Tuesday, 26 January 2010

ஆயிரத்தில் ஒருவன் - ஒரு கடிதம்

படத்தை பற்றிய எனது பார்வையை படித்து விட்டு Mr.Manny எழுதிய கடிதம்.

உங்களுடைய ”ஆயிரத்தில் ஒருவன்” விமர்சனம் படித்தேன். மிகவும் அழகான எழுத்து நடை...உங்களுக்கு வரும் பின்னூட்டம் பார்த்தே தெரிகிறது உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று.


ஆனால், எனக்கு இந்த படம் பார்த்து கவலை தான் ஏற்பட்டது. இப்படியா சோழர் வம்சத்தையும், பாண்டிய வம்சத்தையும் கேவலப்படுத்துவது என்று.!!

இது போதாதென்று பல ஆங்கிலப்படங்களைக் கலந்து விட்டிருப்பது.

Indiana Jones, Apocolypto, Gladiator, 300, National Treasure, mummy(புதையல் தேடிச் செல்வது),Jurassic Park 3 எல்லாம் கலந்த கலவை தான் ”ஆயிரத்தில் ஒருவன்”.

பலக் காட்சிகள் திருடப்பட்டவை. முதல் சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கில் ஆதிவாசிகளின் அம்புகள் வந்து விழுவது 300 படத்திலிருந்து சுட்டது. அதே போல் கடைசி சண்டைக்காட்சிகளில் வீரர்கள் கேடயத்தை முன்னால் நிறுத்தி துப்பாக்கிக் குண்டுகளை தடுக்கும் concept 300 படத்திலிருந்து சுட்டது தான்.. ஒரு சின்ன வித்தியாசம் 300 படத்தில் அம்புகள் பாய்ந்து வரும், இதில் துப்பாக்கிக் குண்டுகள் Because this is happening in 2009. :)

அந்த மைதானத்தில் குண்டு அரக்கன் கல்லெறியும் காட்சி Gladiator படத்தில் நடக்கும் மைதான சண்டைக்காட்சி...இதிலும் ஒரு வித்தியாசம்..Gladiator-ல் மைதானத்தில் தள்ளப்பட்ட கைதிகள் அனைவரும் ராஜாவின் படையை எதிர்த்து சண்டை போடுவார்கள்.... இதில் பைத்தியம் மாதிரி நடித்து அல்லது நடிப்பதாய் நினைத்துக் கொண்டு அடி வாங்கி சாகிறார்கள்... ம்ம்ம் இந்த மாதிரி படத்தில் நடித்தால் கடைசியில் சாகத்தான் வேண்டும்.

பாவம் பிரதாப் போத்தன், இந்த படத்தை ஒப்புக் கொண்ட பாவத்திற்கு பைத்தியம் ஆகி கல்லால் முட்டியில் அடி வாங்கியது தான் மிச்சம்.

Jurassic Park-3-ல் காணாமல் போன பையனைத் தேடி அவனது பெற்றோர் ஒரு தீவுக்குப் போகும் போது அவனுடைய Handy Cam-ஐ ஒரு மரத்தில் இருந்து எடுப்பார்கள், அதே போல் இதில் ஆண்ட்ரியா, பிரதாப் போத்தனின் Handy Cam-ஐ எடுக்கிறார்.

இடையில், ரீமாசென்னின் private security கேட்டவுடனே Flight-ல weapons இறங்குது. அதுவும் எல்லாம் மினிஸ்டர் அனுப்பி வைக்கிற அரசு விமானங்களில்..!! அநியாயத்திற்கு லாஜிக் மீறல்கள்...

இடையில் ஒரு பாட்டு வேற...அப்புறம் குகைக்குள்ள ஆண்ட்ரியா, ரீமாசென் ஹீரோ கார்த்திக்கை கட்டிபுடிச்சுட்டு தூங்குற மசாலா தூவல். அங்கங்கே

ரிமாசென்னைக் கவர்ச்சி காட்டி படத்தை ஒட்டிருக்காங்க வேற...

இனி உச்சகட்டமாக சோழரையும், பாண்டியரையும் மானபங்கம் படுத்தியது. :-(
ரீமாசென்னுக்கு அவருடைய அம்மாவே உடம்பைப் பயன்படுத்தி எதிரியை மயக்க சொல்லித்தருவதாக சொல்வது. அதன்படி பாண்டிய வம்சத்துப் பெண்களை இழிவுபடுத்துவது போல் உள்ளது. உண்மையில் பாண்டிய மன்னர்கள் எதிரியை வீழ்த்த வீரத்தைத் தான் பயன்படுத்தி இருப்பார்கள் என்று எனது நம்பிக்கை. கடைசியில் ரீமாசென் அந்த குலதெய்வச் சிலையை எடுத்து வந்தாரா என்று கூட பார்க்கவில்லை.

அப்புறம் சோழர்கள்... எனக்குத் தெரிந்த மிகச்சிறிய வரலாற்று அறிவில் சோழர்கள் மிகவும் நாகரீகமானவர்கள், கலை அறிவு மிக்கவர்கள் (தஞ்சைப் பெரிய கோவிலே இதற்கு ஒரு சாட்சி) மற்றும் வீரமானவர்கள்,

 அவர்களை இப்படி காட்டுமிராண்டிகள் போல் கருப்பாய் காண்பிப்பது, ஒரு சோழர் பெண் அவளுடைய மார்பை பார்த்திபனிடம் அழுத்திக் காட்டி பார்த்திபனிடம் உணவு கேட்பது இதிலேயே செல்வராகவனின் கொடூரமான மனது புரிகிறது.

இதில் பார்த்திபனுடைய மனைவி மட்டும் சிவப்பாக இருக்கிறார்(அது சரி கடைசியில் கற்பழிப்புக் காட்சிக்கு உதவுமே), பார்த்திபன் மாநிறம், ஆனால் அவர்களது குழந்தை அட்டைக் கருப்பு, இது என்ன லாஜிக்கோ...

முதலில் மந்திர வேலைகள் காட்டும் பார்த்திபன் கடைசியில் ரீமாசென் ஏமாற்றியது தெரிந்த பிறகு போருக்கு முன்னரே கழுத்தை அறுத்துக் கொள்ள முயற்சிப்பது சோழன் ஒரு கோழை என்று காட்டுவது போல் இருந்தது. அவருக்கு ஒரு டான்ஸ் வேறு....(நம்ம பசங்கல்லாம் சூரியன் படத்துல கவுண்டமனி ஆடுன மாதிரி Start Music-னு சொன்னாங்க).

கடைசியில பார்த்திபனை ஒரு காமெடி பீஸ் ஆக்கியது தான் மிச்சம்.
அப்புறம் ஒரு மொக்கை போர்க் காட்சி... நிறைய இடங்களில் அங்கங்கே 300, troy, brave heart என்று சில சரித்திரப் படங்களில் உருவியிருக்கிறார்கள்....

கடைசியில் நீங்களே உங்க விமர்சனத்துல சொன்ன மாதிரி ஆண்ட்ரியாவை என்ன பண்றதுன்னு தெரியாம சும்மா உக்கார வச்சிருக்காங்க...

அப்புறம் ஒரு இனப்படுகொலை..கேட்டா இது ஈழப் பிரச்சனை இல்லை,சொந்தமா யோசிச்சு எடுத்தது-னு ஒரு பொய் வேற,

அதை விட கொடுமை...32 கோடியில ஹாலிவுட்-ல இதை எடுக்க முடியாதுன்னு ஒரு பேட்டி வேற... அவன் இதப் பார்த்தா காறித் துப்புவான்.

எம்.ஜி.ஆர் காலத்துல மக்கள் ஆங்கிலப் படம் பார்க்குறதே அபூர்வம், அதனால காப்பி அடிச்சாலோ கண்டுபுடிக்குறது அபூர்வம். மணிரத்னம் கூட நாயகன் படத்துல உப்பு மூடை கட்டி கடத்துறத Sergio Leone-யோட "Once upon a time in America" -னு ஒரு படத்துல இருந்து சுட்டிருப்பாரு...அந்த படத்தோட theme music கேளுங்க....http://www.youtube.com/watch?v=Jj5Xczethmw சூப்பரா இருக்கும்.

அதெல்லாம் யாரும் கண்டுபுடிக்க முடியாத காலம் ஏமாத்துனீங்க..சரி... இப்போதான் எல்லாம் உலகமயம் ஆயிடுச்சே... ஹாலிவுட்-ல படம் ரிலீஸ் ஆகுற அன்னைக்கே இங்கயும் ரிலீஸ் ஆகுதே(அதுவும் தமிழில்..)

அப்புறம் எதுக்கு அதையே காப்பி அடிச்சு தமிழ்-ல எடுத்து நமக்கு காட்டனும்...!!!!!!!!!!!!!!!!!!!!

இப்போ உலகப்படங்கள் எல்லாமே Torrents-ஆ கிடைக்குதே... இரவு தூங்கும் முன்னாடி Download Start பண்ணினா போதும் காலையில் படம் ரெடி..

Within Tamilnadu it is Selvaragavan's film, but if it goes global then it represents our whole India or our tamil community within other states in India. அப்புறம் அவங்க சொல்லுவாங்க ...இந்த தமிழ்க்காரனுங்களுக்கு வேற வேலை இல்ல.நாம எடுத்ததையே நமக்கு திருப்பி எடுத்துக் காமிப்பானுங்கன்னு.

ராதாமோகன் எடுக்குறாரே அது ஒரு புதிய முயற்சி (Till someone proves he also copied from somewhere, I pray God that should not happen), அமீர் பருத்திவீரன் எடுத்தாரே, சுப்ரமணியபுரம் சசிகுமார்(eventhough there's violence in the movie, it got many fans).etc..etc...

செல்வராகவன்கிட்டேயும் இதை எதிர்பார்க்கிறோம்... கவர்ச்சிக்கும், படுக்கையறைக் காட்சிகளுக்குமென்றே நிறைய ஆங்கிலப் படங்கள் இருக்கிறது செல்வா, நீங்க தயவு செஞ்சு ஒரு நல்ல தமிழ் படமா எடுங்க..ப்ளீஸ்..

ம்ம்ம் ஒரு வழியா படம் முடிஞ்சு வெளிய வந்தா...அடுத்த காட்சிக்காக வெளியே தமிழ் சினிமா ரசிகர்கள் கூட்டம் வேற...செந்தில் ஒரு படத்துல கவுண்டமனிகிட்ட சொல்லுவாரே “அண்ணே அண்ணேனு சொல்ல வருது, ஆனா அடி வாங்குனேன்னு சொல்ல வரல”-ன்னு அது மாதிரி தான் அவங்களப் பார்த்ததும் உள்ள போக வேண்டாம்னு சொல்லத் தோணிச்சு ஆனா பேசவே முடியல..பின்ன உள்ள இப்படி எங்கள பயமுறுத்தி அனுப்புனா..

ம்ம்ம் கடைசியில தான் தெரிஞ்சது “சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கிறதுன்னு சொல்வாங்கல்ல அது இது தான்னு”,

Regards,
Manny.

மாற்றுக்கருத்தை பிரசுரிப்பது இணையத்தில் பேஷன் ஆக இருப்பதால்...நானும்.ஆனால் பிரசுரிப்பதோடு நிறுத்தி கொள்வேன். Manny அடுத்த பிறவியில் பெண்ணாய் பிறந்து இந்த படத்தை ரசிக்க வேண்டும் என்றெல்லாம் வாழ்த்துவதாக இல்லை..

10 comments:

Rajalakshmi Pakkirisamy said...

.

Rajalakshmi Pakkirisamy said...

.

Sanjai Gandhi said...

மாற்றுக்கருத்தை பிரசுரிப்பது இணையத்தில் பேஷன் ஆக இருப்பதால்...நானும்.

hmmmm

கணேஷ் said...

மாற்றுக்கருத்தை பிரசுரிப்பது இணையத்தில் பேஷன் ஆக இருப்பதால்...நானும்.//

நானும் ஜெயிலுக்கு போறேன்
நானும் ஜெயிலுக்கு போறேன்
நானும் ஜெயிலுக்கு போறேன்

பாத்துக்கோங்க நானும் பெரிய்ய்ய்ய்ய ரவுடி :)

கணேஷ் said...

அடுத்த பிறவியில் பெண்ணாய் பிறந்து இந்த படத்தை ரசிக்க வேண்டும் என்றெல்லாம் வாழ்த்துவதாக இல்லை//

இத‌ன் மூலம் ராஜி அவ‌ர்க‌ளுக்கு நீங்க‌ள் விட்ட‌ ப‌ஞ்ச்(உள்குத்து) வ‌லிக்கிற‌து என‌ அவ‌ர்க‌ள் புல‌ம்பும் செய்தி CNN-IBN ல் ஸ்க்ரோல் ஓடுகிற‌து.

♥Manny♥ said...

:)

தாரணி பிரியா said...

:)

தக்குடு said...

//அதை விட கொடுமை...32 கோடியில ஹாலிவுட்-ல இதை எடுக்க முடியாதுன்னு ஒரு பேட்டி வேற... அவன் இதப் பார்த்தா காறித் துப்புவான்// ....:) LOL

கிருபாநந்தினி said...

என்னங்க ப்ரியா! மேன்னி சொன்னதெல்லாம் சரியாதான் இருக்கும் போலிருக்கே! இவர் அதுல சொல்லியிருக்குற காட்சிகளைப் பொதுவா ஆம்பிளைங்கதான் ரசிப்பாங்க. ஆனா, இவர் பெண்ணா பிறந்து ரசிக்கணும்னு சொல்றீங்களே! இந்த மாதிரி காட்சியை எல்லாமா பெண்கள் ரசிக்கிறாங்க? ஐயே! (நான் ஆ.ஒ. படம் பார்க்கலை!)

Sanjai Gandhi said...

தூங்கினது போதும்.. ஒரு போஸ்ட் போடுங்க ஆபிசர்..