எதை?
பதில் கடைசியில்
எல்லாருக்கும் பதினெட்டு வயசில் wisdom teeth மொளைக்கும். வலிக்கும்.பதினெட்டு முடிஞ்சு சில சரி... சரி...பல வருடங்கள் ஆன நிலையில், lower wisdom teeth பக்கம் நல்ல வலி இருந்ததால், பல் டாக்டர் கிட்ட போனோம். எனக்கு தெரிஞ்சு என் முதல் Dentist visit. அவங்க செக் பண்ணிட்டு, "lower wisdom teeth ரெண்டுமே முளைக்க இடம் இல்லாததால, zig-zag க்கா முளைச்சு, அதுனால infect ஆகி இருக்கு. ரெண்டு பல்லையும் எடுத்துடறது நல்லது" ன்னு சொல்லிட்டாங்க. நம்ம தான் என்னைக்குமே ஒரு டாக்டர் சொல்றதை நம்பினது இல்லையே...இன்னும் ரெண்டு dentists கிட்ட second, third opinion கேட்டு எல்லாரும் அதையே சொல்லவும், பத்தாதுன்னு கூகிளை நாடியதில், 'wisdom teeth எதுக்கும் உதவாத உதவாக்கரை teeth, moreover wisdom teeth infection is common etc etc..எடுத்துடலாம்', என்று நம்பிக்கை அளிக்க 'சரி எடுத்துடலாம்.. என்ன போச்சு..' ன்னு முடிவு பண்ணியாச்சு.
ஏப்ரல் 30.
மே 1,2,3 என்று long weekend வந்ததால், ஏப்ரல் 30 அன்று பல் பிடுங்குவதற்கு
சுபயோக சுபதினமாகவும், surgeon கிட்ட 7-9PM முகூர்த்தமும் குறித்தாயிற்று.
'உனக்கும் wisdom க்கும் இருந்த ஒரே சம்பந்தம் இந்த பல் தான், அதுவும் போக போகுது' என்பதை போன்ற வாழ்த்துரைகளோடு, கிளினிக் போய் சேர்ந்தேன் கதிர் கூட.
'Wisdom teeth extraction is a surgical procedure. I have to give you local anesthesia. And drill your gums, Cut the bones, then extract the tooth' என்று ஏற்கனவே ஒரு கசாப்புகடைகாரர் அளவுக்கு டாக்டர் பில்டப் குடுத்து இருந்ததால் ஒரு திகிலோட தான் உக்காந்து இருந்தேன். வந்தார் surgeon. வந்தவர் நேரா enkitta வந்து, 'have you ever got an injection in your mouth?'
(வந்துட்டாருப்பா...)'No I haven't'
'Ok, It will pain a little. But then your mouth will be totally numb for the surgery. I will give you two injections on either side'
ஊசி போடும் போதே புரிந்து விட்டது. அடுத்த ஒரு மணி நேரம் ஏதோ ஒரு அவஸ்தைக்கு ஆளாக போகிறோம்ன்னு. Surgeon, அவ்ரோட attendant boy, ஒரு trainee லேடி டென்டிஸ்ட், நான், கதிர் என்று அந்த ரூம் ல அஞ்சு பேரு.
'Ok, Now tell me which teeth you want to be removed first?'
(ரொம்ப முக்யம்)'left one doctor' (அது தான் ரொம்ப வலிக்குது.மொதல்ல அத எடுங்க. அப்றோம் பொழச்சு கெடந்தா அடுத்ததை பாக்கலாம்)அப்போவே வாயில் உணர்வே இல்லாமல் மரத்து விட்டது.பேசும் போது ஏதோ மாயஜாலம் மாறி இருக்கு.
'Alright, Now I am gonna drill your teeth.'கதிர் ஆர்வமாக எட்டி பார்க்க, 'Aint you scared? Are you a doctor by any chance? Do you wanna take any video?' அப்டின்னு கேட்ட surgeon கிட்ட, 'யோவ், அவராவது பயப்படறாதாவது ...' ன்னு சொல்ல ஆசை. ஆனா வாய் எங்க இருக்குன்னே தெரியலை.
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ன்னு சத்ததோட என் வாய்க்குள்ள drill பண்ண ஆரம்பிச்சார்.
நடு நடுல நிறுத்தி அந்த பையன் கிட்ட ஏதோ சொல்ல அவன் tube மாதிரி ஒன்ன என் வாயில நொழச்சான். drill பண்றப்போ வர ரத்தத்தை tube ல எடுக்கறான் ன்னு புரிஞ்சது. அடுத்தது cutting plier. Dental surgeons லாம் வேலை இல்லன்னா, carpenters ஆகிடலாம் போலிருக்கு. ரெண்டு பெரும் ஒரே மாறி ஆயுதம் தான் use பண்றாங்க, ஐயோ சாமி பல் எடுக்குறதுன்னா இதானா?? cutting plier வெச்சு பல்லை grip பண்ணி, ஏகத்துக்கு உலுக்குகிறார். இதே வேகத்தை apply பண்ணா ஒரு தென்னை மரத்தை கூட வேரோட சாச்சுடலாம் போலிருக்கு. ஆனா பல்லு வர மாட்டேங்குது.நான் கொஞ்சம் அசவுகரியமாக முகம் சுளிக்க, 'Mam, what you are feeling is only pressure and not pain, if you make faces like this, I will get confused'.
(அட பாவி... நீ பாட்டுக்கு confuse ஆகி வேற எந்த பல்லையாவது எடுத்துடாத)
இன்னும் கொஞ்சம் drill. மறுபடி cutting plier. Tube...நடுவுல அந்த trainee லேடி கிட்ட வேற 'are you a catholic christian?' அப்டின்னு situation க்கு சம்பந்தம் இல்லாத கேள்வி கேட்டு கொஞ்சம் கடலை போட்டுக்குறார். "IT காரங்களுக்கு நெறைய சம்பளம், நம்ம பேசாம இன்ஜினியரிங் இல்ல MBA படிச்சுருக்கலாம்" ன்னு அவங்க கிட்ட புலம்பினார்.
12th முடிச்சு, MBBS கிடைக்காத நிலையில், BDS counselling வந்த போது, "என்னை BDS அட்லீஸ்ட் சேத்து விடுங்க ன்னு வீட்டுல நான் ஸ்டிரைக் பண்ணியது நியாபகம் வந்தது.
'Yes, finished' ஒரு வழியா ன்னு பல்லை எடுத்து காட்டுனார். (அப்பாடா பாதி கெணறு தாண்டியாச்சு)
'Ok now the right tooth'.
வலது பக்கம் drill ஐ வெச்ச உடனே நான் 'ஆஆஆஅ' ன்னு கத்திட்டேன். மரண வலி.
'Some more local please' (local -> local anesthesia)
இன்னும் ஒரு ஊசி. அதுக்கும் 'ஆஆஆஆஆ'
மறுபடி drill பண்றார். மறுபடி நான் கத்துறேன்.
கொஞ்சம் கடுப்பாக, 'Mam, you cooperated for the left tooth, why now?'
'But now its paining' - செய்கை தான். காலேஜ்ல, ஸ்கூல்ல எல்லாம் dumsi வெளாடி இருக்கேனே ....:-)
'Oh is it? I would like to see the Xray Please'
(அப்போ இவ்ளோ நேரம் நீ xray பாக்கவே இல்லையா?)
அந்த attendent boy, xray ரிப்போர்ட் எடுத்துட்டு வந்து குடுத்தான்.
பாத்துட்டு சொல்றார்.'Your tooth is sitting right on the nerve, see... now I cant give you anesthesia on the nerve, which will make it permanently numb, So unless I make you completely unconscious, you need to go through this intense pain'
சொல்லிவிட்டு அவர் என்னை பாக்க, நான் கதிரை பாத்தேன்.
"கொஞ்சம் பொறுத்துக்கோ, you will be fine" பக்கத்துல வந்து நின்னுக்கிட்டார்.
ஆரம்பிச்சார் drilling. கண்ணை மூடிக்கிட்டு "ஆ ஊ " கத்தி ரகளை பண்றேன். கை கால் ல்லாம் ஒதறுது. காலை ஒருத்தர், கைய ஒருத்தர் பிடிச்சுக்குறாங்க, காலை புடிச்சு இருந்தது கதிரா இருக்கணும். (எனக்கு தெரியாதா??)
அடுத்து cutting plier வெச்சு உலுக்குகிறார், என் கண்ல தண்ணி வழிஞ்சு ஓடுது. அந்த டாக்டர் ரொம்ப கடுப்பா ஆகி, 'Mam, please cooperate' ன்னு கத்துறார்.(யோவ் டாக்டர் என் ஆயுசுக்கும் உன் முகத்துல முழிக்க மாட்டேன்)
ஒரு வழியா பத்து நிமிஷ போராட்டத்துக்கு பிறகு பல் நாலு துண்டாக உடைந்து வந்துடுச்சு.
அதுக்கு பிறகு தையல் போட்டது , ஊசி போட்டது, முகம் ஏகத்துக்கு வீங்கி 'தசாவதாரம் Fletcher' effect ல ஒரு வாரம் இருந்தது, தினமும் வேளைக்கு பத்து மாத்திரை சாப்பிட்டது, என்று எல்லாத்தையும் சொல்லணும்னா பதிவு பத்தாது.
Post surgery, கதிர் டாக்டர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தார். 'நான் பாட்டுக்கு போய் reception ல உக்காந்துட்டேன். அந்த attendant boy வந்து என்னையும் உள்ள கூப்பிட்டான் . பொது இடங்களில் என்னை பக்கத்து வீட்டு ஆள் மாதிரி treat பண்ணும் கதிர், அன்னைக்கு அதிசயமா கைய புடிச்சு, "are you ok?" ன்னு கேக்க போய், எனக்கு பாழா போன அழுகை மறுபடி வந்து தொலைச்சுது. உடனே அந்த டாக்டர் "do you want another injection?" ன்னு சீரியஸா கேக்க, டக் ன்னு சிரிச்சுட்டேன், "She is crying and laughing. This is adrenaline rush".என் xray யை வைத்து அந்த trainee க்கு ஏதோ சொல்லிக்குடுத்தார், அப்றோம் எனக்கு instructions etc.
வீட்டுக்கு வந்து "அந்த டாக்டர் கிட்ட என்ன பேச்சு உங்களுக்கு?" ன்னு கேட்டப்போ, "your wife is a brave woman, she was not scared, but the pain would be very intensive and her reaction was proportionally very less" அப்டின்ன்னு சொல்லிருக்கார். (டாக்டர் உன்னை sorry உங்களை மன்னிச்சுட்டேன்).
வீங்கின முகத்தோட நான் ஆபீஸ் க்கு வந்த நாட்களில்,
long leave இல் போயிருந்த ஒரு colleague திரும்பி வந்து, "Oh my, why did you become so fat?'என்று கேட்டதும், இன்னொரு colleague, chatல "Do you wanna drop?" என்று கேட்ட போது, ஓகே சொல்லிட்டு, ஆனால் அவர் இந்த முகத்தில் என்னை பார்த்து பயந்துட கூடாதேன்னு அவரை prep பண்றதுக்காக, "Actually my face is swollen due to a dental treatment" என்று நான் சொன்ன பதிலுக்கு, "Oh can you enter the car?" என்று அவர் கேள்வி கேட்டதும் இடுக்கண் (அதுவும் பல்வலி) வந்த போதும் என்னை வாய் விட்டு சிரிக்க வைத்தது சுவாரஸ்யம்.
Consultation போன போது, "கீழ் பல் சப்போர்ட் இல்லாத காரணத்தால மேல உள்ள wisdom teeth ரெண்டும், கீழ ஈறுகளை இடிக்கும், so அதையும் எடுத்துடறது நல்லதுன்னு" ஒரு பிட் போட்டு பார்த்தார். அப்றோமா வரேன்னு சொல்லிட்டு ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன்.
என் cousin ஒருத்தி டாக்டர், அவ சொல்லுவா, 'ஒவ்வொரு பொண்ணும் பிரசவ நேரத்துல இந்த ஒரு புள்ளயே போதும் ன்னு நெனச்சாலும், அதுக்கு அப்றோம் 'அவ்ளோவா வலிச்சுது?' ன்னு அந்த வலிய மறந்துடறதுனால தான், எல்லார் வீட்டுலயும் ரெண்டு மூணு புள்ளங்க இருக்கு' ன்னு...
ஆனா அந்த பல் எடுத்த வலி இந்த பதிவு எழுதும் போது கூட எனக்கு மறக்கலை.
அதுனால தான் சொல்றேன், பத்திரமா பாத்துக்கோங்க. உங்க பற்களை.
Dental surgeon கள் இரக்கமற்றவர்கள்.
Questions and Observations on Sabarimala
6 years ago
22 comments:
I got my wisdom tooth at the age of 15 :-). And removed one of them for the same reason as yours. The doctors have adviced me to remove all the four. But apparently one was disturbing at the time of growth. I also had a stitch
Even in my case, the bone was cut and the tooth was removed. The doctors asked me to take some medicine after reaching home. I forgot to get the medicine and I didnt feel the pain then (due local anesth), so didnt care about hte medicine. After reaching home, I felt very bad pain and recollected that the bone was also cut :-)
Then my dad went to get some medicine and didnt return for almost 1 hr. So I asked my mom to get me some pain killer. She asked me for the name. I took a piece of paper and wrote
'Call Anu
and ask
for medicine'
[same as above with in three lines].
My mom after seeing three lines, she asked, so many tablets?
kola veri thalai-ku eridichu, then i asked her to wear specs and then read it.
This is how my experience went.
And, I think its cutting plier dnd not blair. :-)
Thanks for that spelling.மாத்திட்டேன்.
ஆனால், changes highlight பண்றது எப்டி?
கடவுள் புண்ணியத்தில் இது வரை எந்த பல் டாக்டரிடமும் போனதில்லை :-)
சீக்கிரம் கறுக்கு முறுக்கென முறுக்கு தின்ன வாழ்த்துக்கள் :-)
//கூகிளை நாடியதில்,//
இதுக்கும் கூகிளா!!
//ஆனா வாய் எங்க இருக்குன்னே தெரியலை. //
உங்களுக்கு நம்பிட்டோம்
//அப்பாடா பாதி கெணறு தாண்டியாச்சு//
உங்க வாய அப்படி சொல்லாதீங்க
//காலை புடிச்சு இருந்தது கதிரா இருக்கணும். (எனக்கு தெரியாதா??)//
சந்தோசபட்டிருப்பார்
உங்க வலி தனி வழிங்க
சூப்பரா எழுதி இருக்கிறேங்க.. நானும் சில பற்களை இழந்து உள்ளேன்.. உங்க வலி புரியுது... ஆனா படிக்கும் பொது பல இடங்கில் நல்ல சிரிப்பு..
//அப்றோம் பொழச்சு கெடந்தா அடுத்ததை பாக்கலாம்//
//ஆனா வாய் எங்க இருக்குன்னே தெரியலை. //
//பொது இடங்களில் என்னை பக்கத்து வீட்டு ஆள் மாதிரி treat பண்ணும் கதிர்//
சூப்பர்...
டிபிகல் ப்ரியா கட்டுரை.கதிர் கட்டுரை முழுக்க அழகா வர்றார். எல்லோரையும் ஓட்ற மாதிரி கடைசியில டாக்டரையும் ஓட்டிடீங்க. :-)))))))))))))
Seriously, ithu ellama katha mari eluthivinga??
அட கொடுமையே!
எங்க ஊர்ல ஒரு சீன டாக்டர் இருக்கார். லாட்டரி சீட்டு பைத்தியம். லாட்டரி நம்பர் "அதிஷ்டம்" பேப்பர்ல பார்த்துகிட்டே என் எல்லா பூச்சி பல்லையும் பிடுங்கிட்டார்.
பல் எடுத்ததும் நேரா வந்து பியர்லெஸ் தியேட்டர்ல வந்து மேட்னி பார்ப்பதை ஒரு நேர்த்தி கடனா வச்சிருந்தேன்.
ஆனா என் அம்மாவெல்லாம் என்னை போறாமையா பார்ப்பாங்க. ஏன்னா எங்க வீட்டிலே மத்தாவங்க எல்லாம் பல்பிடுங்குவதை ஒரு பெரிய சடங்கா நடத்துவாங்க. அய்யாவுக்கு தான் ஜச்ட்லைக்தட்!
உங்க அனுபவம் மாத்திரம் ச்சூப்பர் இல்லை எழுத்து நடையும் தான்!!!
வணக்கம் பிரியா,
(நான் இந்த blogக்கு புதுசு. சரியான இடத்துல தான் என்னோட பின்னூட்டத்த போடறேனான்னு தெரியல.. தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க... :))
அப்பாடி!
ஒரு வழியா இப்போதான் உங்க
blog ஒட எல்லா பதிவுகளையும் படிச்சு முடிச்சேன். கிட்டத்தட்ட நாலு வருஷத்துக்கு அப்பறமா (கள்ளிக்காட்டு இதிகாசம்னு நினைக்கிறேன்) ஒரே stretchla ஒரு விஷயத்த முடிச்சிருக்கேன். ஏதோ பக்கத்துல இருந்து கைய புடிச்சு கூடவே கூட்டிட்டு போய் உங்க வாழ்க்கைய சுத்தி காமிச்ச மாதிரி ஒரு உணர்வு. ஒரு சாமானியனா இருந்து தன்னொட சரித்திரத்த சொல்றது ரொம்பவே கஷ்டம். படிக்கிறவன அலுக்க வைக்காம கொண்டு போற யுத்தி எல்லாருக்கும் வந்துடாது.. ஆனா அதுக்கு நீங்க ரொம்ப மெனக்கெட்ட மாதிரி தெரியல. ரொம்பவே சாதாரணமா சுவையா சொல்லி இருக்கீங்க..
வாழ்த்துக்கள் பிரியா..
இன்னிக்கு இருந்து என்னையும் உங்க ரசிகர்கள் கூட்டதுல ஒருத்தரா சேத்துக்கோங்க.. :)
மணிவண்ணன்....
hey u
I was imagining each and every scene and really felt bad for the painful scenes..But I was laughing all the time reading your blog..so ange unga sogam vandhu enakku santhoshama convert ayiduchu.. thappa nenachikadheenga.sirikum bodhu ulmanasu solluchu 'palla kaati sirikadhe de..unaku andha madhiri 1 naal agum apdinu'. so naan asusual saami kitte sorry sorry apdinu solliten :-)
Hope everything is fine now.
Take care.
Anu
First la irunthu last varaikkum yellame nalla iruntha yentha linekunu comment kudukurathu...
Superb!
:) :) :)
Superb!
priya akka rocks again!!!!!
கதிர்,
எங்க போய்ட்டீங்க இவ்ளோ நாளா?
இன்னும் பஸ் மாறி மாறி தான் ஊருக்கு போறீங்களா??
Heartfelt thanks to everyone for the comments:-)
"சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்".....
கல்யாணம் ஆகி எனக்குன்னு ஒரு ஜீவன் வர வரைக்கும் இப்டித்தான் ;)
and one more thing.....
"பஸ் மாறி போலாம்...ஆனா ஊர்தான் மாறி போய்டகூடாது ... "
(புதிய தத்துவம் 10251)
When I count my teeth, I have only 28. So no wisdom yet! :-) I celebrated my 32nd birthday 10 days ago.
Very well written & what a hilarious way to explain the agony of wisdom tooth extraction. You made me to laugh aloud at several points in the write-up. Pl keep on writing like this.
M Arunachalam,
//Pl keep on writing like this//
மேல உள்ள ரெண்டு wisdom teeth எடுக்கும் போது, இதே மாறி எழுதுறேன் சரியா?
'சிங்கம் சிங்கிளா தான் வரும்' profile photo super..:-)
Raju,Thanks for visiting.
//சீக்கிரம் கறுக்கு முறுக்கென முறுக்கு தின்ன வாழ்த்துக்கள் :-)//
Vijay sonnadhu..... adhe naanum solren.......
Unga kitta Doctor mattum thaan maattalennu nenachen. Ippo avarumaaa??/
Ennamo ponga..... yaaraiyaavadhu listla vittu vachu irukeengalaa??
Note : Aamaam, ippo ungalukku motham ethanai PAL irukku??
ஹாஹா.. என்ன சித்தி, விட்டிருந்தா வாய்க்குள்ள வாஸ்து பார்த்து வீடே கட்டிக் குடுத்திருபபாங்க போல.. நீங்க போனது ஹாஸ்பிடலா இல்ல கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனியா? :))))
//காலை புடிச்சு இருந்தது கதிரா இருக்கணும். (எனக்கு தெரியாதா??)//
கொழுப்பு.. அப்டியே தொண்டைல ட்ரில் பண்ணி இருக்கனும்.. :))
//wisdom teeth எதுக்கும் உதவாத உதவாக்கரை teeth,//
கரெக்டா தான் பேர் வச்சி இருக்காங்க.. :))
வணக்கம்!
இன்றைக்குத் தான் தங்களுடைய இடுகைகளைப் படிக்க ஆரம்பித்தேன்! பொதுவாக எல்லாப் பதிவிலும் ஒரு எள்ளல் கலந்த நகைச்சுவை சீராக இருக்கிறது
வணக்கம்!
இன்றைக்குத் தான் தங்களுடைய இடுகைகளைப் படிக்க ஆரம்பித்தேன்! பொதுவாக எல்லாப் பதிவிலும் ஒரு எள்ளல் கலந்த நகைச்சுவை சீராக இருக்கிறது. பொதுவாக போகிறப்போக்கில் நான் வலைப்பூக்களுக்குச் சென்று எல்லாவற்றையும் படிக்க எத்தனிப்பது உண்டு. இன்று உங்களின் வலைப்பூவைப் படிக்க ஆரம்பித்தேன்! எதில் ஆரம்பித்தேன் என்றே நினைவில்லை.. ஆனால் எல்லாம் மிக அற்புதமாக உள்ளது. பேச்சு வழக்கில் அருமையாக எழுதுகிறீர்கள். ஏற்கனவே, தங்களின் பழைய வலைப்பூவின் பெயர் இன்னும் படிக்கத் தூண்டியது! இந்தக் குறிப்பிட்டப் பதிவைப் பார்த்ததும் இன்னும் ஆச்சரியம்!
நான் எழுதுவது மிக அரிதான ஒன்று! ஆனால் தங்களுடைய இந்தப் பதிவு, என் ஒரு பதிவினை ஒத்து இருப்பது ஓர் ஆச்சரியமான விடயம். பலருக்கு ஒரே மாதிரியான கருத்தோட்டம்!!! நேரம் கிடைக்கும் போது என்பதிவைக் காணுங்கள்!!
http://eswar-chaotic.blogspot.com/2006/11/blog-post_09.html
|Eswar〉
Post a Comment