Wednesday, 2 April 2008

நான் கதை கேட்ட கதை...

நான் சின்ன புள்ளயா இருக்கப்போ கொஞ்சம் தில்லாலங்கடி யா தான் இருந்து இருக்கேன். இது எங்க சித்தப்பா என்னிடம் பகிர்ந்து கொண்ட என் சிறு வயது நிகழ்வுகளில் ஒன்று.

எனக்கு ஒரு நாலு வயசு இருக்குமாம்.
அப்பல்லாம் எனக்கு கதை கேக்க ரொம்ப பிடிக்குமாம்.
எல்லா பிள்ளைங்களும் மாதிரி தான்.
எனக்கு சில நேரத்துல கதை சொல்றது எங்க சித்தப்பா.
எனக்கு கதையில கிளைமாக்ஸ் 'அப்புறமா எல்லாரும் சந்தோஷமா இருந்தாங்களாம்" அப்டி இருக்கணுமாம். அப்டி இல்லன்னா ரொம்ப சோகமா சமயத்துல அழுவ கூட ஆரம்பிச்சுடுவேனாம்.
இப்போ கூட எனக்கு anti-climax உள்ள படங்கள் பாத்தா கடுப்பா இருக்கும். என்னடா இப்டி முடிஞ்சுடுச்சே னு நெனைப்பேன்.

எங்க சித்தப்பா இத நோட் பண்ணிக்கிட்டே இருந்து இருக்காரு...அவருக்கு சின்ன புள்ளங்களை அழுவ வெக்குறதுன்னா ரொம்ப இஷ்டமாம்.
ஒரு நாளு அவருக்கு யாரும் கெடைக்காம, என்னைய வெச்சு காமெடி பண்லாம் னு
ஒரு மெகா பிளான் பண்ணி(??) , எனக்கு பாட்டி வடை சுட்ட கதை சொல்லி இருக்காரு.
அந்த கதை உங்க எல்லாருக்கும் தெரியும்ங்கரதுனால நான் நேரா மேட்டர் க்கு வரேன்.

climax ல "நரி வடைய தூக்கிட்டு போயிடுச்சாம். காக்கா ரொம்ப சோகமா இருந்துச்சாம்" அப்டின்னு சொல்லிட்டு என் மொகத்தையே பாத்துட்டு இருந்து இருக்காரு அவரு. நான் எந்த நேரமும் ராகத்தை ஆரம்பிச்சுடுவேன்..enjoy பண்லாம் னு நெனச்சுட்டே இருந்தாராம். பின்னாளில் இணைய ஏடுகளில் இடம் பெறப் போகும் இந்த நிகழ்வுக்கு( யப்பா... என்னா பில்ட் அப்பு...!!!) எங்க அப்பா, பாட்டி னு audience வேற...எல்லாரும் suspense ஓட என் மூஞ்ச பாத்துட்டே இருந்தாங்களாம்.
நான் என்ன பண்ணேன் தெரியுமா????
.
.
.
.
.
'அப்புறம் அந்த நரி சந்தோஷமா இருந்துச்சாம்' அப்டின்னு சொல்லிட்டு எந்திரிச்சு போயிட்டேனாம்.
அன்னிலேர்ந்து எங்க சித்தப்பா எனக்கு கதை சொல்றதையே விட்டாராம்.

5 comments:

இனியாள் said...

Neenga chinna vayasulaye kathaiku kuduththa mudivu rasikka vaikuthu.
Build up lam ungalukku nalla work out aaguthu, kalakureenga ponga.

Natpirku iniyal.

Anonymous said...

nee kathai keta kathai romba nalla irruku.
When i was driving home just the thought of this made me smile.

Kavitha

*Kathir* said...

ஐயோ அக்கா நீங்க சின்னதுல இருந்தே இப்படிதானா, உங்க சித்தப்பாவா ரொம்பத்தான் மொக்கை போட்டு இருக்கீங்க

Erode Nagaraj... said...

நம்ப காக்கா இல்ல காக்கா, அதாம்பா... எதுனா கொத்திக்கினு
கருப்பா பறக்குமே, அது இன்னா பண்ணிச்சு... சொம்மா கெடந்த கெயவி, tiger பிஸ்கட்ட பிரிச்சுகினு இருக்கும்போது, அத்த சுட்டுரலாம்னு plan பண்ணி...

nice-ஆ கெயவி அப்டிக்கா திரும்ப சொல்லொ, அப்பீட்டுன்னு அள்ளிக்கினு பூட்ச்சு.... இத்த பாத்துக்கினே இருந்த ஒரு நரி, சுகுரா நூல் புட்ச்சா மேரி காக்காவ follow பண்ணிக்கினே வந்து, மரத்தடீல குந்திகிச்சு.

காக்காவ டபாய்க்க, “இந்தா மே காக்கா, ஷோக்காக்குற நீ...அத்தொட்டு கானா ஒலகநாதன் கணக்கா ஒரு song எட்த்து வுடு”ன்னுச்சு.

நரியப்பாத்தும் கூட மெரசல் ஆவாத தெகிரியமா, விஜயஷாந்தி கணக்கா குந்திக்கினிருந்த காக்கா, "டாய்... இன்னாடா.... யாரப்பாத்து இன்னா வார்த்த சொல்ட்ட நீ... கமல் தாண்டா நம்ம தல.. அவுரு ஆக்ட் குடுத்த பாட்டு எதுனா பீராஞ்சு பாடுவனே கண்டி, வேற பலான பலான ஆளுங்க ஒண்யும் வாயால பாட மாட்டேன்" ன்னு உதார் வுட்டுச்சு...

தோடா... பாவமாக்குதுன்னு அப்பால, "இளமை... இதோ... இதோ.. இனிமை..... இதோ இதோ.. காலேஜு டீனேஜு காக்கா அல்லாருக்கும் யெம்மேலதான் லுக்கு"ன்னு பாடிச்சாம்பா.

ஆனா ஒண்ணுப்பா... மெய்யாலுமே பாவதர் கணக்கா காக்கா ராகத்த வலிக்க சொல்லொ, "இதென்னடா அக்குறும்பு... கேட்டா gare ஆவுற மேரி பாடுதே இதுன்னு", பேஜாரா பூட்ச்சுபா நரி.

இப்போ இன்னா ஆவும்றே? அங்கதான் வெக்கறேன் tuwishttu....

சடக்கு சடாங்குன்னு எங்கிருந்தோ, சொம்மா... metro water lorry கணக்கா ஒரு நாயி ஓடி வந்து, "நான் தான் சகலகலா வல்லவன்னு" அந்த பிஸ்கோத்தை லவட்டிக்கினு, bus shtop-ல passenger எல்லாம் wait பண்ண சொல்லொ, nice-ஆ நயுவுற பல்லவன் மேரி escape ஆயிருச்சுபா... அக்காங்....

Mugilan said...

Very gud one :) Thottil pazhakam...