சத்தியமாக சற்று முன் நானே செய்த ரசமலாய்.
ரசமலாய் இங்கிருந்து ரெசிப்பி பார்த்து செய்தது.
நான் ரசமலாய் செய்ய போகிறேன் என்று சொன்னதும் "ஐயோ பாவம் உங்க வீட்டுல எல்லாரும்' என்று வெகுவாக கவலைப்பட்ட சிலருக்காகவும், "எதற்கும் செய்து முடித்த பிறகு ஸ்வீட்க்கு பெயர் வை" என்று மேதாவி ஐடியா கொடுத்தவர்களுக்காவும் இந்த படத்தை உடனே அச்சேற்றி விட்டேன். நானே சற்று பயத்துடன் தான் ஆரம்பித்தேன். ஆனாலும் "சரியாக வரலைன்னா எல்லாத்தையும் ஒண்ணா போட்டு கிண்டி, 'பாசுந்தி' என்று பரிமாறி விடு" என்ற என் தம்பி கொடுத்த தைரியம் கை கொடுத்தது.
வீட்டில் சாப்பிட்டு பார்த்து 'சூப்பர்' என்று சர்டிபிகேட் கிடைத்ததும் விட்டது.
ஒரு கொசுறு தகவல்: நரகாசுரனை வதம் செய்ததை தான் தமிழ் நாட்டில் தீபாவளியாக கொண்டாடுகிறோம். கர்நாடகாவில், மகாபலி பூமியில் மக்களை சந்திக்க வரும் நாளாகவும்(கேரளாவில் மகாபலியின் வருகை ஓணம் பண்டிகையாக கொண்டாட படுகிறது), வட இந்தியாவில் ராமர் அஞ்ஞான வாசம் முடிந்து நாடு திரும்பிய நாளாகவும் தீபாவளியை கொண்டாடுவதாக இன்று தான் அறிந்து கொண்டேன்.
With that, Wishing each of you a very happy, colourful, sweet and safe Deepavali. God Bless.
9 comments:
வாவ் பின்னிட்டீங்க அக்கா.
அப்புறம், இந்த தீபாவளி மேட்டர் ஒரு இரண்டரை வருத்துக்கு முன்னாடி தான் எனக்கும் தெரியும். ஆச்சரியாத் தான் இருக்கு. இன்னைக்கு ஒரு jewish ஆளு என்னை பாத்து தீபாவளிக்கான காரணத்தை கேட்க, ஒவ்வொரு ஊருக்கும் மாரும்னு சொன்னா அவருக்கு ஏக ஆச்சரியம்.
ஓ இந்த முறை நான் தான் மீ த ஃபர்ஸ்டா?
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி அன்று அம்மா அப்பா கூட இல்லாமல் அங்க தூரத்துல தனியா இருக்கோமேன்ன்னு feel பண்ணாம, friends கூட நல்லா ஜமாயுங்க...
Happy Diwali
//சத்தியமாக சற்று முன் நானே செய்த ரசமலாய்.//
நீங்க சாப்டதாவும் ஒரு பொய் சத்தியம் பண்ணிடுங்க ப்ரியா... :)
இதை யாரும் நம்பாதீங்க...இப்படி தான் ஒரு தடவை ஒரு rasamalai படத்தை அனுப்பிட்டு நான் செஞ்சதுன்னு சொன்னா....கடைசியில் அது google லில் இருந்து சுட்டது...
repeat எல்லாம் வேணாம் priya ..
மிச்சம் இருக்கா?
இல்ல இப்படி போட்டு குடுத்ததே பேர் வாங்கற உங்க சுபா கிட்ட இருந்து உங்கள காப்பத்த தான், எதுக்கும் வேண்டிகிட்டு அப்புறம் இன்சூர் செஞ்சிட்டு வரேன் சாப்பிட!!
how is your (kathir & arjun's) health?
Post a Comment