"தாயின் மணிக்கொடி பாரீர்" நல்லா பாடணும்..."கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர், எங்கும் காணரு வீரர் பெருந்திரள் கூட்டம்" கூட்டம் ல சுதி சரி இல்லன்னு, பாவம் பாட்டு டீச்சர் எத்தனை வாட்டி சொல்லி குடுத்தாங்க....
கட்டி வெச்ச கொடி மேல போனதும் ஒழுங்கா அவிழ்ந்துக்குமா... பட்டொளி வீசி பறக்குமா....கொடிக்குள்ள வெச்ச பூ எல்லாம் அழகா கீழ உதிருமா ...
ஸ்கூல் Salute ல, order சொல்றப்போ கை வந்து டிரஸ்/கால் ல அடிக்குற மாறி சத்தம் வர கூடாது, gentle ஆ பண்ணனும் னு PT மிஸ் சொன்னது மறந்துட கூடாது.கம்பத்துக்கு கீழ போட்ட கோலம் அழியாம இருக்கணும்... marching பண்றப்போ நான் left-right கரெக்ட் ஆ வெப்பேனா... என் கிளாஸ் புள்ளைங்க எல்லாம் கரெக்ட் ஆ march பண்ணுமா... அம்மா ஸ்கூல் ல என்ன ஸ்வீட் குடுத்து இருப்பாங்க... அப்பா ஸ்கூல் ல என்ன ஸ்வீட் குடுத்து இருப்பாங்க... function முடிஞ்சு பெஞ்ச் லாம் arrange பண்ணிட்டு நான் வீட்டுக்கு போயி சேருரதுக்குள்ள அந்த dog (என் தம்பி) எல்லா ஸ்வீட்டையும் முடிச்சுடுவானா..... இப்படி பலவிதமான டென்ஷன் இருக்கும்.இது அஞ்சாவது படிச்சு முடிக்குற வரைக்கும்!
கொஞ்சம் வளர்ந்து, ஒரு ஆறாவது முதல் பன்னிரெண்டாவது படிக்குற வரைக்கும் ஸ்கூல் ல நடக்குற பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில், 'என்னை கவர்ந்த தலைவர்' , 'எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்' , 'எதிர் கால இந்தியாவில் நான்' ... இன்ன பிற தலைப்புகளில் நம்ம தெறமை காட்டி இருக்குறதுக்கு பரிசு கெடைக்குமா, கண்டிப்பா கெடைக்கும்... ஆனா first price கெடைக்குமா....இன்னைக்கு hostel ல ஏதாச்சும் ஸ்பெஷல் லஞ்ச் இருக்குமா... இல்ல... எப்போதும் போல தானா...
இப்டி கவலைகள்.
"ரோகிணி காம்ப்ளெக்ஸ் ல கிடைக்கலைன்னா ஆட்டோ பிடிச்சு அபிராமி போனா atleast black ல சர்வ நிச்சியமா வாங்கிடலாம், warden அதே படத்துக்கு வந்து தொலச்சுட கூடாது" இது கல்லூரி வாசல்.
Corporate world ல அடி எடுத்து வெச்ச நாளா , "monday இல்லாட்டி friday ல வந்தா நல்லா இருக்கும், ஊருக்கு போலாம் மூணு நாளைக்கு, KPN ல டிக்கெட் வாங்குறதுக்குள்ள உயிரே போய்டும்.....try பண்லாம்...., பாப்பையா ஐயா எந்த தலைப்பு வெச்சுருக்காரோ தெரியலை... ராஜா பேசுறப்போ கரண்ட் போய்ட கூடாது...என்ன படத்தை போடுறானோ என்னவோ..."
ஆனா சமீப காலமா "கடவுளே, எங்க நாட்டுல எங்கயும் குண்டு வெடிச்சுட கூடாது, காப்பாத்துப்பா சாமீ!!!" இந்த பயம் கலந்த சிந்தனை தான் மனசுல ஓடுது......டிவி ல ஏதாவது flash news வந்தா கூட 'பக் பக்' னு மனசு பதறுது.
62 ஆவது சுதந்திர தினம்.
"இந்தியா பொருளாதாரத்துல முன்னேறணும், வல்லரசாகனும், அந்நிய செலாவணி பெருகணும்..."
இப்டின்னு பெரிய கனவு எல்லாம் எனக்கு இல்லவே இல்ல....அந்த கனவு எல்லாம் காணுறதுக்கு நெறைய பெரியவங்க இருக்காங்க....என் கனவு, வேண்டுதல் எல்லாம் இப்போதைக்கு ஒண்ணே ஒண்ணு தான். "எங்க நாடு அமைதியான நாடா இருக்கணும்"
தாய் மண்ணே வணக்கம்!!!
Questions and Observations on Sabarimala
6 years ago
12 comments:
ரொம்ப அழகா எழுதறீங்க நீங்க. அடிக்கடி எழுதலாமே. என்னைய மாதிரி போழுதுபோவாம இருக்கற மக்கள் வந்து படிச்சுட்டு போவோம்.
(இட்லிவடை blogla எழுதின கமெண்ட் பாத்து இங்க வந்தேன். )
மிக்க நன்றி.
ரொம்ப தன்னடக்கம் உங்களுக்கு.
பொழுது போகாம இருக்கோம் ன்னு சொல்லிட்டு பிச்சு உதறிட்டு இருக்கீங்க....உங்க blog ல....
உங்க அவனும் அவளும் உரையாடல்கள் எல்லாம் கற்பனையா நிஜமா?...;-)
Your writing is very refreshing...
Great and keep going
அடேங்கப்பா, late ஆ எழுதினாலும் நச்சுன்னு எழுதிட்டீங்க. இந்தியாவில இருக்க எங்க pain a விட உங்களுக்கு அதிகமா இருக்கும்னு காட்டிட்டீங்க .. Good. but dont worry. அப்பப்போ இந்த மாதிரி நடக்குமே தவிர, நிச்சயமா இந்தியாவோட அமைதியை யாராலும் ஒன்னும் பண்ண முடியாது.
****உங்க அவனும் அவளும் உரையாடல்கள் எல்லாம் கற்பனையா நிஜமா?****
நிஜமா இருந்தா நல்லா இருக்கும்ன்னு தான் நான் சொல்றேன் (தசாவதார ஸ்டைல்)
நல்லாயிருக்கு..
வாழ்த்துக்கள்
சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com
அய்யோ! கொஞ்ச நாளா இந்த பக்கம் நான் வரலைன்னு தெரியுது! ப்லோக் போட்டு பத்து நாள் ஆயிடிச்சு!!!
"எங்க நாடு அமைதியான நாடா இருக்கணும்"
இதே சிந்தனை தான் இங்கயும்!!
அது சரி , இது 62 வதா? இல்லை 61 வதா?
கதிர், நாங்களும் இந்தியா க்கு திரும்பி வந்துட்டோம்,ஒரு மாசமாச்சு.
அனோனி, நன்றி.
சூரியா, நன்றி.
maddy, ஆகஸ்ட் 15,1947 தான் முதல் சுதந்திர தினம்...அதுனால இப்போ 62 ஆவது.
இந்தியாவுக்கு வந்துட்டீங்களா? permanent டாவா or just vocation ???
permanent டா!
அருமையான மலரும் நினைவுகள்! தம்பி மேல ரொம்பப் பாசம் போல :-)))
amas32
அருமையான மலரும் நினைவுகள்! தம்பி மேல ரொம்பப் பாசம் போல :-)))
amas32
Post a Comment