Saturday 7 November 2009

Alice(s) in wonderland

இன்று காலை கடவுள்களின் பள்ளத்தாக்கு (திரு.தேசிகன் தொகுத்து முன்னுரை எழுதியது) சுஜாதா கட்டுரை தொகுப்பை எடுத்து, கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கம் திறந்தேன். "பெண்களும் நானும்".

பெண் எழுத்தாளர்களுக்கு அறிவுரை, தன்னுடைய அலுவலகத்தில் உடன் வேலை பார்த்த பெண்கள், தன் பாட்டி (இந்த பாட்டி கட்டுரை ஏற்கனவே வேறு எங்கோ படித்த ஞாபகம்) என்று கட்டுரையில் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை.

பெண்களிடம் வேலை வாங்க மூன்று விதி முறைகள் இருக்கிறதாம். அவருடைய அனுபவத்தில் சொல்கிறார்.

-பெண் என்பதால் இந்த வேலை வராது என்று முடிவு பண்ண கூடாது.
-பெண்களிடம் உள்ள இயற்கை கோளாறுகளை புரிந்து கொள்ள வேண்டும்.
-பெண்களுக்கு லாஜிக் வராது, எதையும் உணர்வு பூர்வமாக தான் பார்ப்பார்கள். ஈஸ்ட்ரோஜென், ஆண்ட்ரோஜென் பிரச்சனை இது.

முதல் பாயிண்ட் படித்த போது ஒரு சபாஷ் போட்டது மனது.

இரண்டாவதை படித்த போது,(அவர் எந்த இயற்கை கோளாறை :-) சொன்னாரோ)எனக்கு இந்த பதிவை எழுத தோன்றியது.

வேலைக்கு போகும் பெண்களுக்கு என்னுடைய சொந்த/'உடன் பணிபுரிவோரை கவனித்த' அனுபவத்தில் சொல்ல விரும்பும் சில விஷயங்கள்:

- நம் மேலாளரிடமோ,உடன் பணிபுரிவோரிடமோ 'நாம் பெண்' என்ற காரணத்தை வைத்து எந்த சலுகைகளையும் எதிர்பார்க்காதீர்கள். இது நமது குடும்பம் அல்ல. இங்கு நாம் செய்யும் வேலைக்கு மட்டும் தான் சம்பளமே தவிர, நமது உடல்,மன பிரச்சனைகளுக்கு சேர்த்து அல்ல.அப்படி எதிர் பார்த்தோமே ஆனால்,அது நம்மை நாமே தாழ்த்தி கொள்ளுவதற்கு சமம்.

- குழந்தை பெறுவது, மாதா மாத சமாச்சாரங்கள் எல்லாம் நமது anatomy. கடவுள் design பண்ணது. இதெல்லாம் மொத்தமாக சேர்த்து தான் நாம். "இதனால் எல்லாம் என் வேலை பார்க்கும் திறன் குறைகிறது, career growth தடை படுகிறது, ஒரு ஆணுக்கு இந்த பிரச்சனைகள் இல்லை" என்று புலம்பாதீர்கள். மொத்தத்தில் "எனக்கு அங்க வலிக்குது இங்க வலிக்குது" விஷயங்களை எல்லாம் அலுவலகத்துக்கு கிளம்பும் போது செருப்பை மாட்டுவோமே,அப்போதே கழற்றி வைத்து விடுங்கள்.

- அலுவலக மீட்டிங் போது, ஆறரை அடி உயரத்தில் கடுகடு முகத்தோடும்/குரலோடும் ஒருத்தன், வேணும்னே வேணும்னே நம்மள outsmart பண்ணவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கேள்வி கேக்கும் போது கொஞ்சம் உதற தான் செய்யும். பயப்படாதீர்கள். அதற்கு முதல் தேவையாக technical skillsஐ வளர்த்து கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அறிவாளியாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். எந்த கொம்பனையும் சமாளித்து விடலாம்.சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் மேலாளருக்கு கீழே வேலை பார்த்தேன். அவங்க சொல்வாங்க,
"If one has to run 100 meters to prove that one can run, a woman has to run 200 meters to prove that she can run".

- "நான் ஒரு பெண்" என்ற consciousnessஐ துடைத்து எறிந்து விடுங்கள்.இந்த நினைப்பு நம்மை பலவீனமாக ஆக்கி விடும்."வெகு உயரத்திற்கு சரசர வென்று போய் விட்ட பெண்களை, வேறு எந்த விதத்திலும் விமர்சிக்க வழி இல்லாத நிலையில்,அவர்களது பர்சனல் விஷயங்கள் படு மலிவாக விமர்சிக்க படலாம்.துளியும் கண்டு கொள்ளாதீர்கள்."ஐயோ நான் ஒரு பொண்ணாச்சே...இப்டில்லாம் பேசறாங்களே" என்று எந்த நிமிடத்தில் concsious ஆகிறீர்களோ, அப்போதே தோற்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.

-கட்டுரையில் கவர்ந்த இன்னொரு வரி, பெண்களுக்கு 'சுலபக்கோபமும்' ,அழுகையும் வரும். அலுவலகத்தை பொறுத்த வரை சில நேரங்களில் 'சுலபக்கோபம்'நம்மள காப்பாத்தும். ஆனா தப்பு நம்ம மேல இருந்தா, தைர்யமா ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டுடுங்க. தேவை இல்லாத இடத்தில் செய்யப்படும் விவாதம், கேலிக்குரியதாகி விடும். ஆனா எந்த காரணத்துக்கும் அலுவலகத்தில் அழாதீர்கள். (எங்கயுமே அழாம இருப்பது ரொம்ப நல்லது. ஆனா அது நமக்கு சற்று கஷ்டம் தான்)

-பேறு கால விடுப்பிற்கு பிறகு வேலைக்கு சேர்ந்த முதல் சில மாதங்களுக்கு நம் மனதில் புயல், மழை, சூறாவளி எல்லாம் சேர்ந்து சுற்றி சுழற்றி அடிக்கும். 'வேலைக்கு கண்டிப்பா போகணுமா?' 'குழந்தை சாப்பிட்டுச்சோ இல்லையோ','அம்மாவை தேடுதோ', இந்த மாதிரி மன உளைச்சல் மட்டும் இன்றி, நிறைய உடல் உபாதைகளும் கூட சேர்ந்து பாடாய் படுத்தும். இந்த நேரத்தில் நாம் கடை பிடிக்க வேண்டியது பொறுமை பொறுமை மற்றும் பொறுமை. 'வேலைய விட்டு விட வேண்டும்'என்ற முடிவை இந்த நேரத்தில் தப்பி தவறி கூட எடுத்து விட வேண்டாம். நம் உடல்நிலை, வாழ்க்கை முறை எல்லாமாய் மாறி விட்டதால் ஏற்படும் அயர்ச்சி தான் இது. சில மாதங்களை பொறுமையாக கழித்து விட்டோம் என்றால், அப்புறம் ஒரு தெளிவும் நிதானமும் வந்து விடும். அதுக்கு பிறகும் வேலைய விட தோன்றினால் அது சரியான மனநிலையில் எடுக்கும் முடிவு.

-குடும்பம், குழந்தை என்று ஆன பிறகு , வேலையில் கவனம் செலுத்துவது சவாலான விஷயம். நீங்கள் எவ்வளவு "ambitious " என்பதை பொறுத்து உங்கள் சாய்ஸ் தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்த சாய்ஸில் தெளிவாக இருங்கள். சில பெண்களுக்கு குடும்பம் வேலை என்று இரண்டையும் சமாளிக்கும் சாமர்த்தியம்/அதிர்ஷ்டம் இருக்கலாம். முடிந்தவரை அந்த சாமர்த்தியத்தை கற்றுக்கொள்ள முயலுங்கள்.முடியாது போனால்,அதற்காக குமையாதீர்கள். ஆனால், நாம் அலுவலகத்தில் எவ்வளவு effort போடுகிறோமோ அதை பொறுத்து தான் உங்கள் உயர்வு நிர்ணயிக்க படும் என்பதில் தெளிவாக இருங்கள். இங்கு எல்லாமே Tit for Tat தான். "I am ambitious"," I am capable" முதலான qualitative விஷயங்கள் மட்டும் வேலைக்கு ஆகாது. செயலில் காண்பிக்க வேண்டும். நமது பர்சனல் காரணங்களினால், ரிசல்ட் காண்பிக்க முடியாது போனால், அதற்கான பலனை எதிர்கொள்ளும் பக்குவமும் வேண்டும். மற்றவர்களோடு ஒப்பிட்டு மூக்கை சிந்த கூடாது.Try to take things easy. Job is just something that brings food to our plate.

-மூன்றாவது பாயிண்ட் (பெண்களுக்கு லாஜிக் வராது, எதையும் உணர்வு பூர்வமாக தான் பார்ப்பார்கள். ஈஸ்ட்ரோஜென், ஆண்ட்ரோஜென் பிரச்சனை இது) படித்த போது, சற்று sarcastic புன்னகை வந்தது. லாஜிக் நல்லாவே வர்ற பெண்களும் இருக்கிறார்கள். உணர்வு பூர்வமாக மட்டுமே பார்க்க தெரிந்த ஆண்களும் இருக்கிறார்கள். பெண்களை கிண்டல் பண்ணி கொண்டே டிவி சீரியல் பார்க்கும் ஆண்களை போலவே.

To all the working women, We all are Alice(s)!There will ofcourse be 'rabit holes', 'drinks that would shrink you', cakes that would grow you', 'riddles with no answers', 'caterpillars', 'dodos', 'King', 'Queen' and many more. Lets Rock it. After all, we are in WONDERLAND you see :-)

36 comments:

Rajalakshmi Pakkirisamy said...

//எல்லாம் அலுவலகத்துக்கு கிளம்பும் போது செருப்பை மாட்டுவோமே,அப்போதே கழற்றி வைத்து விடுங்கள்.//

Priya Touch..

Very Nice post...

//Job is just something that brings food to our plate.//

:)

Princess said...

wow brilliantah ella prachanaikum theervu solliachu :D

ofcourse we are alice(s) in wonderland called earth ;)

-Aiz.

Sanjai Gandhi said...

//இரண்டாவதை படித்த போது,(அவர் எந்த இயற்கை கோளாறை :-) சொன்னாரோ)எனக்கு இந்த பதிவை எழுத தோன்றியது.//

இதைத்தாங்க அவர் பெண்களின் இயற்கைக் கோளாறுன்னு சொல்றார். அவர் எதை சொல்றார்.. நீங்க எதைப் புரிஞ்சிக்கிரிங்க? தலைக்குள் இருக்கும் ஒரு வஸ்து பத்தி அவர் சொல்லி இருக்கிறார்.. :))) ஆனா நீங்க அதைப் புரிஞ்சிக்காம இம்மாம்பெரிய பதிவு எழுதி இருக்கிங்க.. உங்க கொபசெ அதுக்கு விளம்பரம் வேற பண்றாங்க. :))

ஆனாலும் பல பெண்களுக்கும் இது உபயோகமான டிப்ஸ் தான். தேசிகனுக்கு போட்டியா நீங்க என் ஒரு புத்தகம் எழுத்தக் கூடாது..

இவண்
உசுப்பேத்தியே உடம்பை ரணகளப் படுத்துவோர் சங்கம்.

எனிவே... அகில உலக பெண்கள் பெருமைப் பேசும் முன்னேற்றப் பேரவை நிரந்தரத்தலைவி அர்ஜுனம்மா வாழ்க..வாழ்க..

Sanjai Gandhi said...

//Priya Touch..

Very Nice post... //

இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலைடா நாராயணா...

Rajalakshmi Pakkirisamy said...

//Ramya said...
Nice post.
konjam neram mirror munnadi ninna mathiri irundathu
இங்கு எல்லாமே Tit for Tat தான்.
these points are really true

//

ப்ரியா கதிரவன் said...

Thanks Mr.Madhavan.
Changed the spelling error.

Maddy said...

பதிவை படித்த போது நன்றாக எழுதி இருக்கிறீர்கள் என்று மகிழ்ந்தேன். ஆனால் உணர்ச்சிப்பூர்வமாகவா இல்லை அறிவுப்பூர்வமாக என்றாள் முதலில் உள்ளது என்றே நினைக்க தோன்றுகிறது.

வேலைக்கு போகும் பெண்களுக்கு என்னுடைய சொந்த/'உடன் பணிபுரிவோரை கவனித்த' அனுபவத்தில் சொல்ல விரும்பும் சில விஷயங்கள்:

என்று விவரித்த விஷயங்கள் மூலம்...நீங்களே பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டு அதற்கான தீர்வு சொல்லி இருக்கிறீர்கள்.

இந்த பதிவ எழுத்து தூண்டியது பெண்ணை பற்றி இவ்வளவு மோசமாக சொல்லி இருக்கிறார்களே என்று இருக்கலாம்... ஆனால் அறிவுப்பூர்வமாக யோசித்து பெண்கள் அப்படி இல்லை என்று சொல்வதார்க்கு பதிலாக நீங்களே பெண்களின் உண்மையான எண்ணம் செயல்கள் எப்படி இருக்கிறது என்று புட்டு வைத்து விட்டீர்கள் பார்த்தீங்களா, இங்கே தான் மீண்டும் பெண்கள் உணர்ச்சிப்பூர்வமாக யோசிப்பவர்கள் என்ப்தும் நீங்களே நிரூபிததிததுவிட்டீர்கள்!

ப்ரியா கதிரவன் said...

hello, Mr.Maddy,

//பதிவை படித்த போது நன்றாக எழுதி இருக்கிறீர்கள் என்று மகிழ்ந்தேன்//
Thanks,

May be you misunderstood the post or the post did not convey the things right to you, one of the reasons, you totally took it to a different direction.

I am not speaking feminism here, neither do I defend anything.

//இந்த பதிவ எழுத்து தூண்டியது பெண்ணை பற்றி இவ்வளவு மோசமாக சொல்லி இருக்கிறார்களே என்று இருக்கலாம்... //
Nothing like that.மோசமாக சொல்ல வில்லை. சற்று நக்கல். அது எல்லாரும் செய்வது தான். :-)

//ஆனால் அறிவுப்பூர்வமாக யோசித்து பெண்கள் அப்படி இல்லை என்று சொல்வதார்க்கு பதிலாக நீங்களே பெண்களின் உண்மையான எண்ணம் செயல்கள் எப்படி இருக்கிறது என்று புட்டு வைத்து விட்டீர்கள் //

பெண்கள் செய்கிறார்கள் என்பதற்காக எது செய்தாலும் சரி என்று வாதிட சொல்கிறீர்களா?
அது தான் அறிவு பூர்வமான வாதமா??

I am just saying that, women must not think themselves that 'being a woman' means, 'being weak' or 'they can look for some pampering' for things that they have to go through as part of their anatomy . We should behave in such a way that people must look upto us is all I wanna say. Please read it off your 'manly' eyes, to get the crux of what I say...:-)

Thanks.
Priya.

Sanjai Gandhi said...

ஓய்.. அடிவேணுமா ப்ரியா? ஒரே கமெண்ட் எவ்ளோ வாட்டி திருத்தி திருத்தி போஸ்ட் பண்ணுவீங்க.. ? ரொம்ப வெட்டியா இருந்தா சாட்ல வாங்க.. ஏன் இப்டி கொடுமை பண்றிங்க? :)

Jeyakumar said...

Thanks priya. Your note helped me understand how I should treat my women colleagues at work. As usual - well written & well expressed.

- Chitappa

ப்ரியா கதிரவன் said...

// ஒரே கமெண்ட் எவ்ளோ வாட்டி திருத்தி திருத்தி போஸ்ட் பண்ணுவீங்க//

வாட்ச் பண்ணிக்கிட்டே
இருக்காங்கப்பா......

*இயற்கை ராஜி* said...

Fantastic post..

/இங்கு நாம் செய்யும் வேலைக்கு மட்டும் தான் சம்பளமே தவிர, நமது உடல்,மன பிரச்சனைகளுக்கு சேர்த்து அல்ல./


Exactly true:-)

/நான் ஒரு பெண்" என்ற consciousnessஐ துடைத்து எறிந்து விடுங்கள்/

/ரிசல்ட் காண்பிக்க முடியாது போனால், அதற்கான பலனை எதிர்கொள்ளும் பக்குவமும் வேண்டும்/

this is very much needed....

துளசி கோபால் said...

அருமை.

ஆனா எப்படி இண்டு இடுக்கில் எல்லாம் புகுந்து நம்ம 'வீட்டு ஆண்கள்' ஆராய்ச்சி செய்யறாங்கன்னு பார்த்தேன். படா தமாசு:-)


அரும்சொற் பொருள்
பதிவுலகம் = நம்ம குடும்பம்

ப்ரியா கதிரவன் said...

Raji, Pricess, இய‌ற்கை, Thulasi Mam,

Thanks a lot.

ப்ரியா கதிரவன் said...

sanjay,
//அடிவேணுமா ப்ரியா?//

ஆளுங்கட்சின்னு நிரூபிக்கறீங்க!!!

//ரொம்ப வெட்டியா இருந்தா சாட்ல வாங்க.. //
வெட்டி தான். ஆனா உங்க கூட சாட் பண்ற அளவு வெட்டி இல்லீங்கண்ணா

Anonymous said...

nice one priyakka, after a long time I'm stepping in to the blogging world, how are you, and how's arjun kutty??
:)
TC

கணேஷ் said...

இப்பலாம் வொர்க் ப்ளேஸ்ல, ரொம்ப தெளிவான பொண்ணுங்கள நான் பார்க்கிறேன்.

ஆனால், ஒரே பார்வையில் எப்படிபட்ட ஆண்களையும் பெரும்பாலும் துல்லியமாக எடைபோடும் பெண்கள் புத்திசாலிகள். (அதில் என்னை பார்க்கும் பெண்கள் மட்டும் விதிவிலக்கு. பின்னாளில் ஸாரி சொன்ன வரலாறு உண்டு என்பதுடன் என் சுய வரலாற்றை முடித்துக் கொள்கிறேன்)

அதோடு, பார்ட்டிகளில் தம், தண்ணி என்று திரியும் ஆண்களையும் அந்த ஒரு காரணத்தை வைத்து ஒரு வித அவெர்ஷன் காட்டும் பெண்கள் இப்போது அதிகம் இல்லை. அவன் எப்படி இருந்தாலும் வெறுப்பை உமிழக்கூடாது, சரியான நடத்தையுடன் பழகுகிறான் அண்ட் வொர்க் அட் வொர்க்ல்(ஐ மீன், தேவையில்லாத ஃபோன் கால்ஸ், எஸ் எம் எஸ் கலாட்டா இல்லாமல்) கரெக்ட்டாக இருக்கிறான் என்று இருந்தால் பெண்கள் ஆண்களையும் மதிக்கிறார்கள்.

சீனு said...

அட! ஒரு 'அட!' பதிவு,

பெண்களுக்கு லாஜிக் வராது என்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது, ஆனால் நான் பார்த்த வரையில் பெண்கள் லாஜிக்கோடு பார்ப்பதை விட உணர்வுபூர்வமாக தான் அதிகமாக பார்க்கிறார்கள்.

CS. Mohan Kumar said...

மிக, மிக மிக அருமையாக எழுதப்பட்ட கட்டுரை. பல விஷயங்கள் உண்மை. எனது 15 வருட அலுவலக அனுபவத்துடன் ஒத்து போகிறது. நல்ல கட்டுரை. பெண்கள் பலரும் படிக்க பட வேண்டிய ஒரு கட்டுரை.

நானும் ஒரு தான். இயலும் போது என் வலை பக்கம் வாருங்கள்.

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com
சமீபத்திய பதிவு: அடுத்த வீட்டு பெண் - சிறு கதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை

Vidhya Chandrasekaran said...

\\குழந்தை பெறுவது, மாதா மாத சமாச்சாரங்கள் எல்லாம் நமது anatomy. கடவுள் design பண்ணது. இதெல்லாம் மொத்தமாக சேர்த்து தான் நாம். "இதனால் எல்லாம் என் வேலை பார்க்கும் திறன் குறைகிறது, career growth தடை படுகிறது, ஒரு ஆணுக்கு இந்த பிரச்சனைகள் இல்லை" என்று புலம்பாதீர்கள்.\\

தி பாய்ண்ட். 99.99 சதவிகிதம் பேருக்கு இது புரிய மாட்டேங்குது. அட்டகாசமான இடுகை.

கூடவே உங்களைப் பத்தின உங்கள் ப்ரொபைல் இன்ஃபோ சூப்பர்;)

புன்னகை said...

OMG! ஒரு நல்ல பதிவ miss பண்ணிட்டேனே அப்படின்னு ரொம்பவே feelings ஆகிடுச்சு அக்கா! அதான் better late than never-னு இப்போ படிச்சதும் பின்னூட்டம் போடுறேன். ரொம்ப அருமையான பதிவு. பொதுப்படையா எழுதியிருந்தாலும் உங்கள் பெண்ணியத் தாக்கம் sooooooooooooper! வார்த்தைக்கு வார்த்தை வரிக்கு வரிக்கு ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க அக்கா!

Not to forget de concluding lines! "Wonderland" ---> Very true! Dis post was a treat for me!!! :-)

ப்ரியா கதிரவன் said...

Ganesh, Cheenu, Mohan Kumar, Vidhya,

Thanks very much.

Vidhya,
உங்க profile ல இருக்கிற குட்டி பையன் யாரு?

Hey Mathu,
Nice to see you again.
பாதி டாக்டர் ஆயிட்டீங்கன்னு நெனைக்குறேன்.
சமீபத்தில் உங்கள் நாட்டில் நடந்த நிறைய நிகழ்வுகளின் போது, உங்கள் ஞாபகம் நிறையவே வந்தது.Take care.

ப்ரியா கதிரவன் said...

புன்னகை,

Thanks very much.
//பெண்ணியத் தாக்கம் //
ஆத்தீ, பெண்ணீயமா?
யாராவது அடிச்சுட போறாங்க என்னை.

எனக்கும் எந்த ஈயம் பித்தளைக்கும் சம்மந்தம் இல்லை...:-)

மணிகண்டன் said...

பிரியா, சூப்பரா உங்க perspective எழுதி இருக்கீங்க. உங்களோட writing flow ரொம்பவே பிடிச்சி இருக்கு.

முன்னாடி எல்லாம் நான் ப்ளாக் படிப்பேன்னே தவிர ப்ளாக் எழுதும் யாரும் மெயில் / சேட் வழியாக தெரியாது. அந்த சமயத்துல இட்லிவடை யாருன்னு உங்க ப்ளாக் வழியா தான் தெரிஞ்சது :)-

ப்ரியா கதிரவன் said...

மணிகண்டன்,
Thanks.

/அந்த சமயத்துல இட்லிவடை யாருன்னு உங்க ப்ளாக் வழியா தான் தெரிஞ்சது :)-
//
அப்படியா? இட்லிவடை யாரு?

Vidhya Chandrasekaran said...

நீங்க அர்ஜூன் அம்மா மாதிரி நான் சஞ்சய் அம்மா:)

மணிகண்டன் said...

***
அப்படியா? இட்லிவடை யாரு?
***

ஹ்ம்ம்.. என்னோட சித்தப்பா :)-

Sanjai Gandhi said...

//அப்படியா? இட்லிவடை யாரு?//

ஹிஹி.. விடுங்க.. மணிக்கு உங்கள பத்தி தெரியாது.. ;))

// வித்யா said...

நீங்க அர்ஜூன் அம்மா மாதிரி நான் சஞ்சய் அம்மா:)//

ஆமா(ம்)மா.. :))

*Kathir* said...

enna priya akka ..ivlo seriousa oru post...padichu mudichadhum innoru time urla check pannikitten - idhu synapse dhaanannu ;)

ரோஸ்விக் said...

பாராட்டும்படியான அலசல் தோழி. வாழ்த்துகளும் வாக்குகளும்.

ப்ரியா கதிரவன் said...

kathir,

உங்க பாணியிலேயே சொல்றேன்.
ச்சும்மா.............:-)

ரோஸ்விக்,
நன்றி

அண்ணாமலையான் said...

"அலுவலக மீட்டிங் போது, ஆறரை அடி உயரத்தில் கடுகடு முகத்தோடும்/குரலோடும் ஒருத்தன், வேணும்னே வேணும்னே நம்மள outsmart பண்ணவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கேள்வி கேக்கும் போது கொஞ்சம் உதற தான் செய்யும். பயப்படாதீர்கள்." இந்த வரிகள் சொந்த அனுபவம் போல தெரியுது?

மதார் said...

பெண்கள் உணர்சிப்பூர்வமானவர்கள்தான் aஆனாலும் லாஜிக் இல்லாமல் முடிவெடுக்கமாட்டார்கள் பெண்களை குறை சொல்லாமல் ஆண்களுக்கு பொழுது போகாதே............

maheshan said...

மகளிர் நாள் வாழ்த்து

Natarajan Venkatasubramanian said...

I really loved this post.. and forced one of my friend (yeah! really forced) to read...

Natarajan Venkatasubramanian said...
This comment has been removed by the author.