'அடுத்த part போடலையா?'
'போடணுமா வேணாமான்னு யோசிக்குறேன். முதல் part க்கே எல்லாரும் துப்பிட்டாங்க.'
'அதாரு எல்லாரும்? உங்க husband தான் சொல்லிருப்பார்.'
'இல்ல. by the way, அவர் சொன்னா எனக்கு எல்லாரும் சொன்ன மாதிரி தான்.'
'அதுக்கில்ல, உங்களுக்குன்னு ஒரு பத்து பேரு இருப்பாங்களே?'
'அவங்க தான். ரொம்ப திட்றாங்க, ஒருத்தர் என்னன்னா "என்ன இடது கையால எழுதுனீங்களான்னு" கேக்குறாரு. இன்னொருத்தங்க "ஊருக்கு கெளம்பறத மட்டும் வக்கனையா சொல்லிட்டு போங்க, ஆனா திரும்பி வந்து எழுதுற போஸ்ட் ல கோட்டை விட்டுடுங்க" ன்னு சொல்றாங்க. இப்டி மாத்தி மாத்தி திட்டுறத பாத்தா ஏதோ உள்நாட்டு சதியோன்னு ஒரு சந்தேகம் வருது.'
'அவ்ளோ மோசம் இல்ல. நான் ஒரு 5.5/10 மார்க் தரேன்'.
'அட நீங்க அவ்ளோ தாராளமா?'
'ஆனா போஸ்ட் ரொம்ப நீளம். எனக்கு இப்போவே கன்னியாகுமரி போய் சேந்துட்ட மாறி இருக்கு.'
'whatever'
.......
.......
ஆனால் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் blah blah blah.
(அட அதுக்காக திட்டின உங்களை எல்லாம் வேதாளம்ன்னு சொல்லுறதா நீங்களே நெனச்சுகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல)
ஜிகிர்தண்டா குடித்து ஒரு வழியா ஆகியிருந்த வயிறோடு, மதுரைய விட்டு கெளம்பும் போது மணி 11:30. திருப்பரங்குன்றம் cross பண்ணும் போது கதிர் திடீர்னு "நானும் அப்பாவும் அர்ஜுனை பாத்துகிட்டு கார்லயே இருக்கோம், நீயும் அம்மாவும் வேணா மேல கோவில்க்கு போயிட்டு வாங்க" ன்னார். "பன்னிரண்டு மணி வெய்யில்ல மலை மேல ஏறணுமா? நடை வேற சாத்திருப்பாங்க, இங்க இருந்தே கோவிலை பாத்து கும்பிடு போட்டுட்டு கெளம்பலாம்" ன்னு சொல்லிட்டோம். "அவ்ளோ தானா உங்க பக்தி?" ன்னு கெளம்பிட்டார். ஆனா முருகனுக்கு செம கடுப்பா ஆகியிருக்கணும். பின்னாளில் நல்லா பழி தீர்த்து கொண்டார். சரி அந்த கதை அப்புறம்.
கதிருக்கு abroad ல கார் ஓட்டலைன்னு எப்போவுமே இருந்த மனக்குறை, மதுரை - திருநெல்வேலி சாலையில் தீர்ந்தது. Four Lane அருமையாக போட்டு இருக்கிறார்கள். நடுநடுவே பழுது பார்க்குறதுக்காக அமைத்து இருக்கும் 'take diversion' களையும், "நீங்க எப்டி ரோடு போட்டு ரூல்ஸ் போட்டு வைத்தாலும், நாங்க எங்களுக்கு பிடிச்ச பக்கம் தான் ஓட்டுவோம்" என்று எதிரில் வரும் 'two-wheeler' களையும்,ஹைவேசில் சர் சர்ன்னு போகும் வண்டிகளை கொஞ்சமும் சட்டை பண்ணாமல், cross பண்ற தைர்யசாலிகளையும் மட்டும் மன்னிச்சுடனும்.
அங்கங்கே பதநீர் விற்றுக்கொண்டு இருப்பதை பார்த்து அம்மா,அப்பா, புள்ளை என்று மூணு பேரும் குஷி ஆயிட்டாங்க. 'நம்மளும் குடிக்கலாம்' என்று ஒரு மரநிழலில் நிறுத்தி, இறங்கியாச்சு. பனை ஓலையில் கப் (தொன்னை மாதிரி அல்ல) செஞ்சு, அதுல பதநீர் ஊற்றி , அதில் நுங்கு போட்டு தந்தார் ஒருத்தர். நாங்கள் இருந்த அந்த பத்து நிமிஷத்தில் கிட்டத்தட்ட முப்பது பேருகிட்ட வியாபாரம் பண்ணார். 'எனக்கு நுங்கு மட்டும் போதும், பதநீர் வேணாம்' என்று சொன்ன என்னை குடும்பமே கட்டாயப்படுத்த(விதி வலியது) ,அதையும் குடித்து வைத்தேன். வயிற்றுக்குள் ஒரு chemical reaction நடந்தது.
1/4 glass ஜிகிர்தண்டா + 1 பனை ஓலை கப் பதநீர் -> தலை சுற்றல், வயிற்று வலி. ஆனா எனக்கு மட்டும் தான். மத்தவங்க எல்லாம் தெளிவா தான் இருந்தாங்க.
கயத்தாரில் ஒரு ஐந்து நிமிஷங்கள் நிறுத்தி கட்டபொம்மன் சிலையை பாத்துட்டு கெளம்பினோம். நடிகர் சிவாஜி கணேஷன் தான் அந்த இடத்தை வாங்கி, கட்டபொம்மனுக்கு சிலை அமைத்ததாக எழுதி வைத்து இருக்கிறார்கள். சிலைக்கும் அவரே தான் மாடல் ஆக இருந்து இருப்பார் போலும்.முன்பெல்லாம் அந்த இடத்துக்கு வருபவர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக அங்கே ஆளுக்கு ஒரு கல்லை போட்டு விட்டு போவார்களாம். 'அதுவே ஒரு மலை மாதிரி குவிந்து இருக்கும்' என்று என் மாமனார் சொன்னார்.திருநெல்வேலியில் லஞ்ச்.
அர்ஜுன் தான் பாவம் வழியெல்லாம் உடல்நிலை அவனை படுத்து எடுத்துடுச்சு. அதிலும் திருநெல்வேலியில் ரொம்பவே சிரமப்பட்டான்.அப்றோம் ஊருல எல்லார் வீட்டுக்கும் அல்வா பாக்கெட். சுட சுட கிடைக்குது.அரை கிலோ பாக்கெட் முப்பத்தஞ்சு ரூபாய். சென்னையில அதே பாக்கெட் எழுபது ரூபாயாம்.
திருநெல்வேலி - நாகர்கோயில் ரோடு வந்து ஒரு மர்ம நாவல் மாதிரி. பயங்கர திருப்பங்கள் நிறைந்தது. கொஞ்சம் பயமா இருந்தது.
"நம்ம ஊர்காரங்க மட்டும் கவர்மென்ட் கேட்டா நிலத்தை குடுக்காம கேஸ் போட்ருவாங்க, எல்லா மொள்ளமாரித்தனமும் தெரிஞ்சவங்க, அதான் இங்க மட்டும்
இன்னும் two Lane ஆகவே இருக்கு."
(கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த மொள்ளமாரித்தனம் பத்தில்லாம் தெரிஞ்சுருக்கலாம். too late) - மனசுல தான் நெனச்சேன், பின்ன இதெல்லாம் வெளியவா சொல்ல முடியும்?
வழியில் 'முப்பந்தல்' ன்னு ஒரு ஊரு. பெரிசா ஒரு அம்மன் சிலை வெச்சு இருக்காங்க, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சேர்ந்து பந்தல் போட்டு பொங்கல் வெச்சதுனால அந்த பேருன்னு, என் மாமனார் சொன்னார்.
ஆராமுழி. ஆரல்வாய்மொழிய அப்டி தான் சொல்றாங்க. இந்த பேர கேட்டதும்,இந்த ஊரை பத்தி தெரிஞ்சவங்களுக்கு சில்ன்னு காத்து வந்துருக்கணுமே?? அட்லீஸ்ட் நெனைக்கும் போது எனக்கு சில்ன்னு இருக்கு.
Windmills.
ஏதோ நாத்து நட்டு வெச்ச மாதிரி, கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் நூத்துக்கணக்குல வெள்ளை வெளேர்ன்னு ஒயரமா, உச்சில பெரிய fan சுத்திட்டு, eye candy தான் போங்க. சுபா, நம்ம இத 'ஆர்ம்ச்டர்டாம்' போயி பாத்தோம், நம்ம ஆராமுழியிலேயே என்ன சூப்பரா இருக்குடீ?southside travel பண்றவங்க கண்டிப்பா ஒரு வாட்டி இந்த ஊருல எறங்கி பாத்துட்டு போங்க.
ஒரு அஞ்சு மணிக்கெல்லாம் நாகர்கோவில்ல கதிரோட சித்தப்பா வீட்டுக்கு போய் சேந்தோம், அவரோட மகனுக்கு தான் கல்யாணம். பாத்ததும் எல்லாரும் கதிரை பாத்து "இவ்ளோ தூரம் டிரைவ் பண்ணி வந்துட்டியே" ன்னு கேட்டுட்டு, அடுத்து என்னை பாத்து "என்ன போனமுறை பாத்ததுக்கு வண்ணம் வெச்சுட்டியே" ன்னு கேட்டாங்க. :-(
இதுக்கு எதுக்கு சோக smiley? கலர் ஆகிருக்கேன்னு தான சொல்றாங்க? ன்னு நெனைச்சா நீங்க ஒரு அப்பாவி. வண்ணம் வெச்சுருக்கதுன்னா வெயிட் போட்டுருக்கதுன்னு அர்த்தம். அங்கே refresh பண்ணிட்டு, "வா நான் உனக்கு எங்க ஊரை சுத்தி காட்டுறேன்" ன்னு கதிர் என்னை கூட்டிட்டு கெளம்பினார். அவர் படிச்ச ஸ்கூல், மாமியார் படிச்ச ஸ்கூல், நாத்தனார் படிச்ச காலேஜ் என்று கதிர் தனியாக Sight-Seeing பண்ண இடங்களின் Site-Seeing...
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ...
-இன்னும் பயணம் (கோவளம், மருங்கூர், சுசீந்திரம்)
Questions and Observations on Sabarimala
6 years ago
10 comments:
அப்பாடா ஒரு வழிய நல்லபடியா ஊர் போய் சேர்ந்தாச்சா? ரொம்ப சந்தோசம்!
அப்போ அடுத்த வாரம் இந்த பயணத்தை பத்தி மேலும் எழுத மாட்டிங்க இல்ல?
//விதி வலியது//
உண்மை தான்
பாட்டு போடல,பாட்டு போடல
(என் பாடே பெரும்பாடு அப்படிங்கறீங்களா?) அவசரமா எழுதாதீங்க இன்னும் பொருமையா எழுதுங்க.
// ஆனா முருகனுக்கு செம கடுப்பா ஆகியிருக்கணும். பின்னாளில் நல்லா பழி தீர்த்து கொண்டார்.//
நாங்க ஒன்னுமே பண்ணலையே . எங்கள ஏன் இப்டி பழி வாங்கனும்? :(
சித்தி, போன பதிவு மாதிரி இது நல்லா இல்ல.. கொஞ்சம் சிரத்தை எடுத்து எழுதவும். உங்களுக்கு நல்லா எழுத வரும். ஆனா சோம்பேறித் தனம் நலலா தெரியுது. அர்ஜுனை விட்டு அடிக்கிறதுக்கு முன்னாடி சரி பண்ணிடுங்க. ப்ரியா டச் இதுல சுத்தமா இல்ல. கடனுக்கு எழுதி இருக்கிங்க.
எங்க ஊர் வழியாத்தான் போயிருக்கீங்க போல..?
சுத்தமான தென்னை மரத்து கள் சாப்பிட்டு போயிருக்கலாம்.. பயணக் களைப்பே தெரிந்து இருக்காது....!
நல்லா இருக்கு. மேற்கொண்டு எழுதுங்க :)
அருமை..
அடுத்த பதிவு எப்போ..??
போகும் வழியிலிருக்கிற எங்க ஊரையும் சொல்ல விட்டுட்டீங்களே :(
ரொம்ப நல்ல இருந்தது. நானும் travel பண்ணின மாதிரி இருந்தது. ஆனா கொஞ்சம் உங்க touch missing. அப்படியே நேரம் இருந்தா எங்க வூரு திருநெல்வேலிக்கும் போயிட்டு வாங்க. நெல்லை அல்வாவும் கோவிலும் ரொம்ப நல்ல இருக்கும். நானும் முன்னால் சிவகாசிக்கும் திருநெல்வேலிக்கும் மாதம் ஒருமுறை போயிட்டு வருவேன். ஆனா ரொம்ப நேரம் ஆகும். எனக்கு என்னவோ பஸ்ல ஏறினவுடனே அப்படி தூக்கம் வந்திரும். சில நேரம் இறங்க வேண்டிய இடத்தை விட்டுடுவேன். அதனாலேயே எனக்கு பயண கட்டுரை ரொம்ப பிடிக்கும்.
ராஜா
வெயிலான்,
unga ooru edhu?
Post a Comment