முதலில் சிநேகிதிகளின் கணவர்கள் கவிதை வந்தது.
அதை தொடர்ந்து சிநேகிதன்களின் மனைவிகள் கவிதை மாதிரி முயற்சி செய்யப்பட்டது.
ஏதோ நம்மாலானது.கணவனின் சிநேகிதி(?).
********************************************
கணவனின் சினேகிதி(?)
வணக்கம் என்றேன், ஹாய் என்றாள்.
அவருக்கு தோள் வரை இருப்பாளோ?
ஹை ஹீல்ஸ் போட்டு நடக்க பழகணும்.
பாலில் தான் குளிப்பாளோ, பன்னீரோ?
"அழகு கருப்பு நீ " - பாட்டி
என்னை அணைத்து கொஞ்சியது
அவசரமாய் என் நினைவில்.
சிக்கென்று இருக்கிறாள் ஜீன்ஸ்,ஸ்லீவ்லெஸ்ஸில்.
பூச்சூட்டலுக்கு வாங்கிய புடவையில்
லேசாய் வியர்க்கிறேன் ஏசி அறையிலும்.
'உனக்கு டீ போடவே தெரிய வில்லை'
அவர் அடிக்கடி சொல்வதன் அர்த்தம் புரிந்தது.
அவள் தந்த பீங்கான் கோப்பை தேநீரில்.
சச்சினையும் தோனியையும் தாண்டி
கிரிக்கெட் தெரியாது எனக்கு.
அவர்கள் பேசும் 'பிரெட்லீ'யும் 'கூக்லீ'யும்
என் காதில் 'போடீ' 'போடீ' யாய்.
லஞ்ச்சுக்கு சாண்ட்விச் செய்யவா?பாஸ்தாவா?
அவள் கேட்ட அக்கணத்தில்
சமைந்த பெண்ணாய் ஆனது
என் சாம்பாரும் அவியலும்.
எனக்கு "bye " .
அவருக்கு 'monday team outing .casuals .மறந்துடாதே'
என் பகல் நேர சீரியல் நிம்மதியில்
விழுந்தது மண்.
**********************************************
'மனைவியின் சிநேகிதன்' தான் பாக்கி. யாராச்சும் ட்ரை பண்ணுங்க.
Questions and Observations on Sabarimala
6 years ago
24 comments:
:)
முதன்முதலாக பொஸஸிவ்னெஸை கவிதையாக இப்பொழுதுதான் பார்க்கிறேன்
மணி அடித்தது
மனைவியின் கைப்பேசியில்
மறுமுனையில்
மறந்துபோன அவள் சிநேகிதன்!
இயல்பாய் தான் பேசினாள்
இருந்தாலும்
இதயத்தில் ஒரு
இனம் புரியா இம்சை!
வா!! என்றாள்
இந்த வார இறுதியில்
வாழை இலை விருந்துக்கு!
வந்தான் குடும்பத்துடன்.
விருந்தோம்பல் செய்தாள்
விழியில் மகிழ்வோடு!!
வாசல் சென்று
வழியனுப்பும் வேளையில்
கேட்க மறந்து போன
கேள்வியை கேட்டாள்
KG படிக்கும் அவன் மகளிடத்தில்!!
உன் பெயர் என்ன??
பதிலாய் வந்தது
பாவை இவள் பெயர் தான்!!
சொல்லாமல் சொல்லிவிட்டான்
சொல்ல மறந்து போன
செல்லறிக்கா காதலை!!
எல்லோரும் மௌனாமாய்!!
ஆனால் மௌனம் பேசியது!
வாழ்க்கையின் விளையாட்டை!!
நல்லாருக்குங்க :-)
:-))
//என் பகல் நேர சீரியல் நிம்மதியில்
விழுந்தது மண்.//
Ha Ha...
Good one akka! :-)
//என் பகல் நேர சீரியல் நிம்மதியில்
விழுந்தது மண்.//
serial partha nimmadhi kidaikkuma????????????
:))
அருமை... :)மனுஷ்யபுத்திரனுக்கு அனுப்பி வைக்கவும். :)
பெண்ணுக்கே உள்ள பொசஸிவ்னெஸ் அழகான கவிதை வரிகளாய். ரொம்ப நல்லா இருக்குங்க.
நன்றி.
சில நாட்களாய் ஊரில் இல்லை. அதான் நன்றி சொல்வதில் தாமதம்.
ஆனால் ஒரு சந்தேகம். சிலர் இதை கவிதை ன்னு எல்லாம் சொல்லுறீங்களே?? நிஜமாவா இதெல்லாம் கவிதையா?? நான் அது ஏதோ 'பெரியவங்க சமாசாரம்ன்னு' இல்ல நெனச்சேன்...:-)
//சிலர் இதை கவிதை ன்னு எல்லாம் சொல்லுறீங்களே?? நிஜமாவா இதெல்லாம் கவிதையா?? //
இப்படிலாம் அப்பாவியா கேட்டா நாலு பேரு போனா போதுன்னு கவிதைன்னு சொல்லிடுவாங்கனு நினைச்சா அந்த நினைப்ப அழிச்சிட்டு ஒரு கவிதை எழுதுங்க பார்போம்.
அவங்கள நாம "பெரியவங்கன்ணு"" சொல்லணுமாம்!! கவிதை எழுதறது பெரியவங்க சமாசாரம்ன்னு
சொல்லர்தில இருந்த தெரியலை
ரொம்ப அருமையாக உள்ளது
Priya, Maddy,
Very nice poems.
really supernga...
/*லஞ்ச்சுக்கு சாண்ட்விச் செய்யவா?பாஸ்தாவா?
அவள் கேட்ட அக்கணத்தில்
சமைந்த பெண்ணாய் ஆனது
என் சாம்பாரும் அவியலும்*/
really nice.
நான் ஒண்ணு புதுசா ட்ரை பண்ணி இருக்கேன்..நேரம் கிடைத்தால் பாருங்க
http://www.rojavinkadhalan.blogspot.com
அவள் தந்த பீங்கான் கோப்பை தேநீரில்.
"இந்த வரில ‘பீங்கான்’ delete பன்னா செண்டென்ஸ் கரெக்டா இருக்கும்னு நினைக்கறேன். மத்தபடி ஆணா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் பொஸஸிவ் ஒன்னுதான்னு புரியுது..உங்கள் முயற்சியை “பாஸ்தாவிலும்’ காட்டுங்கள். வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்..(’க்’ போட்டதுக்கு சீமான் கோச்சுக்கபோறாரு)
Anbarasu Selvarasu,நாடோடிப் பையன்,
thank you.
Ibrahim A,
கொடி கவிதை படித்தேன். சுட்டிக்கு
நன்றி.
அண்ணாமலையான்,
சீமான் மட்டுமா வாழ்த்துகள் சொல்றார்? நெறைய பேரு அப்டி தான் கெளம்பிருக்காங்க.
Thank for coming.
அருமையான கவிதை... yes..கவிதை.
as someone said..if u do self review one more time.. you will get a better one. keep writing.
Good one!
Super....
PS: enakkum Sachin, Dhoni-ya thavira cricketla romba theriyathu... ;)
நல்லா இருக்கு கவிதை. இதே மாதிரி அந்தப் பொண்ணு (கணவனின் சிநேகிதி)யாரைப்பார்த்து (அவள் கணவனின் சிநேகிதி)எப்படி கவிதை எழுதுவாளோ?
அருமை :)
Post a Comment