Friday 28 November 2008

யாக்கை திரி, காற்றின் மொழி...

சமீபத்தில் ஒரு நண்பரிடம் யாக்கை திரி பாடல் பற்றி பேச நேர்ந்தது.
வைரமுத்து இந்த பாட்டை எழுதி இருக்கும் விதமும்(in his பெய்யென பெய்யும் மழை), அந்த பாட்டுக்கு ARR போட்ட composition உம்(Yes, this is one of the very few பாட்டுக்கு மெட்டு போட பட்ட privileged songs), மணிரத்னம் அதை உபயோகப் படுத்தி இருக்கும் லாவகமும் யாரையுமே கவரும்....நெனச்சு நெனச்சு சந்தோஷ பட்டுக்கலாம். எப்போ
கேட்டாலும் உற்சாக படுத்தும் பாட்டு.

ஆயுத எழுத்து ஆடியோ ரிலீஸ் ஆனப்போ, visuals ஐ ரொம்ப expect பண்ண வெச்ச பாட்டு எனக்கு இது தான்.
படம் வந்த அப்றோம், மத்த எல்லா பாட்டும் டிவி ல போடுவாங்க, ஆனா இந்த பாட்டு மட்டும் வரவே வராது....ரொம்ப காக்க வெச்ச பாட்டு....

ஆனா ஒரு சோகமான உண்மை என்னன்னா......சிலர் இந்த பாட்டோட அருமையான lyrics ஐ அனுபவிக்காம, வெறுமே இசையை மட்டும் ரசிச்சது தான்.
அவங்களுக்கு எல்லாம் (AR)Rehmania....:-)
யாக்கை ன்னா உடல் ன்னு அர்த்தம்.
உடலை திரியாக்கி காதலை சுடராக்கிய வைரமுத்துவுக்கு இந்த rehmania மேட்டர் தெரிஞ்சா அழுதுடுவாரா இருக்கும்....:-(


நான் எங்கயோ படிச்ச ஞாபகம். 'ஒரு கவிஞர் ரொம்ப ரொம்ப ரசிச்சு ரசிச்சு 'a drop of crocodile on the wall' ன்னு தன்னோட ஆங்கில கவிதை ல எழுதினாராம்.அதை படிச்சவங்கள்லாம் 'என்னங்க சொல்ல வரீங்க? புரியலையே' ன்னு சொன்னங்களாம்.
அதுக்கு அவர், "அட பாவி மக்கா...'பல்லி'ய(Lizard) தான் அவ்ளோ நுணுக்கமா எழுதி இருக்கேன்னு சொன்னாராம்'...பாவம் அவருக்கு எப்டி இருந்து இருக்கும்??

'மொழி'படத்துல 'காற்றின் மொழி' பாட்டு எல்லாருக்கும் பிடிக்கும்....அதுல ஒரு நுணுக்கமான மேட்டர் இருக்கு....நெறைய பேரு கவனிச்சு இருப்பீங்க...
அதுல நடுவுல BGM வர எடத்துல, ஒரு zebra crossing வரும்....அங்க Jo வந்து Prakashraj, Prithviraj, Swarnamaalya மூணு பேர் கிட்டயும் ஒரு action பண்ணுவாங்க
உடனே அவங்க மூணு பேரும் அந்த zebra crossing ல காலை மாத்தி மாத்தி ஒரு step போடுவாங்க.அந்த zebra crossing ஐ Keyboard ஆகவும், ஆடுற அந்த மூணு பேரை விரல்களாகவும் அந்த deaf and dumb பொண்ணு கற்பனை பண்ணுறது எவ்ளோ ஒரு அழகு...:-)

"ரொம்ப பெருமையா பொறந்த நாள் கொண்டாடிட்டு என்ன அதுக்கு அப்றோம் ஒண்ணையும் காணும்.... காணும்?" ன்னு எல்லாரும் கேவலப் படுத்துறாங்களேன்னு ஏதோ ஒண்ணு பதிஞ்சாச்சு.

With that I wish you all a very very happy weekend.

5 comments:

Truth said...

யாக்கை திரி மேட்டர் எனக்கு இப்போத் தான் தெரியும். நல்ல இருக்கு. நானும் rehmaniaவாத் தான் இருந்திருக்கேன்.

ஆனா இந்த zebra crossing எனக்கு பாத்த முதல் தடவயே கவனிச்சிட்டேன். நல்ல ஐடியா, சூப்பர் execution.

Anonymous said...

யாக்கை திரி மற்றும் ஆயுத எழுத்துகள் பாடல்கள் பற்றி வைரமுத்து -

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=388&mode=threaded&pid=2471

*Kathir* said...

நானும் ரஹ்மானின் ரசிகன்தான். ஆனா ஒவ்வொரு தமிழ் பாடல் கேட்கும்போதும் எந்த அளவுக்கு தமிழ் சொற்கள் பயன்படுத்துராங்கன்னு கவனிப்பேன். அதுவும் மணிரத்னம், ஷங்கர், கௌதம் மாதிரி directors படங்கள்ல தனி கவனம் ( reach அதிகமா இருக்குமாம் ).

இந்த பாட்டுல, சங்க கால தமிழ குடுத்த வைரமுத்து great! இப்படி ஒரு lyric a, use பண்ணி, discothe effect குடுத்த ரஹ்மான் great! humming, tune, rythm எல்லாம் அவ்வளவு அழகா சேர்ந்து இருக்குறத கேக்குறப்போ நானும் rahmenia தான்.. :))

கௌதம் படத்தோட பாட்டுல எல்லாம் அவ்ளோ அழகான வார்த்தைகள பயன் படுத்தி இருப்பாங்க. "என் பாடல்கள்ல நல்ல தமிழ் வார்த்தைகள் வரணும்னு நினைப்பேன்னு" Harris jayaraj ஒரு பேட்டில கூட சொன்னார். Hats off to Thamarai. (but humming தான் கொஞ்சம் மும்மா பின்ன இருக்கும்). அதுக்காகவே அவர் பாடல்களை ரசிக்கலாம்

ப்ரியா கதிரவன் said...

Kannan,
Thanks for sharing this link.Too good one.



Truth,Kathir,

Thanks for visiting and commenting.

And sorry for the late response.

Anonymous said...

I want to make a app for my online magazine, but am confused as how to do so without downloading some other app. I don't have a phone, let alone an iphone, is it possible for me to make an app for the iphone without the actual phone? Help!



________________
[url=http://unlockiphone22.com]unlock iphone[/url]