நீங்க என்ன சூப்பர் ஸ்டாரா?? இவ்ளோ கேப் விடறீங்க? - ச.ந.கண்ணன்.
அடுத்த பதிவாவது சினிமா, டிவி, சொந்தக்கதைன்னு இல்லாம ஏதாவது உருப்படியா எழுத பாரு. இல்லன்னா தொலைச்சுடுவேன். - சுபா (எனக்கு வேற ஏதும் எழுத தெரியாது டீ)
என்ன பதிவு எழுதுறத நிறுத்திட்டியா? ? திருந்திட்டே போலிருக்கு - இத சொன்னது யாருன்னு நான் சொல்ல வேண்டியது இல்லை.
மெயிலில் நலம் விசாரித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி. இணையத்தின் மீது என்னவோ ஒரு boredom கொஞ்ச நாளா...காரணம் தெரியலை. எது எப்படியானாலும் விடாமல் படித்து விடும் சில முக்கியமான பக்கங்களை கூட எட்டி பாக்கலை. பார்க்க வேண்டும் என்ற "urge" கூட ஏற்படாதது எனக்கே ஆச்சர்யம். வாசிப்பே இந்த லட்சணம்னா எழுதுறத பத்தி சொல்லணுமா?
இடைப்பட்ட இந்த நாட்களில் பெரிதாக ஒண்ணும் நடக்கலை. ஒரு மூணு நாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தத தவிர. வந்ததும் வைரல் infection இல் குடும்பமே படுத்து எழுந்தோம். முதலில் படுத்தது அவர். கடைசியில் எழுந்தது நான்.
'சிவா மனசுல சக்தி' பாத்தோம். என் மனசுல ஏதும் நிக்கலை.
"ஸ்ரீரங்கத்து கதைகள்" தொகுப்பு, காலை நேர டிராபிக் சிக்னல்களை இனிமையான நிமிடங்களாக மாற்றி கொண்டு இருக்கிறது.
இதுவும் கடந்து போகும் என்று சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் "This too shall pass" .
இணையத்தின் மீது எனக்கு இருந்த மயக்கம் கடந்து விட்டதா, அல்லது இப்போது ஏற்பட்டு இருக்கும் இந்த அலுப்பு கடந்து போகுமா, என்று தெரிய வில்லை. We shall see.
நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்கன்னு நம்பறேன். God Bless.
Questions and Observations on Sabarimala
6 years ago
6 comments:
முத ஆள் துண்டு போட்டுட்டு போறேன்
வந்து படிக்கறேன்.
தல ஒரு வழியா தலைய காட்டியாச்சு :) :)
//இணையத்தின் மீது எனக்கு இருந்த மயக்கம் கடந்து விட்டதா, அல்லது இப்போது ஏற்பட்டு இருக்கும் இந்த அலுப்பு கடந்து போகுமா, என்று தெரிய வில்லை.//
இப்போது இருக்கும் அலுப்பு கடந்து போகும்.
//நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்கன்னு நம்பறேன்.//
நாங்க நல்லா தான் இருக்கோம். u take care. அடுத்த அடுத்து பதிவுகளை எதிர்பார்த்து....
Fans Club :) :) :)
செல்லாது செல்லாது.
***
This too shall pass ?
***
It might. who knows ? Let us see.
திரும்ப திரும்ப போட்டு சாத்தறீங்க. ம்ம்....இதே மாதிரி ஒரு கருத்தைதான் ஜெயஸ்ரீ(ஸ்ரீ இப்ப ஒகே. NHM யூஸ் பண்றேன் இப்ப) அவங்க பதிவுல நானும் பின்னூட்டமா போட்டேன். என்னவோ போங்க. திஸ் டு பாஸ் பீலிங்ஸ் இப்போ எல்லாம் அதிகமாத்தான் வருது. ம்ம்..ம்..
இபோதான் சில நாட்களுக்கு முன்னால இட்லி வடை link பார்த்து வுங்க தளத்துக்கு வந்தேன். உங்களின் இந்த பதிவு பார்த்து ஆச்சர்யமா இருந்தது. நாம படிக்கச் ஆரம்பத்து வுங்களுக்கு ராசி இல்லையோ என்று. ஆனாலும் உங்களின் பழைய பதிவுகளை பார்த்து வாசித்து வருகிறேன். அதை முடிப்பதற்குள் நீங்கள் எழுத ஆரம்பித்து விடுவீர்கள் என்று நம்புகிறேன். அருணை கவனிக்கவே நேரம் போதலியா?
Post a Comment