Monday, 29 December 2008

Three in one.

காட்சி 1:
நேரம் : ஒரு மாதத்துக்கு முன்
இடம் : எங்க வீட்டு ஹால்.
பங்கேற்போர் : ப்ரியா, கதிரவன்

" நான் 'A Wednesday' பாத்துட்டேன்..."

"எப்டி???எங்க??எப்போ??"

"wait, ஒரே நேரத்துல இத்தனை கேள்வியா?...அன்னைக்கு சனிக்கெழமை நீங்க செல்வா கல்யாணத்துக்கு சென்னை போய்ட்டீங்கள்ல??? அப்போ மதியானம் அர்ஜுனை தூங்க வெச்சுட்டு, லேப்டாப் ல பாத்தேன். எல்லாரும் சொல்லி வெச்ச மாறி.....'its a must watch' ன்னு சொன்னாங்கல்ல.........அதான் பொறுக்க முடியாம பாத்துட்டேன்."

"அது சரி, ஆனா படம் எங்க இருந்து கெடச்சுது....?"

"எங்க ஆபீஸ் ல share folder ல போட்டுருந்தா ஒரு பொண்ணு...அத copy பண்ணி கொண்டு வந்தேன்...."

"அட பாவி....நெட்வொர்க் ஐ இதுக்கு எல்லாம (mis)use பண்ணுவாங்க???"

":-)"

"........."

"நீங்களும் அந்த படம் பாக்கணும்.....உண்மைலயே நல்லா இருந்துச்சு....its based on mumbai blast. நஸ்ருதீன் ஷா வும், அனுபம் கேரும் தான் casting. படத்துல no commercials....Just matter, மொத்த படமுமே ஒரு நாள்ல முடியுற மாறி ஸ்டோரி தான். "

"................"

"actually not very tough hindi....unlike Omkaara.....நல்லா புரியும்....delete பண்ணாம தான் வெச்சுருக்கேன்....பாக்கணும் னா சொல்லுங்க...லேப்டாப் எடுத்துட்டு வரேன்"

".........."

"அங்க அங்கே light காமெடி...ஒரு சீன் ல அனுபம் கேர் வந்து ஒரு சீரியஸ் mission ல இருப்பாரு..ஒரு call trace பண்றதுக்காக police, hackers எல்லாரும் ரெடி யா இருப்பாங்க...அப்போன்னு பாத்து, அவருக்கு "we are calling from ICICI bank regarding credit card ன்னு ஒரு call வரும் பாருங்க....செம சீன் அது..."

"............."

"அப்றோம் I am A drop out by choice sir" ன்னு அந்த hacker கலக்குற scene....."

"அடங்குறியா?"

"...................."


*************************************************

காட்சி 2:
நேரம் : ரெண்டு வாரத்துக்கு முன்னாடி
இடம் : எங்க வீட்டு balcony
பங்கேற்போர் : ப்ரியா, கதிரவன்

"உங்கள download பண்ணி தாங்க, DVD வாங்கி தாங்க ன்னு கேட்டு கேட்டு bore அடிச்சு போயி, நானே எங்க டீம் கணபதி கிட்ட DVD கேட்டு வாங்கி, 'Taare Zameen Par" பாத்துட்டேன்.

"இது எப்போ??"

"அன்னைக்கு நீங்க team-outing போய்ட்டீங்கள்ல? அப்போ நைட் பாத்தேன்"

"நல்லா இருந்துச்சா?"

"நல்லா இருந்துச்சாவா???? என்ன படம் அது....சான்ஸ் ஏ இல்ல...."

"நீ அமீர் கான் எது பண்ணாலும் நல்லா இருக்குன்னு தான் சொல்வே....Dil Chahta hai என்ன ஒரு இருவது தரம் பாத்து இருப்பியா???"

"நீங்க மட்டும் நல்லா இல்லன்னா சொல்வீங்க??? கஜினி படம் பத்தி ஏதாவது ஓரத்துல scoop news வந்தா கூட படிச்சுட்டு பத்து பேருகிட்ட சொல்லி, அவங்க பண்றது பத்தாதுன்னு உங்க பங்குக்கு நீங்க promote பண்றீங்க....நானே அமீருக்கு promotion charges அனுப்பலாம் ன்னு இருக்கேன்"

"அது எங்க ஆளு அசின் அவங்களுக்காகவும் , அப்றோம் நம்ம டைரக்டர் murugadoss அங்கே போய் ஒரு project பண்றாரு, படம் நல்லா போணுமேன்னு ஒரு எண்ணத்துல செய்றேன்"

"ஒத்துக்க மாட்டீங்களே??? சரி அது இருக்கட்டும்.....அந்த படம் பாக்குறப்போ நான் எப்டி தெரியுமா அழுதேன்...."

"ஹிஹிஹி.....நீ அழுததெல்லாம் சேத்தி இல்ல.....காதலுக்கு மரியாதை கிளைமாக்ஸ் க்கே கண்ணீர் சிந்துன ஆளு நீ"

"இந்த படத்துல அந்த குட்டி பையன் அழுறப்போ, உங்களை மாறி பாறை நெஞ்சுள்ளவனுக்கு கூட கண் கலங்கும் தெரியுமா???"

"சரி சரி, ஏதும் சொல்லாதே....நான் படமே பாத்துக்குறேன்.....என்னை விட்டுட்டு பாத்துட்டே இல்ல....போ போ "

"நீங்க மட்டும் என்னை விட்டுட்டு 'பொய் சொல்ல போறோம்' PVR ல போய் பாத்தீங்கல்ல...?....நீங்க Taare Zameen Par எப்போ பாப்பீங்க???உங்க கூட உக்காந்து நானும் இன்னொரு வாட்டி பாக்கணும்"

"நீ திருந்தவே மாட்டே"

**********************************

காட்சி 3:
நேரம்: ரெண்டு நாளைக்கு முன்னாடி.
இடம்: Transit, Forum Mall
பங்கேற்போர் : ப்ரியா, கதிரவன், கதிரவனின் அக்கா, அக்கா கணவர், அக்கா மகள்.

"என்ன படம் புடிச்சுதா????"

"ஓவர்ஆல் நல்லா இருந்துச்சு....சூர்யா பிரம்மிக்க வெச்சுட்டாரு.....6 packs கூட இப்போ எல்லாரும் பண்றாங்க....ஆனா அந்த ஸ்கூல் பையன் மாறி வராரு பாரேன்....கலக்கிட்டாரு...."

"ஆனா நீ ஏண்டா எங்களை ஒரு படம் பாக்க இவ்ளோ தூரம் அலைய வெச்சே...பஸ் லையும் ஆட்டோலயும் மாறி மாறி Forum வந்து சேர்றதுக்குள்ள..."

"பின்ன சும்மாவா?? PVR ல படம் பாக்குறதுன்னா....நாங்களும் மூணு வருஷம் கழிச்சு இப்போ தான் PVR வந்துருக்கோம்..."

"ஆனா இந்த படத்துல flash back மாறி line by line கதை சொல்லுறது கொஞ்சம் கடுப்பு.....அதிலும் 'நான் பைக் ல போன நாட்கள்" ன்னு background ல சொல்லுறப்போ, சூர்யா பைக் ஓட்டுறாரு...:-) ரேடியோ நாடகத்துல எல்லாம், நம்ம கேக்க மட்டுமே முடியும் என்பதால், ஒரு charecter scene ல enter ஆறதை visualise பண்ண வெக்குறதுக்காக...."இதோ அவரே வந்துட்டாரே" அப்டின்னு டயலாக் வெப்பாங்கள்ல....அந்த மாறி.... "

"சமீரா ரெட்டி தான் கண்ணுக்குள்ளயே இருக்கா"

"ஆமா எனக்கு கூட பொண்ணுங்க குத்து வெளக்கு மாறி இருக்குறது விட, இப்டி ஒயரமா , smart ஆ, கண்ணுல வெக்கத்துக்கு பதிலா, தன்னம்பிக்கையை தேக்கி வெச்சுட்டு இருக்குறது தான் ரொம்ப புடிக்கும்...சமீரா ரெட்டி அந்த ரகம், எனக்கும்
கண்ணுக்குள்ளயே இருக்காங்க,"

"இவ கிட்ட இதான் பிரச்சனை, நான் ஏதாவது பொண்ணு பிடிக்கும் ன்னு சொன்னா ideally இவளுக்கு கோவம் தான வரணும்? அத விட்டுட்டு இவ எனக்கு மேல அந்த பொண்ண ரசிக்க ஆரம்பிச்சுடுவா....the whole மஜா is lost. I doubt if its her strategy."

":-))"

"எனக்கு இந்த கேக் வேணாம், புடிக்கலை"

"சரி அத நாங்க சாப்பிடுக்குறோம், நீ அப்பா கூட போய் வேற ஏதாச்சும் வாங்கிக்கோ, kathir, இங்க காபி நல்லா இருக்குடா..."

"ஒரு coffee 25Rs, ஆனா இப்டி relaxed ஆ உக்காந்து சாப்பிட முடியுதுல்ல....also quantity is good."

"பாட்டெல்லாம் நல்லா இருக்குல்ல..."

"ஆமா, ஆனா இப்டி ஒரு படத்துக்கு அஞ்சலை பாட்டு தேவையா தெரியலை....நல்லா வேளை...ஒரு item-girl சேந்து ஆட விடலை....அது வரைக்கும் ஓகே...அப்றோம் அந்த பாட்டு end ல சூர்யா ஒரு restaurant ல இருந்து வெளிய வருவாருல்ல....அத பாத்து எனக்கு இந்த பதிவு தான் ஞாபகம் வந்துச்சு"

"குட்டி சூர்யா பெரிய சூர்யாவை அப்பா அப்பா ன்னு கூப்பிட்டு இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும் ல...daddy dad ன்னு எல்லாம் கூப்பிடுறது கொஞ்சம் மனசுக்கு ஒட்டலை..."

"ராஜி இந்த படம் பாத்தப்போ இத பத்தி நெனச்சேன்னு சொன்னாங்க."

*******************************************************
With that, this is wishing for you, a happy,healthy and peaceful new year.May God shower love and peace upon all of us.
******************************************************

33 comments:

Anonymous said...

ஆ! எனக்கே லிங்கா? :-) 3 Times னு ஒரு தைவான் படம். அதுல இந்த மாதிரிதான் மூணு கதைகள். வெவ்வேறு காலகட்டத்துல நடக்கும். மூணுலயும் ஒரே ஹீரோ, ஒரே ஹீரோயின். உங்களோட இந்தக் கட்டுரையைப் படிச்சதும் அந்தப் படத்தோட ஞாபகம் வந்துருச்சு. :-) அடிக்கடி world movies சேனல்ல போடுவான். இல்ல உங்க ஆபீஸ் share ல இருந்தா மறக்காம பாருங்க.

ப்ரியா கதிரவன் said...

கண்ணன்,
//இல்ல உங்க ஆபீஸ் share ல இருந்தா மறக்காம பாருங்க. //

என்னா வில்லத்தனம்.....?

Truth said...

'A wednesday' - உண்மையாவே நல்ல படம்.
'taare zameen par' - இந்த படத்த யாரும் கண் கலங்காம இருக்க முடியாது.
விஜய், பரத், பேரரசு எல்லாம் இந்த படங்கள் பாத்தா அவங்களுக்கும் தமிழ் பட துறைக்கும் நல்லது.

'வாரணம் ஆயிரம்' - எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்னு. சூர்யா கலக்கிட்டாரு.

ஆஃபீஸ் shared driveல படம் எல்லாமா வெச்சிருக்காங்க? ஆஹா... :)

ரிதன்யா said...

//"இவ கிட்ட இதான் பிரச்சனை, நான் ஏதாவது பொண்ணு பிடிக்கும் ன்னு சொன்னா ideally இவளுக்கு கோவம் தான வரணும்? அத விட்டுட்டு இவ எனக்கு மேல அந்த பொண்ண ரசிக்க ஆரம்பிச்சுடுவா....the whole மஜா is lost. I doubt if its her strategy."

":-))"//
ஏங்க நல்ல டாக்டரா பாருங்க!!!!!!

Anonymous said...

//இவ எனக்கு மேல அந்த பொண்ண ரசிக்க ஆரம்பிச்சுடுவா...//

ஆனா நீங்க ஃபெடரர் புடிக்கும்னு சொன்னப்போ அவர் காதுல புகை வந்தது இல்லை! அப்புறம், டயலாக்ல ஸ்மைலி போட்ட முதல் ஆளு நீங்கதான்.

ப்ரியா கதிரவன் said...

வாங்க ஏகலைவன்.
இதுக்கெல்லாமா டாக்டர் கிட்ட போவாங்க??
என் ஊட்டுக்காரர் கூட தான் சச்சின் வெளாடும் போது சோறு தண்ணி பொண்டாட்டி புள்ள எல்லாரையும் மறந்து டிவி யே கதி ன்னு உக்காந்துருக்காரு...
அதெல்லாம் ரசனைங்க....தப்பா பேச கூடாது...கன்னத்துல போட்டுக்கோங்க...

:-))

ப்ரியா கதிரவன் said...

Truth,

//ஆஃபீஸ் shared driveல படம் எல்லாமா வெச்சிருக்காங்க? ஆஹா... :)
//

உங்க ஆபீஸ் ஷேர் லையும் தேடி பாருங்க...
படம் பேர் போட்டு தேட கூடாது....ஏதாவது ப்ராஜெக்ட் keywords போட்டு தேடுங்க, கெடைக்கும்.

ப்ரியா கதிரவன் said...

Kannan,

Thats not Roger.
Dhoni...
hehehe
:-)

//அப்புறம், டயலாக்ல ஸ்மைலி போட்ட முதல் ஆளு நீங்கதான்.
//
smiley போடலன்னா.... 'அப்போ நான் சிரிச்சேன்' அப்டின்னு எழுதி இருக்கணும்....நெனச்சு பாருங்க எப்டி இருந்து இருக்கும் ன்னு...:-)

*Kathir* said...

பிரியா வோட பதிவுகளைவிட அதுல வர comments எல்லாம் ரொம்ப interestinga ஆகிகிட்டே போகுது.. மக்கள் கேக்குற கேள்வியும் அதுக்கு ப்ரியாவோட வெளக்கமும்.. ங்கொக்காமக்கா

ப்ரியா கதிரவன் said...

தம்பி கதிர்,
//
பிரியா வோட "பதிவுகளைவிட" அதுல வர comments எல்லாம் ரொம்ப interestinga ஆகிகிட்டே போகுது//

உள்குத்து உள்குத்தும்பாய்ங்களே??? அது இதானாய்யா???

பொங்கல் க்கு டிக்கெட் எடுத்து இருக்க மாட்டீங்களே???

ப்ரியா கதிரவன் said...

தம்பி கதிர்,
//
பிரியா வோட "பதிவுகளைவிட" அதுல வர comments எல்லாம் ரொம்ப interestinga ஆகிகிட்டே போகுது//

உள்குத்து உள்குத்தும்பாய்ங்களே??? அது இதானாய்யா???

பொங்கல் க்கு டிக்கெட் எடுத்து இருக்க மாட்டீங்களே???

*Kathir* said...

அய்யடா.. நான் நெனச்சேன் நீங்க இப்டித்தான் யோசிப்பீங்கன்னு :( அதனாலதான் ரொம்ப யோசிச்சி இந்த வார்த்தை use பண்ணினேன்.. உங்ககிட்ட தப்பிக்க முடியுமா? "உங்க பதிவுக்கு comments எழுதுரவங்களே இவ்ளோ interesta எழுதின, அப்போ அந்த பதிவு எவ்ளோ interesta இருக்கும்... " - இப்படி புரிந்து கொள்ளவும். ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணா கட்டுதே

ப்ரியா கதிரவன் said...

//அய்யடா
//

என்ன அசின் மாறி பேசறீங்க?(M.குமரன்....)


//ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணா கட்டுதே//
எங்க ஆளு இந்த கமெண்ட் படிச்சா சொல்லுவாரு..."வடிவேல் நம்ம தமிழ் மக்கள் கிட்ட ஏற்படுத்தி இருக்குற தாக்கம் தான் எத்தனை" அப்டின்னு....

*Kathir* said...

ஒ அதுவா ?? (இது கூட போக்கிரில அசின் பேசுற மாதிரி இருக்குமே ).. எனக்கு கொஞ்சம் mallu friends உண்டு. அதோட தாக்கம்தான்... பொங்கல்... ticket... அது ஒரு கொடுமை ப்ரியாக்கா.. என்னைக்கும் இல்லாத திருநாளா, எங்க அப்பாவ ரொம்ப கஷ்டப்படுத்தி sundayku return ticket eduthen. யார் கண்ணு பட்டுச்சோ , leave கெடைக்கல. saturday office வேற வச்சிடாங்க. இப்போ அந்த டிச்கேட்லயே வரலாமா இல்ல cancel பண்ணிட்டு unreservedla வரலாமான்னு யோசிச்சிகிட்டு (குழம்பிகிட்டு ) இருக்கேன் ... எதையும் 'ப்ளான்' பண்ணினா இப்படித்தான் ஆகும்.. நம்ம வழிதான் எப்பவும் சரி

Anonymous said...

நாங்கல்லாம் Share Folders ல படத்த வைச்சு யாராவது அத கண்டுபிடிச்சு ....தேவையா எங்களுக்கு. என்னோட friends மாட்டி இருக்காங்க (பிரியா அக்கா, project name போட்டு வைச்சு தான் மாட்டுனாங்க) . அதுல இருந்து direct a online la தான் பார்ப்போம்.

நான் VA ஒரு பத்து தடவ பார்த்தாச்சு...
எனக்கு படம் ரொம்ப பிடிச்சது... பிடிச்ச அத்தனை யும் இருக்கிற படம்னு சொல்லலாம்.

Sameera, Sameera Voice - Chinmayi, Simran, Surya, Story, Gowtham மேனன் (இதே order la. பிரியா அக்கா, நாங்களும் உங்கள மாதிரியே போடுறோம்ல)

ஆனா நிறைய பேருக்கு படம் பிடிக்கல.

நான் latest a ரொம்ப expect பண்ணி ஏமாந்த படம் - அபியும் நானும்.
திரிஷா இன்னும் நடிச்சிருக்கலாம்.

Asin ரொம்ப நாளா தமிழ் பக்கம் வராதது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு

Priya akka, உங்க comments part பார்க்கும் போது உங்களுக்கு ஒரு Fans Club ஆரம்பிக்கலாம் போல இருக்கே.

*Kathir* said...

ப்ரியாக்கா..பாத்தீங்களா - நா சொன்னது சரிதான்..

ப்ரியா கதிரவன் said...

Kathir,

//'ப்ளான்'//

:-)))))))))))))))))))))))))

வாங்க ராஜி,

நீங்க இத்தனை நாளா இல்லாம synapse ல ஏதோ ஒன்னு miss ஆனா feeling...

Anonymous said...

Priyakkaa...
Superba irukku!
The way you have spoken about these three films, rather than just describing the whole thing!
:)
Rajikkaa is not well these days, seems like she doesn't take care of herself much!
hmmm!!!
:(
Get well soon Rajikkaa...
:)

butterfly Surya said...

வாழ்வென்னும் வங்கியில்
வரவாகும் புத்தாண்டு வைப்புத் தொகை

வளம் பெருக.. துயர் மறைய..


புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சூர்யா
butterflysurya.blogspot.com

ப்ரியா கதிரவன் said...

Mathu, Long Time no see....How are you?
Thanks for visiting and commenting.

ப்ரியா கதிரவன் said...

வண்ணத்துபூச்சியார் alias சூர்யா,

Thanks for such a nice wish.

Colourful name!!!! May you have an equally colourful new year.

butterfly Surya said...

Yes Priya. Life is short, Let it be sweet.

If you have time & like movies, then just visit my blog to add comments.


Hearty wishes.

Anonymous said...

:)
I was following your blog akka...
I'm good, hope the same with you Mashah Allah!
Have a Wonderful Year ahead!
:)

Maddy said...

ஒரு ரெண்டு நாள் இந்த பக்கம் வரலை! சினிமா ரிவீவ் 3. அம்மாடியோ!!! அசின்தீடீங்க!!! ச்சே! அசதீடீங்க!!! கஜினி பார்க்காத எபெக்ட்!!

இவ கிட்ட இதான் பிரச்சனை, நான் ஏதாவது பொண்ணு பிடிக்கும் ன்னு சொன்னா ideally இவளுக்கு கோவம் தான வரணும்? அத விட்டுட்டு இவ எனக்கு மேல அந்த பொண்ண ரசிக்க ஆரம்பிச்சுடுவா....the whole மஜா is lost. I doubt if its her strategy."

நீங்க பயங்கரமான ஆளு தான்!!! என்ன ஒரு strategy??!!! சச்சின் விளக்கும் உங்க பின்னோடதில படிச்சேன். ஆனாலும் உங்க ரசிப்பு( பொண்ணுங்களை) என்னோட நண்பரோட wife-au ஞாபக படுத்துது!! ரோடு ல அவரை முன்னாடி விட்டுட்டு இவங்க பின்னாடி போவாங்க?? ஏன் ன்னு கேட்டா, எப்படியா பட்ட பொண்ணுங்களை/ டிரஸ் இவர் பார்க்கிறார் ன்னு தெரிஞ்சு கிட்டா நம்மளும் அப்படி இருக்க முயற்சி பண்ணலாம்ன்னு சொல்லுவாங்க.

புது வருஷ வாழ்த்துக்கள் உங்களுக்கு, கதிரவன் & அர்ஜுன்க்கு

Anonymous said...

Priya.... 3 in 1 is very nice. kadhalukku mariyadhaiku azhudha ala ne..sollave ella....:)

ப்ரியா கதிரவன் said...

Subhaaaaaaaa,

You????????????

வசிஷ்டர் கையால வாழ்த்து வாங்கின மாறி சந்தோஷமா இருக்கு, நீ நல்லா இருக்குன்னு சொன்னது....:-)

Thanks for following me up.

ப்ரியா கதிரவன் said...

Maddy,

Thanks for your wishes and comment.

ப்ரியா கதிரவன் said...

Thanks Madhu and butterfly Surya.

Anonymous said...

Priya... onakke konjam edhu 2-3 macha theriyala.....

Anonymous said...

த்ரீ இன் ஒண்ணு னா மாசத்துக்கு மூணு போஸ்ட் மட்டும் போடக்கூடாது. உங்க ரசிகர்களை இப்படி ஏங்க வைக்கலாமா? பாவமில்லையா? சாமி கண்ணைக் குத்துமில்லையா? என்ன, ஆபிஸ் வாசல்ல வந்து போராட்டம் நடத்துணுமா?

Anonymous said...

சேதி தெரியுமா, பிரியா கதிரவன் பிளாக் எழுதினாதான் லாரி ஸ்டிரைக்கை வாபஸ் வாங்குவோம்னு லாரி உரிமையாளர்கள் அறிக்கை வெளியிட்டிருக்காங்க.

Anonymous said...

Priya Akka..... Post ur next write up soon....

Fans Club wait pannuromla

ப்ரியா கதிரவன் said...

கண்ணன், ராஜி,

இன்னுமா இந்த ஒலகம் என்னைய நம்புது???