சென்ற முறை அம்மா வீட்டுக்கு போனப்போ, ஒரு பழைய டைரி கெடைச்சுது.
நான் 12th படிக்குறப்போ, என்னோட competitions க்கு prepare பண்ற materials எல்லாம் எழுதி வெக்குற டைரி.
ஒரு on the spot கவிதை போட்டிக்கு எழுதின கவிதை(???).
சந்திராயன் பற்றி படிக்கும் போது இது தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு...
சின்ன புள்ள தனமா இருக்கு??? ன்னு யாரும் கேக்க கூடாது....சொல்லிட்டேன்.
நிலா
-------
வெள்ளி நிலவே....உன் விருப்பம் போல சிரிக்கிறாய்...
வான்வழி செல்லும் ராஜகுமாரியாய் விண்ணில் பவனி வருகிறாய்...
என்ன மந்திரம் செய்தாய் நீ?
எங்கள் வீட்டு பிள்ளை சோறுண்ண உன்னை கேட்கிறது...
மக்கள் தொகை பெருக்கத்தால்
எங்கள் பூமித்தாய் மட்டும் பாரம் தாங்காமல் நசுங்க...
நீர்,வளி இல்லாததால் நீ மட்டும் சுதந்திரமாய் !!!
ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் தானா?
நாளை யாம் அனைவருமே உன்னில் குடியேறி
வெற்றி கொடிஏற்றத்தான் போகிறோம்....
காத்திரு கவின் நிலவே!
வளர்பிறையாய்!!!
பௌர்ணமியாய்!!!!!!
-------------------------------------------------------
Questions and Observations on Sabarimala
6 years ago
12 comments:
சின்னப் புள்ளத் தனமா எல்லாம் இல்ல... நல்லாத் தான் இருக்கு.
நீங்க time machine மூவீ பாத்திருகீங்களா? அந்த படத்துல, சந்திரன் உடஞ்சிடும். டைம் இருந்தா பாருங்க. இப்போ trailor மட்டும் பாருங்க.
http://www.imdb.com/video/screenplay/vi2885353753/
and
http://www.imdb.com/video/screenplay/vi1442119961/
அந்த வயசுலேயே கொஞ்சம் அதிகமா தான் think பண்ணி இருக்கீங்க... இருந்தாலும் நல்லா இருக்கு
Kavithai nalla tha erukku madam....
ஏங்க, எல்லாரும் நெசமாவா சொல்றீங்க???
என்ன வெச்சு காமெடி கீமெடி பண்லையே??
நான் நெனச்சேன் நீங்க நிறைய blog எல்லாம் படிச்சி அந்த பாதிப்புலதான் இவ்ளோ அழகா narrate பண்றீங்கன்னு. but பல வருஷமாவே ஒரு மார்கமாத்தான் இருந்திருக்கீங்க.. உங்க blood group என்ன, W+ve ?? ( இந்த பொண்ணுக்குள்ள இவ்ளோ நாளா ஏதோ இருந்திருக்கு பாரேன் - read in 7/G rainbow colony vijayan style)
Romba nalla irukku
அட நம்ம பிரியா இந்தியாவோட நட்ரோடமுஸ் போல, சந்திரனுக்கு சந்திராயன் இந்த வருஷம் அனுப்புவான்னு தெரிஞ்சிருக்கே!!!!! ஜோக்ஸ் வெளியே, கவிதை நல்ல இருக்கு, இன்னும் எழுதலாமே!!!
கதிர், உங்க கமெண்ட் படிச்சு ரொம்ப சிரிச்சுட்டேன்...
விஜயன் ரொம்ப அருமையான நடிகர்.....5star, 7G ரெண்டுலயும் பின்னிருப்பாரு....
அவரு காலமானப்போ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு...
நீங்க உதிரிப்பூக்கள் பாத்து இருக்கிறிங்களா? நான் விஜயன் பத்தி யாரு கிட்ட சொன்னாலும் இந்த படத்தை பாக்க சொல்லுவாங்க....ஆனா ரொம்ப ரொம்ப சோக முடிவாம்....அதுனால நான் இன்னும் ரிஸ்க் எடுக்காம இருக்கேன் ....நமக்கு எல்லாம் படத்துல எல்லாரும் சந்தோஷமா இருந்தா தான் பிடிக்கும்...
kalyan அண்ட் Maddy,
Thanks...ஆனா உண்மைய சொல்றீங்களா இல்ல நக்கல் பண்றீங்களான்னு சத்தியமா நம்ப முடியலைங்க்ண்ணா....
உதிரி பூக்கள் , நிறம் மாறாத பூக்கள் ரெண்டுமே அவர் நடிப்பில் எனக்கு பிடிச்ச படங்கள் தான். NMP ல கூட அவருக்கு சோகமான flashback and climax இருக்கும்
Yenna Pri,
Appo irunthe ore kalakkal than pola iruuku! romba nalla irukkku!
thanks mercy.
Post a Comment