"என்ன இன்னைக்கு fish fry எப்டி இருக்குன்னு சொல்லவே இல்ல...?"
"ஒவ்வொரு வாட்டியுமா சொல்ல முடியும்? இப்போல்லாம் தான் நீ standard ஆ ரொம்ப நல்லா வெக்குறியே???"
அட அப்படியா ......கால் தரையில நிக்காம பறக்க ஆரம்பிச்சுடுச்சு....
ஓ! இதான் நிலாவா......பறந்து அவ்ளோ தூரமா வந்துட்டேன்....??
அப்டியே flash back , மூணு வருஷம் முன்னாடி போய்,
"இதான் உங்க ஊருல வெங்காய சட்னி யா?? எனக்கு பொடி வெச்சுடு"
"நான் ஆபீஸ் லேயே லஞ்ச் (மட்டுமாவது ஒழுங்கா) சாப்ட்டுக்றேன்"
இதெல்லாம் நெனச்சு பாத்து கீழ எறங்கிட்டேன்....
கல்யாணம் ஆனா புதுசுல ஒவ்வொரு சாப்பாடு டைம் லயும் பெரிய டென்ஷன் எனக்கு.....ஏன்னா என் சமையல் அவருக்கு அவ்ளோவா, இல்ல இல்ல அவ்ளோவும் புடிக்கலை...
அப்படி இருந்த நான் ....எப்புடி ஆயிட்டேன்...(படிக்க...பதிவின் முதல் மூன்று வரிகள்)
எனக்கு நல்ல பெயர் வாங்கி குடுத்த சில recipes இங்க share பண்ண படும்.
தேவையான பொருள்கள்:
மீன் துண்டுகள்.(படத்தில் இருப்பது salmon fish),
மிளகாய் தூள் 1ஸ்பூன்
மஞ்சள் தூள் ½ஸ்பூன்
மல்லி தூள் 1ஸ்பூன்
சீரக பொடி, மிளகு பொடி, சோம்பு பொடி தலா ½ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
புளி கரைசல் நீர்க்க கரைத்து கொள்ளவும்.
எல்லா பொடி வகைகளையும் கலந்து புளி கரைசல் ஊற்றி பிசைந்து அதை மீன் துண்டுகளில் தடவி முப்பது நிமிடங்கள் ஊற வைக்கவும்.
செய்முறை
செய்முறை பெரிசா இல்ல...கடாய் ல எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் மீன் துண்டுகளை அதில் போட்டு, அடுப்பை sim ல வெச்சு, மீன் துண்டுகளை திருப்பி திருப்பி விட்டு பொரிந்தவுடன் எடுக்கவும்.
குறிப்பு:
salmon இயல்பிலேயே சுவை மிகுந்தது....அதனால இந்த simple மசாலா உபயோகித்து என்னை போன்ற அரை வேக்காடு சமையல் காரர்கள் கூட நல்ல பெயர் வாங்கலாம், நம்ம ஊருல வஞ்சிர மீன் கிட்ட தட்ட இதே போல் சுவையாக இருக்கும்.
salmon மீன் நிறைய கொழுப்பு சத்து மிகுந்தது. அதனால் fry பண்றப்போ அதுவே நிறைய oil release பண்ணும். அதனால நம்ம ரொம்ப குறைவான எண்ணையில் பொரித்தால் போதும். அடி கனமான வாணலியில், குறைந்த தீயில், olive oil இல் பொரித்தால் உடல் நலனையும் கருத்தில் கொண்டதாக அமையும்.
salmon பொரிந்து விட்டதானால் மடல் மடலாக பிரிந்து வரும், அது தான் எடுப்பதற்கு சரியான பக்குவம்.
இந்த recipe, நம்ம ஊரு மீன் வகைகளில் வஞ்சிர மீன் க்கு மட்டுமே பொருந்தும் என்று நினைக்குறேன். மற்ற மீன்களுக்கு மசாலா சற்று அதிகமாக தேங்காய்,வெங்காயம் எல்லாம் அரைத்து செய்ய வேண்டும். அதை பற்றிய குறிப்பு விரைவில்.
The 2018 US Concert Tour and lessons learned
4 years ago
11 comments:
I was just thinking of eating fish..edhula pic vera pottitte...!
Another simple fish fry told by my mom, but very delicious..same method as urs, only a small change in ingradients..
add the following to fish..
chilli, coriander, turmeric powder... then grind some garlic flakes and Saunf in mixie ( or crush it) and mix with this.. this will give a different nice taste...
Kavitha Said
Hey nice recipe.
I add one more ingredient. Crushed garlic.
We also cook Tilapia, Catfish the same way.
They taste very good.
Also we can substitue lemon juice instead of puzhi.
Forgot to ask this one..
neenga irukuradhu 2 per...but pan le oru 14-15 pieces irukkum pola....edhellam yarukku....ungalukka or malmo makkalukka ? :-)
என்ன subha,
எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி கேக்கலாமா?
நம்மல்லாம் யாரு?? வயிற்றுக்கு உணவு இல்லாதப்போ செவிக்கு கொஞ்சம் போடற பரம்பரை, dessert க்கே சிக்கன் பிரியாணி சாப்பிடறவங்க வம்சம்.
சரி நம்ம தான் இப்டின்னா வந்த இடமோ...வயிற்றுக்கும் வாய்க்கும் வஞ்சனை பண்ணாத எடம்....
btw, இந்த recipe ல தேங்காய் போடதனலாயும், புளி add செய்வதாலும் இப்டி மொத்தமா செஞ்சு வெச்சுட்டு அப்றோம் ரெண்டு மூணு நாளைக்கு, "நித்தம் நித்தம் நெல்லுச்சோறு ....நேத்து வெச்ச மீன் வறுவல்" னு ஓட்டலாம்.
அப்றோம் உன் அம்மா method next time செஞ்சு பாக்குறேன்.
kavitha,
thanks for ur tips.
btw, சுபா, பொறுமை இருப்பவர்கள் வெறுமே marinate பண்ணி வைத்து விட்டு, தேவையான பொழுது, தேவையான அளவு மட்டும் எடுத்து fry பண்ணிக்கொள்ளலாம் என்ற உங்கள் தனி மடல் கருத்தை ஆமோதிக்கிறேன்....
நா கூட இப்போதான் சமைக்க கத்துக்குறேன், pls எனக்கும் ஏதாவது சொல்லி குடுங்களேன்..but only VEG.:)) bcoz நாங்க NV எல்லாம் hotella மட்டும்தான் சாப்பிடுவோமாக்கும் . ரொம்ப வேணாம், officela இருந்து வீட்டுக்கு வந்து என் friendsku tasta சமைச்சு குடுக்குற மாதிரி இருந்தாலே போதும்
நான் சமைக்குற veg சாப்பாடெல்லாம் வெளங்காதுங்க!!!
இருந்தாலும் நீங்க கேட்டதுனால சீக்கிரமா ஒரு பதிவு போட்ருவோம்...
என்கிட்டே சமையல் கத்து தர சொல்லி கேக்குறதெல்லாம் ரொம்ப ஓவருங்கோ!!!
என்ன பண்றது, விதியேன்னு நெனச்சு சொல்லி குடுங்க. எப்பவுமே புதுசா கதுகிட்டவங்கதான் நல்லா கத்துகுடுப்பாங்க. so எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு .
"ஏய், ரவா பாயசம் தான் கேள்வி பட்ருக்கேன், இதென்ன மிளகாய் லாம் தாளிச்சு ரவா கஞ்சியா??புதுசா இருக்கு?"
"சுத்தம், அது ரவா உப்புமா..."
இதுக்கு மேலயும் உங்களுக்கு என் veg recipes வேணுமா?
நீங்க ஏதாவது cerelac ad பாத்துக்கிட்டே சமைச்சீங்களா?
Post a Comment