"come came come"
"eat ate eaten"
"is was been"
இந்த present, past, past-perfect tense நான் படிச்சப்போ எனக்கு 6 வயசு.
இந்த காலத்து புள்ளங்க பிறக்கும் போதே, tense voice லாம் தெரிஞ்சுக்கிட்டு தான் பொறக்குதுங்க. ஆனால் நான் சொல்லுறது 23 வருஷத்துக்கு முன்னாடி.
என் அப்பா ஒரு M.A, B.Ed பட்டதாரி. M.A English literature. அவங்களுக்கு ஆங்கிலத்தில் ஆர்வம் என்று சொல்லுறத விட வெறி ன்னு சொல்லுறது ரொம்ப பொருந்தும் .
ஷேக்ஸ்பியர் ஐ எல்லாம் கரைத்து குடித்தவர். English Dictionary யைக் கூட, பசி தூக்கம் மறந்து படிக்க முடியும் எங்க அப்பாவால் .... 'Around the world in 80 days' novel கதையை எங்கப்பா சொல்ல, நான், தம்பி,அம்மா மூணு பேரும் திறந்த வாய் மூடாமல் கேட்டிருக்கோம். வாழ்க்கையில் எதையுமே ரசித்து செய்வாங்க. ஜூனியர் விகடன் ல அப்போல்லாம் ஒரு படம் குடுத்து அதுக்கு பொருத்தமாக ஒரு புதுக் கவிதை எழுத சொல்லி போட்டி வரும். அதற்கு எங்கப்பா கவிதை எழுதி அனுப்புவதை பார்த்து தான் எனக்கே கவிதை எழுதும் ஆசை வந்தது.
"முடிந்து போன விஷயங்கள் பத்தி கவலைப் படுவதில் அர்த்தம் இல்ல...."
"அடுத்தவர்கள் நம்மை பார்த்து பரிதாபப் படுற மாதிரி நம்ம வாழக்கூடாது, பொறாமைப் படுற மாதிரி தான் வாழணும்" இதெல்லாம் எங்கப்பா அடிக்கடி சொல்லக் கேட்ருக்கேன்.
சைக்கிள்கள் மட்டுமே இருந்த எங்க ஊருல முதல் முதலாய் TVS-50 வாங்கியது எங்கப்பா தான்.சினிமா பார்ப்பதில் ரொம்ப ஆர்வம்....அதே சினிமா ஆர்வம் தான் எனக்கும் வந்துருக்கு போல...
எங்க ஊரு ல இருக்குற எல்லா பத்தாம் கிளாஸ் பசங்களுக்கும் English டீச்சர் னா அது எங்கப்பா தான்.எங்க ஊருல English மீடியம் ஸ்கூல் கெடயாது. அதுனால தமிழ் மீடியம் ல படிச்சுட்டு இருந்த என்னை, English ல நல்ல proficiency கெடைக்கணும் ன்னு plan பண்ணி எங்கப்பா பண்ண பல விஷயங்கள்ல ஒண்ணு தான் இந்த பதிவின் முதல் சில வரிகள்.
அப்போ உள்ள தமிழ்நாடு state board syllabus ல , 10th English second paper ல தான், tense voice லாம் வரும். எங்க அப்பா தொண்டை தண்ணி வத்த வத்த , கத்தி கத்தி அந்த பசங்களுக்கு tense voice பாடம் நடத்துவாங்க. அந்த 10th work book ல இருக்க tense full ஆ என்னை 6 வயசுலேயே படிக்க வெச்சாங்க.
"This is All India Radio. News Read by...."
தினமும் காலை 8.10 க்கு எங்கள் வீட்டு Radio வில் English News கண்டிப்பா கேக்கணும் என்பது என் அப்பாவின் order. கேட்டால் மட்டும் போதாது. ஒரு paper பேனா வெச்சுக்கிட்டு அந்த News ல எனக்கு புரிந்த எல்லா வார்த்தைகளையும் எழுதணும். News முடிஞ்சோன எங்கப்பா கிட்ட காட்டணும். காலைல 8.10 க்கு எங்க வீட்டுல டிபன் ரெடி ஆகி இருக்காது....பசியில் நான் செரியா கவனிக்காம விட்டுட போறேன்னு, daily 8 மணிக்கு, ரெண்டு spencers bread க்கு நடுவே kissan jam வெச்சு தர ஆரம்பிச்சாங்க எங்கப்பா...நாளுக்கு நாள் நான் எழுதும் வார்த்தைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது...:-)
தமிழ் மீடியம் ல படித்ததுனாலயோ என்னவோ, நான் English Vocabulary கொஞ்சம் weak தான். ஆனா அப்பா குடுத்த grammar பயிற்சி, தைர்யம் எல்லாம் english படிப்பதிலும்,பேசுவதிலும் எந்த பிரச்னையும் வராமல் பார்த்துக் கொண்டது.
9th ல இருந்து ஹாஸ்டல் ல தங்கி படிச்ச நான் SSLC Public exam ல English மீடியம் புள்ளைங்களை எல்லாம் விட English ல ஜாஸ்தி மார்க் வாங்கினேன். 96/100.+2 விலும் 176/200.
என்னுடைய college friends and colleagues யாருமே நான் 12th வரைக்கும் தமிழ் மீடியம் ல படித்தேன் ன்னு சொன்னா நம்பினது இல்ல...'you dont speak like one" ன்னு தான் சொல்லி இருக்காங்க,
நான் டென்மார்க் ல interview attend பண்ணப்போவும் சரி, ஸ்வீடன் ல interview attend பண்ணப்போவும் சரி, interviewers எனக்கு குடுத்த முதல் கமெண்ட் "Your spoken language is very clear and communicative"
அந்த குட்டி ஊருல ஒரே ஒருத்தருக்கு தான் ஹிந்தி தெரியும், அவர பிடிச்சு எனக்கு ஹிந்தி சொல்லி தர வெச்சாங்க.... அவரும் என்னை Prachaara Sabha exams லாம் எழுத வெச்சாரு.
டெல்லி ல ஒரு வருஷம் வேலை பாத்தப்போ தான் ஹிந்தி படிச்சதோட பலனை முழுசா அனுபவிச்சேன். வீட்டு வேலை செய்யும் வட நாட்டு வேலைக்காரம்மா, கூர்க்கா, ஆட்டோ டிரைவர், பஸ் டிரைவர், கடைக்காரர்கள் இவர்களோடு எல்லாம் பேசி சமாளிக்க என் வீட்டுக்காரர் என்னை கூப்பிடும் அளவுக்கு என்னால் ஹிந்தி பேச முடியும்.
Bangalore ல, north-indians கூட்டம் அதிகமா இருக்குற projects ல எல்லாம் official language itself ஹிந்தி மாதிரி இருக்கும். Project meetings ல கூட நடு நடுவுல ஹிந்தி புகுந்து வெளாடும்.North Indians க்கு பொதுவாகவே ஒரு கருத்து என்னன்னா.....'தமிழ் நாட்டு காரங்களுக்கு ஹிந்தி தெரியாது" அது ஏதோ ஒரு down-syndrome மாதிரி கருதப்படும் ஒரு விஷயம். அவர்களோடு சரளமாக ஹிந்தி பேச முடியாட்டியும் கூட அவர்கள் பேசுவதை வெகு இயல்பாக, சுலபமாக புரிந்து கொண்டு ஹிந்தியும் ஆங்கிலமும் கலந்து ஒரு பதில் சொல்ல சமாளிக்க முடிவதெல்லாம் என் அப்பா என்னை ஹிந்தி படிக்க வெச்சதுனால தான்.வீட்டிலும் ஹிந்தி படங்கள் பார்க்கும் நேரங்கள் எனக்கு ரொம்ப பிடித்தவை. அதுவும் subtitles இல்லாத படங்கள். "ஏய், அவன் என்ன சொல்லுறான்னு சொல்லிட்டு சிரி" என்று என்னை superior ஆக feel பண்ண வைத்த தருணங்கள்.
இப்படி தந்தை மகற்கு ஆற்றும் நன்றி யை மிக சரியாகவே செய்த என் அப்பா.
அப்பாக்கு Travelling ல மிக மிக ஆர்வம்.எந்த ஊருக்கு போனாலும் திரும்பி வீட்டுக்கு வரப்போ , snacks வாங்கிட்டு வராங்களோ இல்லையோ, English சம்பந்தமான books எனக்கு வாங்கிட்டு வருவாங்க....
ஒரு முறை என் அப்பாவுடன் வேலை பாத்த ஒரு colleague கிட்ட சொல்லி எனக்கு
lifco dictionary வாங்கிட்டு வர சொன்னாங்க, அத என்கிட்டே குடுக்க எங்க வீட்டுக்கு வந்த அவரு சொன்னாரு , " உங்கப்பாவே ஒரு பெரிய dictionary, ஸ்கூல் ல எல்லாரும் English ல என்ன doubt னாலும் அவர தான் கேப்போம், அப்டி இருக்கப்போ, உனக்கு ஏம்மா தனியா ஒரு dictionary?" ன்னு கேட்டாரு....அந்த sir க்கு தெரிந்து இருக்க நியாயம் இல்ல....'வெறும் ஆறாவதும், நான்காவதும் படித்து கொண்டு இருக்கும் என்னிடம் இருந்தும் தம்பியிடம் இருந்தும் அந்த live - dictionary யை கடவுள் பறித்து கொள்ள போகிறார், அதை உணர்ந்து தானோ என்னமோ எனக்கு backup-dictionary வாங்கி தர என் அப்பா யோசித்து இருக்கிறார்கள்' என்று.
"10th ல state ரேங்க் வாங்கி உன் போட்டோ paper ல வரணும்"
"ஹிந்தி விடாம படிக்கணும்"
"IAS ஆகணும்"
இதெல்லாம் தான் என்னை பொறுத்த வரை என் அப்பாவின் எதிர்பார்ப்புகள்.
மகள் தந்தைக்கு ஆற்றும் உதவியையும் ஓரளவிற்கு நான் சரியாகவே செய்து வருகிறேன்.
10th ல state third rank. 483/500.
Paper ல என் போட்டோ வந்தது.
எங்கள் குடும்பத்தில் எல்லாருக்குமே சிரிப்புக்கு பதில் அழுகை தான் வந்தது...
இதை பார்க்க ஆசை பட்ட அப்பா போட்டோ வில் இருக்கும் போது யாரால் சிரிக்க முடியும்?
Dakshin Bharath Hindi Prachara Sabha exams ல Visharad வரைக்கும் முடித்து சபாவின் சால்வை.
IAS exams க்கு படிக்குற அளவுக்கு பொறுமையும் வெறியும் இல்லை.ஒரு வேளை அப்பா இருந்து இருந்தால் ஆகி இருப்பேனோ என்னவோ....
"உங்கப்பா கிளாஸ் எடுத்தா, சிரிப்பலையில் classroom அதிரும்மா, அவ்வளவு humorous ஆ , involve ஆகி பாடம் நடத்துவாரு. அவருக்கு நாங்கல்லாம் 'சிரிப்பூட்டும் வாயு' (laughing gas-நைட்ரஸ் ஆக்சைடு) ன்னு பேரு வெச்சுருந்தோம்" - சில வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை பஸ் ல நான் சந்தித்த அப்பாவின் மாணவர்.
"டீச்சர், உங்க சார் கிட்ட தான் என் தம்பி படிச்சான். அவர் குடுத்த அறிவுரைகளும், வழிகாட்டுதலும் தான் இன்னைக்கு அவனை மாதம் ஐந்திலக்க சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறது" அம்மா ஸ்கூலுக்கு சில மாதங்களுக்கு முன்னால் transfer ஆகி வந்த attender.
"தம்பி, நீங்க KS சார் பையன் தான? நான் உங்கப்பா கிட்ட தான் படிச்சேன்..."
இது தம்பி ஓசூர் ல சந்தித்த ஹோட்டல் முதலாளி.
பத்தே வருடங்கள் மட்டுமே என்னுடன் வாழ்ந்த, பத்தொன்பது வருடங்களுக்கு முன்னால் இழந்த அப்பாவை அடிக்கடி இப்படி பலரிடம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.
அர்ஜுன் பொறந்தப்போ, எல்லாரும் அர்ஜுனை பாக்க அப்பாவுக்கு கொடுத்து வைக்கலைன்னு சொன்னாங்க....எனக்கு என்னமோ அப்பாவிடம் ஆங்கிலம் படிக்க அர்ஜுன் க்கு கொடுத்து வைக்கலைன்னு தான் தோணுச்சு.
மறுபிறவி என்பதெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், என் அப்பா தான் அர்ஜுனாக என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும்!!!
Questions and Observations on Sabarimala
6 years ago
43 comments:
Pri,
You are the most blessed and I am sure Arjun will inherit all his grandpa's knowledge from his childhood itself!
great!!!
Madam,
By chance I came across your blog today & read your post reg your Appa. My eyes became wet with your narration.
What a great father he has been & he has given you the right investment - "knowledge" - which is standing you in good stead today. I'm sure his blessings will be there for his grandson too.
Arun
Priya,
There are no words to expalin my feelings after reading this..
yenna sollurathu.......
really i m touched... unmaiya yevvalavu azhaga yenga heart ku kondu vanthurukkinga..
Hats Off priya!
//மறுபிறவி என்பதெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், என் அப்பா தான் அர்ஜுனாக என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும்!!!//
kandippaga.. Arjunku appa kitta english padika koduthu vaikkalanu feel pannathinga... neenga kalakkura mathiriye arjun sir um kalakkuvar..
have lots to type..
BYN..
நெஞ்சை நெகிழ வைச்சுடுச்சு உங்க போஸ்ட். அப்போவோட ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் நிச்சயமாக இருக்கும். அர்ஜுன்-க்கு நீங்க எதிர்பார்க்கும் எல்லாமும் இறைவன் அருள பிரார்த்தனைகள்!!
மகள் தந்தைக்கு ஆற்றும் நன்றி இதை விட வேற ஒன்னும் இல்லைமா பிரியா!! உன்னோட குடும்பம் எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்.
அழகா எழுதி இருக்கீங்க பிரியா
அர்ஜுனுக்கு உங்க அப்பாவோட ஆசி நிச்சயமா இருக்கும்.
Grand
Priya,
Very nice blog.
You have been a right source of inspiration for all of us for making father's dream true.
Nodoubt Arjun will follow his grandfather footprints.
Good Luck......
Priya,
Very touching.
I am sure Arjun will have all the blessings from his grandfather.
Keep up you great work
Mercy, Kathir, Arunachalam, Raji, Maddy, Sk, Truth, SureshKumar, Kavitha,
உங்க அன்பான வார்த்தைகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
-ப்ரியா.
கண்டிப்பாக அர்ஜீனும்,அப்பாவும் ஓன்னுதான். சந்தேகமே வேண்டாம்.
Well written...
நன்றி புதுகை.அப்துல்லா.
Thank you Jarlin.
Unglamaadhri nalla pillainga (u and anna) pirakka unga parentsdhaan romba punniyam pannirukkanum... I really salute u n ur bro....avar aathma shanthi adanjirukkum ...
Arjun kuttykku eppavum appavin aasigal irukkum....
Unga familye great..
Unga parents are an example for others " how to bring up the kids"..
Pullinga epdi irukkanumngradhukku ..Neenga rendu perum examples.... Am proud that u r my friend..............................
Am happy for arjun..He is Lucky ..
No more words... am speechless with tears ...
Padhu
அப்பா உங்களுக்கு சொல்லி கொடுத்தாருல்ல, நீங்க அவர்க்கு(அர்ஜுனுக்கு) சொல்லி கொடுங்க. அதுதான் மகள் தந்தைக்காற்றும் உதவி
சொன்னது தப்பில்லயே
romba touching priya 'synapse-il oru sentiment'.
i guess, unga appa ungalukku sollikuduthaadhu oru velai neenga avarukku (arjun-a irukkum avarukku) thirumba solli-tharuvinga-nnu oru ethir paarpo !?
Thanks Padhu.
மகி,
இப்படி நான் யோசிச்சதே இல்ல...என் பதிவுக்கு புது பரிணாமம் குடுத்துட்டீங்க....நன்றி.
chennai vennai,
Thanks for coming and commenting.
//i guess, unga appa ungalukku sollikuduthaadhu oru velai neenga avarukku (arjun-a irukkum avarukku) thirumba solli-tharuvinga-nnu oru ethir paarpo !?
//
அப்படி இருக்கும் பட்சத்தில், நான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன்.
பிரியா,
இட்லி வடை பதி்வில் இருந்து இங்கே வ்ந்தேன். முதலில் கண்ணில் பட்டது இந்த பதிவு.
எல்லா குழந்தைகளின் கனவு நிச்சயமாய் இதுதான், தங்கள் தங்கள் அப்பா தங்களுக்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டுமென்று. உங்கள் அப்பா அருமையான வழிகாட்டி, நீங்கள் கொடுத்து வைத்தவர்தான். ஆனால் இன்றைய தேதி வரை அவர் உங்க கூட வரவில்லை என்ற குறை தவிர. சின்ன வயதில் இழந்திருந்தாலும், உடைந்து போகமால் இவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்ததுக்கு வாழ்த்துக்கள் (உங்கள் அம்மாவிற்க்கும் HATS OFF). உங்கள் அப்பா சொன்னதை வேதவாக்காக எடுத்தமைக்கு ("முடிந்து போன விஷயங்கள் பத்தி கவலைப் படுவதில் அர்த்தம் இல்ல....") பாரட்டுக்கள்.
அர்ஜூன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதில் சிறி்தும் சந்தேகமில்லை.
நல்ல பதிவு. நன்றி.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
-அரசு
Very impressive .
great father
really ur hand some daughter.
What a great father!
I am very touched. Shape arjun's character as your father :-)
awesome.
i cried by reading this.
unforgettable.
just started to read ur blog.
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி....கொஞ்சம் busy யா இருக்கேன்...
பதில் விரைவில்.
priyakka,
This blog is really really touching..I cou'nt control my tears after reading this.Naame 2 perum evlo close friends apdinalum idhu varaikum ungappa pathi discuss pannadhu illa.. That is only because andha vishayathe pathi pesi ungala kashta padutha koodadhu apdinu dhan.I never knew that your father was such a great person.I am really proud of your family for inheriting all his good characters and great paths in life.I am sure Arjun will follow the same path too.I will pray for you always.Happy Deepavali!!!
Arasu,
Yeah, if not for my mother, I dont know where me and my brother would be.
Thanks a lot for your lovely comment.
Muthu, Anonymous, Kathir,
My heartfelt thanks for your comment.
Best wishes.
Priya
Anu,
Thanks for visting my blog after so long. Yes, indeed he was a great person. Quite unfortunate of us to have lost him.
-------------------------------------
Paper ல என் போட்டோ வந்தது.
எங்கள் குடும்பத்தில் எல்லாருக்குமே சிரிப்புக்கு பதில் அழுகை தான் வந்தது...
இதை பார்க்க ஆசை பட்ட அப்பா போட்டோ வில் இருக்கும் போது யாரால் சிரிக்க முடியும்?
-------------------------------------
சென்டிமென்டான விஷயத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க .. உங்க ரசிகர்கள் லிஸ்ட்'ல ஒன்னு சேர்த்துக்கோங்க ..
நன்றி சங்கர். எங்கப்பா பேரு கூட சங்கர் தான்.
ப்ரியா அக்காவின் பதிவினை வாசித்தவுடன், ஏனோ அவசரமாக வீட்டிற்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு அம்மாவிடமும், அப்பாவிடமும் கதைத்த பின் தான் கொஞ்சம் மனதின் கனம் குறைந்தது.
நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று கடவுளை நன்றியோடு நினைத்துக் கொண்டேன். தொலைத்தவர்களுக்கு தான் பொருளின் அருமை தெரியும் என்பார்கள், அக்காவின் பதிவைப் படித்துப் பார்த்தால் தொலைத்த வலி தெரிகிறது.
அவசரமாக எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பதாலோ என்னவோ, சுற்றியுள்ள மனிதரின் மகத்துவம் தெரியாமலே போகிறது! முதியோர் இல்லங்களிலும் எங்கோ கண் காணாத தொலைவினிலும் "அன்பை" விட்டு விட்டு எதை எதையோ நிம்மதிக்காகத் தேடிக்கொண்டிருக்கிறோம்!
கனத்த மனதுடன்,
மது கிருஷ்ணா
P.S
என்னைப் பொறுத்தவரையில் குட்டி அர்ஜுன் ப்ரியா அக்காவின் அப்பா தான்!!!
:-)
indaikkum ungada pathivu thaan ennai ezhutha vachuthu!
:-)
Love you akka!
http://mathukrishna.blogspot.com/2008/11/blog-post.html
நன்றி மது.
'கதைத்த'....
உங்க(இலங்கை) தமிழ் தான் எவ்ளோ அழகா இருக்கு....
I am glad to have got introduced to you.
உங்கள் அம்மா அப்பாவிற்கு என் வணக்கங்களை சொல்லுங்கள்.
Priya sema touching.....nanum enga appa pet....enga appa na enaku uyir...so ur blog s really impressive
It is so wonderfull...Eventhough I have not married now, I wish to grow my child in such a way ur father grown up you..
Your father is "GREAT"
After reading this page, my respect towards you has grown many fold. I never knew this side of Priya. Many times I have faced difficulty in not being able to express what I actually wanted to, but the way you have brought out your thoughts is fabulous. Hats off. I am proud to be your sithappa.....Jeyakumar
It happened that I visited your blog today. I am glad for it :)
-Edwin
வணக்கம், முதற்கண் என் பொறாமையைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்க ரொம்பவே குடுத்து வச்சவங்க. உங்கப்பா உங்களை எவ்ளோ அழகா ட்ரைன் பண்ணி இருக்கார்.. நிஜமா க்ரேட்ங்க..
அந்த டிவிஎஸ் 50 மேட்டர் படிச்சதும் எனக்கு பழைய ஞாபகம் வந்துடிச்சி. :) எங்க ஊர்லையும் எங்க வீட்ல தான் முதல் டிவிஎஸ் 50. :)
அதை ஓட்டக் கத்துக்க அடிச்ச கூத்தெல்லாம் இன்னும் மறக்கலை.
நீங்க ஒசூரா? அந்த க்ளைமேட் எல்லாரையும் ரொம்ப கூலா வசிருக்கும்..
எல்லா விஷயத்துலையும் குடுத்து வச்சவங்களா இருக்கிங்க போங்க..
:)
உங்க தங்கை சொன்ன வழியில் பயணித்து வந்தேன்.. ரொம்ப நல்லா எழுதறிங்க.. வாழ்த்துகள்.. சமீபத்திய பதிவில் தான் ரொம்ப அடிச்சி நொறுக்கி இருக்கிங்க போல.. :))
எனக்கும் உங்களை சேம் பளட்டாக பல அனுபவங்கள்.
என் அப்பா இப்போது என்னைப் பார்த்து பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த லிங்கை நண்பர் ஒருத்தவங்க கொடுத்து படிக்க சொன்னாங்க. பாதி படிக்கிற வரைக்கும் இதுல என்ன இருக்குனு நினைச்சிட்டு வந்தேன். இப்படி ஒரு அப்பா இருந்தா யார் வேணா நல்லா படிப்பாங்கனு... ஆனா முடிக்கும் போது கண் கலங்கி இருந்தது.
கண்களில் நீர் வரச்செய்து விட்டது உங்கள் பதிவு....
எனது வருத்தங்கள்....
ப்ரியா,
10 வருடங்களே கூட இருந்த போதிலும், உங்கள் தகப்பனார் நடந்து கொண்ட விதம், ஊக்குவித்த விதம், வாழ்ந்த விதம் மறக்க முடியாத வண்ணம் இருப்பதால் தானே இத்தனை அழகான இடுகையை எழுதினீர்கள்!
மாநிலத்தில் மூன்றாவதுக்கு காலம் பல கடந்து வாழ்த்துகள் :-)
அப்பாவின் மறைவுக்குப் பின் உங்களை கஷ்டப்பட்டு ஆளாக்கிய அம்மா, மிகப்பெரிய மனுஷி.
அன்புடன்
பாலா
பெற்றோர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. அருமை தந்தையை பத்து வயதிலேயே இழந்திருப்பது அறிந்து மிகவும் வருத்தமாக உள்ளது. அதுவும் பெண்களுக்கு அப்பா தான் ஆதர்ச நாயகன். இந்தப் பதிவே அதற்கு சாட்சி.
பெருமைக்குரிய பிள்ளைகளுடன் வாழ அவருக்குக் கொடுத்து வைக்காமல் போனதும் நீங்கள் இப்படியொரு அரிய மனிதரை இழந்து வளர்ந்ததும் இயற்கையின் சதி.
என் அன்பு, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும். உங்கள் மகனுக்கு என் ஆசி.
amas32
Post a Comment