ஒரு வழியா சொந்த நாட்டுக்கு வந்தாச்சு.
வந்ததோட முதல் மற்றும் இரண்டாவது பலன். தாம் தூம் , சரோஜா ரெண்டும் சத்யம் சினிமா ல .....அதுவும் சரோஜா ரிலீஸ் அன்னைக்கே....அர்ஜுனை தூங்க வெச்சு அவங்க ஆச்சி கிட்ட தள்ளிட்டு....
சரோஜா ரொம்ப பிடிச்சுது. நெறைய timing ஜோக்ஸ், ரொம்ப casual actors.... Venkatprabhu has lived upto the expectation. எனக்கு எப்போவுமே இந்த மாறி ஒரு 'off the trend' and 'highly expected' kind of படத்தை தியேட்டர் ல அதும் ரிலீஸ் அன்னைக்கு பாக்கணும் ன்னு ஆசை. infact, நான் இது வரைக்கும் ரிலீஸ் அன்னைக்கு எந்த படமும் பாத்து இல்ல....so எல்லாரும் பயங்கரமா கத்துவாங்க, whistle லாம் அடிப்பாங்க ன்னு நெனச்சு போனேன். ஆனா எல்லாரும் ரொம்ப quiet ஆ பாக்குறாங்க...
எங்க ஆளு, 'balcony fully blocked, may be, படத்தோட மொத்த team மும் balcony ல உக்காந்து, opening எப்டி இருக்குன்னு பாக்குறாங்க போலிருக்கு' ன்னு சொன்னாரு. அதுனால எனக்கு 'ஐயோ வெங்கட்பிரபு balcony ல இருந்தார்னா அவருக்கு " என்னடா யாருமே whistle அடிக்கலை, கை தட்டலைன்னு" கவலையா இருக்குமே' ன்னு கவலையா இருந்துச்சு. ஆனா இந்த quiet crowd கூட, சில பல காமெடி க்கு விழுந்து விழுந்து சிரிச்சுது. 'ஜெய்' வர்ற சீன் ல நான் பயங்கரமா சிரிச்சு, அவரோட popcorn ஐ தட்டி விட்டு, காமெடி - tragedy ஆனது குறிப்பிட தக்கது.
படம் முடிஞ்சப்போ பின்னாடி ஒருத்தர் "இதுக்கு தான் 'உதயம்' போலாம் ன்னு சொன்னேன், நீ கேக்கலை....இங்க பாரு எல்லாம் அமைதியா பாக்குறாங்க....சென்னை-28 உதயம் ல எவ்ளோ ஜாலி யா பாத்தோம் ன்னு' அவரோட friend கிட்ட சொன்னாரு....'அட, ஆமாங்க' ன்னு சொல்லணும் ன்னு தோணுச்சு....ஆனா சொல்லலை...படம் நல்லா ஓடுதுன்னு நேத்து எங்க ஆளு sify ல படிச்சாராம். சந்தோசம், actually இந்த மாறி படம் லாம் நல்லா ஓடணும்.
உள்ளம் கேட்குமே, 12B, உன்னாலே உன்னாலே எல்லாம் பாத்து, அதே எதிர்பார்ப்புல தாம் தூம் போனோம், ஆனா பாதி படம் மட்டுமே ஜீவா சார் கைவண்ணம் என்பதாலயோ என்னமோ, படம் எனக்கு அவ்ளோ ருசிக்கலை. படத்தோட heroine ஐ விட , லக்ஷ்மி ராய் smart ஆ இருக்க மாறி இருந்துச்சு. அவங்க டோனி கூடல்லாம் bike ல போயி இருக்காங்களாமே.....?
ரெண்டு படத்துக்கும் ஒரு ஒற்றுமை என்னன்னா கடைசி கடைசில ஜெயராம் 'டேய் நான் தாண்டா வில்லன்' ன்னு வர்றது.
அப்றோம் இத்தனை நாளா நீளமா முடி வளர்ந்து 'பாடி ஸ்டுடா' hairstyle ல்ல இருந்த நம்ம அர்ஜுன் க்கு வடபழனி முருகன் கோவில் ல போயி, அவன் கதற கதற, மொட்டை போட்டாச்சு. வீட்டுக்கு வந்து கண்ணாடில அவனையே அவனுக்கு காமிச்சேன்....மொழு மொழு ன்னு இருந்த தலைய பாத்தான், அப்றோம் அத தடவி பாத்தான்....அவ்ளோ தான்...'அம்மாஆஆஆஆஆஆஆ' ன்னு ஒரே கத்து...:-)
பயந்த மாறியே டெல்லி ல குண்டு வெச்சுட்டாங்க...
ஏதோ ஒரு blog ல படிச்சேன்....'இப்டில்லாம் பண்ணுறதுக்கு ஒட்டு மொத்தமா எங்க நாட்டை அழிச்சுடுங்க.....எங்க சொந்தங்களை இழந்து வாழ்வதை விட, மொத்தமாக சாவதற்கு நாங்கள் தயார்' என்று எழுதி இருக்காங்க.
என்னோட stand point கூட இதான்.
"தீவிரவாதத்தால் பலி கொள்ளப் படுவது மொத்த குடும்பமாக இருந்து விடுவது எவ்வளவோ மேலானது....
ஓரிருவரை இழப்பதை விட....
ஓரிருவர் மட்டும் மிஞ்சுவதை விட..."
அப்றோம் சமீபத்திய ஆறுதல், Roger American open டைட்டில் வாங்கினது. இதுக்கு அப்றோம், Roger ஐ கொஞ்சம் ஜாஸ்தி watch பண்ணிட்டு இருக்கேன், ஒலிம்பிக் லையும் ஊத்திக்கிட்டோன, சின்ன கறுப்பர் கிட்ட செம சண்டை...நல்ல வேளை, இதுல win பண்ணிட்டாரு.
'காடி நம்பர் எரடு, ஒம்பத்து மூறு, நால்கு.... '
'டாக்ஸி பேக்கா மேடம்?'
பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் பிடிச்சு நம்ம பெங்களூரு க்கு வந்து சேந்தாச்சு. 3 வருஷத்துல ஒண்ணும் பெரிசா மாறலை. ஆட்டோ drivers, house brokers, house owners, இப்டி பெங்களூரு வின் அதி முக்கியமான பிரமுகர்களை எல்லாம் சந்தித்து கொண்டிருக்கிறோம். Hope God Bless us with a healthy and peaceful living in Bangalore. I need a lot of It now.
Questions and Observations on Sabarimala
6 years ago
14 comments:
ஆகா கடைசியா பெங்களூரு -ல செட்டில் ஆயாச்சா? முன்ன எங்கயோ ஸ்வீடன் டென்மார்க் -ல இருந்தீங்க இல்ல?
உண்மை,
தமிழ்-ல எழுதிட்டேன் பாத்தீங்களா?
super.
Motta Boss Arjuna naanga pakkanumae...
கலக்குங்க!!! பெங்களூர் உங்களுக்கு சந்தோசத்தையும் சாந்தியையும் தரட்டும்......அது யாரு சாந்தின்னு நீங்க கேட்கும்போது அங்கே கதிரவன் பின்னாடியே எட்டி பார்க்கிறார்!! கவனம் தேவை.....சாந்தின்ன அமைதிங்க!!!
அடுத்த தடவை இந்தியா வரும் போது 4 1/2 அர்ஜுன் அம்மா வீடு எங்கேன்னு கேட்ட பெங்களுர்ல சொல்லுவாங்களா? இல்லை ஒரு கப் காப்பிக்கு தான்.
வாழ்த்துக்கள்! வளமான வாழ்வை வாரி கொடுக்கட்டும் இந்த இடமாற்றம்!!
பாஸ்க்கு ஒரு வணக்கம்...யாருன்னு முழிக்க வேண்டாம்..நம்ம மொட்ட அர்ஜுன் பாஸ் தான்.
Priya..
Final a b'lore vanthacha...
nice to hear that u r in b'lore...
fequent a browse panna mudiyala..
motta arjun photo va yengalukkum kamikkalame..
naanum maayajal la thaan saroja parthen...
naangalum whistle adikka mudiyama thaan irunthom...
superb film......
Life a santhosama enjoy pannunga..
sikiram arjun a parkka b'lore varen..
chennai vantha kandippa yengala meet pannunga...
Lvu, Raji
piya, just wanted to share this.. check maddy's blog.. he posted one nice painting.. very nice :)
Pri,
Even friends here said the same.(Saroja is nice nu). So pathiya attendence pottutten. Ini absent aga matten! ;)
சுரேஷ் குமார்,
அர்ஜுன் போட்டோ சீக்ரமா upload panren.
maddy,
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. காபி என்ன? சாப்பாடே போடுறேன். ஆனா அதுக்கு முன்னாடி 'என் சமையல் அறையில்' label கொஞ்சம் பாத்துட்டு என் கையால சாப்பிடாலாமான்னு முடிவு பண்ணிக்கோங்க....
ராஜி,
கண்டிப்பா வாங்க.
நீங்க சொன்ன அப்றோம் நான் maddy பதிவில் அந்த அருமையான painting பாத்தேன்.
நன்றி.
மெர்சி,
தேங்க்ஸ்.
http://www.saromama.com/
Check this out. If its useful for any of the kids.
I dont know whether you have good internet to watch this in India. But nice one for kids. Sorry for posting it again here. I also posted in previous post.
தங்கள் அழைப்புக்கு நன்றி. உங்களோட ""என் சமையலறை""நுழையும் போதே மூக்கை பிடிச்சுட்டு தான் நுழைந்தேன். எங்க வீட்டில் எல்லோரும் NV- தான், ஆனா நான் எப்படியோ Veg- ..... பொறந்ததில் இருந்து. என்ன NV சாப்பிட்டாலும் பக்கத்தில உட்கார்ந்து சாப்பிடுவேன் , ஆனா மீன் மட்டும் நம்மளை ஓட வெக்கற விஷயமாயிடுச்சு!!! சரி, உங்க Veg சமையல் எப்பிடி இருக்கும்னு படிச்சேன்... ஏன் இப்படி பயப்படுதறிங்க!!! ஒரு காபி போதும்ங்கோ!!! அடுத்த மாசம் ஒண்ணாம் தேதி முதல் ஒரு மாசத்துக்குள்ள "அர்ஜுன் அம்மா எங்கே ன்னு??? " தெருவுல சத்தம் கேட்டா கொஞ்சம் எட்டி பாருங்க, அது நானா தான் இருக்கும்.
ராஜிக்கு நன்றி இங்கே சொல்லிகிறேன் என்னோட போஸ்ட இங்கே ப்ரொமோட் பண்ணதுக்கு. அவங்க போஸ்ட் தான் படிக்கா முடியலை
உங்க பிளாக் இன்னைக்குதான் என் கண்ல மாட்டுச்சு. அட! நீங்களும் நம்பூரா இருக்கீங்க! ஓரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? பிளாக்கில் தமிழில் எழுதுபவர்களில் சென்னைக்கு அடித்தபடியாக புதுக்கோட்டை காரர்கள் தான் அதிகம். :)
Priya, First of all really to use ur blog to give my comments
Maddy...
thanks :)i dont have the habit of writing blog..
But i m very much interested in reading blogs.
i have seen/went through lot... but i m very much impressed with Chinmayi, Priya and urs... dont ask the reason.. but thats the truth ...
yeppidipa ivvalavu azhaga paint pannuringa.,, send me one painting.. that too "Foot Prints/Heart Prints...." painting..
after seeing priya and chinmayi's blog, i m feeling that i too start writing blog...
but dont know when? will see.. till then i enjoy reading urs...
Priya,
Neenga super a yezhuthuringa... after reading ur blog, i feel very happy every time..
Don't stop writing at any time :)
BFN
sk,
Thanks for introducing this site to me.
Maddy,
அடுத்த மாசம் னா அக்டோபரா?
கண்டிப்பா வாங்க......காபி ஓரளுவுக்கு போடுவேன், உப்புமா, சாம்பார் அளவுக்கு மோசம் இல்ல...
புதுகை.அப்துல்லா,
வருகைக்கும், புள்ளிவிவரத்திற்கும் நன்றி.
திருச்சி,புதுக்கோட்டை, அறந்தாங்கி இப்படி எல்லாரோடையும் 'நம்ம ஊரு' ன்னு சேந்துக்கலாம் நான்.....:-)
Raji,
Never mind. I am quite happy that you and maddy are conversing here..:-)
And thanks for your lovely words, you are very kind.
எல்லாரும் அடிக்கடி வாங்க.
-ப்ரியா
Post a Comment