் போது வழக்கம் போல், “அம்மா சுச்சு..."என்று குழந்தை அழைக்க, “நீ உக்காரு, நான் அழைத்து போறேன்” என்று வழக்கத்தை மீறி நடக்கும் விஷயங்கள் நம்மை, “ஃபீல் பெட்டர்” ஆக்கலாம்.

-இனி அடுத்த நான்கு நாட்களுக்கு, போறவங்க, வர்றவங்க, ஃபோன் பண்றவங்க கிட்டயும்,ஆபிசில் காபி குடிக்கும் போதும், லன்ச் சாப்பிடும் போதும்,
“ஆக்டுவல்லி நான் அன்னைக்கு தான் மொத தடவையா வண்டிலேர்ந்து கீழ விழுந்தேன்...”
என்று கஜினி கல்பனா மாதிரி கதை சொல்லலாம்.

- ”நான் கூட இப்படித்தான் வண்டி வாங்கின புதிதில், மணல் சறுக்கி...” 
 முதல் காதல், முதல் முத்தம் ரேஞ்சில் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும்
”முதலில் விழுந்த” அனுபவத்தை கேட்கலாம்.

-இதோ இப்படி பதிவை எழுதி, பதிவைப் படிக்கும் நண்பர்களின்/உறவினர்களின், ’ஹைய்யா!’ ’ஐய்யோ!’ ’அப்படியா?’ ’என்னாச்சு?’ ’இப்போ எப்டி இருக்க?’ ’பாத்து போகக்கூடாதா?’ க்களுக்கு பதில் அளிக்கலாம்.

இப்படி எத்தனையோ லா(ப)ம்.

என்றைக்கும் இல்லாமல், நேற்று ஆபீசில் இருந்து கிளம்பும் போதே இரு நண்பர்கள், “பார்த்து போ, பத்திரம்” என்றார்கள். அவர்களுக்கு ஏதோ தோன்றியிருக்க வேண்டும்.

சரி,பதிவின் ஆரம்பித்தில் கேட்ட கேள்விக்கு விடை, குழந்தை.

14 comments:

Vidhoosh said...

///குழந்தை///
ரொம்ப சரி!!! :))

பாத்து போகக் கூடாதா??

ஜெய்லானி said...

அது சரி வண்டிக்கு இப்ப எப்படி இருக்கு?
.
.
.
.
.
.
..
உங்களைதான் கேக்க வேனாம்னு சொல்லிட்டீங்க .

ப்ரியா கதிரவன் said...

ஜெய்லானி,
வண்டி சர்வீஸ்க்கு போய் இருக்கு.
நாலு மணிக்கு வாங்கன்னு சொல்லி, நானூத்தம்பது ரூபா பில் தந்தார்கள் காலையில்.

Santhappanசாந்தப்பன் said...

”முதலில் விழுந்த அனுபவங்கள்” புத்தகத்துக்கும் நீங்க விமர்சனம் எழுதுவீங்களா?

பாச மலர் / Paasa Malar said...

ஃபீல் குட், ஃபீல் பெட்டர் சமாச்சாரம் சுவாரசியம்...எதார்த்தம்..

Suresh S R said...

அது சரி, முதலில் உங்கள் நினைவுக்கு வந்தவர் யார்?

Maddy said...

படத்தில இருக்கற பைக் வாங்கி பிரியா பங்காளூரு ரோட் ல ஓட்டினா அப்படியே அதிருமில்லே!!

Unknown said...

விழுந்ததும் விழுந்தீங்க... நல்லா ஒரு நாலஞ்சு பேர் மேல இடுச்சுட்டு விழுந்துருக்கணும்... போயும் போயும் ஒரு பெர்சு மேல விட்டுட்டு ரௌசபாரு....

சும்மா தமாசு மேடம்....

அப்போ அடுத்த பதிவு கஜினி கல்பனா கதைகளா....??????!!!!

Anonymous said...

ஹைதராபாத்ல இப்படிதான் நான் முதன்முதலா வண்டி ஓட்டினபோது ...

ச்சே, அதைச் சொல்லக்கூடாதுன்னு தடா போட்டுட்டீங்களே, ஞாயமில்லை மேடம்!

TCAGWS ;)

- என். சொக்கன்,
பெங்களூரு.

ப்ரியா கதிரவன் said...

Vidhoosh(விதூஷ்)
பாத்து தாங்க போனேன்...

பிள்ளையாண்டான்
புத்தகம் நீங்க எழுதுங்க, விமர்சனம் நான் எழுதறேன்.

பாச மலர்
நன்றி.
நல்ல பேர்.
சின்ன வயசுல நானும் என் தம்பியும் சண்டை போடறப்போ எல்லாம், எங்க அம்மா 'பாசமலர் படம் ஒரு தடவ பாருங்க ரெண்டு பேரும்' ன்னு சொல்வாங்க.

Suresh S R,
அத தான் பதிவுலையே சொல்லிட்டேனே..

Maddy ,
சொன்ன படி நீங்க சைக்கிள் அனுப்பி இருந்த நான் இப்டி விழுந்து இருக்க மாட்டேனாக்கும்...

Hanif,
கஜினி கல்பனா கதைகள் எழுதணும்ன்னா நான் இன்னொரு வாட்டி விழனும்...

nchokkan ,
TY :-)

Suresh S R said...

நான் bike-ல் இருந்து விழுந்தவுடன் ஞாபகம் வந்தது 2 மாதம் முன்னர் எடுத்த health இன்சூரன்ஸ் பாலிசி.

Unknown said...

Hey u ..

Ungaluku vera velaye kedayadha..2 masathuku 1 vaati keele vilundhu elareenga..adhule peruma vera..adhuku 1 blog vera..anyway blog nalla iruku..padicha parithabam varala..siripu varudhu :-) Take care..

Unknown said...

Hey u ..

Ungaluku vera velaye kedayadha..2 masathuku 1 vaati keele vilundhu elareenga..adhule peruma vera..adhuku 1 blog vera..anyway blog nalla iruku..padicha parithabam varala..siripu varudhu :-) Take care..

மங்குனி அமைச்சர் said...

ஜஸ்ட்டு மிஸ்ஸு (அட.... இல்லாட்டி நீன கீழ விழுதுக்க மாடிகன்னு சொல் வந்தேங்க )