"அர்ஜுனை பற்றி எதுவும் எழுதுவதில்லையே...ஏன்?"
சாம்பிளுக்கு ரெண்டு மேட்டர் எழுதுறேன். ஏன் எழுதுறதில்லைன்னு உங்களுக்கே புரியும்.
சென்ற பெப்ரவரி பத்தொன்பதுடன் மூன்று வயது ஆகிறது. ப்ளே ஸ்கூலுக்கு போய்க்கொண்டு இருக்கிறான்.அந்த பள்ளியின் ஆண்டு விழா சென்ற வாரம் சனிக்கிழமை நடந்தது.இரண்டு முதல் நான்கு வயதான குட்டி பிசாசுகளை நடிக்க வைத்து 'ஸ்நோ ஒயிட் அண்ட் செவென் ட்வார்ப்ஸ் ' நாடகத்தை மேடையில் நிகழ்த்தினார்கள். அர்ஜுனுக்கு அதில் பிரின்ஸ் வேடம். பள்ளியில் நாடகத்திற்கான ஒத்திகைகள் ஆரம்பித்த நாள் முதல், அவன் அந்த கதையை எங்களுக்கு வீட்டில் வந்து சொல்லிக்கொண்டே இருந்தான்.
Mirror Mirror on the wall...Snowhite was in jungle...Step mother came as old woman...இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பான். ஒரு நாள் அவங்கப்பா கேட்டார்.
"ஏன்டா ஸ்டெப் மதர் ஸ்டெப் மதர் ன்னு சொல்றயே...அதுக்கு அர்த்தம் என்னன்னு தெரியுமா?"
அதற்கு அர்ஜுன் சொன்னான்.
"தெரியும்ப்பா...'படி' மதர்"
*********************
முருங்கைக்காய் நறுக்கிக்கொண்டு இருந்தேன். வந்து தொந்தரவு பண்ணிக்கொண்டே இருந்தான்.
ஏதாவது பேசினால், அப்படியே ஆ ன்னு கேட்டுட்டு இருப்பான்... என்னையே மாதிரி....என்பதால்...
"அர்ஜுன்!நீ சின்ன புள்ளையா(??) இருக்கப்போ, முருங்கைக்காயை எப்டி சொல்வ தெரியுமா?..முக்கையா"
":-)))))))))"
"முள்ளங்கியை எப்டி சொல்வ தெரியுமா?...முங்கி"
":-))))"
அவ்வளவு தான். அன்றிலிருந்து எதை எடுத்தாலும் முதல் கேள்வி இது தான்..."அம்மா நான் சின்ன புள்ளையா இருக்கப்போ இத எப்டி சொல்லுவேன்?"
...................................
எங்கள் அலுவலகத்தில் நடந்த மகளிர் தின கொண்டாட்டங்களை பற்றி சொல்லியே ஆக வேண்டும். நடனம், பாட்டு, லக்கி draw , Best dressed woman, பெண்கள் பற்றிய ஐந்து வார்த்தை கொண்ட சுலோகம் எழுதும் போட்டி என்று ஏகத்துக்கு ஜமாய்த்தார்கள். இதில் உள்ள முதல் நாலு விஷயத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லாததால், ஐந்தாவதாக உள்ள ஐந்து வார்த்தை சுலோகம் எழுதி அனுப்பினேன்.
அதும் ஒன்றல்ல, இரண்டல்ல...ஆறு சுலோகங்கள். பொருத்தமாக படம் எல்லாம் போட்டு அனுப்பினேன்...மாதிரிக்கு இதோ இங்க ஒண்ணு.
ஆனால் பரிசு? அதை "You Too?Brutus?"என்ற ரீதியில் இரு பெண்மணிகள் தட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.
அவர்கள் எழுதியது.
"God Creates lives;Women deliver"
"Women belong to home & house" (House here means the Parliment house)
பரிசு என்னன்னு கேக்கலையே நீங்க?
Dinner for two in Le Royal Meredian.
சரி, கதிர் கொடுத்து வெச்சது அவ்வளவு தான்.
.......................................
சமீபத்தில் சுஜாதாவின் "ஒரு நடுப்பகல் மரணம்" என்ற புத்தகம் படித்தேன். மூர்த்தியும் உமாவும் ஹனிமூனுக்கு பெங்களூர் செல்கிறார்கள்.(வருகிறார்கள் என்று சொல்ல வேண்டுமோ?) மூர்த்தி கொடூரமான முறையில் கொலை செய்ய படுகிறான்.கொன்றவன் கண்ணாடியில் "Maya" என்று எழுதி வைத்து இருக்கிறான், உமாவின் முறை மாமா MAni, மூர்த்தியால் ஜாதகத்தை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்ட DivYA இருவர் மீதும் சந்தேகம் வருகிறது நமக்கு.கொன்றது யார்?என்பது தான் கதை.
நரேன்/வைஜெயந்தி, சங்கர்லால், விவேக்/ரூபலா திரில்லர்கள் நிறைய படித்து இருக்கிறேன்.பொதுவாக இந்த மாதிரி கதைகளை முடிவை தெரிந்து கொள்ளும் ஆவலில் சற்று வேகமாக வாசித்து விடுவேன். ஆனால் இந்த கதையின் சில பக்கங்களை திரும்ப திரும்ப வாசித்தேன். அதிலும் ஒரே ஒரு நாள் கணவன், முற்றும் எதிர்பாராத சூழ்நிலையில், அலங்கோலமான நிலையில் அவனுடைய பிணத்தை பார்த்த ஒரு மனைவியின் mental trauma பதிக்க பட்டிருந்த பக்கங்கள்.
"சாந்தி கல்யாணத்துக்கு வாங்கின கட்டில்...எங்க வாங்கின மணி? நல்ல ரோஸ் வுட். ஒரே ஒரு நாள் தான் யூஸ் பண்ணது...யாராவது நல்ல விலைக்கு எடுத்துப்பா...."
..................................
இன்றைக்கு CSK Vs RCB மேட்ச் பெங்களூரில். உன்னையும் அழைச்சுட்டு போறேன்னு சொல்லிட்டு இருந்தவர், கடைசி நேரத்துல 'என் கிரிக்கெட்
டீமோடு போறேன்'னு என்னை கழட்டி விட்டுட்டார்.
"Anyways Dhoni is injured and may not play today, So,நீ அங்கே எதுக்கு வரணும்?" ன்னு கேக்கறார்.
நியாயமான கேள்வி.
...............................................
ஒரு பரபரப்பான காலை 9 மணி. போக்குவரத்து நெரிசல் நிறைந்த அவுட்டர் ரிங் ரோட்.
மூன்று லேன்கள் கொண்ட ரோட்டின் நடு லேனில், ஒரு புத்தம் புது நீல கலர் ஸ்கூட்டியில் ஒரு பெண், மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில்(?) போய் கொண்டு இருக்கிறது. அது திரு திருன்னு முழிப்பது ஹெல்மெட்டையும் மீறி வெளியில் தெரிகிறது. நிமிடத்துக்கு 60 -70 முறை லப் டப் என்று துடிக்க வேண்டிய அந்த பெண்ணின் இதயம் பக் பக் என்று 200bpm இல் துடிப்பது வாகன இரைச்சலை எல்லாம் மீறி அந்த பெண்ணின் காதுகளிலேயே கேட்கிறது. கண் இமைக்கும் இடைவெளியில் அந்த பெண்ணின் வலது லேனில் ஒரு BMTC வால்வோவும், இடது லேனில் ஒரு லாரியும் ஒரே நேரத்தில் ஹாரன் அடித்த படி கடக்க, அந்த பெண் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நின்று விடுகிறது. இப்படி ஒரு காட்சி பெங்களூருவில் சில வாரங்களுக்கு முன் அரங்கேறியது. அந்த "woman on wheels" யார்?
பதிவின் தலைப்பை படித்து கொள்ளுங்கள்.
.................................
Questions and Observations on Sabarimala
6 years ago
9 comments:
//ஒரு பரபரப்பான காலை 9 மணி. போக்குவரத்து நெரிசல் நிறைந்த அவுட்டர் ரிங் ரோட். மூன்று லேன்கள் கொண்ட ரோட்டின் நடு லேனில், ஒரு நீல கலர் ஸ்கூட்டியில் ஒரு பெண், மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில்(?) போய் கொண்டு இருக்கிறது. அது திரு திருன்னு முழிப்பது ஹெல்மெட்டையும் மீறி வெளியில் தெரிகிறது. நிமிடத்துக்கு 60 -70 முறை லப் டப் என்று துடிக்க வேண்டிய அந்த பெண்ணின் இதயம் பக் பக் என்று 200bpm இல் துடிப்பது வாகன இரைச்சலை எல்லாம் மீறி அந்த பெண்ணின் காதுகளிலேயே கேட்கிறது. கண் இமைக்கும் இடைவெளியில் அந்த பெண்ணின் வலது லேனில் ஒரு BMTC வால்வோவும், இடது லேனில் ஒரு லாரியும் ஒரே நேரத்தில் ஹாரன் அடித்த படி கடக்க, அந்த பெண் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நின்று விடுகிறது.//
கதையில, சினிமாவில சீட் நுனிக்குக் கொண்டுவருவாங்க கேள்விப்பட்டிருக்கேன், ப்ளாக்லயும் முடியும்ன்னு காட்டிட்டீங்க :) நல்லாயிருந்தது!
பை தி வே 20 கிலோ மீட்டர் ஸ்பீட்ல எப்படி நடு லேனுக்குப் போனீங்க? :))) இந்த வம்பே வேணாம்ன்னுதான் நான் வண்டி ஓட்டறதே இல்லை, பிஎம்டிசி பஸ் ஜிந்தாபாத், அதுவும் இல்லாட்டி ஆட்டோவே சரணம் :)))
- என். சொக்கன்
Hi Akka,athu neenga thana???? neenga kanna mooditu orunthathu naala enna parkama vittutinga? :(
ஸ்கூட்டி வாங்கினத இப்ப லேட்டா சொன்னா எப்பூடீ..
ஆமா ப்ரியா கதிர் கண்டிப்பா பின்னாடி உக்கார மாட்டேன்னு சொல்லிருப்பாரே..
ம்ம் பஸ்ல போகாம இருக்கறதால இனி யோசிக்கிறது குறைஞ்சுடும்...
கந்தா காப்பாத்திட்டப்பா..
Thanks... Superb ka... Aana onnu ka unga Dhoni ye vanthalum yenga RCB ya onnum panna mudiyathu... Dravid than "King Maker"...
//Sunday, 28 February 2010
விண்ணைத் தாண்டி வருவாயா
//Sunday, 28 February ௨௦௧௦//
//
விண்ணை தாண்டி வர 23 நாள் ஆச்சா மேடம் .
ஒத்துக்கிறோம், உங்களுக்கு ஸ்கூட்டி வாங்கி அத ஒட்டவும் தெரியும்னு ஒத்துகிறோம். எதுக்கு அவ்ளோ பாஸ்டா எல்லாம் வண்டி ஓட்ரிங்க?
..."அம்மா நான் சின்ன புள்ளையா இருக்கப்போ இத எப்டி சொல்லுவேன்?"
அதுக்குள்ள அர்ஜுன் அவ்ளோ பெரிய மனுஸர் ஆயாசசா?? பேஷ் பேஷ்!!
Sleek,slender yet thunder!!!!
Slender-la mark kammiya poyirukkum!!!
Anyways Dhoni is injured and may not play today, So,நீ அங்கே எதுக்கு வரணும்?"
தனியா போய் சைட் அடிக்க என்னமா கதை சொல்றார் கதிர். நீங்களும் நியாயமான கேள்வி- ன்னு வேற பால் வடியும் முகத்தோட!! எப்படீங்க??
..
கண்ண மூடிக்கிட்டு வண்டி ஓட்ரத யாருன்னு கேட்ட இனி உங்க பேரை சொல்லலாம்
சென்னைல ஓட்ட வேண்டிய ஆளு நீங்க..........
hey,...akka thts too cool u ri8 abt our rockstar..ure a cool mother but ure mother is the best i guess..b`coz to bring up a cool mom like u..lucky rockstar/...enakkum solli kuden may b i`l B`COME a cool mom tooo...(ammakitta sollatha)
வழக்கம் போலகலக்கல் பதிவு பிரியா!
Post a Comment