Thursday 26 February 2009

நான் தனியாள் இல்ல!!!

"அப்டி blog எழுதி நீ என்னத்தை கிழிச்ச்ச்ச? அதுல செலவு பண்ற நேரத்துல இன்னும் கொஞ்சம் standards படிச்சுருந்தாலோ, இன்னொரு scripting language கத்துட்டு இருந்தாலோ, இல்ல அட்லீஸ்ட் MS.Office applications ல எத்தனை மாயாஜாலம் பண்லாம்?? அதெல்லாம் தெரிஞ்சு வெச்சுருந்தாலோ, வேலைக்கு உதவியா இருந்து இருக்கும்"


"வாழ்க்கைல பண்ற எல்லாம் விஷயங்களும் materialistic ஆக, measurable output குடுக்குறதா தான் இருக்கணுமா? நமக்கு பிடிச்ச, நமக்கு satisfaction தர்ற , விஷயங்கள், அது மத்தவங்கள தொந்தரவு பண்ணாத வரைக்கும், பண்றதுல என்ன தப்பு இருக்கு?அப்டியே measurable output தான் வேணும்னா கூட, இங்க வந்ததுல நான் எவ்ளோ நண்பர்களை சம்பாதிச்சுருக்கேன் தெரியுமா?"


"எங்க அவங்கள பத்தில்லாம் சொல்லு பாக்கலாம்"




ஜெயஸ்ரீ
ஏகலைவனுக்கு துரோணர் மாதிரி எனக்கு ஜெயஸ்ரீ. (அதுக்காக டைப் பண்ற வெரலை எல்லாம் வெட்டி அனுப்புன்னு சொல்லிடாதீங்க J!)அதிகமா பேசி பழகிக்காமலேயே இவங்க பதிவுகளை படித்தே, எழுத கத்துக்கிட்டேன்.
இவங்களுடைய 'மீண்டும் ஒரு காதல் கதை'யை படிச்சு, "இப்டில்லாம் கூட எழுத முடியுமா?' என்று மருகி, உருகி இருக்கிறேன்.ஒவ்வொரு முறை அந்த கதையை படிக்கும் போதும்(ஆச்சு இதோட ஒரு முப்பது முப்பத்தஞ்சு முறை), முதல் தடவை படித்த போது கிடைத்த அதே சந்தோஷமும் நிறைவும் கிடைக்கும். நம்மளும் தமிழ்ல எழுதணும் ன்னு எனக்குள்ள ஒரு சின்ன ஆர்வம் துளிர் விட்டுச்சுன்னா அதுக்கு முழுக்க முழுக்க இவங்க தான் காரணம்.முதல் தமிழ் பதிவா அர்ஜுன் பதிவை எழுதி இவங்களுக்கு (இவங்க பதிவிலேயே பின்னூட்டமாய்) அனுப்பிட்டு, "Ultra sound scan result' க்கு காத்திருந்த அதே தவிப்புடன் காத்திருந்தேன். ஒரு smiley யும், "ஆங்கில வார்த்தைகளை குறைத்து கொள்ளுங்கள் " என்ற கருத்தும் மறுமொழியாய் வந்தது. இவங்களுக்கு தனிமடல் அனுப்பிட்டு , பதில் வருமா வருமா என்று நொடிக்கொரு தடவை inbox ஐ refresh பண்ணி பாத்துட்டு இருப்பேன். முதல் மடலுக்கு மூணு நாள் கழிச்சு பதில் வந்தப்போ, "you made my day" ன்னு கத்தணும் போல இருந்துச்சு. யாருக்காவது ரசிகையா இருக்கதுன்னா இது தானா??? ன்னு நெனைச்சுக்கிட்டேன். எனக்கு வரும் தனிமடல்களுக்கு எல்லாம் நான் உடனுக்கு உடன் பதில் எழுதுவதற்கு அன்னைக்கு இவங்க கிட்ட இருந்து எனக்கு பதில் வந்தப்போ நான் அடைஞ்ச சந்தோஷம் தான் காரணம். கொஞ்ச நாள் தாளிக்காமல் இருந்து விட்டு சமீபத்தில் திரும்பி வந்து, எங்கள் வயிற்றில் எல்லாம் பதிவு வார்த்து இருக்கிறார்கள். எனக்கு இட்லிவடை தான் இவர்களை அறிமுகம் செய்து வெச்சது. அதுனால IV க்கு கடமை பட்டுருக்கேன்.:-)சமீபத்தில் "உங்கள் நான் கடவுள் விமர்சனம் படித்து மகிழ்ந்தேன். உங்கள் தமிழில் நல்ல வளர்ச்சி" என்று இவரிடம் இருந்து வந்த மடலை பார்த்து ரஹ்மானுக்கு ஆஸ்கார் அறிவித்த போது துள்ளியதை விட கொஞ்சம் அதிகமாகவே துள்ளியது மனது. பின்ன ?? சும்மாவா??சமீபத்தில் இவங்க "விகடன் வரவேற்பறை" ல வந்தப்போ, "Better late than never" என்று தான் தோன்றியது. She deserves it.



தேசிகன்
ஜெயஸ்ரீயின் பதிவுகளில் அடிக்கடி இவருடைய பெயர் தென்படும். அதனாலேயே இவரை ஏற்கனவே தெரிந்த மாறி உணர்வு, இருந்தாலும் இவரை பற்றி ரொம்ப curious ஆக்கியது இந்த பதிவு தான். ஒரு நாள் ஒரு வேலையாக ஆபீஸ் mail-room க்கு போய், அன்றைக்கு வந்து இருந்த தபால்களில் எனக்கு வர வேண்டியது வந்து இருக்கிறதா என்று பார்த்து கொண்டிருந்த போது, post from NHM to N.Desikan. NHM கிழக்கு மக்கள் ஆச்சே...அப்போ இவர் அந்த தேசிகனா இருக்குமோ என்று மண்டைக்குள் லைட் எரிந்தது. வந்து அவசரமா அவருடைய contact details தேடி, IM ல ping பண்ணி, நீங்க தானா அவர் என்று உறுதி செய்து கொண்டு, "ஓ, நீங்க ஏழாவது மாடியா? நான் மூணாவது..." என்று சந்தித்தும் ஆகி விட்டது. அது வரைக்கும் அவர் ஒரு பதிவர் என்று மட்டுமே நினைத்து கொண்டு இருந்த எனது அறியாமைக்கு , அவரை சந்தித்த பிறகு தான், "He is much more than just a blogger" என்று தெரிந்தது.ஆனால் மனிதர் மிக மிக எளிமை. அவருடைய படைப்புகளை பற்றின பெருமையோ, "சுஜாதா' அவர்களுடன் ,அவர் பகிர்ந்து கொண்ட நெருக்கமான நட்பை குறித்த கர்வமோ துளியும் இல்லை அவரிடம்.

"நீங்களும் பதிவு எழுதுகிறீர்களா? " என்று கேட்டு பதிவு முகவரி வாங்கி கொண்டார். சற்று தயக்கத்துடன் தான் கொடுத்தேன். ஆனாலும் இவர் எங்கே இதை எல்லாம் படிக்க போகிறார், ஒரு courtesy க்காக கேட்டு இருப்பார் என்று தான் நினைத்தேன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு பதிவையும் படித்து அதை விமர்சித்து குறை நிறைகளை சுட்டி காட்டும் போது உண்மையிலேயே "அட" என்று இருக்கும் Three in one க்கு "Its interesting for a casual reading, but something is missing" என்று சொன்னவர், "கருவாச்சிக்கு" "Not bad" என்றும், கோயில் கொஞ்சம் பதிவுக்கு "one of the good posts, well written with with subtle humour" என்று சொல்லவும்... ஹையா நான் வளர்கிறேனே மம்மி!!!


"5 seater sofa வில் என் மாமியார், அவருடைய ரெண்டு அக்கா, அண்ணன், அண்ணி எல்லாரும் சீரியல் பாக்க இடம் பிடித்து விட, என் மாமனார் Nilkama chair ஐ எடுத்து போட்டு உக்காந்து ஜோதியில் ஐக்கியம் ஆனார். மேகலாவில் இருந்து, சிவசக்தி வரை அசராமல் ரசித்து பார்க்கிறார்கள்" என்று கோயில் கொஞ்சம் பதிவில் நான் எழுதிய வரிகளை 'I am tempted to rewrite this' என்று சொல்லி, "எங்கள் வீட்டு சோபாவில் அன்று தான் மாமியார் உட்பட ஐந்து பேர் சேர்ந்து உட்காரலாம் என்று கண்டுபிடிச்சோம்.மாமியார், அவருடைய ரெண்டு அக்கா, அண்ணன், அண்ணி என்று சோபாவும் சேர்ந்து சீரியல் பார்த்தது. மாமனார் சபாநாயகர் போல் தனி சேரில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தார். இவர்களை பார்த்து நான் அசந்து போயிருக்க இவர்கள் அசராமல் மேகலாவிலிருந்து சிவசக்தி வரை பார்த்தார்கள்" என்று எழுதி காட்டி அசத்தினார்.

பேசாம இந்த சாப்ட்வேர் ஐ எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, "எழுத போங்க, இல்ல வரையுங்க" ன்னு சொன்னா, "இது 'புவ்வா' வுக்கு, மத்ததெல்லாம் பொழுது போக்கு" ன்னு சொல்கிறார்:-)

ச.ந.கண்ணன்.
இட்லிவடையில் எனது ஐந்தாண்டு பதிவை பார்த்து, "யார்டா இது?" என்று என் பதிவை எட்டி பார்த்தவர். கிழக்கில் எழுத்தாளர். அப்போலேர்ந்து தொடர்ந்து எனக்கு "எழுதுங்கள் எழுதுங்கள்" என்று ஊக்கம் கொடுத்து கொண்டு இருப்பவர்.சில நாட்கள் பதிவு போடலன்னா, "அம்மா தாயே, பதிவு பிச்சை போடுங்க" என்ற அளவுக்கு இறங்குவதும், பதிவு பிடிச்சுருந்தா அத ஊரு உலகத்துக்கு எல்லாம் தெரிய படுத்துவதும், பிடிக்கலைன்னா, "Not impressive at all" என்று வெளிப்படையாக குட்டுவதுமாக, என் பதிவின் ஒரு முக்கியமான விமர்சகர். சமீபத்தில் இட்லிவடையிடம் வாங்கி கட்டி கொண்டார். எனக்கு என்னமோ அது கண்ணனுக்கு கிடைத்த விளம்பர வாய்ப்பாகவே தோன்றியது.:-)


இவங்க மட்டுமா?
எந்திரன், சர்வம் என்று ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்க படங்களோட stills, அப்றோம் ஒலகத்துல எந்த நடிகை, நடிகருக்கு கல்யாணம்,காது குத்து, குழந்தை என்று எந்த நல்ல காரியம் நடந்தாலும், அந்த photos எல்லாத்தையும், எங்க இருந்தோ ஆட்டைய போட்டு forward செய்யும் அன்பு சகோதரி ராஜி(ஒரு சினிமா மலர் ஆரம்பிக்க சொல்லி suggest பண்ணிருக்கேன்) , பொறக்கும் போதே காமெராவும் கையுமா தான் பொறந்து இருப்பாங்களோ ன்னு நெனைக்கற மாறி படம் எடுக்கற maddy & truth, அழகாக இருக்கும்/எழுதும் மது, கம்ப்யூட்டர் பத்தி என்ன கத்துக்கிட்டாலும் பகிர்ந்து கொள்ளும் Rethanya, straight பஸ் இருந்தாலும் எறங்கி எறங்கி ஊருக்கு போற கதிர்,(எங்க வீட்டு கதிர் அதுக்கு opposite, straight பஸ் இல்லன்னா அந்த ஊருக்கே போக மாட்டார்), மனைவிய வீட்டுல விட்டுட்டு படம் பாக்க போறதுக்கு பிளான் போடற விஜய், வாலிபர்சங்கம் ன்னு பேர் வெச்சுக்கிட்டு வெறுமனே ஜாலி பண்ணாம, ஆழ் கிணருல விழுந்து இறந்த பையனை பற்றி பதிஞ்ச சரவணன், எல்லாரும் மும்முரமாக நான் கடவுள் விமர்சனம் எழுதும் நேரத்தில்,தான் மட்டும் வித்தியாசமாக விமர்சனம் எழுதின எல்லாரையும் விமர்சிச்ச மணிகண்டன், இப்டி நிறைய பேர்.


"ஒரு கும்பலா தான் கெளம்பி இருக்கீங்க, எப்டியும் போங்க"

23 comments:

Truth said...

மீ த ஃபஷ்டு
படிச்சுட்டு மத்தத சொல்றேன் :-)

Truth said...

அட நானும் இருக்கேன் :-)
தேங்கஸ் அக்கா...

புன்னகை said...

"நாள் தனியாள் இல்ல!"
இந்தத் தலைப்பைப் பாத்துட்டு, ஏதோ கட்சி ஆரம்பிக்க தான் இப்படியொரு பீடிகை போலன்னு நெனச்சு, தல தெறிக்க ஓடி வந்து படிச்சேன். படிச்ச பிறகு தான் புரிஞ்சுது, "இது காசுக்காக சேர்ந்த கூட்டமில்ல, அன்பால தானா சேர்ந்த கூட்டம்"னு! :-)

Rajalakshmi Pakkirisamy said...

U made my day :) :) :) Thanks akka.. Feel Really happy

Vijay said...

தேசிகன் சார் உங்க நண்பரா? பெரிய ஆளூங்க நீங்க!!!

மற்றும் ஒரு காதலன் said...

மிக அருமையான பதிவு. அப்படியே ப்ளாக்-கர்களின் மனச பதிவு பண்ண மாதிரி தோணுது.
எங்களையும் ஒரு மனுசன மதிச்சு, உங்க ஆட்டத்துல சேத்துகிட்ட உங்களுக்கு நன்றி.

சரவணன்,
வாலிபர்சங்கம்,
http://valibarsangam.wordpress.com

ஷண்முகப்ரியன் said...

எனக்கு இந்தப் பதிவினால் திரு.தேசிகனின் பதிவைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.அதனால் சுஜாதாவின் இறுதித் தருணத்தைக் கூறி,நெஞ்சை நெகிழச் செய்த அவரது கட்டுரை படிக்க நேர்ந்தது.நன்றி.

Maddy said...

"அப்டி blog எழுதி நீ என்னத்தை கிழிச்ச்ச்ச? ..............இது யாரோ கேட்ட கேள்வி, அதுக்கு உங்க பதில்......நான் தனியாள் இல்ல!!!............இல்ல

இப்படி சொல்லி எங்களையும் உங்க கட்சியில சேர்த்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி.
அதனால அப்படி ஒரு கேள்வியே யார் கேட்டு இருந்தாலும் நம் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்!!!

சில பேரை இங்க அறிமுக படுத்தி இருக்கீங்க நன்றி. நானும் படிக்க போறேன்!!

பொறந்தப்போ இருந்தே கேமரா வா?? அட நீங்க வேற!!! என்னை போட்டோ பிடிக்க சொல்லி நான் சின்னப்போ அழுத அழுகை பெரிய கதை. இங்க வந்ததுக்கு அப்புறம் தான் போட்டோ ப்லோக் போட்டுட்டு இருக்கேன். அட எனக்கு இப்படி ஒரு ரசிகையா?? எனக்கு நானே தட்டி கொடுத்துக்கிறேன்!!

""புன்னகை"" சொன்ன மாதிரி இது வேற மாதிரி கூட்டம், நம்ம தனியா இல்லையுன்னு கொஞ்சம் உரக்க சொல்லி வையுங்கோ

ரிதன்யா said...

நன்றி பிரியா,
பெரிய விசேசங்கள்ல குரூப் போட்டோ எடுப்பாங்க, அதில குடும்பத்தில எல்லாரும் நிக்கயில் ஓரமா நின்னுட்டு இருக்கற ஒருத்தர பக்கத்தில வர சொல்லி தோள் பிடிச்சி அணைச்சி நிக்க சொல்ல அவன் மனசுல பொங்கற சந்தோசம், பெருமை இருக்கே, அது இப்ப எனக்கு.

ப்ரியா கதிரவன் said...

விஜய்,

அவர் எனது நண்பர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆள் இல்ல. எனக்கு IG யை தெரியும் ன்னு சொல்லிக்குற மாதிரி தான்:-)
ஆனால் இங்க IG க்கும் என்னை லேசா தெரியும். அவ்ளோ தான்.

ப்ரியா கதிரவன் said...

Maddy,

இது என்னை பாத்து என்னோட alter ego கேட்ட கேள்வி:-)
அத நீங்க கண்டிச்சதா சொல்லிடறேன்!

ப்ரியா கதிரவன் said...

ஷண்முகப்ரியன் ,
உங்களுக்கு தேசிகன் அவர்களின் பதிவை அறிமுக படுத்தியதில் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
அங்கே நீங்க கமெண்ட் போட்டு இருந்ததையும் பார்த்தேன்,

ப்ரியா கதிரவன் said...

Truth, புன்னகை, Raji, Saravanan, Rethanya,

Thanks.

Vijay said...

ஜெயச்ரி,(shree, செரியா எழுத வரலை இந்த யூனிகோட் ரைட்டர்ல) மேடம் பத்தி எழுதி இருந்தது ரொம்ப நல்லா இருந்துச்சி..உங்க கிட்ட அவங்க பேரை தப்பா கேட்டு நீங்க திருத்தினது நியாபகம் இருக்கா? அவங்க எழுத்தை படிச்சிட்டுதான் தமிழ் பிளாக் படிக்க ஆரம்பிச்சேன். இன் பாக்ட் அவங்க சுஜாதா பதிவுக்கு தான் என் பர்ஸ்ட் பின்னூட்டம். அதுக்கு அவங்க பதில் சொன்னப்போ உங்களை மாதிரியே விட்டம் தொடதா குறையா நானும் குதிச்சேன். பட் அதுக்கு அப்புறம் அவங்க இடைவெளி விட்டப்போ நிறைய பீல் பண்ணவங்களில் நானும் ஒருத்தன். உங்க ஆரம்ப பதிவுகளில் அது பற்றி பின்னூட்டம் கூட போட்டு இருக்கேன். இன்னும் எழுத எல்லாம் தைரியம் வரல. பட் நெறய படிக்கிறேன். உங்க பதிவு ரொம்ப டச்சிங். கற்றது கை மண் அளவு. கல்லாதது...... சரி. சூரியனுக்கே டார்ச் வேலை எல்லாம் நிறுத்திக்கிறேன். இந்த பதிவை நீங்க ஆரம்பித்த ஸ்டைல்ல நான் நெனச்சேன் எங்க பதிவுக்கு டாடா சொல்ல போறீங்களோன்னு. ரெண்டாவது பாரால கலக்கிட்டீங்க. தாங்க்ஸ் பார் தட் பீலிங். உங்க வரி ஒண்ணு அடிக்கடி நெனச்சி சிரிச்சிக்குவேன். "நான் டோனி பத்தி பண்ற அளப்பறைல இவர் காதுல ஒரு குட்டி சிம்னியே மாட்டலாம்ற அளவுக்கு புகை வரும்." கரெக்டா எழுதி இருக்கனான்னு தெரியலை. வேணும்னா அந்த லைன தேடி எடுத்து எழுதலாம். அது முக்கியமா படலை. அந்த கற்பனைய ரொம்ப ரசிச்சேன். தோணுச்சி. சொல்லிட்டேன். அவ்ளோதான்.

Anonymous said...

இனிமேல் என்னையும் சேர்த்துக்கோங்க.

மணிகண்டன் said...

"நான் தனியாள் இல்ல". இப்படி எல்லாம் சொல்லி அர்ஜுன மிரட்ட பாக்கறீங்களா ?
Anyways, என்னோட பதிவுக்கு இலவச விளம்பரம் அளிச்சதுக்கு தேங்க்ஸ். ஒரு சின்ன பரிசும் கூட.

http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=132

Anonymous said...

"தில் தில் திகில்..."
என்ற கதைக்காகத் தங்களை அழைக்கிறேன்.
http://mahawebsite.blogspot.com/

Anonymous said...

மகளிர்தின வாழ்த்துக்கள்

Anonymous said...

நீ தனியாள் இல்ல!!! - Especially today !! Because today your world is filled with lots of wishes, cheer and love and wishing you to have this fun and happiness everyday.
Here is wishing you a very very Happy Birthday and More more happy returns of the day
With lots of love,
S-S-S

Maddy said...

ஆளையே காணமேன்னு இங்க வந்து பார்த்த, உங்க பிறந்த நாள் மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கு. பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்றும் இன்பமும் இனிமையும், இல்லத்தோர் அன்பும் அனுசரிப்பும், மாறாத நகை( சுவை) உணர்வும், இறைவன் அருளும் ஆசியும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்கள்....

சரி சரி பர்த்டே பார்ட்டி எல்லாம் கேட்க மாட்டோம், சீக்கிரம் தலைய காண்பீங்க...

Rajalakshmi Pakkirisamy said...

Priya Akkaaaaa........

Rajalakshmi Pakkirisamy said...

One Post Please.

SK said...

உங்க பதிவுகளை முன்னே தொடர்ந்து படிச்சு கிட்டு இருந்தேன்.

இப்போ மீண்டும் தொடரலாம்னு இருக்கேன்.

Take a break and come back. Hopefully will work out. :) Best wishes.