எட்டாம் வகுப்பு பாடத்திட்டம் என்று நினைக்கிறேன்.
தமிழ் பாடத்தில் ஒரு பகுதி உண்டு. ஆங்கில பழமொழிகள் கொடுத்து அதற்கு இணையான தமிழ் பழமொழிகளை எழுத சொல்வார்கள்.
Empty vessel makes more noise என்றால் நாம் "குறைகுடம் கூத்தாடும்" என்று பதில் அளிக்க வேண்டும்.
As you sow so shall you reap - வினை விதைத்தவன் வினை அறுப்பான்; கத்தி எடுத்தவன் கத்தியால் மாள்வான்.
இதில் என்ன பிரமாதம் என்று தோன்றலாம். பிரமாதம் என்பதற்கில்லை என்றாலும் இது சுவாரஸ்யமானது.
'Every dog has its day'
இதை தமிழ்ப்படுத்தினால், 'யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்' எனலாம்.
ஆங்கில பழமொழியில் இருப்பதோ நாய். தமிழில் யானையும், பூனையும்...
You are what you eat - சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
இதில் சுவரும் சித்திரமும் சாப்பிடுவதோடு பொருந்தி போகிறது பாருங்கள்.
முதலில் ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே மொழிபெயர்த்து புரிந்து கொண்டு அதற்கு தமிழில் பொருத்தமாக என்ன சொல்லலாம் என்று யோசிக்க வேண்டும்.
சிறுவயதில் மிகவும் ஆர்வத்துடன் விளையாடிய விளையாட்டு.
பழமொழிகள் மட்டும் என்று இல்லை. Phrases என்று சொல்வார்களே...அதிலும் தமிழாக்கம் சுவையானது.உதாரணத்துக்கு
A slip between the cup and lip
என்றால், 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது'
இப்போது போட்டிக்கு வருவோம்.
பொதுவாக நாம் அடிக்கடி கேட்கும், புழங்கும் சில phrase களை (முதலில் இந்த phrase க்கு சரியான தமிழ் வார்த்தை யாராவது சொல்லுங்கள்) இங்கு தருகிறேன். அதை தமிழாக்கம் பண்ணி பின்னூட்டுங்கள்.
சரியான தமிழாக்கம் தர வேண்டும் என்றாலும், உங்கள் மனதில் அந்த phrase / பழமொழியை படித்ததும் சட்டென்று என்ன தமிழாக்கம் தோன்றுகிறது என்பதை சொல்லுங்கள்.
Don't try to teach your Grandma to suck eggs;
இதற்கு இணையாக தமிழில் பழமொழி, சொலவடை இருக்கலாம்.
ஆனால், இதை படித்ததும் எனக்கு
'முருகனுக்கே வேலா? அண்ணாமலைக்கே பாலா? திருப்பதிக்கே லட்டா?'
இந்த மாதிரி தோன்றியது.
Ok, now start music;
1)Rose is a rose is a rose
2)Uneasy lies the head that wears a crown
3)The smallest worm will turn, being trodden on
4)Can a leopard change its spots?
5)A chain is only as strong as its weakest link
6)A fish rots from the head down
7)Don't cast your pearls before swine
8)Every cloud has a silver lining
9)It ain't over till the fat lady sings
10)A nod's as good as a wink to a blind horse
பின் குறிப்பு:சிலவற்றுக்கு ஆங்கில அர்த்தம் தேவைப்பட்டால்
கூகிளில் கிடைக்கும்.
முக்கிய பின் குறிப்பு:
ஏதாவது போட்டி வெக்கலாமே என்று உசுப்பேற்றிய சிலருக்காக இந்த
பதிவு.
"அடிச்ச கைப்புள்ளைக்கே...."மாதிரி ஆக்கி விடாதீர்கள் என்று
கேட்டுக்கொள்கிறேன்.
Questions and Observations on Sabarimala
6 years ago
11 comments:
அக்கா!
முடியலப்பா! எப்படி? இப்படியெல்லாம் அறிவுபூர்வமா எல்லாம் சிந்திக்கிறிங்களோ!!!
"quote: அறிவுபூர்வமா எதையாவது எதிர்பார்த்தா, போங்க! போங்க! அடுத்த வீட்டுக்கு."
3)The smallest worm will turn, being trodden on
சாகிற நாய் வீரத்தை காட்டினது போல
- but this has a negative connotation as opposed to the positive one in shakespeare
4)Can a leopard change its spots?
நாய் வாலை நிமிர்த்த முடியுமா ?
5)A chain is only as strong as its weakest link
6)A fish rots from the head down
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
7)Don't cast your pearls before swine
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?
8)Every cloud has a silver lining
எல்லாம் நல்லதுக்கே
10)A nod's as good as a wink to a blind horse
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?
நாய் பிடித்த தெங்கம் பழம் - but this suits "dog in the manger " better
3)The smallest worm will turn, being trodden on
சாகிற நாய் வீரத்தை காட்டினது போல
- but this has a negative connotation as opposed to the positive one in shakespeare
4)Can a leopard change its spots?
நாய் வாலை நிமிர்த்த முடியுமா ?
5)A chain is only as strong as its weakest link
6)A fish rots from the head down
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
7)Don't cast your pearls before swine
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?
8)Every cloud has a silver lining
எல்லாம் நல்லதுக்கே
10)A nod's as good as a wink to a blind horse
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?
நாய் பிடித்த தெங்கம் பழம் - but this suits "dog in the manger " better
இதெல்லாம் கூகிள்-ல தேடாம நானா புரிஞ்சிக்கிட்டது. கொஞ்சம் காமெடி ஆக தான் இருக்கும். பொறுத்துக்குங்க. எந்த அளவுக்கு என்னோட ஆங்கில புலமை இருக்குது பாருங்க...
1. A fish rots from the head down...
தாயை போல பிள்ளை, நூலைப் போல சேலை...
2. Rose is a rose is a rose
நாய் வாலை நிமிர்த்தவே முடியாது.
3. The smallest worm will turn, being trodden on.
காலம் எலியையும் புலியாக மாற்றும்.
4. Uneasy lies the head that wears a crown
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு.
அவ்வளவு தான் நமக்கு தெரியும். மிச்சம் எல்லாம் நீங்களே சொல்லிடுங்க...
சரி இதுக்கு பதில் இப்ப வேனுமா இல்ல அடுத்த வருஷம் சொல்லவா..ஹி..ஹி..
த பாருங்க ..பேச்சு பேச்சோட இருக்கனும்.நோ வயலன்ஸ்..நீங்க விதிமுறை எதுவும் சொல்லல..(( யப்பா தப்பிச்சாச்சு..))
:-))
7)கழுதைக்குதெரியுமா கற்பூர வாசனை
3)தாக்குண்டால் புழுக்கள்கூட தரை விட்டுத் துள்ளூம்
4)நிறம் மாறாத பூக்கள்?
1)Rose is a rose is a rose
உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.
2)Uneasy lies the head that wears a crown
மடியில் கணம் இருந்தால் வழியெங்கும் பயம்.
3)The smallest worm will turn, being trodden on
அடி மேல அடி வெச்சா அம்மியும் நகரும். அல்லது சாது மிரண்டால் காடு கொள்ளாது.
4)Can a leopard change its spots?
நாய குளிப்பாட்டி நடு வீட்டுல வெச்சாலும் அத வால ஆட்டும்.
5)A chain is only as strong as its weakest link
நல்லதுன்னு ஒன்னு இருந்தா கெட்டதுன்னு ஒன்னு இருக்கும். இது ஏதோ பாக்கியராஜ் படத்தோட டயலாக் மாதிரி இருக்கு. :-)
6)A fish rots from the head down
ஒரு வீட்டுல தலைவன்/தலைவி சரியில்லேன்னா குடும்பம் நல்லா இருக்காது. அப்படிங்கிற மீனிங்குல வருது.
7)Don't cast your pearls before swine
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
8)Every cloud has a silver lining
கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கு. அல்லது எது நடந்தாலும் அதுல ஒரு நன்மை இருக்கு.
9)It ain't over till the fat lady sings
டோண்ட் கவுண்ட யுவர் சிக்கன் பிஃபோர் தே ஹேட்ச். எப்படி தமிழ்ல சொல்லிட்டேனா? :-)
10)A nod's as good as a wink to a blind horse
கற்பூர புத்தி. :-)
மண்டபத்திலே உக்காந்து யோசிச்சது:
1)Rose is a rose is a rose
இந்த டி.வி.யில வர்ர ரோஸ் நிகழ்ச்சி பத்தி ஏடாகூடமா சொல்றீங்களா? / சங்கு சுட்டாலும் நாத்தம் வரும்.
2)Uneasy lies the head that wears a crown
க்ரீடம் அளவு சரியில்லாட்டி, தலையில நிக்காது
3)The smallest worm will turn, being trodden on
புழுவ மிதிச்சாலும், நம் செருப்புல தான் ஒட்டிக்கும்.
4)Can a leopard change its spots?
சிறுத்தை குளிச்சாலும் போகாத புள்ளி, அது ஆகுமா புலி?
5)A chain is only as strong as its weakest link
செயின் வாங்கும் போது எல்லா லிங்கும் 956கேடிஎம்மான்னு பாத்து வாங்கணும்.
6)A fish rots from the head down
மீன் காஞ்சா கருவாடு.
7)Don't cast your pearls before swine
நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சு முத்து மாலை மாட்டினாலும், பன்றி ஆகாது.
8)Every cloud has a silver lining
வெள்ளி விக்கிற விலையில மேகத்துக்கு மாட்டுவாங்களா?
9)It ain't over till the fat lady sings
குண்டம்மா வந்தா ஆட்டம் காலி.
10)A nod's as good as a wink to a blind horse
குதிரைக்குக் கண்ணு தெரியலையின்னா, ஆமுன்னு சொல்றதுக்கு பதிலா கண்ணடிக்கும்.
3)The smallest worm will turn, being trodden on
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
4)Can a leopard change its spots?
நாய் வலை நிமிர்த்த முடியுமா?
5)A chain is only as strong as its weakest link
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
Rest appuram. Comment post panna vendam
1- சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
ரோஜா என்பது ரோஜா என்பது ரோஜா
குல்லா போட்ட தலையில் அரிப்பு எடுக்கும்.
பூச்சியை மிதித்தால் மறுபடியும் திரும்பி வரும்.
சிறுத்தை இருக்கும் இடத்தில இருந்து அகன்று பக்கத்தில் அமருமா ?
சங்கிலியின் பலம் அதன் பலவீனமான இணைப்பை பொருத்தது.
மீன் தலைகீழாக பட்டுப் போகும்.
பன்னிக்கு முன்னே மினுக்கி கொண்டு நிற்காதே.
மேகத்திற்கு நடுவே வெள்ளிக்கோடு.
குண்டு பெண் பாடினால் உள்ளதும் போச்சு.
குருட்டு குதிரைக்கு கண் சிமிட்டலுக்கும் தலை ஆட்டலுக்கும் உள்ள வித்தியாசம் புரியாது.
Post a Comment