Monday 10 November 2008

பனை மரக்காடே! பறவைகள் கூடே! மறுபடி ஒருமுறை பார்ப்போமா?

தமிழ் திரையுலகம் இலங்கை பிரச்சினையை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த அன்னைக்கே இத பத்தி எழுதணும் ன்னு நெனச்சேன். எப்டியோ விட்டு போச்சு....ஆனா இன்னைக்கு இந்த போஸ்ட் படிச்சதும், இத பத்தி கண்டிப்பா எழுதணும் ன்னு தோணுச்சு.


நாங்க டென்மார்க் ல இருந்தப்போ, அங்க நெறைய இலங்கை தமிழர்கள் இருந்தாங்க. நாங்க ஒரு srilankan store ல தான், groceries எல்லாம் வாங்குவோம்.
பார்த்தீபன் ன்னு ஒருத்தர், என் கணவருக்கு colleague. இலங்கை பிரச்சனையால் அங்க இருந்து சில வருஷங்களுக்கு முன்னால் இடம் பெயர்ந்து டென்மார்க் ல வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாரு. அவரோட மனைவி, அவங்க சின்ன புள்ளயா இருக்கப்போவே அவங்க அம்மா, அப்பா எல்லாருமே இந்த பிரச்சனையால் இடம்பெயர்ந்து லண்டனுக்கு போய்ட்டாங்களாம். பார்த்தீபனுக்கும் அவங்களுக்கும் திருமணம் ஆனதுக்கு பிறகு அவரோட மனைவியும் டென்மார்க் வந்துட்டாங்க. எங்க வீட்டுக்கு எதிர்த்த வீடு. அர்ஜுன் பொறந்து இருந்தப்போ எங்க வீட்டுக்கு அவனை பாக்க வந்தாங்க.... வந்ததும் 'நான் அவனை தூக்கட்டுமா?" ன்னு கேட்டு அர்ஜுன் ஐ எடுத்து மடியில் வெச்சு கொஞ்சிக்கிட்டு இருந்தாங்க....அர்ஜுன் க்கு ஏக பட்ட gift வாங்கிட்டு வந்துருந்தாங்க. அவங்க பொண்ணுக்கு ரெண்டு வயசு, ரொம்ப துறு துறுன்னு அழகா இருப்பா..... எங்க அம்மா அவங்களுக்கு பஜ்ஜி செஞ்சு குடுத்தாங்க.... நாங்க எல்லாரும் சாப்பிட்டுகிட்டு இருந்தோம்... அந்த குட்டி பாப்பா எங்க அம்மாவை, அம்மம்மா அம்மம்மா ன்னு சிலோன் ரேடியோ ல வர்ற மாறி கூப்பிட்டுகிட்டு இருந்தா......ரொம்ப கல கலன்னு பேசிக்கிட்டு இருந்தோம்....

திடீர்னு பார்த்தீபன் மனைவி 'நீங்க எப்போ இந்தியா போறீங்க?' ன்னு கேட்டாங்க ....அப்போ அர்ஜுன் பொறந்து ஒரு வாரம் ஆயிருந்துச்சு.... 'டாக்டர் ஒரு மாசம் கழிச்சு தான் flight ல கூட்டிட்டு போலாம் ன்னு சொன்னாரு, அதுனால அடுத்த மாசம் போறோம் " ன்னு சொன்னேன்.
உடனே அவங்க அவங்க மடில இருந்த அர்ஜுனை கையில் எடுத்து அவன் கிட்ட பேசுற தொனியில் அவனை hold பண்ணிக்கிட்டு, "நீ அதிர்ஷ்டக் காரன், பொறந்து ஒரு மாசத்துல சொந்த நாட்டுக்கு போற.....நான் என் நாட்டை விட்டு வந்து பதினெட்டு வருஷம் ஆகுது, இன்னும் திரும்பி போக முடியலை' ன்னு சொன்னாங்க....எங்க எல்லாருக்கும் சாப்பிட்டுக்கிட்டு இருந்த பஜ்ஜி தொண்டைலையே சிக்கிடுச்சு...எல்லாருக்கும் ஒரு நிமிஷம் கண் கலங்கி அந்த situation ரொம்ப கனமா ஆயிடுச்சு...எல்லாருமா சேந்து எப்டியோ சமாளிச்சு பழைய நெலமைக்கு வந்தோம்.....

இலங்கை பிரச்சனை பத்தி படிச்சு, டிவி ல பாத்து நான் உணர்ந்தத விட, அன்னைக்கு அவங்க சொன்ன அந்த ஒரு வரியில் நானும் அவரும் அம்மாவும் உணர்ந்தது அதிக வலி.

பார்த்தீபன் அதுக்கு அப்றோம் தான் சொன்னாரு, அவங்க அம்மா, அக்கால்லாம் இன்னும் திரிகோண மலை பகுதில தான் இருக்காங்களாம். அங்க ரொம்ப சண்டை நடக்குறாதால அவர வரவே வேணாம் ன்னு சொல்லிட்டாங்களாம்.....'அவங்களை எல்லாம் பாத்து பல காலம் ஆயிடுச்சுன்னு' சொன்னாரு....

இந்தியா-இலங்கை கிரிக்கெட் மேட்ச் நடக்குறப்போ, என் கணவர் கவனித்து இருக்கிறாராம்....பார்த்தீபன் இலங்கை க்கு பயங்கரமா சப்போர்ட் பண்ணுறதை.....ஆனா அந்த நாட்டு அரசாங்கம் அவங்களை எல்லாம் அந்த நாட்டு பிரஜைகளா நடத்த போறது என்னைக்குன்னு தான் தெரியலை....

16 comments:

Truth said...

சோகத்திலும் பெரிய சோகம்
தன் தாயை இழக்கும் போது அல்ல
தன் தாய்நாடு தனக்கில்லை என்ற போது

அப்படினு வைரமுத்து(?) சொல்லி இருக்காரு
யோசிக்கும் போது இது உண்மைதானோ .என சந்தேகம் வருது.
எல்லோரும் ஒரு நாள் தன் தாயை இழக்கத் தான் போறாங்க. அத எல்லோரும் சாமளிச்சியும் இருக்காங்க. ஆனா தாய் நாட்ட இழந்த என்ன ஆகும்னு என்னால யோசிக்ககூட முடியல.

Anonymous said...

Ama pri, Amma vettukku poi senthappla rendu masam ayittale thookkam vara matenguthu!!! Thai natta pakkama 15 years!!! really tragic!!! :-(

Anonymous said...

படிக்கும் போதே மனது கனத்து விட்டது

Anonymous said...

Dear Priya akka,
I loved your writing, it was so touching!
As a Sri lankan Tamil,I'm so happy that we have got so many loving brothers and sisters in India!
Thank you all!!!

By the way, have a look on this,I wrote this after reading yours and Chinmayi's. :)

http://mathukrishna.blogspot.com/2008/11/light-for-tomorrow.html

Love,
Mathu Krishna

ப்ரியா கதிரவன் said...

Thanks Truth, Mercy, Raji to have added your two cents here.

ப்ரியா கதிரவன் said...

Dear Madhu,

Thanks a lot.
All I could wish for you is GOOD LUCK and God's Grace for a peaceful motherland.

I am touched you called me Akka.
You are very kind.


Priya.

Kalyan said...

Sri lankan tamils are very sweet.. there are no second opinion

As a fellow tamilans we dont want them to suffer.. especially the civilians

As an indian, there is nothing more than to sympathise with them...bcs i am purplexed by the stand of LTTE with India..

I dont think we need to debate this here.. when there are so many civilians getting killed which is so tragic and heart-breaking

ப்ரியா கதிரவன் said...

Yes Kalyan. I second your opinion 200%.

Anonymous said...

Thanks a lot Priyakka...:)

That's so sweet of you:)
When I was in Sri lanka, I'm acontinuos reader of Vikadan and Kumudham, but now I don't really get time to go to those websites and read them, but as soon as I found your blog, I feel that I got them back!
Your blogs have all the tastes I would say!
Thank you for reading mine and commenting on it...I'm being honored! Though I love writing, I don't get time here in between my studies... but when I read yours, I really feel like writing... :)
Thanks for being a great inspiration:)
Love you akka!

- Mathu

Maddy said...

""இலங்கை பிரச்சனை பத்தி படிச்சு, டிவி ல பாத்து நான் உணர்ந்தத விட, அன்னைக்கு அவங்க சொன்ன அந்த ஒரு வரியில் நானும் அவரும் அம்மாவும் உணர்ந்தது அதிக வலி.""

புரிந்துகொள்ள முடிகிறது. என்ன செய்ய, சமாதானம்,அமைதி, உண்மையான முயற்சி என்று எந்த பக்கத்திலும் இல்லாத வரையில், சுய லாபத்துக்கு மட்டும் வேஷம் போடும் அரசியல்வாதிகளால் வீணாக மடிந்து போவது அப்பாவி மக்களே.!!! அவர்களும் விடியலை பார்க்க வேண்டுமென்பதே நம்முடைய விருப்பம்

Anonymous said...

Thirumbi Thirumbi padikkurappo manasukku romba kastama irukku..... innum solla ponna antha pain theriyuthu...

intha title vaikunumnu yeppidi thonuchu priya mam...

neenga itha yezhuthunathukkaga...Thanks a lot...

We pray GOD...

@ Mathu...
serious a yenna sollurathunnu theriyala... nallathe nadakkum... i am really happy that u too got inspired by Priya Akka :) :) writing....

@Truth, Maddy, Mercy & kalyan .... Namma Priya mam blog start panni one yr aga pothu... perusa yethavathu panna vendama.... nalla yosinga....

ப்ரியா கதிரவன் said...

ராஜி,

'கன்னத்தில் முத்தமிட்டால்' பாடல்களின் lyrics என்னை ரொம்ப கவர்ந்தவை ...

'விடை கொடு எங்கள் நாடே பாட்டு' ல இந்த lines வரும்ல....இந்த பதிவுக்கு பொருத்தமா இருந்தோன அதையே தலைப்பா வெச்சுட்டேன்....

அர்ஜுன் பதிவுக்கு டைட்டில் கூட நெஞ்சில் ஜில் ஜில் ல வர்ற லிரிக்ஸ்....you might hv noticed.

And so kind of you about your curiosity about my first blog anniversary...even I am overjoyed.

Anonymous said...

@ Raji (akka),
thankskaa, you are so kind, and of course, priya akkavoada writing power appidi!!
:)

Anonymous said...

@ MATHU..

Thanks da :) BE HAPPY :) OUR PRAYERS EVER FOR U

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி. இதோ

http://blogintamil.blogspot.com/2015/01/4_23.html?showComment=1421971764341#c6362785305064150399



-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரத்தில் திருமதி மனோ சாமிநாதன் தங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/