Friday, 13 November 2009

சில கேள்விகள் - 2

-படத்துல மாங்கு மாங்கு ன்னு உழைச்சவங்களையே இருட்டடிப்பு பண்ற இந்த காலத்துல "இவர்களுடன் குற்றால அருவி" அப்டின்னு ஒரு படத்துல டைட்டில் கார்டு போடுவாங்க. அது என்ன படம்?

-சாமி படத்துல 'இது தானா இது தானா' ன்னு ஒரு பாட்டு இருக்கு. சித்ராஜி(உபயம்: சூப்பர் சிங்கர்) பாடினது. இந்த பாட்டு ஆரம்பிக்கும் போது சாமியும் மாமியும் ஒருத்தரை ஒருத்தர் பாத்து ஏதோ சொல்லிக்குவாங்க. உதடு அசைவது மட்டும் தான் காமிப்பாங்க. அவங்க அப்டி என்ன சொல்லிப்பாங்க?

-எதிர் நீச்சல் படத்துல மாடிப்படி மாது, கிட்டு பட்டு, நாயர் இப்டி எல்லார் பெயர்களும் நமக்கு சுலபமா ஞாபகத்துல இருக்கும். ஆனா ஒரு தாத்தா ரூம்ல படுத்து லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டே இருப்பார். அவர் பேரு என்ன?

-மேல கேட்ட மூணு கேள்விக்கும் ஒரு சம்மந்தம் இருக்கு. அதையும் சொல்லிடுங்க.

9 comments:

மணிகண்டன் said...

***
மேல கேட்ட மூணு கேள்விக்கும் ஒரு சம்மந்தம் இருக்கு. அதையும் சொல்லிடுங்க.
***

மூணுமே கேள்வி ? கரெக்டா.

Sanjai Gandhi said...

2.மொளகாப் பொடி, பொறுக்கி

:)

துளசி கோபால் said...

1.கண்ணும் கண்ணும்

2. தள்ளி நில்லு. கிருமி ஒட்டிக்கப்போகுது

3. இருமல்தாத்தா


குற்றாலத்துலே குளிச்சா ஜலதோஷம் பிடிச்சு இருமல் வந்துரும்:-)

புன்னகை said...

சாமி மாமி கேள்விக்கு மட்டும் தான் பதில் தெரியும் அக்கா! சாமி "மொளகா பொடி" னு சொல்ல, மாமி "பொரிக்கி" னு பதில் சொல்லும். சரி தானே?

Muthu said...

- oru vidu iru vaasal
- milaka podi
- If google can't tell me the answer, then i can't :-)

மணி said...

2வது கேள்விக்கு
மிளகாய்ப்பொடி , பொறுக்கி

Kathir said...

1.Kannum kannum
2.Sami: 'molagapodi'; Mami: 'porukki'
3.Irumal thatha

GURURAJ said...

All the three movies - produced by kavithalaya
1. oru veedu eru vaasal
2. sorry no idea
3. irumal thaththa

ப்ரியா கதிரவன் said...

1)அச்சமில்லை அச்சமில்லை.இந்த படத்தை மனதில் வைத்து தான் கேள்வி கேட்டேன்.
கண்ணும் கண்ணும் படத்துல நன்றி குற்றால அருவின்னு பார்த்ததா ஞாபகம்.
ஒரு வீடு இரு வாசல் படத்துலயும் இப்டி வருமா என்று ஞாபகம் இல்லை.

2)மொளகா பொடி, பொறுக்கி --> இதுல எல்லாம் கரெக்டா தான் இருக்கீங்க,,,,:-)

3)அந்த தாத்த பேரு படத்துல வரவே செய்யது. இருமல் தாத்த ன்னு தான் வரும்.

4)மூன்று கேள்விகளுக்கும் உள்ள connection : கவிதாலயா பாலசந்தர்.

விடை அனுப்பியவர்களுக்கு நன்றிகள்.