கடந்த வருடம் மாதிரியே இந்த முறையும் இட்லிவடையின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லியாகி விட்டது.
"ரொம்ப நன்றாக அனுபவித்து, நுணுக்கமாக, நுண்ணரசியல் தூவி எழுதிஉள்ளீர்கள்." என்று பாராட்டும் கிடைத்தது, "உங்க கிட்ட பேசவே பயமா இருக்கு, ரவுடித்தனம் பண்ணிருக்கீங்க பதிவுல" என்று பாட்டும் கிடைத்தது.
இட்லிவடையை 'சமத்தா இருங்க' ன்னு சொல்லி இருக்கேன். ஆனால்,போன வருட பதிவையும், இந்த வருட பதிவையும் ஒப்பிட்டு படித்தால் எனக்கு தான் வால்தனம் அதிகமாகி விட்டது.
இட்லிவடை என்னை கொள்கை பரப்பு செயலாளர் ஆக்குவதாக சொல்கிறார்.
அவருடைய காபினெட்டில் "துணை முதல்வர்" பதவியே கொடுத்தாலும் வேண்டாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிவித்து கொள்கிறேன். :-)
Questions and Observations on Sabarimala
6 years ago
7 comments:
அப்போ மத்திய மந்திரி ஆயிடுங்க... உரமோ, தகவல் ஒளிபரப்போ.. ஏதாவது..
Happy Birthday!!!
பலே! பலே! மந்திரி ஆகறது முன்னாடியே நல்ல கை தேர்ந்த அரசியல்வாதியா பிரியா மாறியாச்சே!! வேண்டாம்ன்னு எந்த அரசியல்வாதியாவது சொன்ன அதுக்கு வேணும்ன்னு தான் அர்த்தம். இதுல என்ன பதவி வேணும்ன்னு கிளியரா சொல்லிட்டீங்க இல்லே, வாங்கிடுவோம்.......
அய்யோ தலைவி, அந்த துணை முதல்வரோட பி ஏ போஸ்ட் எனக்கு தானே!! மறந்துடாதீங்க............
யாரப்பா அது....தள்ளு...தள்ளு........து.மு.அம்மா வந்துட்ட்ருக்கங்க இல்லே
//இட்லிவடை என்னை கொள்கை பரப்பு செயலாளர் ஆக்குவதாக சொல்கிறார்.
அவருடைய காபினெட்டில் "துணை முதல்வர்" பதவியே கொடுத்தாலும் வேண்டாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிவித்து கொள்கிறேன். :-)
இட்லிவடையில யாரு எழுதுறாங்கன்னு தெரியகூடாதுன்னு இப்படி சொல்றீங்களா? நாங்க எல்லாம் வில்லனுங்க கண்டுபிடிச்சுடுவோம் :-)
உங்கள் ஒரு பதிவை படித்ததும்
ஆர்வ மேலீட்டால் எல்ல பதிவுகளையும் படித்து கொண்டிருகிறேன்...Really nice
//அவருடைய காபினெட்டில் "துணை முதல்வர்" பதவியே கொடுத்தாலும் வேண்டாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிவித்து கொள்கிறேன். :-)//
பதவியை துச்சமென தூக்கி எறிந்த எங்கள் தானைத் தலைவி தன்மான பெண் சிங்கம் பதிவுலக சூறாவளி தன் கொள்கை பரப்ப அமெரிக்காவிலும் ஆள் வைத்திருக்கும் அன்பு அர்ஜுனம்மாவுக்கு ஜெ குறில் அல்ல ஜே நெடில்.
//Rose said...
உங்கள் ஒரு பதிவை படித்ததும்
ஆர்வ மேலீட்டால் எல்ல பதிவுகளையும் படித்து கொண்டிருகிறேன்...Really nice
//
அய்யோ பாவம் யாரு பெத்த புள்ளயோ.. இப்போ என்ன நெலமைல இருக்கோ தெரியலையே..:(
Post a Comment