Sunday 17 January 2010

ஆயிரத்தில் ஒருவன் - எனது பார்வையில்


படம் ஆரம்பிக்கும் முன்னே, ஒரு கார்டு போடுகிறார்கள். "படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே" என்று. ஆனால், படத்தின் பின்பாதி, சில நிகழ்வுகளை நினைவு படுத்துவதை மறுப்பதற்கில்லை.பின்பாதி கதையை சொல்லுவதற்கு,முன்பாதியில் ஒரு fiction பயணத்தை இணைத்து இருக்கிறார்கள். ரசிக்கும் வகையில், தமிழ் சினிமா ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் வகையில், 'தமிழிலாவது நல்ல சினிமா வர்றதாவது' என்று வெட்டிபேச்சு பேசறவங்க வாயடைக்கும் வகையில்.

ஆண்ட்ரியா,ரீமா,கார்த்தி and team ஒரு adventure searchஇல் ஈடுபடுகிறார்கள். ஆண்ட்ரியா காணாமல் போன அப்பாவை தேடி போறார். ரீமாவிற்கு ஒரு hidden mission . கார்த்தியின் பயணத்திலும் அவரையும் அறியாமல் ஒரு நோக்கம் இருக்கிறது. பயணத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் தான் முற்பாதி. பிற்பாதியில் தலை முறை தலை முறையாக ஒரு தூதுவனை எதிர்நோக்கி, வறுமையில் வாடி,தாய்மண்ணை சேரும் ஏக்கத்துடன் ஒரு சமூகம், பார்த்திபன் தலைமையில். அவர்களின் ஏக்கம் நிறைவேறியதா?
ஆண்ட்ரியா,ரீமா,கார்த்தி மூவரின் தேடல் முழுமை அடைகிறதா? என்பது தான் கதை.

ரீமா: அவருடைய skin tone, sleekness,style என்று இந்த பாத்திரத்துக்கு வெகு பொருத்தம். 'நல்ல இயக்குனர் கையில் கிடைத்தால் எப்படி தூள் கெளப்பறேன் பாருங்க' என்று காட்டுகிறார். ஆனால் வாயசைப்பு சகிக்க வில்லை. அதிலும் "ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமாவது தெரியுமா?" என்று பார்த்திபனை கேட்கும் போது 'பாவமே' என்று இருக்கிறது. பின்னணி குரல் அருமையான பேஸ் வாய்ஸ். யாருடா இது என்று கடைசி வரை வெயிட் பண்ணி பார்த்தேன். ஐஸ்வர்யா தனுஷ்.அட!

ஆண்ட்ரியா: நிறைய கணவர்களுக்கு காய்ச்சலையும், மனைவிகளுக்கு கடுப்பையும் வரவழைப்பது இவரது சமீபத்திய சாதனை. நல்லா தான் இருக்கார். ஆனால் கடைசியில் இவரது பாத்திரத்தை என்ன பண்ணுவது என்று தெரியாமல் தேமே ன்னு முழிச்சுட்டு நிக்க வைத்து இருக்கிறார்கள்.

கார்த்தி: ஆர்யா மூணு வருஷம் 'நான் கடவுள்'க்கு காத்து இருந்ததில் தலைகீழாக அமர்ந்து யோகா பண்றதையாவது கத்துகிட்டார். ஆனால் நீங்க இந்த படத்துல பண்ற பொறுக்கிதனத்தை எல்லாம் தான் பருத்தி வீரன்லையே பண்ணிட்டீங்களே? Nothing new, for the 3 years wait.ஆனால் இவர் படத்துல வர்ற சீன்ல எல்லாமே தியேட்டர்ல எல்லாரும் சந்தோஷ படறாங்க. அமர்க்களம் பண்றார். அட்லீஸ்ட் அடுத்த படத்துலயாவது 'இந்த அரைக்கால் ட்ரவுசர் போட்டுட்டு, சென்சார்க்கு வேலை வைக்குற வசனம்லாம் பேச மாட்டேன்னு' ஸ்ட்ரிக்டா சொல்லிட்டு, உங்க அண்ணன் மாதிரி loverboy ஆகவும்.

பார்த்திபன்: எல்லா படத்துலயும் பேசிக்கிட்டே இருப்பார். இதுல பேச்சு ரொம்ப கம்மி. கண்கள் மட்டுமே செய்ய வேண்டிய எல்லாத்தையும் செய்து விடுகின்றன. Very adequate.

படத்தின் கடைசி இருபது நிமிடம் யாருமே பேசுவதில்லை. GV பிரகாஷ் தவிர. கம்பன் வீட்டு கட்டுதறியே கவி பாடும். அப்டி இருக்கப்போ, இவர் இசைப்புயல் வீட்டு பிள்ளை. Lived upto his genes.பின்னணி இசைக்கே மொத்த மார்க் கொடுக்கலாம். பாட்டுக்கு எக்ஸ்ட்ரா மார்க். "அதோ அந்த பறவை போல" ரீமிக்ஸ் பண்ணாமல் இருப்பது சமர்த்து. ஒன் மேல ஆசை தான்...துள்ளல். "தாய் தின்ற மண்" பாடல் வரிகளை கேட்டால் கனம்.

காமிராவிற்கு வேலை அதிகம். ரம்மியமாக இருக்கிறது.இந்த படத்தை விசிடியில் பார்ப்பவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

படத்தில் வன்முறை நிறைய. இந்நேரத்திற்கு வலைப்பதிவு ஆண்கள் "இந்த படத்தை பெண்கள் பார்க்காதீர்கள்" என்று அறிவுரை எழுதி இருப்பார்கள். பெண்கள் என்று இல்லை, யாருக்குமே சற்று அளவு மீறிய வன்முறை தான். கொத்து கொத்தாக பிணங்கள் சாய்வது, கார்த்தியின் நண்பர் கழுத்துறுபடுவது, பெண்களை கொடுமைபடுத்துவது,பார்த்திபன் சமூகத்தின் வறுமை என்று நிறைய சீன்கள். ஆனால், எதிலும் ஒரு exaggeration இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ரீமாசென் எதற்கு இவ்வளவு முட்டி மோதி இந்த தேடலை மேற்கொள்கிறார் என்பதற்கான விடை ஒரு நல்ல ட்விஸ்ட். ஆனால் அதை சொன்ன விதத்தில் அழுத்தம் இல்லை. மேலும் பார்த்திபனுக்கு உண்மை தெரியும் போது தான், பார்வையாளர்களுக்கும் தெரியற மாதிரி சஸ்பென்சை சற்று தாமதப்படுத்தி இருக்கவேண்டும் என்று தோன்றியது.

அவதார் அள்ளி அள்ளி கல்லா கட்டுவதை பார்த்து எனக்கு ஒரு ஆசை. இந்த படத்தில் கூட, ஆயிரக்கணக்கில் அம்புகள் வந்து விழுவது, பாம்புகள், புதை மணல் காட்சி, குண்டு அரக்கன் பெரிய கல்லை சுழற்றி தாக்குவது, போர்க்காட்சிகள் என்று 3D க்கு scope இருக்கிறது. 3D யில் எடுத்து இருக்கலாம்.அதிகப்படி ஆசையோ?

அதிலும் க்ளைமாக்சுக்கு முன் வரும் போர்க்காட்சிகள் அபாரம்,
வீரர்கள் அனைவரும் ராஜாவிற்கு சுற்றி அரணாக நின்று கொண்டு சிரித்து கொண்டே மடிவதும்,மண்ணுக்குள் மறைந்து வந்து தாக்குவதும் மெய்சிலிர்க்க வைக்கும்.ஆண்ட்ரியா ஓலைச்சுவடியை வைத்து trap களை விடுவிப்பதும்(அதிலும் அந்த நடராஜர் நிழல்!!!), சோழர்கள் ஓவியங்களை வைத்து நடப்பதை கணிப்பதும் very sweet.

ஒரு depressed ஹீரோ, அவனுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் ஹீரோயின், சில வியாபார நோக்க காட்சிகள்,மெலோ டிராமா, ஆண்டி-கிளைமாக்ஸ், என்று காதல் கொண்டேன், 7G இரண்டிலும் கிடைத்த "செல்வராகவன்தனம்" முத்திரையை அழகாக உடைத்தது "ஆடவாரி மாட்டலுக்கு(நம்ம யாரடி நீ மோகினி)" a complete family entertainer. ஆயிரத்தில் ஒருவனில் "மொத்த தமிழ் சினிமா தனத்தையே" தகர்த்து விட்ட இவரது முயற்சிக்கும், இவருடைய டீமின் உழைப்பிற்கும் ஆக வேண்டியாவது, இந்த படம் ஓட வேண்டும். இல்லன்னா, இந்த மாதிரி முயற்சிகளுக்கு பைனான்ஸ் பண்ண யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் நஷ்டம் நமக்கு தான்.

தமிழ் சினிமா சரி தவறுகளில் இருந்து விடுவித்துக்கொண்டு ஒரு சரியான கண்ணோட்டத்தில் இந்த படத்தை பார்க்க வேண்டும்.

My verdict: A WoW movie.

16 comments:

Rajalakshmi Pakkirisamy said...

ஆயிரத்தில் ஒருவன் - 100th Post

Sabarinathan Arthanari said...

:)

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி ப்ரியா.

இன்னிக்கு தான் படம் பார்க்க போறேன்.

Mercy said...

Pri,

Wow! For ur writeup first! I wanted to see that! Even my friends here in office said the same! Let me see when I get a chance t view this! :) :(

Santhappanசாந்தப்பன் said...

நல்ல விமர்சனம். ஜி.வி. பிரகாஷ் குறித்து சொன்ன உவமை அற்புதம்.

பெண்க‌ள் விரும்ப‌மாட்டார்க‌ள் என்று சில‌ர் எழுதியிருந்தை படித்து இருந்த‌ வ‌ருத்த‌த்தை தூள் தூளாக்கி விட்டீர்க‌ள்.

நிச்ச‌ய‌ம் ப‌ட‌ம் வெற்றி பெற‌ வேண்டும்!

Vijay said...

Michael Crichton எழுதிய Timeline புதினத்தை தழுவிய கதைன்னு நினைக்கிறேன். அவர் பார்த்தால், என் கதையைத் திருடிட்டீங்களேன்னு நினைத்து வருந்துவார் :)

எல்லாம் சரி தான், படத்தின் கதைக் கறு என்னன்னு சொல்லவே இல்லியே :)

Jeeva Subramaniam said...

Superb Ka, Unmayalume oru sirantha padam nnu sollanum...
Intha padam parthuttu vanthu romala yellorum itha pathiye pesinom appa antha pir paguthi kadchikku adithalamana murpaguthi kadchi pattri oruoru tharum oru oru kadhai sonnaga, Itha Selva sariya sollama vittutarunnu solluratha illa namamala padatha analyse panna vachuttarunnu solluratha theriyala...
Appuram oru visayam...
Neengalavathu padatha muluvathum parthingala...
Nan pona theater la padu pavi payaluga 30 nimida padatha vettitanuga... 2.35 nimisam than padam pochu...

ப்ரியா கதிரவன் said...

Thanks. Even I read of the 20 mins trimming. When I watched the movie started at 12:24pm and ended at 3:35pm with a 15 mins break in between. I think its the full movie without any trimming.

Jeeva Subramaniam said...

Sila theaterla mattum thanka intha mathiri panirukkanga...
Nan saturday parthen hosur la...
Same day chennai la full padam parthirukkanga...

கிருபாநந்தினி said...

இந்தப் படம் பத்தி மத்த பதிவர்ங்க எழுதியிருந்த விமர்சனங்களையும் படிச்சேன்க்கா. எல்லாத்தையும்விட உங்க விமர்சனம்தான் நச்சுனு இருந்த மாதிரி தோணுச்சு. மத்தவங்க கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லைன்னு பின்னூட்டம் போட்டிருக்கேன்.

*Kathir* said...

enakku vandhadhellam negative feedback dhaan.. but unga pecha nambi padam paaka poren :)

Surendera Mohan said...

very nice review akka... unga comment paduchi padam pakka asaya iruku...

Anonymous said...

ப்ரியா, நல்ல விமர்சனம் :)

அபி அப்பா said...

பிரியா!

நான் ஆயிரத்தில் ஒருவன் பார்க்கும் முன்னே சிலரது விமர்சனம் பார்த்து விட ஆசை. அதிலே கேபிள்சங்க, உண்மை தமிழன், பரிசல், ப்ரியா.....

கேபிள் என்னவோ சப்பை கட்டு கட்டி விட்டார். உ.த போடலை. பரிசல் எனக்கு சுவாரஸ்யமா எழுதலை.

ஆனா நான் நேத்து படம் பார்த்து விட்டேன். ஆனா உங்க விமர்சனம் இப்ப பார்த்தேன்.

ஒரே வார்த்தை "அருமை"

kanagu said...

padam enakkum pudichirundhudu... unmaiyilaye paarata pada vendiya muyarchi... adutha muyarchigal irukkum nu ethir paarpom :) :)

G.V.Prakash pinnani isai la sothappitar-nu than sollanum.. athuvum second half-la romba erachala irundhud.. padalgal arumai..

ungaloda 3 mistake if my life post padichen.. sema comedy :D :D

Naadodigal said...

நல்ல விமர்சனம். கூடிய விரைவில் பார்த்துவிட்டு நானும் எழுத முயற்சிக்கறேன்.