Thursday, 14 May 2009

போகன்வில்லா



"கள்ளத்தனம் ஏதுமில்லா புன்னகையோ போகன்வில்லா"
இது எந்த பாட்டுல வர்ற வரிகள்?



By the way, போகன்வில்லான்னா "காகிதப்பூ" தானே? இது என்ன உருவகம்? பெயரிலேயே பூவை வைத்து இருக்கும், கவிஞருக்கு, அந்த 'சூப்பர்' சிரிப்புக்கு உவமை சொல்ல காகிதப்பூ தான் கிடைத்ததா? 'botanical' பெயரை வைத்து உவமை சொல்லிட்டா "ஆஹா நல்ல lyrics' என்று சொல்லிடுவோமா??? "இல்ல இல்ல காகிதப்பூ ன்னா வாடாம, கலர் மாறாம இருக்கும்" அப்டின்னு ஏதாவது விளக்கம் இருந்தா, பின்னூட்டத்தில் சொல்லுங்க.

சக்கை போடு போட்ட, 'வசீகரா உன் நெஞ்சினிக்க', 'பார்த்த முதல் நாளே', பாடல் வரிகள் முதல் தடவை கேட்ட பொழுது என்னை சிரிக்க வைத்தது,
அடுத்து அடுத்து கேக்கும் போது எரிச்சல் ஊட்டியது. மக்கா பாடுறீங்களா?, பேசறீங்களா?

வசீகரமா மொத்த பாட்டிலும் 'முடிவிலி' என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டும் பிடித்தது. அதுவும் "பாரதியார்" கிட்ட சுட்டதுன்னு யாரோ சொன்னாங்க. அப்படியா?
ஹாரிஸ்,பாம்பே ஜெயஸ்ரீ, மாதவன், கமல் களால், அந்த பாட்டுகள் பிழைத்தன ன்னு நான் நெனைக்குறேன். அப்போ உன்னி மேனன் ? ன்னு கேக்குறவங்களுக்கு....மன்னிக்கவும், எனக்கு அவர் ஏதோ "விதியே" ன்னு பாடற மாறி தான் இருக்கும்.
ஹரிஹரன், மதுபாலகிருஷ்ணன் போன்ற (மலையாளக் ?) குரல்களில் பொங்கி வழியும்
feel(உபயம்: சூப்பர் சிங்கர் :-) ), உன்னியிடம் missing என்று எனக்கு வருத்தம் உண்டு. மாற்றுக்கருத்து இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.

சரி போகன்வில்லாவுக்கே வருவோம். இணைய நண்பர் ஒருவர், திரைப்படங்கள், பாடல்கள் குறித்து பொதுவாக நல்ல ரசனை உடையவர்(?) , மேல சொன்ன அந்த போகன்வில்லா பாட்டை கேட்டு, "ஆஹா, வைரமுத்து மாதிரி பாட்டு எழுத வந்தாச்சு இன்னொருத்தர்" ன்னு என்கிட்டே பெரிய பிட்டை போட்டார்.
'என்ன கொடுமை இது 'க....?'

'என் பாடல்களில் தமிழ் வார்த்தைகள் மட்டும் தான் பயன்படுத்துவேன்' என்கிற அந்த அழகான பிடிவாதம் ரொம்ப பிடித்து இருக்கிறது. ஆண் கவிஞர்கள் மட்டுமே ஆண்டு கொண்டு இருக்கும் தமிழ் திரை உலகில், தனக்கு ஒரு சிம்மாசனம் போட்டுவைத்து இருக்கும் கம்பீரம் பிரம்மிக்க வைக்கிறது.ஆனாலும், "as a lyricist, we expect more from you Madam".

பின்குறிப்பு: புன்னகை குறித்தது ஒரு நல்ல lyrics கேக்க வேணும்னா, இருவர் படத்துல வராத, CD ல மட்டும் இருக்குற பாட்டு, "பூங்கொடியின் புன்னகை" . P.சுசீலா அவர்கள் பாடிருப்பாங்க, கேட்டு பாருங்க.

9 comments:

Truth said...

போகன்வில்லா பத்தி தெரியல..
ஆனா பூக்கொடியின் புன்னகை ரொம்ப நல்லாத் தெரியும். என்னோட ஃபேவரெட்டும் தான்.

sa.na. kannan said...

அடியேனின் விளக்கம் -

கண்கண் இரண்டால் மற்றும் வாரணம் ஆயிரம் பாடல்களால் நிச்சயம் வாலி, வைரமுத்து வரிசையில் தாமரையும் நிற்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வைரமுத்துவின் வரிகளிலும் சொற்பிழைகள் (வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி) இருந்துள்ளன.

புன்னகை said...

உன்னி மேனன் பாடிய உயிரே படத்தில் வரும் "பூங்காற்றிலே" பாடல் கேட்டுப் பாருங்களேன் ஒரு முறை. இரவு நேரத்துல ear phones-ல அந்தப் பாட்டு கேட்கும் போது அவ்ளோ இனிமையா இருக்கும்.

Unknown said...

Unni menon also is a good singer. Listen to "Poongkaatrilae" of Uyire, "Nadhiye Nadhiye" of Rhythm, "Kadhal Kaditham" of Jodi, "Minnalai Pidithu" of Shajahan, "Mel isayae" of Mr.Romeo & so many...

ப்ரியா கதிரவன் said...

உன்னிமேனன் குறித்த பதில்களுக்கு நன்றி.
உன்னிமேனன் நல்ல பாடகர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. Musically நான் அவரை குறை சொல்லவில்லை. Infact, I am noy musically 'learned', to review great singers. தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.என்னுடைய மனக்குறை, அவர் குரலில் ஒரு 'feel' , இல்லை என்பது தான். பின்னூட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கும் அவர் பாடிய பாடல்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஆனால், உதாரணத்துக்கு 'மெல்லிசையே' பாடலில், சுவர்ணலதா அவர்களின் குரலில் இருக்கும் உற்சாகமும் உணர்ச்சியும், உன்னிமேனன் அவர்களின் குரலில் இல்லையோ என்று எனக்கு தோன்றி இருக்கிறது. காதல் கடிதம், புது வெள்ளை மழை இப்படி எல்லா பாடல்களிலுமே, பெண் குரல், உன்னியின் குரலை தூக்கி சாப்பிட்டு விட்டதாக எனக்கு பட்டது. For instance, "காற்றின் மொழி" பாடல், மொழி CD யில, ஆண், பெண் இருவர் குரலிலும் தனி தனியாக வரும். ஆண் குரலில் வரும் version ல இருக்குற 'feel', பெண் குரல்ல வர்ற version ல சத்தியமா இருக்காது. அதுக்காக அந்த பெண் சரியாக பாடலைன்னு சொல்ல வரல. வித்தியாசம் புரியும் ன்னு நெனைக்குறேன். தாலாட்ட varuvaala, ஹரிஹரன் பாடினதுக்கும், இளையராஜா பாடினதுக்கும் எத்தனை வித்தியாசம்? பாடலின் உணர்வை பற்றி மட்டும் சொல்கிறேன், ரெண்டு பேருமே நல்ல பாடகர்கள் தான், பாட்டுக்கு இசை அமைத்ததே ராஜா தான். ஆனா ஹரி கொண்டு வந்த feel அவர் கொண்டு வர மாட்டார்.

மணிகண்டன் said...

யப்பா ! எவ்வளவு பெரிய விளக்கம் !!!

Tech Shankar said...

வலையுலகில் நாங்க எழுதாத எழுத்துக் குற்றங்களை விடவா? -- இது சுயதம்பட்டம்.

அந்த அம்மாவின் பாடல்களுக்கு இங்கே விசிறிக்கூட்டம் நிறைய இருக்கோம். வீட்டுக்கு ஆட்டோ விட்டுடுவோம். பார்த்து பத்திரமா இருந்துக்கங்க..

(just 4 fun) உங்க angle ல சொல்லி கீறிங்க.

Suresh Kumar said...

பிரியா மேடம் , ரொம்ப பெரிய விளக்கம் ....எனக்கு தலயே சுத்துது

Raji said...

Followers 25 peru :) :) :)

Fans club ku treat kodukkavum...