Wednesday, 18 February 2009

I am turning TWO!!!

மாமா,சித்தி, எல்லாருக்கும் வணக்கம்.

எங்க அம்மா எழுதுறத எல்லாம் மதிச்சு படிச்சு கமெண்ட்டும் போட்டு, அவங்கள ரொம்ப ஏத்தி விட்ருக்கீங்க, ஏதோ பெரிய எழுத்தாளர் range க்கு அவங்க போடற சீன் தாங்கல. ஏதோ 'best seller' எழுதிட்ட மாதிரி கனவுல மேல பாத்துக்கிட்டே நடந்து போயி கால்ல இடிச்சுட்டு வேற வந்துருக்காங்க.
தினமும் காலைல ஒம்பது மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கெளம்பி, 'அம்மா ஆபீஸ் போறேன் செல்லம், சாயங்காலம் சீக்ரம் வரேன், சமத்தா இரு" அப்டின்னு சொல்லிட்டு போயிட்டு நைட் எட்டு மணிக்கு தான் வராங்க. என் கூட விளையாடறதே இல்லை. இதுல இப்போ கால்ல கட்டு வேற. இதுல நான் எங்கயாச்சும் போய் இடிசுக்கிட்டேன்னா "இவ்ளோ பெரிய(?) புள்ளை ஆயிட்டே? பாத்து நடக்குறது இல்லையா?" ன்னு வேற கேக்குறாங்க.என்னத்தை சொல்ல?

அர்ஜுன் ரகளை பண்ணான், அது இது ன்னு என்னை பத்தி கம்ப்ளைன் மட்டும் உங்க எல்லார் கிட்டயும் சொல்லுறாங்க. அவங்களும் அவங்க வீட்டுக்காரரும் சேந்து என்னை பாடா படுத்தி வைக்குரத பத்தி இது வரைக்கும் உங்க யார் கிட்டயும் மூச்சு விடலை...அதான் நானே பொங்கி எழுந்து வந்துட்டேன்,
போன ஞாயித்துக்கெழமை நானே செம பசில இருந்தேன், எனக்கு சாப்பாடு கொடுக்கிறேன் பேர்வழின்னு சுட சுட சாப்பாடை என் வாயில போட்டு நான் அழுது வாந்தி எடுத்து, ரொம்ப கஷ்டப்பட்டேன். சரி அம்மா தான் இப்டின்னா எங்கப்பா நேத்து நைட் நான் பெட் ல தண்ணி கொட்டிட்டேன்னு ஒரு சப்ப மேட்டர் க்கு என்னை திட்டிட்டாரு. நான் திரும்ப அழுதேன், திரும்ப வாந்தி எடுத்தேன்.
யாராச்சும் கொஞ்சம் இவங்களை என்னன்னு கேளுங்க.

அப்றோம் நான் முக்யமா உங்ககிட்ட சொல்ல வந்தது என்னன்னா, என் செல்ல அம்மாக்கு நான் புள்ளயா பொறந்து நாளையோட ரெண்டு வருஷம் ஆகுது.

On this special day, I sincerely thank all my mom's readers / well wishers and needless to say that I seek all your hearty blessings.

17 comments:

Shravya said...

Hey Arjun,
Wishing You a very Happy Birthday and Many more happy returns of the Day.
With Lots of love,
Shravya :))

Subha said...

Priya,
epdi namma first comment ?!!!
And wishes and love from me and Subash as well.

விஜய் said...

Happy Birth Day Arjun. அம்மாவை படுத்தாம சமத்தா சாப்பிடணும்.

மணிகண்டன் said...

குட்டிபையலே நீ கலக்குடா !

ரொம்ப படுத்தினாங்கனா நீ மறுபடியும் சொல்லு. ப்ளாக் விட்டு விரட்டி விட்டுடலாம்.

ரிதன்யா said...

பெரிய மனுசருக்கு நாளைக்கு பிறந்த நாளா?
வாழ்த்துக்கள் குட்டி. எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

Happy Birthday Arjun!

கணேஷ் said...

My Best wishes Arjun! Many more happy returns on that day!!

Maddy said...

அசத்துற அசத்துற அர்ஜுன் மருமகனே!!!! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
எல்லா வளமும் எல்லா சுகமும் ஆண்டவன் உனக்கு அருள வாழ்த்துக்கள்.

அப்பாவையும், Best seller ரேஞ்சுக்கு எழுதுற அம்மாவை பத்தியும், அதை படிக்கிற எங்களோட நிலமைய பத்தியும் என்னமா புரிஞ்சி வச்சிருக்கே!! அடடா!! எல்லாம் அனுபவம் தான்!! நல்லாவே புரியுது!! ஆனா அவங்களோட பாசத்தில நீ இப்போவும் எப்பவும் நனைய போவது உண்மை. வாழ்த்துக்கள்.

ரொம்ப பிஸி!! அப்படின்னு சொல்லி ஒன்னும் வாங்கி தரலயினா மாமாங்க சித்திங்க நாங்க இருக்கோம், ஒரு விசில் அடிச்சா வந்தறோம்

Triya&Varna said...

Happy Birthday Arjun
Hope we meet in April.......

Triya & Varna

Triya&Varna said...

Happy Birthday Arjun
Hope we meet in April.......

Triya & Varna

பாலராஜன்கீதா said...

அர்ஜுன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

Anonymous said...

Happy B'day sweet heart:)
May the Almighty shower his blessings upon you!!!
wishing you a great year filled with love and happiness:)

sa.na. kannan said...

happy bday kutti

உமாஷக்தி said...

Many many happy returns to Arjun, have a wonderful year ahead blessed with lots of joy, good health and great moments filled with happiness! God Bless you dear and convey my best regards to your Mom :)

Enathu Payanam said...

Belated wishes Mr.Arjun.
God may bless you.

Best regards,
Krishna Prabhu

ப்ரியா said...

பாலராஜன்கீதா,

உங்கள் பதிவின் சுட்டி தர முடியுமா?
என்னால் blogger இல் உங்கள் profile பார்க்க முடிய வில்லை.

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

Arjun post onnu podunga