"You were wrong"
"He was better than you"
நம்மில் எத்தனை பேருக்கு நம்மீது வைக்கப்படும் எதிர்மறையான விமர்சனங்களை ஏற்றுகொள்ளும் பக்குவம் இருக்கிறது?
"You are no more eligible to continue the game"
நம்மில் எத்தனை பேர் தோல்வியை புன்னகையோடு ஏற்றுகொள்ளும் தைரியத்தை கொண்டிருக்கிறோம்? ஒரு தோல்வியில் இருந்து விடுபட்டு அடுத்த சவாலை எதிர்கொள்ள நமக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?
"You were rocking"
இந்த பாராட்டை தலைக்கேற்றாத பணிவு எத்தனை பேருக்கு இருக்க கூடும்?
"You are in danger zone"
இந்த அழுத்தத்தை சமாளித்து உயிர்த்தெழும் போர்த்திறமை பற்றி தெரியுமா நமக்கெல்லாம்?
ஒரு சிறுவன், கிட்டத்தட்ட குழந்தை என்று கூட சொல்லலாம்...ஒரு சுற்றில் அவனுடைய சங்கீதத்தில் லயித்த நடுவர்கள் அவனை மடியில் தூக்கி வைத்து கொள்கிறார்கள். இன்னொரு சுற்றில் போட்டியை விட்டு வெளியேற்ற படுகிறான். இந்த இரு நிகழ்வுகளிலும் அவனுடைய முகபாவமும் உடல் மொழியும் ஒரே மாதிரியாக தான் இருக்கின்றன. மடியில் தூக்கி வைத்து கொண்ட நாளில் அவன் பெருமையில் குதிக்கவும் இல்லை. "போயிட்டு வா" ன்னு சொன்ன அன்று உடைந்தும் போய் விட வில்லை. "composed" என்று சொல்வார்களே...அந்த வார்த்தைக்கு அர்த்தத்தை நான் அன்று பார்த்தேன்.
"எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே, நீ நதி போல ஓடிக்கொண்டு இரு"...
அந்த சூழ்நிலைக்கு அந்த பாடல் பொருத்தமானது என்பதை உணர்ந்து பாடும் அளவுக்கு எல்லாம் அந்த குழந்தைக்கு வயசில்லை.ஆனாலும் பாடியது. போட்டியின் போது பாடிய அதே உத்வேகம்.தான் வெளியேற்றப்பட்டு விட்டது அவனுடைய பாடலை துளியும் பாதிக்கவில்லை.
ஒரு பத்து வயசு சிறுமி. உற்சாகத்தின் மொத்த உருவம் அவள்.இன்னொரு பத்து வயது சிறுவன். ஏற்கனவே ஒரு முறை இறுதி கட்ட போட்டி
வரை வந்து வெற்றி வாய்ப்பை தவற விட்டவன். இருவரும் அபாய கட்டத்தில் இருக்கிறார்கள். ஒருவர் வெளியேற்ற படப்போவது உறுதி. இந்த
நிலையில் நடுவர் ஒரு பாடலை சொல்லி கொடுக்க அவர்கள் திரும்பி பாட வேண்டும். யார் வெகு விரைவில் நுணுக்கங்களை கிரகித்து கொள்கிறார்களோ அவர் போட்டியில் நீடிக்க போகிறார். அந்த சிறுமிக்கு காற்றில் எந்தன் கீதம் சொல்லி தருகிறார்கள்.
அலை போலே நினைவாலே ஆறு முறை சரியாக வர வில்லை.
'லோ நோட்ஸ் போகாதே', 'இப்டி ட்ரை பண்ணு','இந்த இடம் இன்னும் கொஞ்சம் சரியா பாடு' என்று நடுவர், சிறப்பு விருந்தினர் என்று ஆளாளுக்கு மாற்றி மாற்றி அந்த சிறுமியை *பாடாய் படுத்துகிறார்கள்*.
இத்தனை அழுத்திலும் அந்த பெண்ணின் முகம் "டென்சனா? அப்டின்னா என்ன?" என்று கேட்கிறது.
அந்த பையனுக்கு நின்னுக்கோரீ வரணும்.
ஒரு கிளி தனித்திருக்க...அழகிய ரகுவரனே என்றெல்லாம் பாட லிரிக்ஸ் தடுமாற்றம், பாவம் தமிழை தாய்மொழியாக கொண்டவனில்லை...ஆனால் இந்த பலவீனம் அவனை பாதித்து விடவில்லை. லா ல லா போட்டு ஆனால் பாடலை ஐந்தே நிமிடத்தில் பிடித்து கொள்கிறான்.இந்த மாதிரியான சூழ்நிலைகளை சமாளிக்க கார்பரேட்களில் காசை கொட்டி "ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட்" பாடங்களை சொல்லி தருவார்கள்.இந்த இரு சிறுவர்களும் இந்த ஸ்ட்ரெஸ் ஃபேக்டரை காலால் உதைத்து தள்ளி விடுகிறார்கள்.
இன்னும் ஒரு 13 வயது பெண். எல்லாராலும் prodigy என்று கொண்டாடப்படுபவள். ஸ்டான்டிங் ஓவேஷன், ஸ்பாட் செலக்ஷன்,அவார்ட்ஸ் என்று வெற்றிகளை மட்டுமே ருசித்தவள்.அபாய கட்டம் என்பதை அறியவே அறியாதவள். முதல் முறை "நீங்கள் டேஞ்சர் சோனில் இருக்கிறீர்கள்" என்று கேட்டதும் அதிர்ச்சியில் அழுதே விட்டாள். யானைக்கே அடி சறுக்கி விட்டால் எழும்ப சற்று தாமதம் ஆகும்.அடுத்த சுற்றில் ”நான் எழுந்து விட்டேன் பாருங்கள்” என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.பிரஷர். இந்த பிரஷர் அவளுடைய பர்பார்மன்சிடம் தோற்று போய் விடுகிறது.கண்ணீரோடு சேர்த்து ப்ரஷரையும் துடைத்து விட்டு பாடுகிறாள்.
"நாதம் என் ஜீவனே...."
“என்னை விட நல்லா பாடிட்டேம்மா” சொன்னது, அந்த பாடலை திரையில் பாடிய ஜானகி அவர்கள்.
சூப்பர் சிங்கர் ஜூனியரின் ஸ்ரீகாந்த், ரோஷன், நித்யஸ்ரீ, அல்கா பற்றி தான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்பது புரிந்திருக்கும்.
இந்த குழந்தைகளுக்கு இந்த மேன்மக்கள் பண்புகளை எல்லாம் சொல்லி தந்தது யார்?இவர்களுடைய பெற்றோர்களா?
சங்கீதம் சொல்லி தரும் ஆசிரியர்களா?
இந்த மாதிரி மேடையில் ஏறியதும் இவர்களுக்கு இதெல்லாம் தன்னாலேயே வந்து விடுகிறதா?
அல்லது இந்த கால குழந்த்தைகள் எல்லாருக்குமே இந்த முதிர்ச்சி இருக்கிறதா? யோசிக்க வேண்டிய கேள்விகள்.
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தோன்றும் சராசரி ஆசை, என் குழந்தையும் சங்கீதம் கற்றுக்கொண்டு இப்படி எல்லாம் பாட வேண்டும்...
நமது குழந்தைகள் competitve ஆக, சாதனையாளர்களாக வளர வேண்டும் என்றெல்லாம் ஆசை படுவதில் தவறேதும் இல்லை.
ஆனால் அதை விட முக்கியமாக அவர்கள் நல்ல attitude உடன் வளர வேண்டும்.ஸ்வரங்களோடு சேர்த்து வாழ்க்கையின் சூத்திரங்களையும்
சூட்சமங்களையும் கற்று கொள்ள வேண்டும்.
It's not what happens to you that determines how far you will go in life ;it is how you handle what happens to you.
Questions and Observations on Sabarimala
6 years ago
10 comments:
அருமையாக எழுதி இருக்கிறீர்கள். அந்தக் குழந்தை வெற்றி பெற்றதோ தோற்றதோ கூட எனக்குத் தெரியாது. அதற்கு முன்னால் விஜய் டிவி அதற்குக் கொடுத்த விளம்பரங்கள் என்னைக் கலக்கிவிட்டது.என்ன ஆச்சு அந்தக் குழந்தைக்கு. நன்றாக இருந்தானே என்றேல்லாம் நினைத்துவிட்டேன்.
குழந்தைகள் நன்றாகத்தான் வளருவார்கள் பெரியவர்களும் அவர்களை நன்றாக வைத்துக் கொள்ளவேண்டும். தவறாக நினைத்துக் கொள்ளவேஙடாம். நான் கொஞ்சம் பழைய தலைமுறைக்காரி:)
எதிர் விமர்சனங்களை ஏற்கும் பக்குவமே மன அமைதிக்கும் வாழ்வின் வெற்றிக்கும் முதல் படி. அருமை
Nice post...
These days the kids are stronger than their parents. I have seen few times the parents sitting in the audience side are so tensed than the kids performing on the stage :)
By the way, any plan to send Arjun to music class ;)
ஆஹா ! அருமை
இப்படியே தொடருங்கள்!
நன்றி PK!
nice :)
அருமை ப்ரியா.
சைக்கிள் கூட பேலன்சிங் வீல்களோடு கீழே விழாமல் வந்து விட்டதே என்று நினைத்துக் கொள்வேன். சமூக சூழல்கள் நம் ஜீன்களில் இதையும் செலுத்தி விடுகிறது போலும், அடுத்த தலைமுறைகளை எல்லாவற்றிற்கும் தயாராகவே வெளிவரவும். :) ரொம்ப பிடித்தது இந்த பதிவு.
இந்த கால குழந்த்தைகள் எல்லாருக்குமே இந்த முதிர்ச்சி இருக்கிறதா?
யோசித்தால் இந்த முதிர்ச்சி எல்லா காலங்களிலும் இருந்திருக்கும். இப்போது கொஞ்சம் பெற்றோர் சமுதாயமும் புரிந்து நடந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறது. அரவணைத்து செவி மடுத்து அழைத்து சென்றால் இன்னம் வெளிப்படும்!
super sir
sorry super medam
Ungaluku nan parama visisri... tamizhai angilathil type seythatharku (sorry)...:)
Post a Comment