'உங்க சொந்த ஊரு எது?'
'திருச்சி பக்கம்'( வழக்கமா சொல்லுறது தான்...)
'திருச்சி பக்கத்துல எங்க?'
'புதுக்கோட்டை....'(ஆஹா ஆரம்பிச்சுடுச்சு...இது எங்க போயி நிக்கும் னு எனக்கு நல்லா தெரியும்)'...
'proper புதுக்கோட்டை யா?'
'இல்ல...அங்கே இருந்து கொஞ்சம்(???) தூரத்தில அறந்தாங்கி.....'
'ஓ! அறந்தாங்கி யா?'
'அட இருங்க, நான் இன்னும் முடிக்கலை, அறந்தாங்கி பக்கத்துல கீரமங்கலம் பேரூராட்சி (பக்கத்துல வேம்பன்குடி கிராமம்)'
'அட மக்கா! இதான் திருச்சி பக்கமா??முழுசா 100km ஐ ஒரு 'பக்கம்' ல மறச்சுட்டியே....பேரூராட்சியாம்ல....நான் மட்டும் கேள்வி கேக்கலைன்னா நீ ஏதோ மாநகராட்சி லேர்ந்து வந்துருக்கே ன்னுல்ல நெனச்சுருப்பேன்.....ம்ம்ம் போ போ....'
My face hanging.
காலேஜ் சேந்த புதுசுல ஒவ்வொரு புது அறிமுகமும் இப்படி தான் தொடங்கும்.
ஒரு செமஸ்டர் லீவ் ல என் classmates ரெண்டு பேரு எனக்கு DTDC ல courier அனுப்ப try பண்ண போக, (எங்க ஊருக்கு அப்போல்லாம் professional மட்டும் தான் சர்வீஸ்)courier காரன் இந்த ஊருக்கு எல்லாம் டெலிவரி இல்ல ன்னு சொல்ல போக...அவங்க ரெண்டு பேறும் எக்கச்சக்கமா கடி ஆயிட்டாங்க...அதுல ஒருத்தனுக்கு, நான் ஆட்டோகிராப் ல வேம்பன்குடி(west) னு அட்ரஸ் எழுத போயி, அவன் கொலை வெறி ஆகி, 'உங்க ஊருல இருக்குறதே நாலு வீடு தான், அதுல east,west, north, south லாம் தேவையா?? னு பின்னிட்டான்.
காலேஜ் ல லீவ் விட்டா போதும்.....கிளாஸ் ல எல்லாரும், "என்ன ப்ரியா....மாட்டு வண்டி, ஆரத்தி, குலவை விடுறதுக்கு, கொட்டு க்கு எல்லாம் சொல்லியாச்சா??" ன்னு கலாசிடுவாங்க.....'என் இனிய கிராமத்து மக்களே" பாரதிராஜா படத்துல வர கிராமம் மாறி எங்க ஊரு இருக்கும் னு அவங்களே முடிவு பண்ணிட்டாங்க.
இதே மாறி, "I am from Nagercoil(பக்கத்துல நல்லூர்) " னு பீலா விட்டுக்கிட்டு இருந்த பார்ட்டி நமக்கு pick up ஆனது தனி track.
அடிக்கடி நானும் என் தம்பியும் 'ச்ச,நம்ம வேற ஊருல பொறந்து இருக்கலாம்' னு feel பண்ணுவோம். ஏன்னா ஒவ்வொரு முறை ஊருக்கு போறதும், ஒரு பெரிய travel experience ஆ இருக்கும்.
டெல்லி ல வேலை பாக்குறப்போ, காலைல சென்னை வந்து இறங்கினதும் , அடிச்சு பிடிச்சு Paris corner போயி, ஊருக்கு பஸ் பிடிக்குறப்போ, ரொம்ப கடுப்பா இருக்கும், என்னடா வந்து இறங்கினோமா, வீட்டுக்கு போனோமான்னு இல்லாம இன்னும் பத்து மணி நேரத்துக்கு மேல travel பண்ணனுமேன்னு.....அதும் அறந்தாங்கி வரைக்கும் கூட போய்டலாம். அங்க இருந்து எங்க ஊருக்கு ஒரு பஸ் விட்டா அப்றோம் அடுத்த பஸ் வர்ற வரைக்கும் பேய் முழி முழிச்சுக்கிட்டு பஸ் ஸ்டாண்ட் ல நிக்க வேண்டியது தான். என் தம்பி நெறைய வாட்டி, அறந்தாங்கி ல வெயிட் பண்ணி பண்ணி, பொங்கி எழுந்து வீட்டுக்கு போன் பண்ணி, பக்கத்துல தான் சென்னை பஸ் நிக்குது, அதுல ஏறி சென்னை க்கே திரும்பி போறேன்னு சொல்லுவான்....
ஸ்வீடன், டென்மார்க் ல இருந்து வரப்போ, அங்க இருந்து சென்னை வர ஆகுற டைம் விட, சென்னை ல இருந்து எங்க ஊருக்கு போறதுக்கு ஜாஸ்தி டைம் ஆகும்.
ஆனா எங்க ஊரு compare பண்றப்போ நல்லூர் ரொம்ப சின்ன ஊரு.
எங்க ஊருல ரெண்டு higher secondary school, மூணு elementary school, நாலு கல்யாண மண்டபம், ரெண்டு தியேட்டர் எல்லாம் இருக்கு....நல்லூர் என்பது நாலே நாலு தெரு மட்டும் இருக்குற ஒரு சிற்றூர். ஆனா எப்போ இந்த argument வந்தாலும் இந்த travel மேட்டர் ல அவர் என்னை overtake பண்ணிடுவார். "நாகர்கோயில் வரைக்கும் direct train, அப்றோம் அங்கேருந்து 20 mins travel" னு, இந்த ஒரு பாயிண்ட் வெச்சே என்னை பேச்சிழக்க பண்ணிடுவாரு....:-(
But whatever it is, எங்க ஊரு எனக்கு special, like anyone else...
இப்போ தான் ஒரு 10 நாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தேன்.
படிக்குறப்போ லீவ் க்கு வந்துட்டு, hostel கெளம்பும் போது எப்புடி அழுகை வருமோ அதே மாறி தான் இப்போவும் வருது...
நம்மூரு போல வருமா???
Questions and Observations on Sabarimala
6 years ago
26 comments:
ஊர் பேரு சொல்றதுல உங்களுக்கு ஒரு problem na எனக்கு வேற மாதிரி problem. எனக்கு வீடு திருச்சி சிட்டிதான் . அதாவது 5 mins. walkable from central bus stand. ஆனா எங்க பசங்க நம்பவே மாட்டனுங்க. திருச்சின்னு சொன்ன "திருச்சில இருட்ன்து எவ்வளவு தூரம்னு ?" கேப்பானுங்க. எவ்வளவுதான் சொன்னாலும் நம்ப மாட்டனுங்க.. but cityla எந்த இடம் சொன்னாலும் அவங்களுக்கு தெரியாது.. வெளக்கம் கேட்டே என்ன சாக அடிப்பானுங்க
எனக்கு travel பண்றதுன்னா ரொம்ப பிடிக்கும்.. அதுவும் buskaga அலைஞ்சி மாறி மாறி போறதுன்னா செம்ம interesting. ஆனா எங்க ஊருக்கு எல்லா ஊர்ல இருந்தும் direct bus கெடச்சிடும். அதுவும் ஊர் வந்த வுடனே 5 mins வீட்டுக்கு போய்டலாம். travel பண்ணின satiscatione இருக்காது. அதுக்காகவே பெங்களூர் ல இருந்து திருச்சிக்கு bangalore-salem and salem-trichy nu மாறி மாறி போவோம். book பண்ணி போறதெல்லாம் இல்ல. அதுவும் mid-night la salem bus stand la அப்படியே பர பரன்னு bus காக அலைவோம்.. அது தனி சுகம்
last 2 தீபாவளிக்கு அப்படித்தேன் போனேன் .. bangalore-dharmapuri, dharmapuri-salem andh salem-trichy. avlo crowdla கும்பலோட கும்பல போனாதான் festival effect இருக்கும். but after marriage அந்த மாதிரி risk எல்லாம் எடுக்க முடியாது :(
காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு தான்
என்னதான் வெளிநாட்டுல வசதியெல்லாம் பார்த்து அனுபவிச்சாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தான்!! கடல் கடந்து வந்து ஒரு மாமாங்கம் ஆனாலும், ஊருக்கு போகும்போது, இன்னும் ஒரு கிலோமீட்டர் தான் நம்ம ஊருக்குன்னு நினைக்கும்போதே சந்தோசம் சில்லுன்னு மனச தொடறது சத்தியம்!!!
அம்மாவீட்டுல சந்தோசமா செலவழிச்சு இருப்பீங்கன்னு நம்புறேன்!!! அடுத்த தடவை போன் போட்டு கூப்பிட்ட என் விசாரிப்பையும் தெரிவிக்கவும்!!!
இது பிரியா ப்லோக்-ன்னு சந்தேகம் இல்லாம சொல்லனும்னா அது
"வேம்பன்பட்டி வெஸ்ட் தான்"".
எப்பிடிங்க?? உங்களுக்கு மட்டும் இப்படி ஐடியா வருதோ
Priya...........
Naan lam kojam parava illa....... aana yenga oorukku mini buslam irukka nu otuvanga... sonnalum namba mattanga... yenna pannurathu....
aana namba ooru pola nimathiya thara place vera onnum irukka mudiyathu
ஏங்க கதிர்,
இதெல்லாம் உங்களுக்கு ஓவரா இல்ல??? அவன் அவன் ஊருக்கு டைரக்ட் பஸ் இல்லன்னு பொலம்பினா......இருக்குற பஸ், train லாம் விட்டுட்டு, இவரு ஒரு த்ரில் காக மாறி மாறி போவாறாம்ல......
உங்களுக்கு சீக்ரம் கல்யாணம் ஆகி புள்ள பொறந்து, டைரக்ட் பஸ் ல மட்டுமே பிரயாணம் செய்ய கடவது.....
maddy,
நான் ஐடியா லாம் பண்ணலைங்க....
உண்மையிலேயே எங்க ஊருல வேம்பன்குடி(west), வேம்பன்குடி(east) ன்னு ரெண்டு பிரிவு இருக்கு ....
உங்க blog ல கேமரா ல புகுந்து வெளாடுறீங்க.....அது உங்க hobby யா?இல்ல profession ஆ? நல்ல ரசனை.
ராஜி,
நீங்க வருகை தந்ததுக்கும், பின்னூட்டம் இட்டதற்கும் நன்றி....அர்ஜுன் புகைப்படம் 'காதல் மலரும் நீ, .....' பதிவில் இருக்கு.....under the label "Arjun"..பாருங்க.
பையன் நல்லவனாட்டம் போஸ் குடுக்குறத.
இது வாழ்த்தா சாபமா ?? ஆனாலும் நீங்க இப்படி என்ன வார கூடாது.. எல்லாருக்கும் கிடைக்காதது மேலதானே ஆசை வரும். அதே மாதிரிதான் எனக்கும் இந்த travelling ஆசை.
பிரியா,
அர்ஜுன் போட்டோ பார்த்தேன். நல்லா இருக்கான். இப்போ எங்க இருக்கீங்க???????
first time நேத்து தான் உங்க blog visit பண்ணினேன் ...
Naan romba impress ஆய்ட்டேன் ...
here after i ll be the regular visitor....
i am working as Software Eng....
Where r u now?
ஓஹோ ! நீங்க திருச்சி பக்கமா ! ?
யோவ் கதிர்,
கவலைப்படாதீங்க. இந்த தீபாவளிக்கு
bangalore -- athibelle
athibelle -- hosur
hosur -- krishnagiri
krishnagiri -- dharmapuri
dharmpuri - salem
salem - nammakkal
namakkal - trichy mainguardgate
அப்புறம் திருச்சி ஜங்ஷன் !
இது மாதிரி பயணம் செய்ஞ்சு எதாவது ஒரு நல்ல ஆஸ்பத்திரில போய் நீங்களே படுத்துகோங்க.
/***** உங்களுக்கு சீக்ரம் கல்யாணம் ஆகி புள்ள பொறந்து, டைரக்ட் பஸ் ல மட்டுமே பிரயாணம் செய்ய கடவது ****/
இவ்வளவு பெரிய வாழ்த்து எதுக்கு ? சீக்கிரம் கல்யாணம் ஆகி அப்படின்னு சொன்னாலே போதுமே !
neengaluma? :)
enakum kitta thatta ipdi nadandhiriku :)
avan - 'unga veedu enga da iruku'
naan - naan ennoda hi-tech city -ya vitukudukaama, 'amcity' nu solluven.
edho amsterdam effect irukum. aprom
avan - 'anda amcity enga da iruku'
naan - 'inda ambattur city-a thaan apdi short-a sonne'
idula enna na, ambattur city-e illa, aduvum illa, ambattur city-a amcity nu short-a style-a vera solradu.
avan - 'sari ok, ambattur-la enga da? OT-a?'
naan - 'illa'
avan - 'ambattur estate-a?'
naan - 'illa'
ipdi abudhabi-ya, sharjah-va nu vadivel kekra maadriye kepaanunga.
avan - 'pinna'
naan - 'ambattur -la'
idula enna matter-na, enga veedu anda ambattur-la kuda illa. anga irundu ayapakkam nu oru gramathula iruku. adhan sonna, avingaluku enga iruku nu kooda theriyaadu.
but, konja varushama, naan gramathaan nu solradula asinga padrade illa, innum solla pona, konja perumaya kooda iruku. :)
hello... நான் போறது தீபாவளிக்கு, பொங்கலுக்கு இல்லை
அவனும் அவளும்,
எங்க உங்க blog ஐ காணும்?
எதுக்கு delete பண்ணி்ட்டீங்க?
ராஜி,
Thanks.
நாங்க இப்போ சென்னை ல இருக்கோம், கூடிய சீக்கிரம் பெங்களூர் shift ஆக போறோம். நீங்க எங்க இருக்கீங்க?
நானும் அதே (software engineer) மண்ணாங்கட்டி தான்.
ஓஹோ .. நீங்க இங்க வரீங்களா? வாங்க வாங்க..!!!! am planning to shift to chennai from bangalore.... நமக்கென்னவோ சென்னை தாம்ப்பா better.. கொஞ்சமாவது nativitya enjoy பண்ணலாம்
Priya...
Nice to hear that u r in chennai...
Naanum chennai la thaan irukken...
yenakku b'lore pidikkala...
yenna aanalum chennai namma ooru la...
i m reading ur blog whenever my time permits...
i m very much impressed....
neraiya yezhuthunga...
take care...
naalai santhippom..
Unga blog + Chinmayi blog la naan romba impress aitten....
dont stop writing at any time...
Great Blog urs
ஆமாம் பிரியா. ப்லோக் எழுதினா விவாகரத்துன்னு என்னோட வருங்கால மனைவி சொல்லிட்டாங்க !!
Thank you Raji.
Thank you Bala.
Hello Priya,
Very refreshing to read your blog. I have my roots in Vembangudi and Aavanam and got married in Peravurani. My mum is from Vembangudi [Maniyaar Veedu] and has recently entered cyberspace, will e-introduce you to her. Maybe it will encourage her to write about exploits in Iran and Chennai.
Keep posting!
Regards,
Noosheen.
Noosheen...Really?
I am so overwhelmed to read this.
Thanks and keep visiting.
Greetings to your mother.
HaiPriya Iam very happy to note that you are from vembangudi.IWANT TO KNOW the names of your parents Iam Noosheens Mother'I think I must be knowing them. I Studied in keeramabgalam and in Pallathur only regards Aunty..
Nice to hear that Aunty.
My father's name is K.Sivasankaran,known as KS sir in Keeramangal boys school and Mom is Thamayanthi teacher.
My thatha is a retired deputy collector so our house is still called as 'Collector veedu'
:-)
//அடிக்கடி நானும் என் தம்பியும் 'ச்ச,நம்ம வேற ஊருல பொறந்து இருக்கலாம்' னு feel பண்ணுவோம்.//
அழகன் திரைப்படத்தினை நினைவூட்டிவிட்டீர்கள்.
:-)
இந்தக் கொடுமை எல்லா எடத்துலையும் உண்டு ப்ரியாக்கா.. அடியேனும் அப்டி தான். காலேஜ் படிக்கும் போது இரண்டாம் ஆண்டில் நம்ம தோஸ்துங்க எல்லாரும் என் வீட்டுக்கு வர வரைக்கும் என் ஊர் பேர் அவங்களுக்குத் தெரியாது. பக்கத்துல இருக்கிற ஒரு பெரிய ஊரைத் தான் சொல்லி வச்சிருந்தேன். அப்புறம் எங்க ஊருக்கு வந்துட்டு என் தோழிகள் எல்லாம் 2 நாள் என்னை பசியோட உட்கார வச்சி திணறத் தெணறக் க்ளாஸ் எடுத்தாங்க. ஏண்டா டேய்.. நாங்க எல்லாம் கிராமத்துல பொறக்காம சிட்டில பொறந்ததை நினைச்சி ஃபீல் பண்ணிட்டு இருக்கோம். நீ இப்டி ஒரு ஊருல இருந்துக்கிட்டு மவனே பீலா வுட்டுட்டு திரிஞ்சிட்டு இருக்கியா? இனி யாராச்சும் உன் பேரைக் கேட்டாலும் ஊர்ப் பேரையும் சேர்த்து தான் சொல்லனும்னு மிரட்டினாங்க. அப்பாலிக்கா தான் நான் என் ஊர்ப் பேரை சொல்ல ஆரம்பிச்சேன்.
நல்லவேளை உங்க ஊர் அளவுக்கெல்லாம் எனக்கு பஸ் பிரச்சனை இல்லை.. :)
அதும் இல்லாம உங்களவர் சொல்ற மாதிரி ஒரு ரவில் நிலையத்துல இருந்து 2.5 கிமீ தான் எங்க கிராமம். :)
வழக்கம் போல ரொம்ப சுவாரஸ்யமா இருக்குக்கா.. ஜமாய்ங்க.. :)
sorggame endraalum athu nammooru pola varumaaa
(singing from singapore)
Post a Comment