Monday, 9 February 2009

அஹம் ப்ரம்மாஸ்மிஇது ப்ரியாவுக்கான படம் அல்ல.எனக்கு 'கண்ட நாள் முதல்' மாதிரி காமெடி வேண்டும், 'அலைபாயுதே' மாதிரி romance வேண்டும். 'Dil Chahta hai' மாதிரி emotions வேண்டும்.'பாமா விஜயம்', 'எதிர் நீச்சல்' ,மாதிரி ஏகப்பட்ட கதாபாத்திரங்களின் சுவாரஸ்யம் வேண்டும். 'அழகன்','பார்த்தாலே பரவசம்' மாதிரி 'திரைக்கதை மாயாஜாலம்' வேண்டும். 'முந்தானை முடிச்சு', ஆராரோ ஆரிரரோ' மாதிரி முடிச்சுகள் போட்டு, அவைகளை அவிழ்த்திருக்க வேண்டும். 'ஆனந்தம்', 'ஆஹா' மாதிரி படம் முழுக்க நல்லவர்களாக இருக்க வேண்டும். அந்நியன்,'கில்லி' மாதிரி விறுவிறுப்பு இருக்க வேண்டும். எதுவுமே இல்லை என்றாலும் படத்தில் ரஜினி,கமல்,சிம்ரன் மாதிரி எனக்கு பிடித்த யாராவது படத்தில் இருந்தால் கூட போதும். ஒரே வரியில்,'படத்தில் யாருக்கும் ரத்தம் வர கூடாது'. அதனால் இது எனக்கான படம் இல்லை.

ஆனாலும் என்னில் இருந்து விலகி நின்று இந்த படத்தை பற்றின சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இது படத்தின் விமர்சனம் அல்ல. 'Bala ஒரு உலகத்தர இயக்குனர்', இளையராஜா ஒரு இசை மாமேதை' என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக எழுதுவதில் எனக்கு உடன் பாடில்லை. மேலும் இயக்குனர் ஒவ்வொரு காட்சியையும் என்ன நினைத்து அமைத்து இருப்பார் என்று நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா என்றே நான் இன்னும் யோசித்து கொண்டு இருப்பதால், அதை எழுத்தில் கொண்டு வருவது எனக்கு சுலபம் இல்லை.


நான் கடவுள் என்று கூறிக்கொள்ளும் ஒருவன் உலகத்தில் வாழக்கூடாதவர்களுக்கு தண்டனையாக மரணத்தையும், வாழ முடியாதவர்களுக்கு அதே மரணத்தை வரமாகவும் அளிக்கிறான். இது தான் இந்த படத்தின் one liner.

Sify யின் 'Outstanding' rating க்கு ஒரு சகோதரர் இப்படி பதில் எழுதி இருந்தார். 'Bala is psychic'.
அவரிடம் ஒரே ஒரு கேள்வி. காசியில் எரியும் பிணங்களை ஆசீர்வதிக்கும் ஒரு அஹோராவையும், தென் தமிழ் நாட்டின் மலைக்கோட்டை கிராமத்தில் இருக்கும் ஊனமுற்ற பிச்சைக்காரர்களையும் பற்றின உண்மைகளை நம்மிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியில் நீங்கள் வேறு என்ன எதிர் பார்க்கிறீர்கள்? Andhra restaurant க்கு போய், 'ஒரு ஹைதராபாத் பிரியாணி - extra spice' என்று ஆர்டர் பண்ணி சாப்பிட்டு விட்டு 'இது சரவண பவன் meals மாதிரி இல்லை' என்று complain பண்ணினால் தவறு யார் மீது சொல்லுங்கள்?'என் படம் இப்படி கனமாக தான் இருக்கும். பார்ப்பவர்களின் ஈரல்குலை நடுங்க தான் செய்யும் ' என்று ஏற்கனவே மூன்று முறை தெளிவாக சொல்லி விட்டார் அவர்.பிரியாணியில் சாம்பார் சுவை எதிர் பார்ப்பவனை பார்த்தால் நீங்கள் என்ன நினைப்பீர்களோ, அதே உணர்வு தான் பாலாவை psychic என்று சொல்லும் உங்களை பார்த்து எனக்கு வருகிறது.நந்தாவிலும்,சேதுவிலும் பிதாமகனிலும் 'பாசம்', 'நட்பு', 'காதல்' என்று சிலதை கலந்தவர், இப்படி முழுக்க முழுக்க வியாபார விஷயங்களே இல்லாமல் படம் எடுத்து இருக்கிறார் என்றால், அது அவருடைய தன்னம்பிக்கை.
ஷங்கருக்கு ஒரு அம்பியையும், மணிரத்னத்துக்கு ஒரு மைக்கேலையும் காண்பித்து கொடுத்தவர் பாலா.தயவு செய்து அவரை திட்டாதீர்கள்.'Not my kind' என்று decentஆக விலகிக்கொள்ள மட்டுமே நமக்கு உரிமை இருக்கிறது.

வசனம் ஜெயமோகன். பல மூத்த பதிவர்கள் 'பின்நவீனத்துவம்' என்று எனக்கு புரியாத ஒரு மொழியில் இவரை வாழ்த்துவதையும், வசைபாடுவதையும் படித்து இருக்கிறேன். வசனம் எனக்கு ரொம்ப பிடித்தது. நிறைய இடங்களில் சிரித்தேன்,பல இடங்களில் 'அட' என்று கை தட்டினேன்.நிறைய வார்த்தைகள் 'பீப்' ஆக மட்டுமே கேட்கிறது. சென்சார்?
ஒரு வேளை அது தான் பின்நவீனத்துவமா???

எடிட்டிங் சுரேஷ் அர்ஸ். பாவம் இவருக்கு வேலை அதிகம் இருந்து இருக்கும்.ஷூட்டிங் முடிந்த சமயத்தில் பாலா நாலரை மணி நேரத்துக்கு படம் எடுத்து இருக்கிறார் என்று படித்த ஞாபகம். ரெண்டே கால் மணிநேரமாக குறைத்து இருக்கிறார். அந்த ஜெயில் குத்தாட்டத்தை வெட்டி இருக்கலாம், பாலா ரசிகனுக்கு அதெல்லாம் தேவை இல்லை.

ஆர்யாவின் உயரமும், உடல் மொழியும், ருத்ரன் கதா பாத்திரத்துக்கு நன்றாக பொருந்துகின்றன. ஆனால் குரலில் ஒரு கம்பீரம் இல்லை. ஒரு வேளை, கஞ்சா அடிக்கும் குரல் இப்படி தான் இருக்கும் என்று பாலா நினைத்து இருப்பாரோ என்னவோ? இந்த வருடத்தின் தேசிய விருதுகளில் ஆர்யா, பூஜா இருவரும் இடம் பெறுவார்கள் என்றே நினைக்கிறேன்.

படத்தின் எந்த காட்சிகளில் எல்லாம் பார்ப்பவர்கள் பதற வேண்டும் என்று இயக்குனர் நினைத்தாரோ, அந்த வேலையை பின்னணி இசை சரியாக செய்கிறது. பாடல்களை நான் இன்னும் சரியாக கேட்க வில்லை.

யாரோ இந்த படத்தை பெண்கள் தவிர்க்க வேண்டும் என்றும் Sify யில் கமெண்ட் போட்டு இருந்தார்கள். அதை வன்மையாக மறுக்கிறேன். 'வாழ்க்கையில் தான் எந்த முதலாளியின் கீழே பிச்சை எடுக்கும் வேலையை செய்ய வேண்டும் என்ற choice கூட இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்' என்ற பாடத்தை take-home ஆக கொடுத்து விட்டு இருக்கிறார் Bala. உதாரணத்துக்கு ஒரு வசனம், 'இவ பிச்சை எடுக்க மாட்டேன்னு முரண்டு பண்ணியதால் முதலாளி கல்லை எடுத்து இவ இடுப்பில் ஓங்கி அடிச்சு இவளை நடக்க விடாம பண்ணிட்டாரு, இதுக்கு தான் பொறக்கும் போதே என்னைய மாறி ஊனமா பொறக்கணும், அந்த விதத்துல நான் ராசிக்காரன்'.
இந்த படத்தை பார்க்கும் பெண்களுக்கு, புருஷன் பிரச்சினை, மாமியார் பிரச்சினை, அலுவலக பிரச்சினை எல்லாம் ரொம்ப silly ஆக தோன்ற ஆரம்பித்து விடும். என்ன, சில காட்சிகளில் மட்டும் கண்ணை மூடி கொள்ள வேண்டும். அல்லது துடைத்து கொள்ள வேண்டும்.

On the lighter side,
பாலா உங்களுக்கு குரல்வளை என்றால் என் இவ்வளவு பிடிக்கிறது?

பின்குறிப்பு: வழக்கமாக செய்யும் எந்த நகைச்சுவை முயற்சியும், இந்த பதிவின் seriousness ஐக் குறைத்து விடக்கூடாது என்பதால் ரொம்ப conscious ஆக எழுதி இருக்கிறேன். உரைநடையில் எழுத முயற்சித்ததற்கும் அதுவே காரணம். அதனால் சில சுவாரஸ்யமான விஷயங்கள் விட்டு போயின. அதை பின்னொரு நாளில் பகிர்ந்து கொள்கிறேன்.

32 comments:

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

நேற்று ஒரு பாடலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை பார்த்ததே இந்த நிமிடம் வரை ஒரு வித கஷ்டத்தை கொடுக்கிறது. நீங்கள் கூறுவது போல் இது எனக்கான படம் இல்லை என்று தோன்றுகிறது.

கண்டிப்பாக என்னால் படம் பார்க்க முடியாது. சேது படத்தையே நான் முழுமையாக பார்த்தது கிடையாது. ஆனால் "நான் கடவுள்" பார்த்து விட்ட என் தோழிகள் எல்லாம் அந்த படத்தில் இருந்து இன்னும் வெளி வரவில்லை. ஆனால் பாலாவின் முயற்சி நன்றாக அமைந்திருக்கிறது என்று சொன்னார்கள்...

படத்தை பார்க்க ஆசை இருக்கிறது. ஆனால் படத்தை பார்க்கும் தைரியம் எப்போது வருகிறது என்று பார்க்கலாம். கண்டிப்பாக முழு கதையை கேட்ட பிறகே படம் பார்ப்பேன்.

விஜய் said...

அப்போ தெகிரியமா படம் பார்க்கலாம்ங்கறீங்க :-)

Priya said...

Same pinch m also nt intrst to watch heavy movies  so I wnt watch ........
Neway big claps for Bala & his team to make a diff try in tamil film industry ...........think enga thala intha movie a pakanum kandipa :D

Truth said...

எனக்கு இந்த படம் ரொம்பவே புடிச்சிருக்கு. ஆனா இங்க க்ளைமேக்ஸ் ல நிறைய வெட்டினது போல இருந்திச்சு. பூஜாவ கொல்றத காமிக்கல, செத்த பிறகு தான் காட்டினாங்க. dead body-a என்ன பண்ணினான்னும் காட்டல. நம்ம ஊருலயும் நிறைய வெட்டிடாங்களா?

Razigan said...

The taste of seeing films matches with me.

indha busy lifela Moonu mani neram entertainmentkkaga okkandu pakum podhu, realitynnu perula intha mathiri screen play venaam.

I prefer Rajni, kamal masala that to see such films. However rarely, I get to see such films.


Nicely written with your trademark comedy punches,..........

ரிதன்யா said...

படம் பாத்துட்டு சொல்றேன்.
அதுவரைக்கும் இதே மனதில் இருக்கட்டும்.

sa.na.kannan said...

நான் இந்தப் படத்தை அதன் குறை நிறைகளோடு ஏற்றுக்கொண்டேன். பெங்களூர்ல உடனே உடனே தமிழ் படங்கள் ரிலீஸ் ஆயிடுதா? எப்படி விடறாங்க

கதிர் said...

முன்குறிப்பு:
ஒரு வேண்டுகோள். தயவு செய்து படம் பார்க்கும் முன் இந்த comment ஐ படிக்க வேண்டாம்; நான் செய்த தவறை நீங்களும் செய்ய வேண்டாம். யாருடைய கருத்தையும் முன் வைத்து ரசிக்க வேண்டிய படமல்ல இது. ஒவ்வொருவரும் உணர்ந்து பார்க்கணும்.

பிரியா அக்கா.. நீங்க சொன்ன மாதிரி, பாலாவை பத்தியோ இளையராஜாவை பத்தியோ விமர்சனம் சொல்ற அளவுக்கு என்னாலையும் போக முடியல. ஆனா ஒன்னு மட்டும் புரியுது, அவங்க ரெண்டு பெரும் தாங்கள் மேதைனு புரிய வைக்கிறதுக்காக கஷ்டபடல, அந்த படம் நம்ம ஆன்மா வரைக்கும் புரியணும்னுதான் கஷ்டபட்டுருகாங்க. அந்த கஷ்டத்துக்கு பலன் இருக்கன்னு கேட்டா 'கை மேல பலன் ' னுதான் சொல்லணும். சரி அப்டி என்னதாண்டா புரிஞ்சிகிட்டான்னு எல்லாரும் கேக்குறீங்க ...சொல்றேன்

1. first பாலா இந்த படத்தை சமியருங்களுக்காக எடுக்கல. ஆனா கடவுளை பத்தி நாம இன்னொரு முறை ஆழமா யோசிக்க வைக்கிறாரு.
2. இந்த உலகத்தில் நாம தினம் சந்திக்கிற மக்களோட வாழ்க்கைதான், ஆனா அவங்கள பத்தின நம்ம கவனமும் கண்ணோட்டமும் என்னனு நம்மளையே மறு பரிசீலனை பண்ண வச்சிருக்கார். அப்படிப்பட்ட மக்கள் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டா மட்டும் போதும், மத்தபடி பரிதாபமெல்லாம் படவேண்டாம்னு நேனைச்சிருக்கார்.
3. பாலாவோட இந்த சிந்தனைகள் எல்லாம் நம்ம மூளைக்கு மட்டும் ஏறினா பத்தாது , ஆன்மாவையும் தொடணும் ... இததான் இளையராஜாவும் பண்ணி இருக்கார். அதுல அவருக்கு நிச்சயம் வெற்றிதான்.
4. எத்தனையோ வேதங்கள், மந்திரங்கள் கடவுளை பத்தி இத்தனை வருஷமா பேசினதை, ரொம்ப சாதரணமா பாலா கையாண்டு இருக்கர்னுதான் தோணுது. கடவுளை அதிகமா விமர்சிக்கிறது கூட நம்மளை சிந்திக்க வைக்கத்தான்.
5. இது எல்லா மதத்துக்கும் பொதுவான படம்தான் .பாலா இந்து மதத்தை தேர்வு பண்ணினது easy&effective a சொல்லத்தான்.
6. எல்லாரும் ஆர்யா இன்னும் நல்ல பண்ணி இருக்கலாம்னு சொல்றாங்க. ஆனா எல்லாரும் பார்கனும்கிறதுக்காக நிறைய scenes cut பண்ணிட்டனால ஆர்யாவோட அகோரமான நடிப்பும் சேந்துதான் cut ஆகி இருக்கும்னு நான் நெனைக்கிறேன். மத்தபடி ஆர்யாவோட charactor importance, பாலாவோட எல்லா படம் போல இதிலும் கடைசியாதான் தெரியுது. அது வரைக்கும் அவரோட actions எல்லாம் just demo தான்.
7. பூஜாவை பத்தி சொல்லனும்னா, இனிமே ரொம்ப பேரு பூஜாவை கவனிக்க ஆரம்பிப்பாங்க... award வரும்னெல்லாம் எனக்கு ஆருடம் சொல்ல தெரியாது... ஆனால் படம் பாத்து முடிஞ்சப்புறம் discuss பண்ணும்போதுதான் பூஜா கிற ஒரு நடிகை நடிசிருக்குறதே நெனப்பு வருது.
8. இது ஒரு கொடூரமான படம்னு யாரவது நெனச்சா pls அத மாத்திகோங்க. இளகுன மனசு உள்ளவங்க கட்டாயம் பாக்க வேண்டிய படம். அவங்கதான் உண்மைலேயே feel பண்ணி பாப்பாங்க. நான் ஒன்னும் ரொம்ப soft nature எல்லாம் இல்ல. ஆனா 'என்னடா இப்படி எல்லாம் இருக்கே ' ன்னு நான் feel பண்ணினேன். பெண்கள் நிச்சயமா பாக்கணும்.
9. நாமெல்லாம் ஏதோ நமக்குதான் ரொம்ப problems இருக்குறத நெனச்சிகிட்டு ரொம்ப சலிச்சிகிறோம். படத்தை பாத்தா தன்னம்பிக்கை வராது மட்டுமில்லாம, கடவுள் மேலயும் நம்ம parents மேலயும் ஒரு விதமான நன்றி உணர்ச்சி வரதை தவிர்க்கவே முடியாது
10.இந்த படத்தோட concept 'மரணம்கிறது ஒரு நிகழ்வு மட்டுமல்ல, உணர்வும் கூட'...அதை எப்படி உணர்கிறோம் என்பதுதான். அதாவது மரணகிறதை ஒரு உணர்ச்சியா வச்சி பார்த்தா, அது சந்தோஷமா சோகமாங்கிறது நமக்கு அமைந்த வாழ்க்கையை பொறுத்தது. பெரும்பாலனவுங்க அதன் சோகம்னு நெனச்சாலும், அத சந்தோஷம்னு நினைக்கிற அளவுக்கு கூட மக்கள் மோசமான வாழ்க்கை வாழ்றாங்கன்னு நமக்கு புரியும். சாவை வரம் அல்லது தண்டனையா பெற வேண்டியவர்களுக்கு வரம்/ தண்டனை கொடுக்கிறதின் முக்கியத்துவம் தான் 'நான் கடவுள்'. அதே ஏனோ தானோன்னு சொல்லாம அப்படிப்பட்ட இரண்டு வகை மனிதர்களிலும் ஒவ்வொரு பகுதியினரை தேர்ந்தெடுத்து ரொம்ப அழுத்தமா, கலப்படமா இல்லாம சொல்லி இருக்கார்.

இன்னும் நிறைய இருக்கு... ஆனா இப்போவே screenplay சொல்லிட்ட மாதிரி ஒரு குற்ற உணர்ச்சி வந்துடுச்சி. அதனால இதோட எல்லாத்தையும் நிறுத்திக்குறேன்.

பின்குறிப்பு: பிரியா அக்கா... உங்க பதிவை முழுசா படிக்காமலேயே நான் டைப் பண்ணின comments இது.... உங்களோட விமர்சனம் என்ன பாதிக்க கூடாதுன்னு தான். ஆனா எவ்ளோ ஒற்றுமை. review எல்லாம் படிச்சிட்டு போய் படம் பாக்கும்போது நா என்ன feel பண்ணினேனோ, அதேதான் நீங்க சொல்லி இருக்கீங்க. நான் படிச்ச சில விமர்சனங்களில் உள்ள குறைகளை படம் பார்த்ததும் நல்லா புரிஞ்சிகிட்டேன். இத படிக்கிற எல்லாரும் தயவு செய்து... படம் பாக்கும்போது இதெல்லாம் மறந்திட்டு open-minded a படம் பாருங்க. அபோதான் உங்க சொந்த கருத்தை உங்களாலேயே உணர முடியும்.

கதிர் said...

ஐயயோ... sorry ka..பழக்க தோஷத்துல பெரிய comment போட்டுட்டேன். இனிமே ஓரளவு சுருக்கமாவே எழுத முயற்சி பண்றேன்...

தவநெறிச்செல்வன் said...

//காசியில் எரியும் பிணங்களை ஆசீர்வதிக்கும் ஒரு அஹோராவையும், தென் தமிழ் நாட்டின் மலைக்கோட்டை கிராமத்தில் இருக்கும் ஊனமுற்ற பிச்சைக்காரர்களையும் பற்றின உண்மைகளை நம்மிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியில் நீங்கள் வேறு என்ன எதிர் பார்க்கிறீர்கள்? //

மிகவும் சரியான பதில்
நிறைய பேரை கலங்கடித்திருக்கிறது என்று நினைக்கிறேன், இந்த எதிர்மறை விமர்சனங்கள் படத்தை வெற்றி பெற வைக்கவேண்டும்

கிரி said...

//'ஒரு ஹைதராபாத் பிரியாணி - extra spice' என்று ஆர்டர் பண்ணி சாப்பிட்டு விட்டு 'இது சரவண பவன் meals மாதிரி இல்லை' என்று complain பண்ணினால் தவறு யார் மீது சொல்லுங்கள்?//

நச்சுன்னு கேட்டு இருக்கீங்க! :-)

நல்ல விமர்சனம்.

//பின்குறிப்பு: வழக்கமாக செய்யும் எந்த நகைச்சுவை முயற்சியும், இந்த பதிவின் seriousness ஐக் குறைத்து விடக்கூடாது என்பதால் ரொம்ப conscious ஆக எழுதி இருக்கிறேன். உரைநடையில் எழுத முயற்சித்ததற்கும் அதுவே காரணம். அதனால் சில சுவாரஸ்யமான விஷயங்கள் விட்டு போயின.//

ப்ரியா இதற்காகவே உங்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

நம்மவர்களுக்கு எதில் எதில் நகைச்சுவை செய்ய வேண்டும் என்ற புரிதலே இல்லை.. தங்கள் பதிவை பலர் ரசிக்க வேண்டும், பார்த்து சிரிக்க வேண்டும் என்று காமெடியாக கூறுவதாக நினைத்து இவரை போன்ற கலைஞர்களை கிண்டலடித்து கொண்டுள்ளார்கள். இவ்வாறு செய்வது அவர்களுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என்பது புரியாமலே செய்து கொண்டுள்ளார்கள்.

இவர்களுக்கு இது காமெடி பாலாவை போன்ற இயக்குனர்களுக்கு அது எத்தகைய அடி என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை.

சரியாக புரிந்து.... சரி விடுங்க, இது பற்றி கூறி சலித்து விட்டது.

SKY said...

இது பாலா எனக்காக எடுத்த படம் போல் தோன்றுகிறது...
ஆர்யாவின் காசி காட்சிகள் முதல் சொந்த ஊர் வரும் வரை எனக்கு என் குடும்பத்தில் (வேறு கோயிலில் வேறு விதமாக - சூழ்நிலைகள் வேறு) நடந்தது போல் கதையின் கரு அமைந்துள்ளது....
(பிதாமகன் தவிர மற்ற இரண்டு படங்களையும் நான் முழுமையாக பார்த்ததில்லை)
பிதாமகன் - நான் கடவுள், இரண்டும் பிறப்பிற்கும் - இறப்பிற்கும் இடையில் நடக்கும் சம்பவங்களை அப்பட்டமாக சித்தரித்து உள்ளார் பாலா...
இப்படிக்கு உங்கள் அன்பு ரசிக நண்பன் - ஆகாய மனிதன்

Anonymous said...

இந்த படத்தில் ஜெயமோகன் தனது மென்மையான RSS கருத்துக்களை கண் அசரும் நேரத்தில் தூவி உள்ளார். மற்ற RSS குண்டர்களை போல் இல்லாமல் தன்னுடைய கருத்தில் உறுதியுடன் நின்று மற்ற மதத்தவர்கள் குறிப்பாக கிறிஸ்துவர்களின் கருத்துக்கு அரோக்கியமான எதிர் விவாதம் செய்பவர். நான் கிறிஸ்துவனாக இருந்தும் சில தானைத் தலைவர்களான சிறு கிறிஸ்துவ அமைப்புகள், தேடித்தேடி மத மாற்றம் செய்வதை எதிர்பவன். இந்த படத்தில் ஒரு கிறிஸ்துவ NUN வார்த்தையால் பூஜா சட்டென்று மதமாற்றம் செய்யப்படுவது போன்று காட்டுவது விவாதத்திற்குரியது. அப்படி கத்தோலிக்கர்கள் பெரும்மளவில் மதமாற்றத்தில் ஈடுபடிருந்தாள் அத்வானி, ஜெயலலிதா போன்றோர் என்றோ கத்தோலிக்கர்கள் ஆகா மாற்றபட்டிருபார்கள். ஆகவே தான் யாரை குறிப்பிட வந்தாரோ அவர்களை தைரியமாக காட்டி இருக்கலாம். -நித்தியானந்

Sivaram Kannan said...

Nice Review and thanks, I won't watch this movie. The brutality in Bala's movie had always been hard to digest for me. Adding this to a Jayamohan story is I don't think I will can bear it for 2.30 hrs.

Good review.

Aravind Perumal said...

I saw the film. i will give 4 star rating. Personally i like the film very much.

In Telugu its 1.40 hour movie.
மனவாடுகள் ரொம்ப வெட்டிடான்களோ....


Aravind Perumal

மணிகண்டன் said...

அனானி தோழா, ஜெமோ மட்டுமா RSS பிரச்சாரம் பண்ணி இருக்காரு ! பாருங்க ப்ரியாவும் தலைப்புல சமஸ்க்ருதம் சேத்து பிரச்சாரம் பண்றாங்க ! விடாதீங்க !

பிரியா, என்னோட பார்வைய பதிவுல சொல்லி இருக்கேன் படிச்சுட்டு பதில் சொல்லுங்க !

http://thodar.blogspot.com/2009/02/10022009.html

உமாஷக்தி said...

விளிம்பு நிலை மனிதர்களின் கையறு நிலையை இவ்வளவு ஆழமாக காட்சிப்படுத்திய பாலாவை நினைக்கும் போது இச்சங்கப் பாடல் நினைவிற்கு வருகிறது


"ஈயென இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று,
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று"

இதன் பொருள், அம்மா தாயே பிச்சை போடுங்கள் என்று பசிப்பிணியால் தன் மானத்தை துறந்து கையேந்துபவரைக் காட்டிலும் கீழானோர் யார் தெரியுமா, இரக்கமேயில்லாமல் அவரிடம் இல்லை போ போ என்று விரட்டுபவன். இது ஒரு நிலை. மற்றொன்று கஷ்டப்படுபவரைப் பார்த்து மனமிரங்கி இந்தா இந்த உதவியைப் பெற்றுக் கொள் என்று சொல்பவன் சந்தேகமில்லாமல் உயர்ந்த எண்ணம் கொண்டவன், எத்தகைய கீழ் நிலையில் இருந்தாலும் மற்றொருவரிடம் உதவி பெற்று மண்ணிற்கு போகப் போகும் இவ்வுடலை வளர்க்க வேண்டுமா என எண்ணி தன்மானத்துடன் 'நன்றி, வேண்டாம்' என மறுப்பது உயர்வானதிலும் உயர்வானது'

பாலா இப்படத்தில் பலதரப்பட்ட மனிதர்களை காட்சிப்படுத்தியுள்ளார். நல்லவன் என நம்பபடுகின்ற சாதரண நடுத்தர வர்க்க மனிதன் ஒருவன், பெற்ற பிள்ளையை காசியில் அனாதை ஆக்குகிறான், கெட்டவன் என அறியப்படுகின்ற முருகன் தினமும் தான் செய்கின்றன தவறுகளை எண்ணி கண்ணீர் விடுகின்றான், குருட்டுப் பெண்ணை கயவர்கள் கையில் சிக்க வைக்காமல் தப்பிக்க உதவுகிறான், அகோரி எனும் பந்த பாசங்களை அறுத்தெறிந்த ருத்ரன் தன் பாதையில் குறுக்கே வந்த அந்தப் பெண்ணுக்கு தனக்கு கற்பிக்கப்பட்ட வழியில் (இத்தனை கொடூரம் தேவையா என எண்ண வைக்கிறார்கள்) அவளை கொல்கிறான். யார் உயர்தவர் யார் தாழ்ந்தவர், எல்லாருமே சூழ்நிலைக்கு உட்பட்டவர்கள், சில சூழல்களால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். கட்டற்ற ஒரு கதாபாத்திரத்தின் மீது பாலாவிற்கு எப்போதும் ஒரு க்ரேஸ் உண்டு. அவரின் மனிதர்கள் எல்லாம் ஆதி மனிதர்கள், அதி சுதந்திரமானவர்கள். பாலா எனும் ப்ராண்ட்டில் இத்தகைய மனிதர்கள் raw materials ஆகிவிட்டார்களா, அல்லது சேரும் இடத்தில் சரியாக சேர்ந்தார்களா என்பதை காலமும் ரசிகர்களும்தான் சொல்லவேண்டும்.

shyam said...

what aray saying in the court when judge asking him about what happend to that malayali man?

usually agoras are eat the dead bodies rite?
why its not shown in the film?

shyam said...

ஆர்யாவிடம்
நீதிபதி " அவரு இப்போ எங்க இருக்கார் ? என்று கேக்கும் போது அதற்கு ஆர்யா என்ன சொல்கிறார் ?

பொதுவாக அகோர எல்லாம் நர மாமிசும் சாப்பிடுவார்கள் தானே அதை பாலா படத்தில் சொல்லவில்லியே ?

ப்ரியா said...

இராஜலெட்சுமி பக்கிரிசாமி,Priya,

Thanks for commenting.

விஜய்,
தெகிரியம் இருந்தா படம் பாருங்க.

Truth,
Yes, same here.

ப்ரியா said...

Razigan,
//Nicely written with your trademark comedy punches,..........

thanks. But I thought, I refrained from being comical.
இல்ல நான்லாம் எழுதுறதே காமெடி ன்னு சொல்ல வரீங்கள???

ரிதன்யா,
படம் பாத்துட்டீங்களா?

ப்ரியா said...

sa.na.kannan,
நன்றி.

கதிர்,
உங்க கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.
இந்த படத்த பத்தி பெரிசா தான் எழுதணும்.
"நான் கடவுளுக்காக காத்து இருக்கிறேன்" அப்டி இப்டி ன்னு build up குடுத்துட்டு, கடசில "என்ன மாயம் செய்தாய் பாலா " என்று நாலே லைன் ல விமர்சனம் எழுதுறக்கு நம்ம என்ன ச.ந.கண்ணனா ???

ப்ரியா said...

தவநெறிச்செல்வன்,
முதல் வருகை. நன்றி.
மீண்டும் வருக.

கிரி,
//நச்சுன்னு கேட்டு இருக்கீங்க! :-)

நல்ல விமர்சனம்.//
நன்றிங்க.

ப்ரியா said...

//இப்படிக்கு உங்கள் அன்பு ரசிக நண்பன் - ஆகாய மனிதன்//

நன்றி. ஆனால் எனக்கெல்லாம் ரசிகன் ன்னு சொல்லுறீங்க. தெளிவா தானா இருக்கீங்க?
By the way, nice name.

ப்ரியா said...

நித்தியானந்
//ஆகவே தான் யாரை குறிப்பிட வந்தாரோ அவர்களை தைரியமாக காட்டி இருக்கலாம். -//
எனக்கு புரிய வில்லை.
மேலும் படத்தில் நிறைய எடிட்டிங் ல போய் விட்டதால், விட்டு போய் இருக்கலாம்.
censor certification அது இது என்று பிரச்னை இருந்து இருக்கலாம்.

ப்ரியா said...

Sivaram Kannan,
Thanks.
Only the begger's episode is taken from JeMo's novel.

Aravind Perumal,
Thanks for your first visit and comment.

ப்ரியா said...

மணிகண்டன்,
//அனானி தோழா, ஜெமோ மட்டுமா RSS பிரச்சாரம் பண்ணி இருக்காரு ! பாருங்க ப்ரியாவும் தலைப்புல சமஸ்க்ருதம் சேத்து பிரச்சாரம் பண்றாங்க ! விடாதீங்க !//

என்னது இது? ஒரு fancy காக, படத்தோட caption ஐ use பண்ணேன்.
உங்கள் விமர்சனம் நல்லா இருக்கு. பகிர்தலுக்கு நன்றி.

ப்ரியா said...

உமாஷக்தி,

நன்று வருகைக்கும், கருத்துக்கும்.
பா.ரா பக்கத்தில் இருந்தே தங்கள் கருத்தை படித்து vitten.:-)
நீங்க இங்கயும் பகிர்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி.

ப்ரியா said...

Shyam,
//பொதுவாக அகோர எல்லாம் நர மாமிசும் சாப்பிடுவார்கள் தானே அதை பாலா படத்தில் சொல்லவில்லியே ?//
நானும் கிளைமாக்ஸ் அப்டி ஏதோ இருக்க போவதாக தன் சிஃபியில் சில மாதங்களுக்கு முன் படித்து என்னுடைய 'சினிமா' பக்கங்களில் பகிர்ந்தும் கொண்டேன்.
May be, ரொம்ப violent ஆக இருக்கும் என்பதால் fine-tune(??) பண்ணி இருக்கலாம்.

மணிகண்டன் said...

****
என்னது இது? ஒரு fancy காக, படத்தோட caption ஐ use பண்ணேன்.
உங்கள் விமர்சனம் நல்லா இருக்கு. பகிர்தலுக்கு நன்றி
****

ha ha ha...but i definitely did not meant you ! You were writing scoops about this movie for years !!

ப்ரியா said...

மணிகண்டன்
//but i definitely did not meant you ! You were writing scoops about this movie for years !!
//
OK, Believed.:-)

அகநாழிகை said...

வாழ்க... "நான் (மட்டுமே) கடவுள்" பாலா...!!