Friday, 25 January 2013

வருண் நித்யா காதல் சில தருணங்கள் - ஒரு டக் பதிவு

முழுநீள காதல் கதை என்பது தமிழ் படங்களில் அரிதாகி விட்டது (இரு இரு...இதே மாதிரி தான விண்ணை தாண்டி வருவாயா பட  விமர்சனத்துக்கும் எழுத ஆரம்பிச்ச?
அட படமே அதே மாதிரி இருக்கப்போ பதிவு இருக்க கூடாதா?)

முழுநீள காதல் கதை என்பது தமிழ் படங்களில் அரிதாகி விட்டது.
இப்ப வர்ற தமிழ் படங்களில் காதல் இருக்கும் ஆனால் அது கூட சேர்ந்து நண்பர்கள், அண்ணன், தம்பி, தீவிரவாதி அல்லது குறைந்த பட்சம் ஒரு பேயோ,யானையோவாவது இருக்கும். இத மாதிரி எதுவுமே இல்லாம மைதிலி என்னை காதலி படத்தில் கதை, திரைக்கதை வசனம் டைரக்சன் இசை....etc என்று எல்லாமுமாக டி ஆரே இருப்பது போல இந்த படம் முழுக்க முழுக்க காதலும் காதல் சார்ந்த திணையும் தான்.

வி. தா. வ, நீ.தா.என்.பொ. வ இந்த படமெல்லாம் பிடிக்க வேண்டுமானால்

1)நீங்கள் யூத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் காதலித்து இருக்க வேண்டும். காதல் என்றால் கல்யாணத்துக்கு அப்றோம் வரும் சுவலட்சுமி காதலோ அல்லது படிப்பெல்லாம் முடிச்சு தெளிவாகி வரும் அறிவு முதிர்ச்சி காதலோ அல்ல... பதின்ம வயதிலோ, இருபதின் ஆரம்பத்திலோ ஆன்ட்ரொஜண்/ ஈஸ்ட்ரோஜண் புரட்டி புரட்டி அடிக்கும் போது வரும் மடத்தனமான காதல். Mad love.

2)சந்தானம் சொல்ற மாத்தி தூக்கு போடறதுக்கு முன்னாடி மூஞ்சில கருப்பு துணி போட்டு மூடின மாதிரியான உணர்வை அனுபவிச்சு இருக்கணும்.

3)நித்யா மாதிரி "படிப்பு/ நண்பர்கள்/ எக்ஸ்ட்ரா கரிகுலர் என்ற எல்லா நிலைகளின் போதும் அவன் மட்டும் போதும்" என்பதே உங்களுக்கான தேர்வாக இருந்து இருக்க வேண்டும். (இதையும் தாண்டி நீங்கள் படிச்சு இன்னைக்கு வாழ்க்கைல தேறி இருந்தீங்கன்னா அது உங்க அதிர்ஷ்டம்/சாமர்த்தியம் )

4)வருண் மாதிரி ஒரு டெம்ப்ளேட் மிடில் கிளாஸ் குடும்பத்தின் "அத்தனைக்கும் ஆசைப்படு" க்கும், நித்யாவின் "நீ மட்டும் தான்
எனக்கு வேணும்" க்கும் நடுவிலான அவஸ்தையை பட்டு இருக்கணும்.

5)அழுகையின் ஊடே "என்னை சாவடிக்கற; you don't deserve my love' என்று ஒரு முறையேனும் நீங்க சொல்லி இருக்கணும்.

இதெல்லாம் பண்ணி இருந்தீங்கன்னா இந்த மடத்தனம்,அதிலும் இந்த மடத்தனத்த ஜீவா, த்ரிஷா, சமந்தா, சிம்பு (sans விரல் வித்த/பஞ்ச டயலாக்) செய்யறப்போ உண்மையிலேயே அது ரொம்ப அழகா தெரியும்...

-"மேல்போர்ன்ல எனக்கு ஒரு ப்ரெண்ட் இருக்கா.அவட்ட சீக்கிரமா திரும்ப வர சொல்றியா" என்று வருண் சொல்றப்போ அவனுக்கு தெரிந்தும் தெரியாமலும் ஒரு சிரிப்பு சிரித்து, "சரி சொல்றேன்"னு நித்யா சொல்லும் அழகியல் புரியும்.

-ஸ்கூல் சண்டை அப்போ திரும்பி போகும் நித்யா "வேற ஏதும் சொல்லாத வருண், போகாதே ன்னு மட்டும் சொல்லு" ன்னு மனசுக்குள்ள சொல்லிக்கும் போது இது ஏற்கனவே ரேவதி பேசின டயலாக் தான்னா கூட உங்களுக்கு பிடிக்கணும்... பிடிக்கும்.

-"அவனா நானா" "i don't want this sh*t anymore" என்று பொங்கும் வருணின் கோவம் புரியும்

-"சாய்ந்து சாய்ந்து" ன்னு ஆரம்பிக்கும் போதே..உங்களுக்குள்ள அடடா ன்னு இருக்கும்.

-"நீ தான விட்டுட்டு போன" ன்னு வருண் சொல்றப்போ "ஆமா" ன்னும் "நீ என்னை போக விட்டுருக்க கூடாது" ன்னு நித்யா சொல்றப்போ "ஆமா கரெக்டு" ன்னும் உங்க மனசு மாத்தி மாத்தி defense/prosecution ரெண்டுமே பண்ணும்.

-மொட்டை மாடில வெச்சு நித்யா "கடைசியா ஒன்னு பண்ணிடு வருண், என்னை விட்டுடு... ஏன்னா என்னால அது முடியாது" ன்னு சொல்றப்போ, எப்படி இருக்கும்ன்னு எழுத தெரியலை

-"நீ ஏன் கோச்சிங் சேரனும் உனக்கும் MBA படிக்க ஆசை இருக்கா? என்று கேட்கும் வருணிடம் "அங்கே நீ இருப்பேல்ல" என்று சொல்லும் நித்யா உங்களுக்கு பைத்தியம் மாதிரி தெரிய மாட்டாள்.

-படம் முடிய இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு. க்ளைமாக்ஸ் மின்னலே வா, (தமிழ்) வி.தா.வ யான்னு உங்களுக்கு அப்படியே பக்கு பக்குன்னு அடிச்சுக்கும்.

இப்படி தாறுமாறாக மடத்தனம் செய்து, இன்று வேலை, குழந்தைகள், ட்ராபிக் ஜாம் முதலான இத்தியாதிகளில் உங்கள் காதலிக்கும் நேரங்கள் தொலைந்திருப்பின் இந்த படத்தை பாருங்கள்...
இரண்டரை மணி நேர எக்ஸ்டஸி கேரண்டி.

11 comments:

புன்னகை said...

<3 it! :-)

Sankar P said...

ஒரு வழியாக இன்று படம் பார்த்து முடித்து விட்டேன். முதலில் ஒரு சின்ன முன்னுரை.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு ஆளாளுக்கு பில்டப் கொடுத்ததால, ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு பார்த்து விட்டு நொந்துட்டேன். கவுதம் மேனன், விவிஎசு இலட்சுமணன் மாதிரி. மனிதனா இவன் என்று வியக்கும்படி பின்னிப் பெடலெடுப்பார் சில சமயம், ஆள விடுடா சாமின்னு ஓட வைப்பார் சில சமயம். விதாவ பார்க்கும்போது பல சீன்கள் ரொம்ப பிடித்திருந்தாலும், ஒரு சில சீன்களும், முடிவும் ரொம்பவே திராபையாக இருந்ததினால் கொஞ்ச நாள் கௌதம் சினிமாவே பார்க்க வேண்டாம் என்று யோசித்து இருந்தேன். அதற்கு முக்கிய காரணம், நான் மிகவும் இரசித்த ரீனா யோசப்பை (மின்னலே ReenaJoseph) படைத்த ஆள் இப்படி ஒரு கேவலமான எசியைப் (Jessie) படைத்து விட்டாரே என்று.

முதல் முறை பார்த்த போது பிடிக்கவே பிடிக்காத படம், பிறகு தேடித்தேடி ஒரு சில சீன்களை மிகவும் இரசித்துப் பார்க்கும்படி ஆயிற்று ("உன் கண்ணால அவங்க யாரும் என்னைப் பார்க்கலை போல", முதலியன). அதனால மொத்ததுல விதாவ பிடிக்கலேன்னாலும் ஓரளவுக்கு நல்ல அபிப்பிராயம்தான் இருந்தது அந்தப் படத்து மேல.

இது இப்படியே நிற்க. விதாவ மாதிரியே ஒரு படம் திரும்பவும் கௌதம் எடுத்திருக்கார் என்று டுவிட்டரில் தெரிய வந்தது. நிறைய பேர் படம் மொக்கை என்றார்கள். நான் மிகவும் ஒத்துப்போகும் கார்க்கியே நன்றாக இல்லை என்றுதான் சொன்னார். ஆனால் நீங்கள் மட்டும் நன்றாக இருக்கிறது என்று சொன்னீர்கள். சரி பின்னாளில் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். திரிசாவை எப்போதுமே எனக்குப் பெரிதாகப் பிடிக்காது. அதனால Jessie அவர் நடித்ததில் உள்ளூர கொஞ்சம் மகிழ்ச்சிதான் ;) ஆனால் சமந்தாவை நிர்ர்ர்ர்ர்ரொம்பப் பிடிக்கும். அதனால படம் பார்த்து, ஒரு வேளை, Jessie மாதிரியே சமந்தாவையும் உருவாக்கியிருந்தால் கவுதம் மேல கோபம் அதிகமாகிடுமோன்னு படத்தைப் பார்க்கவேயில்லை.

ஆனால் உங்கள் விமர்சனம் மட்டும் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை உள்ளுக்குள்ளே வளர்த்துக் கொண்டே இருந்தது. சோக முடிவு படங்கள் துப்புரவாகப் பிடிக்காது எனக்கு. இந்தப் படம் சோகமா, நல்லபடியான முடிவா என்று வேறு தெரியல. இசையருவியிலும், சன் மியூசிக்கிலும் "காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன்", "என்னோடு வா வா" பாட்டெல்லாம் பார்த்தால் படம் நன்றாக இருக்கும் என்றே தோன்றியது. அந்த அழகியல் மிகவும் ஈர்த்தது. ஒரு நாள் யூடியுப் பரிந்துரைகளில் இப்படத்தின் முன்னோட்டம் (trailer) வந்ததால், அதையும் பார்த்தேன். சரி படத்தைப் பார்த்தே விடுவோம் என்று முடிவு செய்து பார்த்து முடித்து விட்டேன்.

உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும். படம் அருமை. ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கார் இயக்குனர். மின்னலேவுக்கு அப்புறம் இதுதான் நிரொம்பப் பிடித்த கவுதம் படம். சமந்தா சொந்தக்குரலில் வேறு பேசி இருக்கிறார் போல. அழும்போது கூட அழகாக இருக்கும் அப்படி ஒரு பேரழகி சமந்தா. கொஞ்சம் கொஞ்சம் சுருதிகாசன் மாதிரியும் இருக்கிறார். நல்லவேளை நீங்கள் விமர்சனம் எழுதி இருந்தீர்கள். இல்லையென்றால் இப்படி ஒரு நல்ல படத்தைத் தவற விட்டிருப்பேன். அதனால் உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.

இந்தப் படத்தை நல்லா இல்லேன்னு ஏன் இத்தனை பேர் சொன்னாங்கன்னு புரியல. அதவும் கார்க்கி கூட நல்லா இல்லைன்னு என் சொன்னார் !?

Sankar P said...> -"மேல்போர்ன்ல எனக்கு ஒரு ப்ரெண்ட் இருக்கா.அவட்ட சீக்கிரமா திரும்ப வர சொல்றியா" என்று வருண் சொல்றப்போ அவனுக்கு தெரிந்தும் தெரியாமலும் ஒரு சிரிப்பு சிரித்து, "சரி சொல்றேன்"னு நித்யா சொல்லும் அழகியல் புரியும்.

ஆமா ஆமா

> -ஸ்கூல் சண்டை அப்போ திரும்பி போகும் நித்யா "வேற ஏதும் சொல்லாத வருண், போகாதே ன்னு மட்டும் சொல்லு" ன்னு மனசுக்குள்ள சொல்லிக்கும் போது இது ஏற்கனவே ரேவதி பேசின டயலாக் தான்னா கூட உங்களுக்கு பிடிக்கணும்... பிடிக்கும்.

ஆமா ஆமா

> -"அவனா நானா" "i don't want this sh*t anymore" என்று பொங்கும் வருணின் கோவம் புரியும்

ஆமா ஆமா

> -"நீ தான விட்டுட்டு போன" ன்னு வருண் சொல்றப்போ "ஆமா" ன்னும் "நீ என்னை போக விட்டுருக்க கூடாது" ன்னு நித்யா சொல்றப்போ "ஆமா கரெக்டு" ன்னும் உங்க மனசு மாத்தி மாத்தி defense/prosecution ரெண்டுமே பண்ணும்.

ஆமா ஆமா

> -"நீ ஏன் கோச்சிங் சேரனும் உனக்கும் MBA படிக்க ஆசை இருக்கா? என்று கேட்கும் வருணிடம் "அங்கே நீ இருப்பேல்ல" என்று சொல்லும் நித்யா உங்களுக்கு பைத்தியம் மாதிரி தெரிய மாட்டாள்.

ஆமா ஆமா

> -படம் முடிய இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு. க்ளைமாக்ஸ் மின்னலே வா, (தமிழ்) வி.தா.வ யான்னு உங்களுக்கு அப்படியே பக்கு பக்குன்னு அடிச்சுக்கும்.

ஆமா ஆமா

> இப்படி தாறுமாறாக மடத்தனம் செய்து, இன்று வேலை, குழந்தைகள், ட்ராபிக் ஜாம் முதலான இத்தியாதிகளில் உங்கள் காதலிக்கும் நேரங்கள் தொலைந்திருப்பின் இந்த படத்தை பாருங்கள்... இரண்டரை மணி நேர எக்ஸ்டஸி கேரண்டி.

வழிமொழிகிறேன் :)

இந்தப் படத்தைப் பற்றி ஒரே ஒரு குறை சொல்ல வேண்டுமென்றால், இளையராசாவும், அவர் மகனும் பாடாமல் இருந்திருக்கலாம். "உன் குத்தமா என் குத்தமா" என்று பார்த்திபனுக்குப் பொருந்தி வந்த குரல் சமந்தாவுக்கும் ஒலிக்கும் போது சோகத்தை விட கோபத்தைத்தான் அதிகம் வரவைத்தது. சீவா (jeeva) வுக்குப் பதில் அந்த தெலுங்குத் தம்பியையே நடிக்க வைத்திருக்கலாம் என்று கூட தோன்றியது.

karki bava said...

இந்த படம் எனக்கு இப்போது மிகவும் பிடித்து போய்விட்டது. ஆனா முதல் நாள் பார்த்தபோது நூடுல்ஸ் ஆனதும் உணமையே. அது போல எல்லோரும் ஆனதும் சரியா.. ஏன்னா, 1008 விமர்சனம் படிச்சிட்டு, ஒரு படத்த பத்தின பல முன்னேற்பாடு விஷயங்கள வளர்த்துட்டு , துண்டு துண்டா காட்சிகள பார்த்துட்டு இருந்தா இந்த படம் பிடிக்கும். முதல் நாள் தியேட்டர்ல 3 மணி நேரம் இந்த படம் கொடுத்த அனுபவம் கிரியில் வடிவேலுவுக்கு நிகழ்ந்த அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு ஒப்பானதே.. பின்னாளில் மீள்பார்வை/பகுதிப்பார்வை(எப்பூடீஈஇ) காரணத்தால் இது பிடித்து போனது வேறு கதை..

ஆகவே, கனம் சங்கர் அவர்களே!!!!! :))

karki bava said...

அதே சமயம் படத்தில் பல பிரச்சினைகள் உண்டு

1) வருண் .. வருண் கிருஷ்ணன்.. இப்படி surnameவோட பேரை சொல்லும் பழக்கம் ந்மக்கு கிடையாது.

2) அக்கா, template middle class என்கிறார்கள். அது போன்ற ஜாலியான அப்பா, அண்ணன் எனக்கு மட்டுமில்லை. என் நண்பர்கள் குழாமிலே கிடையாது.

3) காலம் சேர்ந்த ஏகப்பட்ட குழப்பம்/தவறுகள் படத்துல இருக்கு.

4) ஸ்கூல் படிக்கிறப்பவே கிஸ்ஸெல்லாம் அடித்துவிட்டு, முதல் முறை காதல் சொல்வதை போல ஏகப்பட்ட தேவையற்ற பில்டப்புகள்.

5) எல்லாத்துக்கும் மேல materialistic ஆக யோசித்து காதலிக்கும் வருணை ஆண்கள் வெறுக்கவே செய்வார்கள். பிடிக்கிறது என்றால் ஓக்கே.. ஏன் பிடிக்கலை என்பதற்கும் படத்தில் ஆயிரம் காரணங்கள் உண்டு.

எனக்கு பள்ளிப்பருவ எபிசோட் ரொம்ம்ம்ப புடிக்கும். அதுவும் வானம் மெல்ல உயிரு.. சங்கருக்கு அதுவே இடிக்குதே :)))

Sankar P said...

கார்க்கி: நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். நிறைய குறைகள் உள்ளன. ஆனால் மனதில் அழகென்று [பதிந்துவிட்ட பெண்ணின் முகத்தில் இருக்கும் தழும்பும் உறுத்தாது என்பது போல, இந்தப் படத்தில் இருக்கும் குறைகளும் பெரிதாகத் தெரியவில்லை :)

Sankar P said...

ஆனால் நீங்கள் சொன்னதெல்லாம் சரியான காரணங்கள். பலரும் ஒன்றிப்போகாமல் இருந்ததற்கு இவையும் காரணமாக இருக்கலாம். உங்களைப் போல ஒரு நல்ல துணை இயக்குனர் கவுதமுக்கு இந்தப் படத்துக்கு வாய்க்காமல் போய்விட்டாரே !

priyakathiravan said...

யோவ். சஞ்சய் ராமசாமி இருக்கலாம். விநாயக் மகாதேவன் இருக்கலாம். பஞ்சவன் பாரிவேந்தன் இருக்கலாம். ஆனா வருண் கிருஷ்ணன் இருக்கப்படாதா? என்னங்கய்யா உங்க நியாயம்? சமந்தாவுக்கு ஜீவாவ பிடிச்சுருக்குன்னு பொறாமைல காரணம் கண்டு பிடிச்சு திட்றீங்களா?

Sankar P said...

I think upper middleclass, chennai-grown, CBSE students can relate to this lastname concept much more than small town people like me :)

karki bava said...

பஞ்சவன் பாரிவேந்தன் கன்னடம்.. அவரின் பூர்வீகத்த கதைல யோசிக்கணும்.. விநாயக் மகாதேவம் தன்ன மிடிக்ளாஸாவோ, அல்லது ஃபுல நேமையோ சொல்லிக்கொள்வதில்லை.. சஞ்சய் ராமசாமி எப்பேர்பட்ட ஆளு!!!!

கண்மூடித்தனமா ஆதரிக்க வேணாம்.. சங்கர் மாதிரி இருங்க.. ஈஈஈஈஈஈஈஈ


:)))

karki bava said...

@sankar,

இப்படிலாம் ஜகா வாங்கினா நாங்க சுறாவையே சூப்பர்னு சொல்லுவோம்.. உங்களுக்கு தழும்பு.. எஙக்ளுக்கு கையே இல்லை.. அவ்ளோதான் :))