இன்னைக்கு 'synapse' க்கு என்ன ராசிபலன்னு பார்க்கணும்.
இட்லிவடை,ச.ந.கண்ணன் ன்னு எல்லாரும் link பண்றாங்க. திட்டுறாங்களோ, பாராட்டுறாங்களோ, அதுக்கெல்லாம் நம்ம எங்க கவலைப்பட்டோம்!
பொதுவாவே இந்த தொடர்பதிவுகள் பக்கம் போறது இல்ல நான். ஆனால், இந்த முறை "நீங்க இன்னைக்கு night க்குள்ள இந்த பதிவை பாஸ் பண்ணலைன்னா, இன்னொரு பல்லு புடுங்கும் நிலைமை வரட்டும்' என்று கண்ணன் சபித்ததால் (ரொம்ப பயந்துட்டேங்ண்ணா!!!)...
இதுக்கு முன்னாடி தொடர்பதிவுகள்ல கோர்த்து விட்டவங்க மன்னிச்சுக்கோங்க. 'அப்போல்லாம் எழுதலை, இப்போ மட்டும் என்ன' ன்னு சண்டைக்கு வராதீங்க. என்ன பண்ணுறது, சில பேரு ரொம்ப மெரட்டி வேலை வாங்குறாங்க. :-(
Violence works at times.
உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
இந்திராகாந்தியோட பேரு இந்திரா ப்ரியதர்ஷினி. எங்கப்பாவுக்கு இந்த பேரு புடிச்சுதா, இல்ல அவங்களை புடிக்குமா தெரியலை. எனக்கு ப்ரியதர்ஷினின்னு வெச்சு, அப்றோம் அது சுருங்கி ப்ரியா ஆயிடுச்சு.
உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
பிடிக்குமே.
அய்யோ மொத கேள்விக்கு பதில் சொல்றதுக்குள்ளயே நாக்கு தள்ளுது. இன்னும் எத்தனை இருக்கோ தெரியலை...
கடைசியாக அழுதது எப்போது?
இப்போ தான் அழுகை வருது.
உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
ரொம்ப.
பிடித்த மதிய உணவு?
பொதுவாவே உணவுன்னாலே ரொம்ப பிடிக்கும். இதுல மதிய உணவு என்ன, மாலை உணவு என்ன?
நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
கேள்வியே புரியலை. வேறு யாரோடயாவது தானே நட்பு வெக்க முடியும்? நம்ம கூடவேவா வெக்க முடியும்?
கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
கடல்ல குளிச்சது இல்ல.அருவியில் குளித்தது பிடித்தது. கூட்டமில்லாத போது.
ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
அது யாரை பாக்குறேங்கறதை பொறுத்தது. I mean, அர்ஜுனை பாத்தா எங்கயாவது விழுந்து காயம் பண்ணி வெச்சுருக்கான்னு ...
கதிரை பாத்தா, ஏதாவது செஞ்சுட்டு திருட்டு முழி முழிக்குறாரான்னு ...etc etc.
உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
புடிச்ச விஷயம்: எனக்கு எது தெரியும் எது தெரியாது என்ற பலம், பலவீனங்களை உணர்ந்து இருப்பது, புடிக்காத விஷயம்: தெரியாத விஷயங்களை தெரிஞ்சுக்கணும் ன்னு ஆர்வம் இல்லாமல், தெரிஞ்சதை வெச்சே குப்பை கொட்ட முயற்சிப்பது.
இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
எங்கப்பா.
நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
யாரு பாவத்தையும் கொட்டிக்க வேணாம்ன்னு நெனச்சேன். இருந்தாலும் ஏதோ ஒரு முயற்சியின் பொருட்டு இந்த தொடர்பதிவு ஆரம்பித்து இருக்கும் அதை ஏன் உடைப்பானேன் என்று...சம்பந்தப்பட்டவர்கள் சாபம் கொடுப்பதானால் கண்ணனுக்கு போய் சேரட்டும்.
ராஜி,Maddy,ரிதன்யா,Truth: கண்டிப்பாக எழுதுவார்கள் என்று நம்புவதால்.
இவங்க கிட்ட புடிச்ச விஷயம் சொல்லணுமா? ஏற்கனவே இங்க சொல்லிருக்கேன்.
உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
அபியும் நானும்
பிடித்த விளையாட்டு?
கண்டிப்பாக கிரிக்கெட் அல்ல.
கண்ணாடி அணிபவரா?
ரொம்ப முக்கியம். இருந்தாலும் தொடர்பதிவுல போட்டு தாக்குறீங்க. முடி.....ய....ல....
எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
இங்க சொல்லிருக்கேன்.
கடைசியாகப் பார்த்த படம்?
அருந்ததீ. இட்லிவடை போட்ட மார்க் பாத்து, அடிச்சு பிடிச்சு படம் பாத்து ஏமாந்தேன். ஆனா அனுஷ்கா சூப்பர்.
என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
P&I guide.இருங்க இத எங்கயும் தேடாதீங்க, எங்க கம்பெனி propriatory book. ஒரு installation பண்ணிக்கிட்டு இருக்கேன் இத படிச்சு. விகடன் குமுதத்துக்கே நேரம் இல்லையாம். இதுல என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?.....என் விதி.
வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். ஏன் ஏன் இப்டில்லாம்?
சரி கொஞ்சம் எமோஷனலா ஒரு பதில் சொல்றேன். அம்மா வீட்டை விட்டு சென்ற அதிக தொலைவு புருஷன் வீடு. சரி சரி, விடுங்க, நீங்க இப்டில்லாம் கேள்வி கேட்டா வேற எப்டி பதில் சொல்லணும்??
உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
தெரியலையே.
உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
'ஏற்றுக்கொள்ள முடியாத' அப்டின்னு எல்லாம் இல்ல.ஏன்னா நானே ரொம்ப நல்லவ இல்ல.ஆனா சிலர் ரொம்ப 'பிட்டு' போடறப்போ மனசுக்குள்ள சிரிச்சுப்பேன்.
உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
அம்மா வீட்டுக்கு போவதே அப்படி ஆகிவிட்டதால், இப்போதைக்கு புடிச்ச சுற்றுலா தலம் அம்மா வீடு தான்.
எப்படி இருக்கணும்னு ஆசை?
நிம்மதியா.
மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
நான் தான் மனைவி. என் கணவர் நான் இல்லாதப்போ செய்யறதையே தான், இருக்கப்போவும் செய்கிறார், கொஞ்சம் கூட பயம் இல்ல. என்ன பண்ண?
வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க?
நான் என்ன சொல்லுறது. அதன் ரொம்ப முன்னாடியே சொல்லிட்டாங்களே...அதுவும் ஒரே வார்த்தையில். வாழ்வே மாயம்.
அப்பாடா முடிஞ்சுது.
Questions and Observations on Sabarimala
6 years ago
18 comments:
Vanthutomla
அது சரி நீங்களுமா? அபியும் நானும் அப்ப்படின்னு சொன்ன உடனே ஓடி போய் பார்த்தேன். அது நான் இல்லியா??
//"நீங்க இன்னைக்கு night க்குள்ள இந்த பதிவை பாஸ் பண்ணலைன்னா, இன்னொரு பல்லு புடுங்கும் நிலைமை வரட்டும்' என்று கண்ணன் சபித்ததால் (ரொம்ப பயந்துட்டேங்ண்ணா!!!)...//
//அர்ஜுனை பாத்தா எங்கயாவது விழுந்து காயம் பண்ணி வெச்சுருக்கான்னு ...
கதிரை பாத்தா, ஏதாவது செஞ்சுட்டு திருட்டு முழி முழிக்குறாரான்னு ...etc etc.//
he he he :) :) :)
Bore!
Anonymous,
//Bore!!!
வெறும் போர் இல்ல. செம போர்.
நானும் அதையே தான் சொல்றேன்.அட்லீஸ்ட் நீங்களாவது எனக்கு சப்போர்ட் பண்றீங்களே...:-)
:-)))))))))))))))))))))
ப்ரியா,
உன் பல் இருந்தாலும் உனக்கு பயன், போனாலும் ஒரு பயன் பாரு. இல்லனா you wouldnt have written this nice post.
அதெல்லாம் இருக்கட்டும், காலில் இருந்து பல் வரைக்கும் அடி வாங்கிட்டு வர்றது நீ, இந்த answers எழுதும் போது நீ என்ன முழி முழிச்சேன்னு i can imagine.
இதுல அர்ஜுன் , கதிர் எல்லாம் ஏன் இழுக்கிற ?
உண்மையச் சொல்லணும்னா, உங்க மேல கோபம் வரணும், வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள் எழுதாம போனதுக்கு, ஆனா உங்கப் பதிவப் படிச்ச பிறகு வெறும் சிரிப்பு தான் வருது! Good one அக்கா :-)
அப்படியே எனக்கு எழுதி கொடுத்திடுங்க
புன்னகை,
Thanks and Sorry pa.
***
இதுக்கு முன்னாடி தொடர்பதிவுகள்ல கோர்த்து விட்டவங்க மன்னிச்சுக்கோங்க. 'அப்போல்லாம் எழுதலை, இப்போ மட்டும் என்ன' ன்னு சண்டைக்கு வராதீங்க.
***
நான் கூட ஏதோவொரு தொடர் பதிவுக்கு உங்களை கூப்பிட்டேன். எதுன்னு மறந்துடுச்சு. இனிமே violence தான் !
பதில் எல்லாம் நல்லா இருக்கு பிரியா. கேள்வி தான் ஒன்னும் சரி இல்ல :)-
மறுபடியும் நான் தான்...
பதிவு நல்லா இருந்தது...
blog ஒட caption எல்லாம் மாத்திட்டீங்க போல...
இந்த பதிவுல கேள்வி தான் கொஞ்சம் bore.. அடுத்த பதிவுல இருந்து, வருகிற கேள்விகள்ள நல்ல கேள்வியா பாத்து choose panni போடுங்க..
(ஒரு சின்ன யோசனை...
'ஹாய் மதனு'க்கு போட்டியா நீங்க ஏன் 'ஹாய் ப்ரியா'னு ஒன்னு ஆரம்பிக்கக் கூடாது???) :)
மணிவண்ணன்...
மணிவண்ணன்,
caption - மாத்தலை. இங்கிலீஷ் ல இருந்ததை அப்டியே தமிழ் ல போட்டேன். எதுக்கு பீட்டரிங் ன்னு...
இதுக்கு முன்னாடி,
'My Diary. Imagination, Flashback, Time pass, Fun.'
இப்டி இருந்துச்சு.
இந்த கேள்விஎல்லாம் செம போர். நானே அத ஆரம்பிச்சவங்களை தான் தேடிட்டுருக்கேன்.
ஹாய் ப்ரியா வா ? ஆத்தீ.....அண்ணா இதெல்லாம் ஓவரா இல்லையா??
மணிகண்டன் ,
அது சினிமா தொடர் பதிவு.
மன்னிப்பு கேட்டதே உங்க கிட்டயும், புன்னகை கிட்டயும் தான்.
//ஹாய் ப்ரியா வா ? ஆத்தீ.....அண்ணா இதெல்லாம் ஓவரா இல்லையா??//
********
Try pannungo .........
//ஹாய் ப்ரியா வா ? ஆத்தீ.....அண்ணா இதெல்லாம் ஓவரா இல்லையா??//
********
Try pannungo .........
//Violence works at times.?//
VILLA THANAM IS WORKING AT ALL TIMES .........
Feel free to visit my blogspots
www.edakumadaku.blogspot.com
www.jokkiri.blogspot.com
Thanks in advance, for your visit.
//எப்படி இருக்கணும்னு ஆசை?
நிம்மதியா.//
யாரு?
Post a Comment