அப்போ தான் சாப்பிட்டு முடிச்சு, kitchen ஒதுங்க வெச்சுக்கிட்டோ, மறுநாள் சமையலுக்கு வேண்டிய காய் நறுக்கிட்டோ இருக்குற டைம்.
அர்ஜுன் வேற அப்பப்போ வந்து 'அம்மா தூக்கணும்மா.....தூக்கணும்மா.." ன்னு சொல்லிட்ருப்பான்
நான் நறுக்குறது வெள்ளரிக்காயா இருந்தா....'அம்மா ஒரு துண்டு குடுங்க பிள்ளைக்கு' ன்னு கேக்க வேண்டியது.....
அவன ஏதாவது சொல்லி ஹால் க்கு அனுப்பி வெச்சா...கொஞ்ச நேரத்துல அவங்க அப்பா கூடவோ ஆச்சி கூடவோ சண்டை போட்டு...ஊ ன்னு கத்திக்கிட்டு kitchen க்கு ஓடி வருவான். அவனுக்கு யார் கூடவாவது சண்டைன்னா உடனே அம்மா ஞாபகம் வந்துடும்...:-)
இதை எல்லாம் சமாளிச்சுக்கிட்டே......ஆனாலும் ஒரு கண்ணையும்(kitchen ல இருந்து பாத்தா டிவி ஓரளவுக்கு தெரியும்) ரெண்டு காதையும் டிவி பக்கம் வெச்சு, நான் விடாம follow பண்ற ஒரு/ஒரே program - Airtel Super Singer - 2008.
அர்ஜுன் பொறந்து maternity break ல இந்தியா வந்தப்போ, Airtel Super Singer ஜூனியர் எல்லா episodeம் பாத்து, அது பத்தாதுன்னு retelecase பாத்து, அதுவும் பத்தாதுன்னு youtube ல பாத்து.....இப்போ யாரு எந்த round ல என்ன பாட்டு பாடினான்னு கூட மறக்காம சொல்லுவேன்.
கிருஷ்ணமூர்த்தி யும் , விக்னேஷ் ம் finale ல பாடின 'சங்கீத ஜாதி முல்லை' ,
'வந்தாள் மகா லக்ஷ்மியே' இந்த ரெண்டு performance ஐயும், இப்போ பாத்தா கூட எனக்கு கண் கலங்கிடும்....:-) (கண் கலங்குறதுக்கு smiley போடறது எல்லா ரொம்ப டூ மச்)
அதே effect ல, Airtel Super Singer -2008 ம் பாக்க ஆரம்பிச்சு, இப்போ பத்து போட்டியாளார்கள் மிஞ்சி இருக்குற வரைக்கும் follow பண்ணியாச்சு. இதுல என்னன்னா, வீட்டுல இன்னொரு டிவி க்கு DTH போன சண்டே தான் வந்துச்சு....so இது வரைக்கும் உள்ள எல்லா episode க்கும் strong competition இருந்துச்சு....அபியும்,செந்தமிழ் அரசியும் ...
எப்போடா break வரும் ன்னு பாத்துட்டு இருந்து, உடனே 'please விஜய் டிவி மாத்துங்கன்னு kitchen ல இருந்து கத்தி, மாத்த வெச்சா, சில நேரம் correct ஆ அங்கேயும் chinmayi சிறிய விளம்பர இடைவேளைன்னு சொல்லுவாங்க....
'அட ச்ச' ன்னு இருக்கும்.....
எனக்கு ரவி,ரேணு, பிரசன்னா, Rohit இவங்க நாலு பேரும், இதே ஆர்டர் ல favourite.
ஜூனியர் பாக்குறப்போ, எல்லா குழந்தைகளுமே ரொம்ப நல்லா பாடுற மாறி இருந்துச்சு..irunthaalum கிருஷ்ணமூர்த்தி, Vidyalakshmi (அதே ஆர்டர் ல) favorite. Krish டைட்டில் win பண்ணாரு. இந்த முறை ரவி win பண்றாரான்னு பாக்கலாம்.
Questions and Observations on Sabarimala
6 years ago
17 comments:
சீனியர்களை விட ஜூனியர் சூப்பர் சிங்கர் நல்லா இருந்தது என்று சொல்லலாம். நேற்று சூப்பர் சிங்கரில் ப்ரையான் ஆடம்ஸின் ஆங்கிலப் பாடலை சூப்பராகப் பாடிய விஜய் நாராயண் இந்த ரவுண்டில் சொதப்பியது மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. பார்க்கலாம் ரெட் அலர்டிலிருந்து வெளிவருகிறாரா இல்லையா என்று. அவரை எதிர்த்து பிற மொழி பாடல் ரவுண்டில் பாடிய மதுமிதா இப்போதிருக்கும் பெண்களைவிட நன்றாகவே பாடினார். அவரை போட்டியிலிருந்து நீக்கியது மாபெரும் தவறு.
தொகுத்து வழங்கும் சின்மனி இந்த வாரம் வராதது சூப்பர் சிங்கரைப் பார்க்கவே பிடிக்கவில்லை. இந்த மாலினி அலட்டும் அலட்டு தாங்க முடியலை.
மீண்டும் ஒரு ஜூனியர் சூப்பர் சிங்கர் இருந்தால் நல்லா இருக்கும்.
கதிரவன் சாம்பார்ல காரம் அதிகம் மீன் கரில உப்பு கம்மி சாதம் வேகலைன்னு கம்ப்ளைன்ட் ஏன் பண்ணினார்னு இப்போ புரியுது
"" இதை எல்லாம் சமாளிச்சுக்கிட்டே......ஆனாலும் ஒரு கண்ணையும்(kitchen ல இருந்து பாத்தா டிவி ஓரளவுக்கு தெரியும்) ரெண்டு காதையும் டிவி பக்கம் வெச்சு, நான் விடாம follow பண்ற ஒரு/ஒரே ப்ரோக்ராம்"" .....கண்ணையும் காதையும் வேற இடத்தில வச்சி இல்லே இருக்கீங்க!!!
எனக்கு அந்த ப்ரோக்ரம்மே இங்கே பார்க்க முடியாது. மலையாள மண்ணின் ஐடியா சூப்பர் ஸ்டார் பார்த்துகிட்டு இருக்கேன்
ரவி, ரேணு ரெண்டு பேரும் நாளைக்கு ராஜா, ரஹ்மான் ஸ்டூடியோவுல பாடலாம். ஆனா ரேணு இன்னும் நிறைய கத்துக்கணும். ரவி தன் உழைப்பை அழகா முகத்துல கொண்டுவர்றார். இவங்க ரெண்டு பேரும் மற்றும் ரஞ்சனி என இந்த மூணு பேரும் சூப்பர் சிங்கர் தமிழகத்துக்குக் கொடுத்த நம்பிக்கை நட்சத்திரங்கள்.
ரேணுவின் ஆர்குட் லிங்க் - இங்க செம கலாட்டா நடக்குது.
http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=56429294
ரேணுவோட பெர்சனல் ஆர்குட்
http://www.orkut.co.in/Main#Profile.aspx?uid=6778632664772698666
//மீண்டும் ஒரு ஜூனியர் சூப்பர் சிங்கர் இருந்தால் நல்லா இருக்கும்.
//
சொன்ன வாய்க்கு சக்கர போடணும் ன்னு தான் எழுத ஆரம்பிச்சேன்..vijay..
...ஆனா இபோ தோணுது.....டைப் அடிச்ச கைக்கு.....மோதிரம்....???
ok whatever....
ஜூனியர் சூப்பர் சிங்கர் வர போகுதாம் ல.....ஜாலி தான்.
maddy, எதையும் மறக்க மாட்டீங்க போல....
:-)
இப்போல்லாம் ஓரளவுக்குநல்லாவே சமைக்குறேன்...
ஆனானப்பட்ட என் தம்பியே சர்டிபிகேட் குடுத்துட்டானாக்கும்.
கண்ணன்,
எந்த பதிவு போட்டாலும் ஒரு லிங்க் குடுக்குறீங்க....
உங்களுக்கு synapse இன் சார்பில், 'கூகிள் கண்ணன்' ன்னு பேர் வெக்குறோம்....:-)
கண்ணன்,
எந்த பதிவு போட்டாலும் ஒரு லிங்க் குடுக்குறீங்க....
உங்களுக்கு synapse இன் சார்பில், 'கூகிள் கண்ணன்' ன்னு பேர் வெக்குறோம்....:-)
என்ன கொடுமை சரவணா இது? என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே! :-)
////
அவனுக்கு யார் கூடவாவது சண்டைன்னா உடனே அம்மா ஞாபகம் வந்துடும்...
//////////
இதுல அரசியல் உள்குத்து இருக்காஆஆஆஆஅ??
பிரபு, நீங்க சொன்ன அப்றோம் தான் நானே கவனிச்சேன்....
:-)))))))))))))
நாங்கல்லாம் விஜய் டிவிக்கே fans. Airtel Super Singer, Jodi # 1, Ippadikku Rose, Saturday Sunday Films, Neeya Naana, etc.... இப்படி எங்க list கொஞ்சம் (?????) பெருசு தான்.
நாங்க ASS பார்க்க ஆரம்பிச்சது சின்மயிக்காக தான். ஆனா அது இப்படி hit ஆகும்னு நாங்க நினைச்சி கூட பார்க்கல. முதல் Airtel Super Singer la கண்டிப்பா மாயா/ அனிதா/ ஹரிஷ் யாராவது தான் வருவாங்கனு நினைச்சோம்... Juniior la நமக்கு பிடிச்சது கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ். கிருஷ்ணமூர்த்தி வாங்கிட்டாரு.
இப்போ நமக்கு பிடிச்சவங்க கொஞ்சம் அதிகம்... Ravi, Renu, Mathumitha, சந்தோஷ், Rohit, Prasanna...
சந்தோஷ், Mathumitha பாவம் reject ஆயிட்டாங்க. இப்போ எட்டு பேர் இருக்குறாங்க. இதுல இருக்குற சிலர விட மதுமிதா ரொம்ப நல்ல பாடுறாங்க..
பிரியா அக்கா, நாங்க Super Singer பார்க்க மட்டும் இல்ல Vote போடுவோம்... hostel la இருக்குற எல்லோர் mobile la இருந்தும் msg அனுப்பியாவது ரவிய Super Singer ஆக்குகிறோம்
Yeah Madhumitha S was a very good singer. Rohit is overtaking Ravi in the recent episodes...illa?
Watever, May Music rule the world.
Rohit performance ரொம்ப நல்லா இருக்கு.
Emotional Round la எனக்கு satisfy ஆனா ஒரே performance Rohit performance மட்டும் தான்.
ரவி, பிரசன்னா, ரேணு இவங்க எல்லாம் இன்னும் ரொம்ப நல்லா பண்ண முடியும்.
பிரியா அக்கா, வீட்டுல தனியா உட்கார்ந்து பார்த்தா பார்த்த மாதிரியே இல்ல. Hostel ல ஒரு இருபது இல்ல முப்பது பேரோட பார்த்தா தான் நமக்கு ஒரு satisfaction
next round, இவங்க எட்டு பேறும் மனோ sir, சித்ரா mam கூட பாட போறாங்க. பார்க்கலாம்.
இது வரை ஏதாவது எபிசோடை நீங்கள் பார்க்காமல் விட்டிருந்தால், கீழே உள்ள முகவரியை சொடக்குங்கள். இப்போதைக்கு, அனைத்து எபிசோடுகளையும் ஒரே இடத்தில் பார்க்க ஒரே இணையதளம் இது மட்டுமே!
http://airtel-supersinger.blogspot.com
Oh thats very nice. Thanks Lakshminarayan S.
My recent fav' list is updated with Ravi, Renu,Rohit,Ajeesh,Ranjini, Prasanna.
:-)
And hope to see S.Madhumitha/Aishwarya back through Recall.
Post a Comment