கண்ணன் 'அபியும் நானும்' பற்றி என்ன நெனைக்குறீங்கன்னு கேட்டு நான் எழுதிக்குடுத்த நாலு வரிகள்.
அபியும் நானும் படம் பத்தி நான் எழுதினா, அது ரொம்ப biassed ஆக இருக்கும். காரணம் -
1.அப்பாக்கும் மகளுக்கும் உள்ள உறவை சொல்ற படம்.
2.ராதாமோகன்.
3.டூயட் மூவிஸ்.
4. த்ரிஷா.
ஆனா அந்த படத்த பத்தி நெனச்சதும் சட் ன்னு எனக்கு ஞாபகம் வந்த மூணு விஷயங்கள்.
1.'மூங்கிலை விட்டு பிரிந்த பிறகு பாட்டுக்கும் மூங்கிலுக்கும் என்ன உறவு' 'மகள் தனியறை புகுந்த போது ஒரு பிரிவிற்கு ஒத்திகை பார்த்தேன்' என்று தன்னால் மட்டும்தான் இப்டி எல்லாம் எழுத முடியும் என்று நிரூபித்து இருக்கும் கவிஞர் வைரமுத்துவின் வரிகளும், 'அம்மா பத்தின பாட்டுன்னா கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் உங்க எல்லார் ஞாபகத்துக்கும் வர்ற மாதிரி, பொண்ணு பத்தின பாட்டுன்னா என் ஞாபகம் வரணும்' ன்னு ஒரு முடிவோட அந்த பாட்டை பாடி இருக்குற மதுபாலகிருஷ்ணன் குரலும்.
2. "எனக்கு பிகினி மட்டும் தான் டிசைன் பண்ண தெரியும்னு நெனைக்காதீங்க, இப்டி அழகா அம்சமா டிரஸ் டிசைன் பண்ணுவேனாக்கும்" என்று (பில்லா புகழ்) அனு வர்தன், த்ரிஷாக்கு டிசைன் பண்ணி இருக்கும் costumes.
3. "Children grow up, Sometimes parents must too" என்ற பொருத்தமான caption.
அவருடைய 'விமர்சனத்தில்' லிங்க்கியிருந்தார். அன்றைக்கே நன்றி சொல்லணும்ன்னு நெனச்சு விட்டு போனது.
Questions and Observations on Sabarimala
6 years ago
8 comments:
:) :) :)
பிரியாக்கா பிரியாக்கா! நம்ம தங்கச்சி ராஜி சொன்ன பின்ன தான் உங்க பதிவு பக்கம் வந்தேன்.
ரொம்ப நல்லா இருக்கு எல்லா பதிவுகளும்!
அட ராமா, உங்களுக்குமா அக்கா?
:-(
கமெண்ட் க்கு நன்றி.
இன்னும் கொஞ்சம் காமெடி இருந்தால் நல்லா இருந்திருக்கும்.
பஞ்சாபி காரர் நல்லா கார் ஓட்டி கிச்சுகிச்சு மூட்டினார்.
அந்த பசங்க பாத்ரூம்ல ப்ரகாஷை பூட்டிடுவாங்களே - சூ ப் ப ர்
நாங்கள்லாம் சினிமா போறது ஸ்க்ரீன்ல வரதை பார்க்கத் தான். நீங்க என்னடான்னா Behind the Screenல செம எக்ஸ்பர்ட்டா இருக்கிங்களே.. உங்க சிஷ்யை உங்களை பத்தி கொஞ்சம் ஓவரா சொல்றாங்களோன்னு நினைச்சேன். but you deserve it பெரிய அக்கா.. சாரி ப்ரியா அக்கா..
உங்களுக்குமா அக்கா?
வேணாம்.வலிக்குது ...அழுதுடுவேன்,
மற்ற போஸ்ட் களிலும், உங்கள் கமெண்ட் பார்த்தேன் சஞ்சய்.
இன்னைக்கு synapse படித்து முடிப்பதாக வேண்டுதலா? நீங்க இவ்ளோ நல்லவரா??
உங்கள் உற்சாகமூட்டும் பதில்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
நன்றி எல்லாம் உங்க சிஷ்யைக்கு சொல்லுங்க மேடம்.. இன்னைக்கு உங்க ப்ளாக் முழுசா படிச்சிட்டு தான் தூங்கப் போகனும்னு மிரட்டி இருக்காங்களே.. :)
நைட் குக் பண்ணாக் கூட அதிக டைம் இருக்காதுன்னு இப்போ தான் போய் ரெடிமேட் உப்புமா மிக்ஸ் வாங்கிட்டு வந்தேன். :))
நிஜமாவே ரொம்ப நல்லா எழுதறிங்க.. கடைசியா எழுதி இருக்கிற பதிவுல பாட்டெழுதறவங்கள எல்லாம் போட்டுத் தாளிச்சி இருக்கிங்க போல.. :))
வசீகரா என்னோட ஃபேவரிட் பாட்டு.. :)
புதுகை தென்றல் அக்கா கிட்ட அந்த பதிவை நான் தான் படிக்க சொன்னேன்.. படிச்சிட்டு பிரம்மிச்சிட்டாங்க.. அவங்களுக்கு அந்த மாதிரி அறிவுப் பூர்வமான பதிவுகள்னா ரொம்ப இஷ்டம். இன்னும் நிறைய எழுதுங்க ப்ரியாக்கா. :)
Post a Comment