Monday, 1 December 2008

வார இறுதிக்கு சென்னை சென்று இருந்தோம். நவம்பர் 29th அன்னைக்கு எனது மாமனார் தபால் துறையில் நாற்பது ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அதற்காக அவருக்கு அலுவலகத்தில் பிரிவுபச்சார விழா. எங்கள் குடும்பத்தில் அனைவரும் அவருடைய ஆபீஸ் க்கு போய் இருந்தோம்.எல்லாரும் அவரை வாழ்த்தி பேசி கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் எனது நாத்தனார் வந்திருக்க வில்லை. அவங்க ஒரு பேச்சாளர். என் மனதில், நம்ம குடும்பத்தினர் சார்பாக யாரையாவது நன்றி சொல்ல அழைத்தால், நான் போய் சொல்லலாம் என்று ஒரு எண்ணம். பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு, மைக் பக்கமே போக வில்லை...ரொம்ப out of touch .கண்ணை மூடி ஒரு ரெண்டு நிமிடங்கள் யோசிச்சு ஒரு நிமிடம் பேசுற மாறி சில வரிகள் தயார் செய்து கொண்டேன். அதற்குள் என் நாத்தனார் வந்துவிடவே, வடை பாயசத்தோட விருந்தளிக்க அவர்கள் வந்து விட்ட பிறகு, உப்புமாத்தனமா என் பேச்சு எதுக்குன்னு relax ஆயிட்டேன்....அர்ஜுன் வேறு பசி வந்து ரகளை செய்யவே, நான் விழாக்கூட்டத்தை விட்டு அகல வேண்டியதாகி விட்டது. ...அவங்க எல்லாரும் தப்பிச்சுட்டாங்க.....But you all have no choice.
நான் என்ன பேச நெனச்சேன்னு இங்க எழுதி இருக்கேன்.நீங்க படிச்சு தான் ஆகணும்....:-)

...................................................................................அனைவருக்கும் வணக்கம்.
எனது மாமனாரை கடந்த மூன்று வருடங்களாக பரிச்சயம்.
நான் அவரிடம் பார்த்து வியந்த விஷயங்கள்...
- அவருடைய எளிமை.

-அடுத்தது, தன் பக்கம் நியாயம் இருந்தாலும் கூட, ஒரு பிரச்சினை என்று வரும் போது விவாதம் பண்ணி பெரிதாக்காமல், பிரச்சினைகளை தவிர்த்து விடும் அவருடைய சாதுர்யம்.

-அவருடைய தமிழ் ஆளுமை. ஒரு முறை அவருடைய நண்பர் தொலைபேசியில் தன்னுடைய மகனுடைய திருமண அழைப்பிதழில் அச்சிடுவதற்கு நல்ல வாக்கியங்கள் ஏதாவது சொல்லுமாறு கேட்ட போது, சற்றும் தாமதிக்காமல்

"யாயும் யாயும் யாராகியரோ நெஞ்சு நேர்ந்ததென்ன??
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன???"
என்று புறநானூற்று வரிகளை அவர் சட்டென்று சொல்ல கேட்டு நான் வியந்து போனேன்.

-அவருடைய English vocabulary skills. தினசரி ஆங்கிலம் பேசும் எங்களுக்கு எல்லாம் தெரியாத பல வார்த்தைகள் அவருக்கு சர்வ சாதாரணம்.எனக்கு திருமணம் ஆன புதிதில் எங்க wedding DVD பார்த்து கொண்டு இருந்தோம்.அதில் 'Best complements from Kith And Kin' என்று ஒரு வார்த்தை வந்தது. Kith And Kin என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை எனக்கோ என் கணவருக்கோ தெரிய வில்லை. 'சுற்றமும் நட்பும்' என்று ஒரு போடு போட்டார் என் மாமனார். நான் அசந்துட்டேன்.

- அவருடைய வேலையின் மீது அவருக்கு இருக்கும் dedication. நானும் என் கணவரும் IT துறையில் வேலை செய்கிறோம். அதிக வேலை பளு இருக்கும் நேரங்களில், வழக்கத்தை விட அதிகமான நேரம் அலுவலகத்தில் செலவிட நேரும் போது, ரொம்ப அலுத்துக்குவோம். ஆனால், being a PRI, மாங்கு மாங்கு ன்னு வெயிலும், மழையிலும் அலைந்து திரிந்து வேலை செய்து விட்டு வந்தாலும் ஒரு நாள் கூட தன் வேலையை பற்றி ஒரு அலுப்பு அவரிடம் தென் பட்டதே இல்லை...

'தனக்கு மாதா மாதம் சம்பளம் தரும் வேலை' என்பதை தாண்டி தபால் துறை மீது அவருக்கு ஒரு ஈடுபாடு இருப்பது உண்மை. கடந்த வருடம் நாங்க டென்மார்க் ல இருந்தப்போ ஒரு மூணு மாதம் அவர் அங்கே வந்து இருந்தார். அப்போ நாங்க வெளில செல்லும் போது, எங்க போஸ்ட் ஆபீஸ் அல்லது போஸ்ட் பாக்சை பார்த்தாலும் அவர் ரொம்ப உற்சாகமாகி விடுவார்.எங்க வீட்டுக்கு போஸ்ட் டெலிவரி பண்ண வரும் ஒரு போஸ்ட் வுமனை friend ஆக்கி கொண்டு, அங்க உள்ள போஸ்ட் ஆபீஸ் க்கு சென்று, அவர்களின் செயல் முறைகள் எல்லாத்தை பத்தியும் தெரிஞ்சுக்கிட்டு, நிறைய புகைப்படங்கள் எல்லாம் எடுத்து வந்தப்போ அவருடைய அந்த ஈடுபாடு ரொம்ப evident ஆ தெரிஞ்சுது.

அவருக்கு இந்த நாற்பதாண்டு கால அழகான அனுபவத்தை தந்த தபால் துறைக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அவர் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். ஆனால் எனக்கு கடவும் நம்பிக்கை நிறைய உண்டு. அவருடைய ஓய்வுக்காலம் அமைதியுடன் அமைய கடவுளை பிரார்த்திக்கிறேன்.
நன்றி, வணக்கம்.
..................................................................................

நான் எப்டி 'எங்க அப்பா இல்லன்னா நான் இன்னைக்கு இப்டி இல்ல' ன்னு சொல்லுவேனோ, அதே மாறி என் நாத்தனார், என் மாமனாரை பத்தி சொல்லுவாங்க....
அர்ஜுன் க்கு என் அப்பாவிடம் ஆங்கிலம் படிக்க குடுத்து வைக்கலைன்னு இதுக்கு முன்னால் ஒரு post ல சொல்லி இருந்தேன். ஆனா என் மாமனாரிடம் தமிழ் படிக்க குடுத்து வைத்து இருக்கிறான்.

.....................................................................................

And this post is undoubtedly dedicated to(No prizes for guessing) my Father in law, as a small gift for his retirement. This is wishing for him, peace,health and happiness today and everafter.

..................................................................................பின்னால் சேர்த்தது 07Jan2009
சமீபத்தில் என் கணவர் இந்த பதிவை என் மாமனாரிடம் காட்டி இருக்கிறார்.அவர் குடுத்த கமெண்ட்:
"மொதல்ல அந்த பாட்டு புறநானூறு இல்ல...அடுத்தது lyrics மொத்தமும் தப்பு....இத படிச்சவங்க யாரும் சுட்டி காட்லையா???"
மானம் போச்.சொன்னதோட இல்லாம ஒழுங்கான வரிகளை எழுதி குடுத்து இத மாத்திடுன்னும் சொன்னாரு.அந்த வரிகள் இதோ:
"யாயும் ஞாயும் யாராகியரோஎந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்யானும் நீயும் எவ்வழி அறிதும்செம்புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
--- குறுந்தொகை -40

11 comments:

விஜய் said...

அடுத்த தலைமுறை குழந்தைகள் தபால் நிலையத்தையும் ஸ்டாம்பையும் மறந்து போயிடப் போகும் அபாயம் இருக்கிறது.

உங்கள் மாமனார் பற்றி நீங்கள் எழுதியிருப்பது ரொம்பவே ஸ்வாரஸ்யமாக இருந்தது.

Raji said...

Neenga pesi irukkalam.... unga FIL romba santhosa pattiruppanga...

//அவருடைய ஓய்வுக்காலம் அமைதியுடன் அமைய கடவுளை பிரார்த்திக்கிறேன்.

naangalum... yenathu mariyathai kalantha vanakkathai theriviungal...

sa.na.kannan said...

அட! அபாரம்.

Maddy said...

பிரியா, உங்க அப்பாவ பத்தி படிச்சப்பவே உங்க மேல கொஞ்சம் பொறாமையா இருந்தது, இப்போ மாமனாரை பத்தி படிக்கும்போது நீங்க கொடுத்து வச்சவங்க தெரியுது. அவரும் உங்கள் மாதிரி மருமகளை பெற கொடுத்து வச்சிருக்கணும்!!
உறவுகள் என்றென்றும் மேம்பட வாழ்த்துக்கள்!! 4 1/2 பால்காரரை பத்தி அடுத்த பதிவுல எழுதுங்கோ! ரொம்ப நாள் ஆச்சு, அவர் பண்ற குறும்பை படிச்சு. இல்லே இந்தியா வந்தவுடனே ரொம்ப சமத்து ஆயிட்டாரா??

ப்ரியா said...

Thanks Vijay, Raji and Kannan.

ப்ரியா said...

Maddy,
Long time...How are you?

நன்றி.வாழ்த்துக்களுக்கும் கமெண்ட் க்கும்.
நாலரை பால் காரர் இந்தியா வந்து ரொம்ப ரொம்ப வால் ஆயிட்டாரு....கூடிய சீக்ரம் எழுதிடுவோம்...

Anu said...

Hey u
Neenga 2 mtsle think panna matter super...I really appreciate it. Not everyone has the gift of having instant great thoughts.but indha periya mattere 1 minutele pesalamnu nenachadhu mattum konjam too much :))

sa.na.kannan said...

காணவில்லை!

ப்ரியா said...

Anu, Really if you speak that much on stage, it will hardly come for 60-70 secs. Try out, if you are doubtful.


Kannan,
Vandhuttom la....:-)

Vijay said...

ஹய்யோ....கண்ணன் காணவில்லைன்னு சொன்னது உங்களை இல்ல. பதிவுல நீங்க பேச நெனச்சதா சொன்ன விஜயத்தை. மாமனார் கமெண்ட் அப்டேட் பண்ணும்போது காக்கா தூக்கிட்டு போய்டுச்சா?

Vijay said...

சரி சரி, யாருபா அது 'எனக்கு ""ரீட் மோர்""ன்னு ஒரு லிங்க் இருக்கு, அதை அமுக்கி படிச்சாதான் முழு பதிவும் தெரியும்ன்னு' தெரியாதுன்னு சொல்றது....ம்ம்ம்.....நாங்க ஒண்ண்ண்ணும் தெரியாம இல்ல...ஏதோ இது ஒண்ணுதான் தெரியாம இருந்துட்டோம்ன்னு( செரியா பாக்காம ஒளரிடோம்ன்னு) சொல்லிகினு விடை பெறுவது.........டுயுப் லைட்.... டுயுப் லைட்... டுயுப் லைட்.....