நான் வசிக்கும் அபார்ட்மெண்டில் "அபார்ட்மென்ட் டே" கொண்டாடினார்கள். அதன் பொருட்டு நிறைய விளையாட்டு போட்டிகள். அதில் ஒன்று தான் டேபிள் டென்னிஸ் மிக்சட் டபுள்ஸ். என் கணவர் சற்று, சற்று என்ன சற்று... நன்றாகவே TT விளையாடுவார். நான் சுமார் ஏழு வருடங்களுக்கு முன், டெல்லியில் இருந்த போது, TT டேபிளை பார்த்து இருக்கிறேன். TT விளையாடுபவர்களுக்கு பந்து பொறுக்கி போட்டு இருக்கிறேன். விளையாடுபவர்கள் ரெஸ்ட் எடுக்கும் போது TT ராக்கெட்டை வைத்து "இப்படி தான் தட்டனுமா?" என்று தட்டி பார்த்து இருக்கிறேன். அவ்வளவே.அதனால் என் கணவர் என்னை பார்ட்னராக சேர்த்து கொள்ள ரொம்ப பயந்தார். பின்ன அவர் ஜெயிக்க வேண்டாமா? இங்க தான் விதியின் விளையாட்டு ஆரம்பமானது. அவருக்கு வேற பார்ட்னர் கிடைக்காமல் போனது. ஹோட்டலில் சாப்பாடு எல்லாம் தீர்ந்து போனால், உப்புமா போட்டு சமாளிப்பார்களாம். நான் உப்புமா ஆக்க பட்டேன். விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தில் என் கணவர் எனது பெயரை பார்ட்னராக போட்டு பெயர் கொடுத்து விட்டு வந்துட்டார்.
மொத்தம் நாலு அணிகள். Kathir/Priya, Ranjan/Nirja, Sudeer/Swarna, Mohit/Latha. Ranjan/Nirja தவிர மற்ற மூவரும் கணவன் மனைவியர்.அதனால் Ranjan/Nirja அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தோன்றியது.ஜனவரி இருபத்தாறு குடியரசு தினம் அன்று நாள்(!) குறித்தார்கள். எனக்கு அன்றிலிருந்து தூக்கம் போனது. விளையாடும் நேரத்தில் என் மானம் போக போகிறது என்பதற்கு மேலாக, எங்கள் அபார்ட்மென்ட் அழகிகள் மத்தியில் என் கணவருடைய இமேஜ் ஒரேடியா உயர்ந்துருமேன்னு தான் எனக்கு கவலை அதிகமா இருந்தது. "நான் காமெடி பீஸ் ஆகிட போறேனே" என்று அலுவலக நண்பர்களிடம் புலம்பினால், "பேசாம ரிடயர்ட் ஹர்ட் ஆயிடு" என்று ஐடியா குடுத்தார்கள்.
எனக்கும் TTக்கும் சம்பந்தம் கம்மி என்பதால் எங்கள் வீட்டில் ஒரே ஒரு TT ராக்கெட் தான் இருக்கும். சரி நானும் விளையாட வேண்டியதால் 25ஆம் தேதி இரவு போய், இன்னொரு ராக்கெட் வாங்கி வந்தார். "எதுக்கும் கீழ TT ரூமில் போய் practise பண்ணுங்க" - இது என் மாமியார். எனக்கு அழுகையும் சிரிப்பும் சேர்ந்து வந்தது. கீழே போனால், அங்கே Sudeer/Swarna ஜோடி படு தீவிர பயிற்சியில் ஈடு பட்டு கொண்டு இருந்தார்கள்.இப்போ எனக்கு பயம் வந்தது. "ரூல்ஸ்லாம் தெரியுமா?" - கேட்ட என் கணவரை பார்த்து பாவமா இருந்தது. இப்படி நவரசங்களில் நாலு ரசத்துடன் நானும் ஏதோ தட்டு தட்டு ன்னு practise பண்ணேன்.
"என்னோட சர்வீஸ் பாய்ண்ட்ஸ் எல்லாம் நமக்கு தான். நீ ஜஸ்ட் ball return
மட்டும் பண்ணிடு. சர்வீஸ் கரெக்டா போடு. பாத்துக்கலாம்"
என் அப்பா அடிக்கடி சொல்வார்கள். ஒரு நல்ல ஆசிரியருக்கு பெருமை முதல் மார்க் வாங்குபவனால் அல்ல...அவன் யார்கிட்ட படித்தாலும் வாங்குவான். பெயில் மார்க் வாங்கிட்டு இருக்கவனை பாஸ் பண்ண வைக்கிற மாதிரி சொல்லி தர்றது தான் உண்மையான பெருமை". என் கணவரும் ஒரு நல்ல ஆசிரியராக ஆக முயற்சி செய்து ஏதேதோ சொல்லி தந்தார்.
ஜனவரி 26.
"ஏங்க...அந்த ப்ளாக் டாப்சும், Grey ட்ராக் சூட்டும் போட்டுக்கட்டுமா?"
என் கணவர் என்னை பார்த்த "ரொம்ப முக்கியம்" பார்வையை எழுத்தில் கொண்டு வருவது கடினம் தான்.நான்கே அணிகள் என்பதால், knock out முறை வேண்டாம். "ரவுண்டு ராபின்" என்று முடிவானது. அதாவது ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணியுடனும் விளையாட வேண்டும். பாயிண்ட்ஸ் அடிப்படையில் வெற்றி நிர்ணயிக்க படும்.
முதல் ஆட்டம் Kathir/Priya Vs Mohit/Latha.
டாஸ் அவர்கள் ஜெயித்தார்கள். TT யில் டாஸ் போடுவது எப்படி என்று தெரியும் அல்லவா? டாஸ் போடுபவர் TT டேபிளுக்கு அடியில் இரு கைகளிலும் பந்தை மாற்றி மாற்றி வைத்து பின் ஏதாவது ஒரு கையில் பந்தை வைத்து கொண்டு டாஸ் கேட்பவரிடம் எந்த கையில் பந்து இருக்கிறது என்று கேட்பார். சரியாக சொன்னால், டாசில் ஜெயிச்சதா அர்த்தம். Latha serves Kathir என்றார்கள். பாவிகளா...அப்போ Mohit எனக்கு
serve பண்வார். லதாவினுடைய சர்வீஸ்கள் முடிந்து, என்னுடைய ஐந்து
சர்வீஸ்கள் முடிந்த நிலையில் நாங்கள் தான் முன்னிலையில் இருந்தோம். ஆனால் இப்போதல்லவா ஆரம்பிக்க போகிறது காமெடி.
Mohit serves Priya. பார்வையாளர்களில் இருந்த அந்த அணியின் ஆதரவாளர்கள் சற்று நிம்மதி மூச்சு விடடார்கள். முதல் ஒரு பந்து மிஸ் பண்ணிட்டேன். சுற்றி இருந்த கூட்டம் ஓஒ என்றது. சிலருக்கு உற்சாகம். சிலருக்கு கவலை. எல்லாத்துக்கும் ஓஒ தானே நம்ம ஊரில். அதுக்கு பிறகு அவருடைய நான்கு சர்வீஸ் களையும் நான் return பண்ணி விடுவேன் என்று நானே எதிர் பார்க்க வில்லை. அப்புறம் அந்த லதா எப்படி எதிர் பார்த்து இருக்க முடியும்? என்னுடைய return களை எல்லாம் 'ங்கே' என்று பார்த்து கொண்டு நின்றார்கள். பாவம். என் கணவரை திரும்பி பார்த்தால் அவர் அதற்கு மேல் அதிர்ச்சி ஆகி நிற்கிறார். என் மேல 'பாகம்பிரியாயாயாயா' ஏதும் வந்துடுச்சோன்னு அவருடைய பகுத்தறிவையும் மீறிய பயம் வந்துருக்கும் போல...இருக்காதா பின்ன...ஆக முதல் கேம் சுலபமாகவே ஜெயிச்சுட்டோம்.
அடுத்து Kathir/Priya Vs Sudeer/Swarna.கடவுள் எங்களை டாஸ் ஜெயிக்க
வைத்தார். டாஸ் போடுபவர் கேட்கவும், Sudeer "Ball in left hand" என்று சொல்லி, டாஸில் தோற்றார். Kathir serves Swarna.Swarna ஓரளவுக்கு நல்ல பிளேயர். முதல் நாள் பிராக்டிசில் என்னை செமத்தியாக ஓரங்கட்டி இருந்தார்கள்.. ஆனால் கதிரின் சர்வீஸ்களுக்கு தடுமாறினார்கள். சற்று அன்னியோன்னியமான ஆனால், சீரியசான தம்பதிகள். கணவர் சொதப்பும் போதெல்லாம் மனைவி 'ஆப்னே பில்குல் ப்ராக்டிஸ் நஹி கியா...'என்று கடிந்து கொண்டது எல்லாருக்கும் கேட்டது தற்செயலே.... முதல் கேம் அளவுக்கு சுலபம் இல்லன்னாலும் கூட, 21 -18 என்று டென்ஷன் இல்லாமல் ஜெயிச்சுட்டோம்.
அடுத்து Kathir/Priya Vs Ranjan/Nirja.இது வேலைக்காவாது என்ற நிலைமை. அந்த Nirja தான் womens singles இல் வெளுத்து வாங்கி ஜெயித்து இருந்தது. ரொம்ப சின்ன பெண்.போன முறை கடவுள் டாஸ் ஜெயிக்க வைச்சார். இந்த முறை டாஸ் ஜெயிக்க வைச்சது நான். டாஸ் கேட்கும் வாய்ப்பு எங்களுக்கு. என்னை கேட்க சொன்னார் கதிர். நம்ம strategic மூளையை உபயோகிச்சு, போன முறை வலது கையில் பந்து வைத்து இருந்தார். இந்த முறை மாற்றி தான் இருப்பார் என்ற நம்பிக்கையில் "Left " என்றேன்.இல்லாத ஸ்டைலுடன். "You won the toss" என்ற பதில் வந்தது. So Kathir serves Nirja என்றேன்."How mean" என்றது Nirja. ஸ்டைலாக."Lucky guys" சொன்னது Ranjan. 21-20 என்று மேட்ச் பாயிண்டில் வந்து கதிர் ஒரு சர்வீசில் கோட்டை விட்டு deuce ஆக்கினார். பெடரர் ஆடும் மேட்ச்களில் deuce என்றதும் ரெண்டு கண்ணையும் மூடி கொள்வேன். Advantage-Federar என்ற சத்தம் வந்தால் ஒரு கண்ணை மட்டும் திறந்து லேசா பாப்பேன். ஆனா இங்க deuceக்கு கண்ணை மூடினா என்னாவது...நம்ப மாட்டீங்க...நாலு முறை deuce ஆனது.
நாலாவது advantage - எங்களுக்கு வந்த போது என்னுடைய சர்வீஸ்.
"Focus!A proper service" - கதிர் அழுத்தமாக சொன்னதும், கை லேசா நடுங்கியது. Serve பண்ணிவிட்டு கண்ணை மூடிக்கொண்டேன். "Match won" சத்தமும் கைதட்டலும். அட மறுபடியுமா ஜெயிச்சுட்டோம். பவுல் அவுட்டில் wide போட்ட Afridi மாதிரி போயும் போயும் என்னோட சர்வீசை, தவற விட்டிருந்தார் Ranjan. மேட்ச் பாயிண்ட் எடுத்தது சாட்சாத் உப்புமாவாகிய நான். என்ன செய்வது, சில நேரங்களில் உப்புமாவும் ருசியாக இருந்து விடுகிறது.
10 comments:
//எங்கள் அபார்ட்மென்ட் அழகிகள் மத்தியில் என் கணவருடைய இமேஜ் ஒரேடியா உயர்ந்துருமேன்னு தான் எனக்கு கவலை அதிகமா இருந்தது.//
ஒரு நல்லது நடக்க விட மாட்டீங்களே
// கை லேசா நடுங்கியது.//
வயசானா இருக்குறது தானே
//பவுல் அவுட்டில் wide போட்ட Afridi மாதிரி//
aaha
//"பேசாம ரிடயர்ட் ஹர்ட் ஆயிடு" என்று ஐடியா குடுத்தார்கள். //
உங்க கிட்ட இப்படி ஒரு பதிவா
மாட்டிகிட்டு அவஸ்தை படுறதுக்கு அவங்க கொடுத்துருக்கலாம்.
ம்ம் இது உப்புமா இல்லங்கோ..
சத்துமாவு..
பாயின்ட் சிஸ்டம் 11 க்கு மாத்தி ரொம்ப காலம் ஆச்சே!! இன்னும் 21 பாயின்ட் க்கு ஆடிட்டு இருக்கீங்களா?
//எங்கள் அபார்ட்மென்ட் அழகிகள் மத்தியில் என் கணவருடைய இமேஜ் ஒரேடியா உயர்ந்துருமேன்னு தான் எனக்கு கவலை அதிகமா இருந்தது.//
யானை தன்னோட தலைல மண்ண வாரி போட்க்கறத்து இப்படி தானா? கதிர்-க்கு இப்போ எத்தனை கேர்ள் பிரன்ட்?? வேலன்டைன் டே வருது!! கொஞ்சம் ஜாக்கிரதை!!
....
....
ஏதோ என்னால முடிஞ்சா கலகம்!!
adiye..match adinadhu, win pannadhu ellam irukkatum....kadaisiya adhu enna Federer pic ha pottu irukke.... Ennala Mudiyala....
Congrats priya!! kalakitteenga??
Ooru pakkam vantha treat vaippeengalla?? ;)
Nice Dream and gud narration...
//adiye..match adinadhu, win pannadhu ellam irukkatum....kadaisiya adhu enna Federer pic ha pottu irukke.... Ennala Mudiyala....//
விடுங்க. லேபிள்ல புனைவு அப்படின்னு போடுறதுக்கு பதிலா
சுய புராணம் அப்படின்னு தப்பா போட்டுட்டாங்க
சூப்பர்ங்க, செம பரபரப்பா எழுதியிருக்கீங்க! ச்சும்மா சென்னை 28 க்ளைமேக்ஸ் பாத்த மாதிரி இருந்தது இந்த பதிவு!
நீங்க எத்தனை சிக்ஸர் அடிச்சீங்கன்னு சொல்லவேயில்லியே...:))
//சூப்பர்ங்க, செம பரபரப்பா எழுதியிருக்கீங்க! ச்சும்மா சென்னை 28 க்ளைமேக்ஸ் பாத்த மாதிரி இருந்தது இந்த பதிவு!
நீங்க எத்தனை சிக்ஸர் அடிச்சீங்கன்னு சொல்லவேயில்லியே...:))//
Ha Ha Ha :-)
More than appreciating your victory , I want to appreciate your narration.
Great job dee! keep blogging...
Post a Comment