மூன்று பேர் கல்லூரியில் சந்திக்கிறார்கள். அதில் ஒருத்தனுக்கு மாத்திரம் செம attitude . அவன் மத்த ரெண்டு பேருக்கும் attitude சொல்லி தரது மட்டுமில்லாமல், professor , அவரோட பொண்ணுன்னு எல்லாருக்கும் சொல்லி தரான். Graduationக்கு அப்பறம் காணாம போயிடறான். மத்த ரெண்டு பேரும் அவன தேடறாங்க, ஏன் காணாம போனான்? கடைசில கிடைச்சானா? ஹீரோவும் ஹீரோயினும் கிஸ் பண்ணிக்கறப்போ, மூக்கு நடுல தொந்தரவா இருக்குமா? இதெல்லாம் தான் கதை.
அமீர்கான்: "Amirkhan,KamalHasan, Mohanlal - these three rule the Indian Cinema" - கதிரோட நண்பர் ஒருத்தர் அடிக்கடி இத சொல்வார். 44 வயசாகுது. காலேஜ் first இயர் பையனா அறிமுகம் ஆகறார்.கொஞ்சமும் சந்தேகம் வரல.
"Salt water is the best conductor of electricity"ன்னு கத்து தரார். அப்பறம் என்னென்னமோ பண்றார். கொஞ்ச நாள் முன்னாடி இதே காரணத்துக்காக தான் ஜெயம் ரவிய திட்டினோம். இங்க Amir இன்ஜினியரிங் மாணவர்.அதுனால கொஞ்சம் மன்னிக்கலாம். ஆனாலும் பிரசவத்துக்கு வேண்டிய வாக்குவம் பண்றதும், ஒரு படி மேல போயி பிரசவமே பார்க்குறதும்(நல்ல வேளை
C-section பண்ண வைக்கலை)...too much drama.கடந்த பன்னிரண்டு வருடங்களாக தான் ஹிந்தி படம் பார்க்குறேன். "தில் சாஹ்த்தா ஹை" மாதிரி இன்னொரு படம் பார்க்கலை நான் இன்னும். ஆகாஷ் மல்ஹோத்ராவாக வருவார் அமீர். அந்த படத்துக்கு பிறகு அமீர்கான் என்பதற்கான அளவுகோல் ரொம்ப உயர்ந்து விட்டது எனக்கு. Sorry Rancho, you were noway close to Aakash Malhotra.
கரீனா: இவர் இண்டஸ்ட்ரியில் அறிமுகம் ஆன சமயத்தில் "எனக்கு கரீனாவை பிடிக்கும்" என்று சொன்னால் , நண்பர்கள் சற்று ஏளனமாக பார்ப்பார்கள்.அம்மணி பாருங்க, ஜீரோ சைஸ், சோனி வாயோ என்று கலக்கி கொண்டு இருக்கிறார். அவருடைய பாத்திரத்தை நன்றாகவே செய்து இருக்கிறார்.
ஐயோ மாதவா? அலைபாயுதே படத்துல அவ்ளோ அழகா இருந்தீங்களே....கல்லூரி பையனாக வரப்போ கொஞ்சம் வயசான ஆள் மாதிரி தெரியறார்.படம் முழுக்க அமீர்கான் செய்யும் ஒவ்வொன்றையும் ரசிப்பது தான் படத்தில் இவரது முக்கியமான வேலை... மாதவன் எப்படிப்பட்ட நடிகர்ன்னு நமக்கு நல்லாவே தெரியும். மறந்தவங்க நளதமயந்தி, அன்பேசிவம் ரெண்டையும் ஒரு தடவ பாருங்க. இதிலும் தன வேலைய குறை இல்லாம செய்யறார்.
ஷர்மான் ஜோஷி: முதல் சீன்ல "ராஞ்சோ எங்க இருக்கான்னு எனக்கு தெரியும்" அப்டின்னு சதுர் சொல்றப்போ இவரோட முகத்துல ஒரு
expression வரும் பாருங்க, ஒரு பானை சோற்றுக்கு...இந்த ஒன்னே பதம்.
போமன் இராணி: முன்னாபாயில் இவர் தான் மெடிக்கல் காலேஜ் டீன். தமிழில் பிரகாஜ் ராஜ் செய்த ரோல். இதில் ஸ்ட்ரிக்ட் புரபசர் ரோல். ஹேர் ஸ்டைலும், பாஷையும் சற்று மாற்றி முன்னாபாய் மாதிரி இல்லாமல் இருக்க முயற்சி பண்ணிருக்காங்க. ஆனாலும் நமக்கு அது ஞாபகம் வந்து தொலைக்கிறது. அப்பறம் ஒன்னு கவனிச்சேன்.படத்துல இவரு ambidextrous.
சதுர் ராமலிங்கம்: இது ஒரு மனப்பாட கேஸ். அமீர்கான் கேரக்டரின் அருமை பெருமைய ஆடியன்சுக்கு புரிய வைக்குறதுக்குன்னே வரார். கடைசி வரை இவர் இவராகவே தான் இருப்பார் படத்தில்.அதாவது கடைசி சீன ல "துசி கிரேட் ஹோ" ன்னு ஒத்துக்கற வரைக்கும் கூட இவரோட கேரக்டர் originality மாறாம இருக்கும்.
Note: இவர் தமிழன்னு வெளிப்படையா எங்கயும் சொல்லலைன்னாலும், பேரை பார்த்தாலே தெரியலையா? தமிழ் ரீமேக் ரைட்ஸ் வாங்கறவங்க, மறக்காம இந்த கேரக்டரில் ஒரு ஹிந்திக்காரனை போடுங்கப்பா. மனசு ஆறும்.
இடைவேளை வரை அமீர்கானை ஹீரோவாக காட்டற முயற்சிகளில் ஓகேவாக போகிற படத்தில் இண்டர்மிசன் கார்டுக்கு முன்னால் வரும்
சஸ்பென்ஸ் தூள். அது தான் நம்மை நிமிர்ந்து உக்கார வைக்கிறது. அதே மாதிரி கடைசில வர்ற Wangda ட்விஸ்டும் எனக்கு எதிர்பாராதது தான். விசில் அடிக்க வைத்த ட்விஸ்ட்.
மில்லிமீட்டர் பையன் சென்டிமீட்டர் ஆறது, all is well க்கு கொழந்தை அழுவுறது, மாதவன் அப்பா அம்மாவை convince பண்றது, நண்பர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் தோள் கொடுக்கறதுன்னு இளகின மனசுக்காரங்களின் கர்சீபுக்கு வேலை அதிகம்.
"சமத்கார்" "பலாத்கார்" ஆக மாறி ஆசிரியர் தின பேச்சு சதுருக்கு சொதப்புவதும், கரீனாவோட prize tag wouldbeயை, டெமோ
பண்ணுவது என்று நிறைய காட்சிகள் நல்ல நகைச்சுவை.
படத்துல பாட்டு வந்தப்போ பார்க்க கேட்க நல்லாவே இருந்தது.. ஆனா எந்த ட்யூனும் இப்போ ஞாபகம் இல்லை. லடாக், சிம்லா drive way காமிக்கறப்போ குளிர்ச்சியா இருக்கு.
இப்போ எல்லாரும் பரபரப்பா பேசிட்டு இருக்குற ஒரு விஷயம்: இது தமிழ்ல ரீமேக் ஆகுமான்னு தான்.கஜினி ஹிந்திக்கு போலாம். சஞ்சய் ராமசாமி, சஞ்சய் சிங்கானியா ஆகலாம். அசினையும் அங்க அள்ளிட்டு போய்டலாம். 3 idiots தமிழ்ல வரக்கூடாதா?
My verdict: A twisty,thorough entertainer.
The 2018 US Concert Tour and lessons learned
4 years ago
17 comments:
இதோ வந்து comment போடுறேன்
அதான் முழுசா சொல்லிட்டீங்களே.. இனிமே தமிழ்ல வேற வரனுமா?
//, professor , அவரோட பொண்ணுன்னு எல்லாருக்கும் சொல்லி தரான். //
என்னாது அந்த பொண்ணுக்கு ஆட்டிட்யூட் சொல்லித் தரானா? வெளங்காத பய.. ஸ்டூடன்ஸ எப்டி எல்லாம் அவமானப் படுத்தி இருக்கான்..
//Graduationக்கு அப்பறம் காணாம போயிடறான். //
பின்ன, நம்மள மாதிரி அரியர்ஸ் வச்சவன் தான் காலேஜையே சுத்தி சுத்தி வருவான்.. ஒழுங்கா படிச்சவன் மின்னபோலிஸ் மாதிரி எங்கனா போய் இருப்பான்.
//ஹீரோவும் ஹீரோயினும் கிஸ் பண்ணிக்கறப்போ, மூக்கு நடுல தொந்தரவா இருக்குமா? இதெல்லாம் தான் கதை.//
என்னா ஒரு ஆராய்ச்சிடா சாமி.. அம்மனி , இதுல ஆராய்ய்சி பண்ணி டாக்டர்ர்ர்ரு பட்டம் உடுங்க.
//"Amirkhan,KamalHasan, Mohanlal - these three rule the Indian Cinema" - கதிரோட நண்பர் ஒருத்தர் அடிக்கடி இத சொல்வார். //
ஏன் அடிக்கடி சொல்றார்? வேற வேலை எதும் இல்லையா? இல்ல.. உங்களுக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதுன்னு அவருக்கும் தெரிஞ்சிபோச்சா?
//Salt water is the best conductor of electricity"ன்னு கத்து தரார்//
எலெக்ட்ரிசிட்டி எதும் பஸ் பேரா? சால்ட்வாட்டர்னு ஒரு கண்டக்டர் பேரா?
//ஒரு படி மேல போயி பிரசவமே பார்க்குறதும்(நல்ல வேளை
C-section பண்ண வைக்கலை)...too much drama.//
தோடா.. நாங்கள்லாம் மொபைல் டார்ச் அடிச்சி ஆபரேஷனே செய்றவங்க.. இதெல்லாம் பெரிய மேட்டராம்..
//கடந்த பன்னிரண்டு வருடங்களாக தான் ஹிந்தி படம் பார்க்குறேன்.//
26வயசுல கல்யாணம் ஆனதுக்கப்புறம்னு சொல்லுங்க..
// "தில் சாஹ்த்தா ஹை" மாதிரி இன்னொரு படம் பார்க்கலை நான் இன்னும். //
forwarded to Dr.Vijay MBMBBS
Nice write up. You are gifted with art of smart narration. Got introduced to your blog couple of days back and DAMN!!! Read all your olders posts since...
Nice to hear you were in sweden..I was studying there for couple of years ..
***
Nice write up. You are gifted with art of smart narration
***
completely agree.
Normal average masala entertainer :)- kareena was good !
You are the first person to write exactly whatever I thought about this movie. Most of the folks written that the movie hero is Story, but clearly Aamir Khan has been projected as Hero throughout the movie.
Akkaraikku ikkarai patchai :-(
-Arasu
திருமதி பிரியா பெங்களுர்ல இந்த படத்தை எந்த தியேட்டர்ல பார்த்தீங்க????
பிரபு, சத்தியராஜ், சரத்குமார் தமிழ் ரீமேக்கிற்கு பொருத்தமாக இருப்பார்கள்.
அங்க மட்டும் வயசானவங்க நடிக்கலாம், இங்க மட்டும் சூர்யா,தனுஷ் நடிக்கனுமா என்னாங்க நியாயம்
//
திருமதி பிரியா பெங்களுர்ல இந்த படத்தை எந்த தியேட்டர்ல பார்த்தீங்க????
//
பால்கனியா, ஃபர்ஸ்ட் கிளாசான்னும் சொல்லிடுங்க இல்லைனா எங்களுக்கு தலையே வெடிச்சிடும்
கலக்குறீங்க சஞ்சய்.
கருநாக்குங்க உங்களுக்கு...
சொல்லி வாய மூடல! அதுக்குள்ள ரீமேக்னு நியூஸ்....
http://kollywoodmoviereview.blogspot.com/2010/01/3-idiots-to-be-remaked-in-tamil.html
:)
Pri,
One of my colleague asked me to see this movie and his verdict is totally different. From the delivery scene to the end of the movie. He was very found of the movie and told me its a must watch one specially for the ppl who are in parenthood like me (us) ;-)
@ Sanjay,
இனி Synapse பக்கம் வராதீங்க சார். பாவம் ப்ரியா Synapse அ க்ளோஸ் செஞ்சுட போறாங்க. உங்க அட்டகாசம் தாங்கல.
@ Sara Suresh,
//கலக்குறீங்க சஞ்சய்.//
நல்லா இருங்கப்பு
சரிங்க ராஜலக்ஷ்மி மேடம்.
நானும் படம் பாத்து பதிவு எழுதியிருக்கேன். ஒவ்வொரு கேரக்டரா உங்க பதிவு சூப்பர்
3 idiot படம் 5 point omeone நாவல்ல இருந்து எடுக்கப்பட்டதுன்னு சொல்றாங்களே அது உண்மையா?
Post a Comment