Sunday, 26 July 2009

ட்ரிங்! ட்ரிங்!

பயண தொடர் முடியும் வரை வேற எந்த பதிவும் எழுத கூடாது, அது அந்த தொடரின் continuity யை கெடுத்துடும் என்ற முடிவோட தான் இருந்தேன்.
ஆனால் இன்றைக்கு அந்த முடிவை மாற்றியது ஒரு டெலிபோன் கால்.


வெள்ளி இரவு, நானும் அர்ஜுனும் மட்டும் வீட்டில் தனியாக இருக்க வேண்டிய நிலைமை. துணைக்கு தம்பி வந்து இருந்தான். பக்கத்து அறையில் அவன் கதவை அடைத்து கொண்டு படுத்து விட, அர்ஜுனை தூங்க வைத்து, பிறகு இணையத்தில் பொழுதை கழித்து, பிறகு டிவி பார்த்து...என்று படுக்கும் போது கிட்ட தட்ட இரண்டு மணி. அடுத்த மூணு மணி நேரத்தில் ஒரு ரகளை நடக்க இருப்பதை கொஞ்சமும் எதிர் பார்க்காமல் தூங்க போனேன்.

பொதுவாகவே எனக்கு அதிகாலையில் வரும் தொலைபேசி அழைப்புகள்
என்றால் அலர்ஜி. அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கு. அர்ஜுன் பொறந்த பிறகு, "அவன் காலங்கார்த்தால தூக்கம் கலைந்து எழுந்தால் ரொம்ப படுத்துவான்" என்பதே அலர்ஜிக்கான முதல் காரணம் ஆகி போனது.

சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணி. வீட்டு landline போன் அலறியது கேட்டு, பதறி அடித்து எழுந்து ஓடிய நான், என்ன ஏது என்று உணர்வதற்குள் ஏதோ தடுக்கி கீழே குப்புற விழுந்து கிடக்கிறேன். சற்று நேரம் அதீத வலியை தவிர வேறு எதுமே நினைவில்லை. கத்த வேண்டும் என்று தோன்றுகிறதே தவிர சுத்தமாக குரல் வர வில்லை. நான் விழுந்த சத்தத்தில் எழுந்து விட்ட அர்ஜுன், நான் இப்டி விழுந்து கிடப்பதை பார்த்து "அம்மா பயமா இருக்கும்மா எந்திரிங்கம்மா" என்று அழுகிறான். இருக்கிற சக்தியை எல்லாம் திரட்டி எழுந்து அவன் பக்கத்தில் போய் படுத்து கொண்டேன். உடல் முழுக்க வலி பரவுகிறது. அவன் தூங்கி விட்ட பிறகு எழுந்து வந்து என்ன(வெல்லாம்) ஆகி இருக்கிறது என்று பார்த்தால், விழுந்த வேகத்தில் கட்டில் மோதி முகத்தில் இடது பாதி செவ செவ என்று ரத்தம் கட்டி போய் இருக்கிறது. ரெண்டு கை முற்றிலும் நல்ல சிராய்ப்பு. தம்பிய எழுப்பி விவரம் சொல்லி, etc etc.

கொடுமை என்னன்னா கடைசில அந்த போன் கால் attend பண்ணவே இல்லை நான்.
அர்ஜுனும் முழிச்சுட்டான். முகம் வீங்கியது தான் மிச்சம் எனக்கு.

-என்ன நீங்க இப்போதெல்லாம் அதிகமாக gChat பேசுவதே இல்லை?
சனிக்கிழமை morning கண்டிப்பாக chat செய்கிறேன்.

-Priya, Your feature test execution status is 50%. Its good though, we need to achieve 100% by 8/August.
Ok, I shall work over the weekend.

-ப்ரியா, saturday நம்ம ஆபீஸ்ல family day, நீ உன் husband கொழந்தை எல்லாம் கூட்டிட்டு வரியா?
இல்லப்பா, நான் weekend work பண்ணனும்.Kathir is out of station too. But உன் familyya கண்டிப்பா meet பண்றேன்.

இப்படி ரொம்ப பெருமையா ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி தெளித்து இருந்தேன்.
படு சொதப்பல்.

இந்த பதிவின் நோக்கம், என்னுடைய சோகத்தை சொல்வது அல்ல. infact, நான் சோகமாக இல்லை.

இன்று எனக்கு சில realisation. பகிர்ந்துக்கலாமேன்னு.

-suppose என் தம்பியும் வராமல் இருந்து, எனக்கு பட்ட அடி பலமாக பட்டு இருந்து, நினைவு ஏதும் தப்பி இருந்தால் அர்ஜுனின் கதி? பதினொரு மணிக்கு தான் வீட்டு வேலைகளில் எனக்கு உதவும் ஒரு அம்மா வந்து பார்த்து இருப்பார்கள். அதும் கதவு உள்பக்கமாக பூட்டி இருக்கும். சற்று extreme ஆன thinking தான். ஆனாலும் a very likely case. அதனால் கணவர்களே, மனைவியை தனியா விட்டுட்டு ஊருக்கு போகாதீங்க. மனைவிகளே, தனியா இருக்கும் போது சற்று எக்ஸ்ட்ரா conscious ஆக இருங்க.

-பதிவு எழுதுவதின் மிகப்பெரிய சம்பாத்யம் சுவாரஸ்யமான நண்பர்களும், சுவையான பொழுதுபோக்கும் தான் என்று நினைத்து இருந்தேன். அதை விட பெரிசா ஒண்னு இருக்கு. முன்னாடில்லாம் சின்னதா கொசு கடிச்சுதா கூட, எக்கச்சக்கமா depress ஆயிடுவேன்.ஆனா இப்போ எனக்கு படுற அடிகளையும், ரணங்களையும் கூட ஒரு அனுபவமா பாக்குற பக்குவம் கெடைச்சுருக்கு. "நகத்தை எடுத்தப்போவும், பல்லு பிடுங்கினப்போவும், இன்னைக்கு காலைல விழுந்து கிடந்தப்போவும் ப்ரியாவிற்கு எவ்ளோ தான் வலித்தாலும், பதிவர் ப்ரியா கதிரவன் நடப்பதை எல்லாம் சுவாரஸ்யமாக வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருந்து இருக்கிறாள்" என்பது இன்னைக்கு நான் தெரிஞ்சிகிட்ட அழகான விஷயம்.

With that I wish, May God Be with all of us and Guide us through things that could trip us :-)

17 comments:

Rajalakshmi Pakkirisamy said...

Please take care

Rajalakshmi Pakkirisamy said...

Please take care

துரியோதனன் said...

//ஆனா இப்போ எனக்கு படுற அடிகளையும், ரணங்களையும் கூட ஒரு அனுபவமா பாக்குற பக்குவம் கெடைச்சுருக்கு.//

அனுபவத்தை விடுங்க இப்போ எப்படி இருக்கிங்க? பரவாயில்லையா?
Take care.

Truth said...

ஒன்னும் இல்லேங்க. பதட்டத்தை குறைச்சுகிட்டேலே போதும். என்ன சொல்றீங்க.

Subha said...

அர்ஜுன், உங்க அம்மா காதை பிடிச்சு 'இனிமே இப்படி செய்வியா, அவசரமா ஓடிவியா, பாத்து நடப்பியா ? ' அப்படின்னு நல்ல கேளுடா.... உனக்கு சொல்ற 100 advice லே ஒரு
2-ஆவது அப்போ தான் மண்டையில ஏறும்.

Sanjai Gandhi said...

நல்ல ரியலைசேஷன், நல்ல பகிர்வு.. மூஞ்சியப் பாரு.. இப்டி எல்லாம் யோசிக்காதிங்க ப்ரியா.. படிக்கவே பயமா இருக்கு.. நல்ல வேளை எதுவும் ஆகலை.. என்ன பெரிய போன்கால்.. கொஞ்சம் பொறுமையா எடுக்க வேண்டியது தானே.. அதிக நேரம் ரிங் ஆச்சினா அர்ஜுன் எழுந்து இம்சை பண்ணுவான்னு யோசிக்கிறிங்களே.. அதை தவிர்க்க அவசரப் பட்டு எதுனா ஆகி இருந்தா அவன் நிலை?. இனியும் உங்க அவரச புத்தியை கொஞ்சம் மூட்டைக் கட்டுங்க. இப்போ எப்டி இருக்கு?. டாக்டர் பாருங்க... ஏற்கனவே உங்க மூளை மேல கதிருக்கு சின்னதா டவுட் இருக்காம். :)
( சாரி.. சும்மா சோகத்தை மறைக்க.. )

இரவுப்பறவை said...

வருத்தங்கள்..

கவனத்துடன் செயல்படவும்...

sa.na. kannan said...

ஏதாவது ஆச்சுனாதான் போஸ்ட் போடறதுனு இருந்தா இப்படித்தான் அடிக்கடி நடக்கும். :-)

துளசி கோபால் said...

ரொம்பச்சரி.

அனுபவங்களை அனுபவிச்சு எழுதணும். அதுவே பெரிய வெற்றி பிரியா.

சிலவருசங்களுக்குப் பிறகுப் படிச்சுப் பார்த்தால் ,'அட!'ன்னு இருக்கும்:-)

கணவர் வீட்டுலேயே இருந்தால் 'புவ்வா?'

வெளியூர் உள்ளூர்ன்னு வித்தியாசம் எல்லாம் பெருசா இல்லைப்பா. எப்பவேணுமுன்னாலும் யாருக்கு வேணுமுன்னாலும் நடக்கலாம். அதுதான் ஆக்ஸிடெண்ட்:-)))

எனிவே...டேக் கேர்.

சூஷிச்சால் துக்கமில்லை கேட்டோ...

Vijay said...

இப்போ எப்படி இருக்கீங்க?

சீக்கிரமே ஒரு கார்ட்லெஸ் ஃபோன் வாங்கி வச்சுக்கோங்க :-)

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

Take care!

Get Well Soon!!

Swami said...

Take care of your health.. ! Wish you speedy recovery ( ?! ) :)

*Kathir* said...

take care :)

ப்ரியா கதிரவன் said...

Heartfelt thanks for those who have commented and mailed me with your wishes.

I was overwhelmed to know that you have extended your sincere prayers for me.

And yes,
டாக்டர் கிட்ட போனேன்."TT shot எடுத்துக்கோங்க. antibiotics சாப்பிடணும்." என்றெல்லாம் ஆரம்பித்தவரை, "ஸ்டாப், இப்போ தான் கொஞ்ச நாள் முன்னாடி நகத்தை பிடுங்கும் போது TT போட்டேன்.அப்றோம் பல் எடுத்தப்போ சாப்பிட்ட antibotics ஆயுசுக்கும் போதும், fracture இருக்கான்னு மட்டும் பாத்து சொல்லுங்க" ன்னு சொல்லிட்டேன். அவர் 'இங்க வலிக்குதா இங்க வலிக்குதா' ன்னு கேட்டுட்டு, "only clot, நாலு நாள்ல சரி ஆயிடும்" ன்னு சொல்லிட்டார்.
தனி தனியா மெயில்க்கு reply பண்லன்னு கோச்சுக்காதீங்க.ப்ளீஸ்.

அபி அப்பா said...

என்னா இது! இப்படி கேர்லெஸ்சா இருக்கலாமோ! நான் உடனே ஊருக்கு போன் செஞ்சேன். ஜாக்கிரதையா இருக்க சொல்வதுக்கு!

*Kathir* said...

mm..ok ok.. nalla irundha sari :))))

ரிதன்யா said...

என்ன விளையாட்டு இது
பத்திரமா பாத்துக்குங்கன்னு எத்தன முறை சொல்லிருக்கேன்.
எங்க வீட்லயயும் ஒரு கத நடந்தது,இப்படி அதே நாள். ஆனா விழுந்தது என் நாலரை வயசுப்பொண்ணு அதான் உங்க மருமக. விழுந்துட்டு அவங்க அம்மா கிட்ட அழுதுட்டே (அவங்க அம்மாவ நான் திட்டுவேன்னு) அம்மா சும்மா பெட்ல இருந்து கீழ இறங்கி படுத்துக்கிட்டேன்னாங்களாம். :-(