Thursday 29 January 2009

கோயில் கொஞ்சம் போர் அடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு:-)


"When a woman gets married to a man, not only is she married to him, but to his whole family"

கடந்த வார இறுதியில் நான் உணர்ந்த உண்மை இது தான்.

ஜனவரி 26 அன்று என் மாமனாரின் அறுபதாவது பிறந்த நாள். அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதால், அதை ஒரு பிறந்த நாள் விழாவாக மட்டும் அறிவித்து, உறவினரகள்
எல்லாரையும் அழைத்து ஒரு "Get together' வைக்கலாம் என்று கதிர் க்கு ஒரு ஆசை....என் மாமனாரும் மாமியாரும் வேண்டாம் என்று மறுக்க, என் முதல் நாத்தனாரும் 'ரொம்ப பெரிய அளவில் எல்லாம் ஏதும் செய்ய வேணாம், அப்டியே செய்தாலும் சொந்த ஊரில் செய்யலாம், பெங்களூரில் வைத்து நடத்தினால் எல்லாருக்கும் ரொம்ப சிரமம் ' என்றே நினைக்க, என் இரண்டாவது நாத்தனாரும், அவரும் பிடி பிடின்னு பிடிச்சு, விழா நடத்தியே ஆக வேண்டும் என்றும் , அதுவும் பெங்களூரில் எங்க வீட்டில் வைத்து நடத்துவதாகவும் argue பண்ணி ஜெயிச்சுட்டாங்க.....

முதல் சுற்று உறவினர்களை மட்டும் அழைக்கலாம் என்று யோசித்து, எல்லாருக்கும் சொல்லியும் ஆகி விட்டது......26th திங்கள் கிழமை என்றாலும், ஞாயிறு மாலை ஏழு மணிக்கு function என்று முடிவு செய்தோம்.

நாள் நெருங்க நெருங்க எல்லாருக்குமே ஒரே உதறல். அதாவது சொந்த ஊரில் ஒரு விழா வைப்பது என்பது வெகு சுலபம். அனைவரும் விழா நேரத்துக்கு சரியா வருவாங்க, வாழ்த்துவாங்க, சாப்பிடுவாங்க, கெளம்பிடுவாங்க.மாமியார் மாமனார் சென்னை ல வெச்சு நெறைய functions பண்ணிருக்காங்க.
அர்ஜுனின் பேர் வைக்கும் படலம் கூட சென்னை ல தான் நடந்துச்சு.சென்னை ல உறவினரகள் நெறைய பேர் இருப்பதால, நெறைய advantages. ஊர்ல இருந்து வர்றவங்களை, சென்னை ல இருக்க உறவினரகள் ஸ்டேஷன் ல இருந்து pick up பண்லாம்.அவங்க வீட்டில் தங்க வைத்து கொள்ளலாம்.இந்த மாதிரி...நெறைய உதவிகள் நமக்கு கெடைக்கும்.

ஆனா பெங்களுர் ல வெச்சு பண்றதுல logistics சிக்கல்கள் நெறைய இருக்கு.எல்லாருக்கும் பெங்களுர் புதுசு. pick up பண்ணுறதுக்கும், தங்கும் இடம் எல்லாம் offer பண்றதுக்கும் இங்க வேற யார் வீடும் இல்ல.சென்னை ல இருந்தும், சொந்த ஊரிலுருந்தும் வர்ற எல்லாரையுமே நம்ம தான் பாத்துக்கணும்.அவங்களோட pick-up, drop, stay, food, entertainment என்று எல்லாமே நான், அவர், மாமனார், மாமியார் நாலு பேரும் மட்டுமே சமாளிக்க வேண்டிய challenge நெருங்க நெருங்க எங்க எல்லாருக்கும் ஒரே உதறல்.

எல்லாருக்கும் இந்த உதறல் மட்டும் தான்னா, எனக்கு எக்ஸ்ட்ரா உதறல் வேற.அதாவது திருமணம் ஆன உடனே, abroad போய்ட்டதுனால, நாங்க பெரும்பாலான குடும்ப விழாக்களை மிஸ் பண்ணிட்டோம் கடந்த மூணு வருஷமா.நடுவுல அர்ஜுனோட பேர் வைக்கும் function அன்னைக்கு, எனக்கு கைபுள்ளைக்காரி ன்னு சலுகை இருந்ததுனால, எனக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஆனால் இந்த முறை அப்டி இல்ல.

"நானும் உங்க குடும்பத்துக்குள்ள வந்துட்டேன்" அப்டின்னு நமக்கு ஒரு எடம் பிடிக்க வேண்டிய பொறுப்பு இருக்கு...
"என்ன மக்கா?"
"ஊர்ல பாட்டி தாத்தா எல்லாம் சும்மா இருக்காங்களா???" (நல்லா இருக்காங்களா வோட nagerkoil version)
"அந்த சர்வத்தை எடு" (சர்வம் - பாத்திரம்)
"அந்த போணிய எடு" (போணி - இன்னொரு பாத்திரம்)
"இந்தாம்மா...இத எல்லாருக்கும் வெளம்பு" (விளம்புதல் - பரிமாறுதல்)
"ரொம்ப வெசக்குது" (வெசக்குது - வியர்க்குது)
""ரொம்ப சடஞ்சுட்டேன்" (பலவீனமா ஆயிட்டேன்)

இந்த ரீதியிலான உரையாடல்களை எல்லாம் சகஜமா புரிஞ்சுக்கிட்டு கரெக்ட் ஆ react பண்ணனும். "அப்டின்னா??" அப்டின்னு அபத்தமா கேள்வி கேக்க கூடாது.
அப்போப்போ முடிஞ்சா இந்த வார்த்தைகளை எல்லாம் சரளமான தொனியில் பேசி,
"இது நம்ம பொண்ணு" என்ற பீலிங் வரவழைக்கணும்."கதிர் சரியான பொண்ண தான் கூட்டிட்டு வந்துருக்கான் நம்ம குடும்பத்துக்கு" ன்னு அவரோட மானத்தை காப்பாத்தணும்.

ஒரு வாரத்துக்கு முன்னாடிலேர்ந்தே வீடு களை கட்ட ஆரம்பிச்சுடுச்சு.
மாமா, அத்தை போய், தேவையான provisions எல்லாம் வாங்கிட்டு வந்துட்டாங்க.
அவர் எல்லாருக்கும் தூங்குவதற்கு பாய், தலையணை, மெத்தை, போர்வை எல்லாம் வாங்கிட்டு வந்தார். முதல் சுற்று உறவினர்கள் மட்டும் தான் என்றாலும், அதுவே ஒரு நாற்பது பேர் வந்துது எங்களையும் சேர்த்து. வீட்டுல இருக்கது ஒரு ஹால், மூணு ரூம்,அதனால எக்ஸ்ட்ரா மூணு guest ரூம் போட்டு வெச்சுகிட்டோம். ஞாயிறு இரவு மட்டும் தான் function என்றாலும், எங்களுக்கு சனி, ஞாயிறு,திங்கள் என்று மூணு நாளுமே விழா மாறி தான் தோணிச்சு. ஏன்னா எல்லாரும் சிலர் சனிக்கிழமை காலையிலும், மீதி பேர் ஞாயிறு காலையும் வருவதாகவும், பெரும்பாலானோர் திங்கள் கிழமை இரவு கெளம்புவாதகவும் சொன்னார்கள்.உக்காந்து ஒன்பது வேளைக்குமாக மெனு decide பண்ணி வெச்சோம்.வர்றவங்க எல்லாருக்கும் gift வாங்கி cover போட்டு பேரு எழுதி வெச்சோம்.


வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனா, வீடே இட்லி மாவுல மூழ்கி இருக்கு.என் மாமியார் அவ்ளோ மாவு அரச்சு தள்ளிட்டாங்க. பெரும்பாலான உணவு வெளியில் இருந்து வரவழைப்பதாக தான் பிளான், இருந்தாலும் அவசரத்துக்கு ஆகும்(??) என்று அவ்ளோ மாவு.

சனிக்கிழமை என் ரெண்டு நாத்தனார் குடும்பபும் வந்து சேர்ந்தார்கள். மீதி எல்லாரும் ஞாயிறு காலை.

என் கணவரும், மாமனாரும் சாப்பாடு வாங்கி வரவும், மாமியாரும், அவருடைய ரெண்டு அக்கா, நாத்தானர்கள், அதை எல்லாம் arrange பண்ணி எடுத்து எடுத்து குடுக்கவும் ,நானும் என் நாத்தனார்களும் பரிமாறவும் இல்ல இல்ல...விளம்பவும்....அட அட அட....:-)

என் நாத்தனார் கணவர்கள் ரெண்டு பேரும், பார்ட்டி ஹால் decoration.

ஞாயிற்றுக்கிழமை மாலை விழா இனிதே நடைபெற்றது.

-function dinner மெனு வில், தயிர் சாதமும் ஊத்தப்பமும் மட்டும் எங்களை செய்ய சொன்னார் அவர். மதியம் லஞ்ச் முடிஞ்சு எல்லாரும் சற்று ரெஸ்ட் எடுக்க போய் விட, நானும் என் நாத்தனார்களும் ஊத்தப்பமும், தயிர் சாதமும் செஞ்சோம். dinner ல ரொம்ப மிச்ச பட்டது இந்த ரெண்டு item தான்.

- என் மாமியாரின் அண்ணன் மகள் பிறவியிலேயே பேச முடியாதவர். அவருடைய ரெண்டரை வயது பொண்ணு பவித்ரா, மற்றவர்கள் எல்லாரிடமும் சகஜமாக பேசினாலும், அவளோட அம்மாவிடம் மட்டும் அவங்க மாறியே செய்கையில், தன்னுடைய தேவைகளை தெரிவித்தது எங்க எல்லாரையும் நெகிழ வைத்தது.

-"இந்த பைப் தொறந்தா வெந்நீர் வரும், இதுல தண்ணீர்,இப்டி திருப்பணும்,சூடு போதுமா பாருங்க" இந்த dialogue ஐ ஞாயித்து கிழமை ஒரு பத்து தடவை சொல்லிருப்பேன்.

-"ஏன் மூணு ரூம்லயும் western toilet இருக்கு?? " அதிகம் கேட்கப்பட்ட கேள்வி இது தான்.
"western toilet தான் actually ரொம்ப hygenic...blah blah" அவரும் சளைக்காம எல்லாருக்கும் பதில் சொன்னார்.

- மூணு நாளும் வீடு முழுக்க எச்சில் இலை, disposable tumblers, அழுக்கு துணி, செருப்புகள், பேப்பர்.ஆனால் எங்க வீடு எனக்கு அப்போ ரொம்ப அழகா இருந்த மாறி இருந்துச்சு.

-கடவுள் நம்பிக்கை இல்லாத என் மாமனார் க்கு மாமியாரின் பெரிய அண்ணன் திருநீறு இட்டு விடவும், இது தான் சாக்கு என்று வரிசையாக எல்லாரும் திருநீறு பூச ஆரம்பிக்க, நாங்களும் 'இதற்காக தானே காத்து இருந்தோம்' range ல அவர் காலில் விழ, என் மாமியார் எங்களுக்கு எல்லாம் திருநீறு இட்டு அவங்க ஆசையை தீர்த்து கொள்ள, மாமனார் பொறுமை காத்தார்.

-எப்போதும் எல்லாருக்கும் பரிமாறி முடித்து விட்டு நானும் என் நாத்தனார்களும் கடைசியில் ஒண்ணா உக்காந்து சாப்பிடறத பாத்து ஒற்றுமைக்கு பெயர் பெற்ற என் மாமியாரின் நாத்தனார், எங்களை "ஒற்றுமையா இருந்து சாப்பிடறீங்க" என்று பாராட்ட எங்க மூணு பேருக்கும் பெருமை பிடிபடலை.

-Sunday அர்ஜுனை பார்த்து கொள்ளும் பொறுப்பு என் அம்மாவிடமும், Dinner முடிஞ்சு ஐஸ் கிரீம் distribution என் தம்பியிடமும் கொடுக்க பட்டது.

-ஒரு van ஏற்பாடு செய்து எல்லாரையும் திங்கள் கிழமை பெங்களூர் Sight-seeing அனுப்பியாகி விட்டது. Lalbhag இல் flower-ஷோ, Iskon Temple என்று சுற்றிவிட்டு வந்தார்கள்.

- எல்லாரும் விழா முடிஞ்சு ஊருக்கு கெளம்ப கெளம்ப, அப்பாடா வேலை முடிஞ்சுது என்று ஆயாசம் வருவதற்கு பதிலா, "அய்யோ முடிஞ்சுடுச்சே, எல்லாரும் கெளம்பிட்டாங்களே" என்று கவலையாக இருந்தது உண்மை.

-5 seater sofa வில் என் மாமியார், அவருடைய ரெண்டு அக்கா, அண்ணன், அண்ணி எல்லாரும் சீரியல் பாக்க இடம் பிடித்து விட, என் மாமனார் Nilkama chair ஐ எடுத்து போட்டு உக்காந்து ஜோதியில் ஐக்கியம் ஆனார். மேகலாவில் இருந்து, சிவசக்தி வரை அசராமல் ரசித்து பார்க்கிறார்கள்:-)

-நேற்று ஊருக்கு கெளம்பிய என் மாமியாரின் பெரிய அண்ணன், என் மாமியாரை கொஞ்சம் வெளிய போயிட்டு எதிர்க்க வாம்மா என்று சகுனம் பாக்க, என் மாமியாரும் உடனே வெளிய போய் எதிர்க்க வந்தார், என் மாமனார் அத பாக்கலை:-)

-மற்றவர்கள் எல்லாரும் கெளம்பி விட்டார்கள். என் மாமியாரின் இரு அக்காக்கள் மட்டும் சில நாட்கள் எங்களுடன் தங்குகிறார்கள். வீட்டில் மூணு மாமியார்கள் இருப்பதால் ஆபீஸ் ல ஸ்பெஷல் permission குடுத்து இருக்கிறார்கள் எனக்கு சீக்ரம் கெளம்ப சொல்லி:-) நல்ல பொண்ணா சீன் போட நேரமே பத்தலை.

-அவரை பாராட்டுவதில் எப்போவுமே கஞ்ச தனம் காமிக்கும் என்னை , இந்த முறை அவருடைய planning and execution பிரமாதம் என்று சொல்ல வெச்சுட்டார். ஒரே நேரத்துல KR Puram, Cantonment, Majestic என்று மூன்று இடங்களில் வந்து இறங்கியவர்களை pick up செய்தது ஆகட்டும், குழந்தைகளோட வந்தவர்களுக்கும் , பயணத்தில் ரொம்ப சிரமப்பட்டு வந்தவர்களுக்கும், guest ரூம் allot பண்ணிய சாமர்த்தியம் ஆகட்டும்.சரியான நேரத்தில் சாப்பாடு எல்லாம் வரவழைப்பது, பரிமாறுவதில் எனக்கும் நாத்தனார்களுக்கும் உதவரதுன்னு பின்னிட்டாரு.

-மொத்தமாக வந்து இருந்த குழந்தைகள் ஏழு. அர்ஜுன் பயங்கர ஆட்டம்.

-குடும்பமாக எல்லாரும் சேர்வது கல்யாண மண்டபத்தில் மட்டுமே என்ற ஆதங்கம் எல்லாருக்கும் இருந்து இருக்கிறது.இப்டி மொத்த குடும்பமும் ரெண்டு மூணு நாள் சேந்து இருக்கும் வாய்ப்பு கெடச்சது பரம திருப்தி.ஏதோ ஒரு வாரமா எனக்கு விக்ரமன் படம் பாத்தா மாறி ஒரு உணர்வு.வந்தவங்க எல்லாருக்கும் எந்த குறையும் இல்லன்னு நெனைக்குறேன். God Bless.


எழுதும் போது மறந்து விட்டு போய், பின்னால் சேர்த்தது 02-February-2009
---------------------------------------------------------------------

-நான் ஒரு plate ல coffee tumbler எல்லாம்வெச்சு எடுத்துட்டு போய், எல்லாருக்கும் distribute பண்ணிட்டு இருந்தேன், உடனே என் நாத்தனார் ரெண்டு பேரும், "பொண்ணு பாக்க வந்து, coffee குடுத்து .....அப்டில்லாம் எதுவும் நடக்கலைன்னு இப்போ இப்டி குடுக்குறா" ன்னு என்னை நக்கல் அடிக்க போய், நான் வழக்கமான வாய்கொழுப்புல, "பொண்ணை புடிக்கலை ன்னு சொல்லிடுங்க, அப்டியாவது நான் தப்பிச்சுக்குறேன்" ன்னு சொன்னது நல்ல வேளை, பெரியவங்க நெறைய பேரு காதுல விழலை...:-)

-எப்போதும் என்னை வாம்மா, போம்மா என்று formal ஆக அழைக்கும் அவருடைய அத்தை, பெரியம்மா எல்லாம் இந்த முறை, "எடீ," என்று அவர்கள் பாஷையிலேயே அழைக்க ஆரம்பித்து விட, "ஆஹா நம்மளையும் ஆட்டை ல சேத்தாச்சு" என்று எனக்கு ஒரே குஷி.

51 comments:

Truth said...

ஹை அக்கா,

ரொம்ப ரசிச்சு படித்தவைகளுள் இதுவும் ஒன்று. நல்லா இருக்கு. கொஞ்சம் nostalgic இருக்கு எனக்கு :-)

கணேஷ் said...

பதிவு டைட்டில் சிம்ப்ளி சூப்பர்!

அங்கு நடந்ததை கண்முன் கொண்டுவந்ததில் பதிவராக ஜெயித்துவிட்டீர்கள்.

Unknown said...

பிரியா,
விருந்தோம்பல் எப்படி இருக்கணும்னு எல்லாரும் உங்கள பார்த்துதான் கத்துக்கணும்... உன்ன மாதிரி ஒரு நல்ல மருமகள் கிடைக்க கொடுத்து வட்சிருக்கணும்..
நெகிழ வச்சிட்ட பரி நீ உன் எழுத்தினால்.........
நல்ல குடும்பம் ..... வீட்டுக்கு போயி திரிஷ்டி சுத்தி போடுங்க............

Vijay said...

நானும் உங்க வீட்டு விசேஷத்துல கலந்துகொண்ட எஃபக்ட். ஏனுங்க, ரெண்டு மூணு ஃபோடொவெல்லாம் போட்டிருக்கூடாதா?

ரிதன்யா said...
This comment has been removed by the author.
ரிதன்யா said...

அருமை பிரியா.
ஒரு வார்த்தைல சொல்லி முடிக்கிற உணர்வு இல்ல.
கிட்டதட்ட 15 வருடங்களுக்கு பிறகு நானும் என் குடும்ப உறவினர்ககளின் விழாக்களில் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன். இதே போல் உங்கள் குடும்பம் இருக்க வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்.

Anonymous said...

hey andha nagercoil dialogues super. Actually i have tried this after marriage :)...sari..evalavu neelama ezhudhittu edhellam pannina kathir ku oru 4 line mattuma...mmm...

Anonymous said...

/Comment deleted
This post has been removed by the author./

அட, நீங்க பெரிய ஆள் ஆயிட்டீங்க.

Anonymous said...

நல்ல பதிவு. இதுக்காகத்தான் இவ்ளோ நாள் எதுவும் எழுதாம இருந்தீங்க போலிருக்கு. உங்க எழுத்துல தென்படுற சீரான நடை, நக்கல், நையாண்டி, உருக்கம் எல்லாமே இதிலயும் இருக்கு. கடைசி வரி பஞ்ச், தலைப்பு ரெண்டும் கூடுதல் அழகைச் சேர்க்குது. அப்புறம் உங்க ஆபிஸ் உலகத்துலேயே ரொம்ப நல்ல ஆபிஸ்னு நினைக்கிறேன். கதிரைப் பாராட்டும்போது உங்க எழுத்துல கொஞ்சம் வெட்கம் தலைகாட்டுது.

இன்னைக்கு இது போதும்னு நினைக்கிறேன் :-)

*Kathir* said...
This comment has been removed by the author.
*Kathir* said...

Nice execution & narration by Mr. Kathiravan and Mrs.Priya Kathiravan :-). Special thanks to Master.Arjun who acted as "Samathu" :D

ப்ரியா கதிரவன் said...

Truth,
ரொம்ப நன்றி.

ராம்சுரேஷ்,
தலைப்பு வந்து, "செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைத்து", பாட்டுல இருந்து சுட்டது...:-)

Padma,
//உன்ன மாதிரி ஒரு நல்ல மருமகள் கிடைக்க கொடுத்து வட்சிருக்கணும்.. //
எது என் கண்ண மறச்சுதுன்னு தெரியலை...ன்னு ஏற்கனவே கதிர் அப்போப்போ பொலம்பராரு. இந்த கமெண்ட் பாத்தா விழுந்து விழுந்து சிரிக்க போறாரு.

ப்ரியா கதிரவன் said...

விஜய்,
நன்றி. போட்டோ வா?? மொதல்ல வீட்டை clean பண்ணனும். அப்றோம் தன் கேமரா வை எல்லாம் கைல எடுக்கணும்....டவுன்லோட் பண்றதுக்கு...

ரிதன்யா,
ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்கு.

கண்ணன்,
//கதிரைப் பாராட்டும்போது உங்க எழுத்துல கொஞ்சம் வெட்கம் தலைகாட்டுது.
//
அப்டியா??

ப்ரியா கதிரவன் said...

சுபா,
கதிர் க்கு நாலு லைன் போதும்....:-)அதுக்கே இங்க ஆளாளுக்கு வெக்க படறீங்க அப்டி இப்டி ன்னு பிட் போடறாங்க...

கதிர்,
சமத்தா?? அட்டகாசம் பண்ணிடுச்சு.ஏதோ எங்க அம்மா வந்ததுனால சமாளிச்சேன்.

ப்ரியா கதிரவன் said...

This post has been removed by the author./

அட, நீங்க பெரிய ஆள் ஆயிட்டீங்க.

//

கண்ணன், அது கமெண்ட் எழுதின author delete பண்ணது.நான் இல்லீங்க...
நான் கமெண்ட் moderation லாம் வெக்கலை...

ப்ரியா கதிரவன் said...

அப்றோம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்.
- நான் ஒரு plate ல coffee tumbler எல்லாம் வெச்சு எடுத்துட்டு போய், எல்லாருக்கும் distribute பண்ணிட்டு இருந்தேன், உடனே என் நாத்தனார் ரெண்டு பேரும், "பொண்ணு பாக்க வந்து, coffee குடுத்து .....அப்டில்லாம் எதுவும் நடக்கலைன்னு இப்போ இப்டி குடுக்குறா" ன்னு என்னை நக்கல் அடிக்க போய், நான் வழக்கமான வாய்கொழுப்புல, "பொண்ணை புடிக்கலை ன்னு சொல்லிடுங்க, அப்டியாவது நான் தப்பிச்சுக்குறேன்" ன்னு சொன்னது நல்ல வேளை, பெரியவங்க நெறைய பேரு காதுல விழலை...:-)

Anonymous said...

/அப்றோம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்.
- நான் ஒரு plate ல coffee tumbler எல்லாம் வெச்சு எடுத்துட்டு போய், எல்லாருக்கும் distribute பண்ணிட்டு இருந்தேன், உடனே என் நாத்தனார் ரெண்டு பேரும், "பொண்ணு பாக்க வந்து, coffee குடுத்து .....அப்டில்லாம் எதுவும் நடக்கலைன்னு இப்போ இப்டி குடுக்குறா" ன்னு என்னை நக்கல் அடிக்க போய், நான் வழக்கமான வாய்கொழுப்புல, "பொண்ணை புடிக்கலை ன்னு சொல்லிடுங்க, அப்டியாவது நான் தப்பிச்சுக்குறேன்" ன்னு சொன்னது நல்ல வேளை, பெரியவங்க நெறைய பேரு காதுல விழலை...:-)/


அடடா, எப்படி இந்தக் காட்சியை எழுதாமல் விட்டுவிட்டீர்கள். இப்போதும் ஒன்றும் குறைந்து போகவில்லை.இதை அப்டியே உங்க article குள்ள நுழைச்சிடுங்க.தப்பில்லை.சென்னை ல எல்லா உடனுக்குடன் படிச்சிட மாட்டாங்க. :-)

Maddy said...

முதலில் உங்கள் மாமனாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு இறைவன் அவருக்கு நல்ல சுகத்தையும் உங்களுக்கு அவரால் சந்தோசத்தையும் அருள பிரார்த்தனைகள்!!

சுகமா இருக்காங்களாங்கறது மருவி சும்மா ஆயிடிச்சா??? காலேஜ் படிக்கறப்போ திருநெல்வேலி ஸ்டுடென்ட் சொன்னான்... அந்த வெளக்கை கெடுதுடூன்னு.....அட பாவி வெளக்கை கெடுக்கறதா?? ....அப்புறம் தான் தெரிஞ்சது வெளக்கை அணைக்கறது ( Ligt off thaan....neenga vera maathiri ninaikkavendaam).. ன்னு

இருந்தாலும் அவசரத்துக்கு ஆகும்(??)................நல்ல கேள்வி தான்!!! அம்மணி இன்னும் மாவு இருக்குதுங்களா?

நானும் என் நாத்தனார்களும் ஊத்தப்பமும், தயிர் சாதமும் செஞ்சோம். dinner ல ரொம்ப மிச்ச பட்டது இந்த ரெண்டு item தான்................மிச்சப்படதுக்கு காரணம் எங்களுக்கு தெரியுமில்லே!!! உங்க சமையல் ப்லோக் போஸ்ட் நாங்க எல்லோருக்கும் முன்னமே அனுப்பிட்டோம் இல்லே!!! இருந்தாலும் பரவாஇல்லங்கோ கஷ்டப்பட்டு தயிர்சாதம் எப்படி செய்யறதுன்னு சொல்றீங்களா?

பவித்ரா குட்டிக்கு என் பாராட்டு!!

- மூணு நாளும் வீடு முழுக்க எச்சில் இலை, disposable tumblers, அழுக்கு துணி, செருப்புகள், பேப்பர்.ஆனால் எங்க வீடு எனக்கு அப்போ ரொம்ப அழகா இருந்த மாறி இருந்துச்சு......................
, "அய்யோ முடிஞ்சுடுச்சே, எல்லாரும் கெளம்பிட்டாங்களே" என்று கவலையாக இருந்தது உண்மை.

.என்ன சொல்ல? ரொம்ப ரசிச்சி இந்த function ஐ அனுபவிச்சி இருக்கீங்கன்னு தெரியுது!

மாமியார் எங்களுக்கு எல்லாம் திருநீறு இட்டு அவங்க ஆசையை தீர்த்து கொள்ள, மாமனார் பொறுமை காத்தார்.............. ஏனுங்க அம்மணி அப்படியே குடும்பம் முட்சூடும் ( முழுதும் க்கு சேலம் பக்கம் இப்படி தான்) உட்கார வச்சி திருஸ்டி சுத்தி போட்டீங்கள?? எங்க கண்ணு பட்டுடிசிள்ளே!!

-அவரை பாராட்டுவதில் எப்போவுமே கஞ்ச தனம் காமிக்கும் என்னை , இந்த முறை அவருடைய planning and execution பிரமாதம் என்று சொல்ல வெச்சுட்டார்.

இதை சொல்லும்போது அம்மணி எதுக்கு நமட்டு சிரிப்புங்கோ? வெக்கத்துல நொம்ப( சேலம் ரொம்ப) தான் செவந்துடீங்க நீங்க!!!

வந்தவங்க எல்லாருக்கும் எந்த குறையும் இல்லன்னு நெனைக்குறேன். God Bless.
அப்படி தான் இருக்கனும்ன்னு நானும் நினைக்கிறேன்!!

அய்யோ!! உங்க போஸ்ட் விட என்னோட கமெண்ட் பெரிசா போச்சுங்க அம்மணி, எல்லாம் படிச்சா சந்தோசம் தான்!! நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் ன்னு கேள்வி பட்டு இருக்கேன். ஆனா உங்களுது ஒரு பல்கலைகழகம் ன்னு புரியுது. நீங்களும் உங்களை சார்ந்தவங்க எல்லோரும் சந்தோசமா எப்போவும் இருக்க வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆனாலும் ஓவராத்தான் சீன் போட்டிருக்கீங்க போல..:)
சும்மா சொன்னேன்.. வாழ்கவளமுடன்.. தொடரட்டும் இனிமை..

Anonymous said...

அக்கா கலக்கிட்டிங்க.... நீங்க நல்ல மருமகள்னு எல்லோரும் சொல்லிஇருப்பாங்க.... நீங்க உங்க husband a பாராட்டுலாமா வேணாமான்னு யோசிச்சப்போ காதுல விழாம போய் இருக்கும் :) :) :)

எல்லோரும் கிளம்பினதுக்கு அப்புறம் அர்ஜுன்க்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும் :( :( :(...

அப்புறம் எங்களுக்கு எப்போ விருந்து :) :) அதுக்காக இட்லி மாவ அனுப்பிடாதிங்க

உங்க பதிவ லாம் ரொம்ப சூடா படிக்கணுமே..... ஒரு 2 days system தொடல... அதுக்குள்ளே இப்படியா....

Anonymous said...

Superb Title :) :)

ப்ரியா கதிரவன் said...

Maddy,
So nice of you to write to me this long.
மாவு மறுபடி நேத்து தான் அரைச்சோம்.இவ்ளோ நாள் வந்துச்சு.:-)
உங்கள் அழகான வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.

ராஜி,
நன்றி, எங்க காணும் ன்னு பாத்தேன்.
//அப்புறம் எங்களுக்கு எப்போ விருந்து :) :) அதுக்காக இட்லி மாவ அனுப்பிடாதிங்க
//
very good one.
தமிழ் பதிவு எழுத ஆரம்பிச்சுட்டேன்னு நிரூபிக்கறீங்க.

முத்துலக்ஷ்மி,
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
உங்க புதுடில்லி அனுபவங்களை எல்லாம் படித்து ரசித்து இருக்கிறேன், நீங்க synapse க்கு வந்ததில் ரொம்ப பெருமையா இருக்கு.

ப்ரியா கதிரவன் said...

Maddy,
//தயிர்சாதம் எப்படி செய்யறதுன்னு சொல்றீங்களா?
//
அத மட்டும் கேக்காதீங்க.

/இதை சொல்லும்போது அம்மணி எதுக்கு நமட்டு சிரிப்புங்கோ? வெக்கத்துல நொம்ப( சேலம் ரொம்ப) தான் செவந்துடீங்க நீங்க!!!
//
எத்தனை பேரு இப்டி கெளம்பி இருக்கீங்க???

முச்சூடும் , நெம்ப இதெல்லாம் நானும் கேள்வி பட்ருக்கேன். முச்சூடும் எங்க ஊருலயும் use பண்ணுவோம்.
ஆனா வெளக்கு மேட்டர் புதுசு..:-)

ப்ரியா கதிரவன் said...

அப்றோம் இன்னொன்னு கூட சொல்ல மறந்துட்டேன்,
//எப்போதும் என்னை வாம்மா, போம்மா என்று formal ஆக அழைக்கும் அவருடைய அத்தை, பெரியம்மா எல்லாம் இந்த முறை, "எடீ," என்று அவர்கள் பாஷையிலேயே அழைக்க ஆரம்பித்து விட, "ஆஹா நம்மளையும் ஆட்டை ல சேத்தாச்சு" என்று எனக்கு ஒரே குஷி.

Anonymous said...

Priya Akka... ஏதோ நெறைய சொல்லணும்னு தோணுது .... ஆனா type பண்ண வர மாட்டேங்குதே...

ப்ரியா கதிரவன் said...

கண்ணன், நீங்க சொன்ன மாதிரி விட்டு போனதை பதிவின் கடைசியில் சேர்த்து விட்டேன்.
நான் பதிவு எழுதுவதற்கு ஒரு முக்ய காரணம், அர்ஜுன் வளர்ந்து இதெல்லாம் படிக்கணும் ன்னு தான்,so எதையும் விட முடியாதுல்ல...:-)

Anonymous said...

அர்ஜுன் blog படிக்கும் போது இப்படி நினைப்பானோ "அம்மாவ இந்த உலகம் இவ்வளவு நம்பி இருக்குன்னு" ;) ;)




Truely He will feel happy/proud when he will read this blog

*Kathir* said...

பிரியா அக்கா,, இப்போ நா இங்க ஒன்னு சொல்லியே ஆகணும்.. ஏற்கனவே ந சொல்லிருகேன்ல..'உங்க பதிவுகள்ல பின்னூட்டம் interesta இருக்குன்னு ..நீங்க கூட "உள்குத்து"னு சொன்நீகளே? ' அதுக்கு சரியான உதாரணம் இந்த பதிவுதான். நீங்க எவ்ளோ அழகா நடந்தத சொல்லி இருக்கீங்கன்றதுக்கு இங்க இருக்க கமெண்ட்ஸ் பாத்தாலே தெரியும். நீங்க ஒரு பதிவ போட்டுட்டு படிகிரவங்ககிட்ட இருந்து எத்தன பதிவ வாங்குறீங்க..comments ரூபத்துல??? இதான் போட்டு வாங்குறத?? நீங்களும் 'எல்லாத்துக்கும் நன்றி' னு சொல்லிடாம ஒவ்வொருத்தருக்கும் தனித்தனிய பதில் சொல்லி அதனை விட்டுப்போன சில விஷயங்களும் நீங்க சொல்லி அதையும் உங்க பதிவோட சேக்குறீங்க. உங்க வீட்ல நடந்த விஷேச்த எல்லாரும் நேர்ல பாத மாதிரி எவ்ளோ அழகா புரிஞ்சிகிட்டு அதுக்கு ஏத்தா மாதிரி comments போடுறாங்க. எல்லாத்துக்கும் blog பதிவு போடுற இடம்னா உங்கள்ளுக்கு மட்டும் அது பரிமாறும் இடம். எழுதாதவங்களையும் எழுத வைக்கிறது உங்களோட இந்த அணுகுமுறைதான். உங்களுடயுது எல்லாம் பதிவுகள் இல்லை, பரிமாற்றம். அதனாலதான் உங்களோட கைபக்குவம் எங்களுக்கு எழுத்துருவுல கிடைக்குது. இதுவரைக்கும் உங்களுக்கு எத்தன comments போட்டுருப்பேன் .. but , எவ்ளோ ideas இருந்தும் என் blogla ஒரு பதிவ போட முடியல பாத்தீங்களா? இபோ கூட, நிறைய வேலைய வச்சிக்கிட்டுதான் இந்த comment போடுறேன். எனக்கு உங்கள மாதிரி அப்டியே type பண்ணிக்கிட்டு போக முடியாது. நா ஒரு தடவ completea paperla எழுதி பாத்து, சரி பண்ணிக்கிட்டுதான் type பண்ண முடியும். but உங்களுக்கு comment போடும்போது மட்டும் நேரடியா google-indic la டைப் பண்ணி அப்டியே copy&paste பண்ணிடுறேன். இதெல்லாம் வெறுமனே உங்களை புகழ்றதுக்கு சொல்லல.. என்னால சொல்லாம இருக்க முடியல... ஏன் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே... அர்ஜுனும் படிக்கும்போது தெரிஞ்ச்கட்டுமே,...!!

Anonymous said...

கதிர், ஒட்டு மொத்தமா எல்லோருக்கும் சேர்த்து நீங்க பேசுன மாதிரி இருக்கு.. ரொம்ப சந்தோசமா இருக்கு. வேற எந்த blog லயும் இல்லாத அந்த சந்தோசம் இங்க இருக்குன்னா அது நீங்க சொன்ன பரிமாற்றம் தான். ஆனா அந்த பரிமாற்றமே ரொம்ப அழகா மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்குது. ஒரு பதிவ படிக்கிறப்போ சந்தோசமோ/சோகமோ/கிண்டலோ நமக்கும் ஏற்படுது.

working days ல பிரியா அக்கா பதிவு போடுறது நமக்கு தெரியாம போய்டுமோன்னு எங்க application full time open ல இருக்கோ இல்லையோ இவங்க blog open ல தான் இருக்கும். ஆனா இந்த தடவ weekend ல படிக்க முடியாம இன்னைக்கு தான் படித்தேன்...


Priya Akka... Hats Off

ப்ரியா கதிரவன் said...

கதிர், ராஜி,
உங்க அன்புக்கு ரொம்ப நன்றி.

கதிர்,
//உங்களுடயுது எல்லாம் பதிவுகள் இல்லை, பரிமாற்றம்
//
வார்த்தைகள் ரொம்ப அழகாவே வந்து விழுது. சீக்கிரம் நீங்களும் பதிவு எழுத ஆரம்பிங்க.You surely can, brother.


On a lighter note,
இங்க எல்லாரும் நான் தான், கதிர், ராஜி ன்னு வேற வேற பேர்ல பின்னூட்டம் போட்டுக்குறேன்னு நெனைக்க போறாங்க மக்கா....இத்தோட நிறுத்திக்கோங்க போதும்.
..:-)

Anonymous said...

நீங்க சொல்லி போட சொன்னத நான் அப்படியே போட்டுட்டேன் அக்கா. வேற எதாவது போடணும்னா mail அனுப்புங்க. அப்படியே என் பேர்ல போட்டுடுறேன் : ):) :) ok va akka

மடல்காரன்_MadalKaran said...

நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்..
Backgroundல பாட்டு கேக்குது.
நல்ல பதிவு

அன்புடன், கி.பாலு

Anonymous said...

///ரெண்டு பேரும், "பொண்ணு பாக்க வந்து, coffee குடுத்து .....அப்டில்லாம் எதுவும் நடக்கலைன்னு இப்போ இப்டி குடுக்குறா" ன்னு என்னை நக்கல் அடிக்க போய்,

எப்போதும் என்னை வாம்மா, போம்மா என்று formal ஆக அழைக்கும் அவருடைய அத்தை, பெரியம்மா எல்லாம் இந்த முறை, "எடீ," என்று அவர்கள் பாஷையிலேயே அழைக்க ஆரம்பித்து விட, "ஆஹா நம்மளையும் ஆட்டை ல சேத்தாச்சு" என்று எனக்கு ஒரே குஷி. ///

பாட்ஷா ரேஞ்சுக்கு இதுக்கெல்லாம் பின்னாடி ஒரு கதை இருக்கும் போலிருக்கே?

ப்ரியா கதிரவன் said...

//நீங்க சொல்லி போட சொன்னத நான் அப்படியே போட்டுட்டேன் அக்கா. வேற எதாவது போடணும்னா mail அனுப்புங்க. அப்படியே என் பேர்ல போட்டுடுறேன் : ):) :) ok va akka/
மாப்பு வெச்சுட்டாய்யா ஆப்பு.

ப்ரியா கதிரவன் said...

மடல்காரன்
முதல் வருகை, ரொம்ப நன்றி.

Sa,
:-)

Kalyan said...

Very Nice One Mrs.Priya. Great Narration.

Happy to know that you and your family had a great fun and get-together. Hope these happy things happen at regular intervals in your place

ப்ரியா கதிரவன் said...

Thanks a lot Mr.Kalyan, for the visit, comment and wish.
Unga mokkai ellam kooda nalla irunthuchu.:-)

Vijay said...

பதிவை பின்னூட்டதுல எல்லாரும் பின்னி பின்னி எடுத்துட்டாங்க. எனக்கு எடமே இல்ல. இருந்தாலும் கதிருக்கும், ராஜிக்கும் போட்டுகறேன் ஒரு ரிப்பீட்டே..... எனக்கு ராஜி சொன்ன மாதிரி மெயில் எல்லாம் அனுப்ப வேணாம்பா. ஜஸ்ட் இப்போ மாதிரியே நீங்களே என் பேருல என்ன போடணூமோ போட்டுக்கோங்க. சரிதானங்களே நா சொல்றது?

Unknown said...

நல்ல இனிமையாக இருந்தது, வெசக்குது என்பது பசிக்குது என்று பொருள் என்று நினைக்கிறேன்,

நல்ல சுவையான எழுத்து

Unknown said...
This comment has been removed by the author.
புன்னகை said...

இதக் கொஞ்சம் படிச்சு பாரேன்னு "என் அவர்" தான் உங்களோட இந்த பதிவுக்கான லிங்க் அனுப்பினாரு. படிச்சு முடிச்சதும் பின்னூட்டம் போட்டே தீரணும்னு படிக்கும் போதே ஒரு நெனப்பு மனசுக்குள்ள. விஷயம் என்னனா, திரும்பத் திரும்ப இந்தப் பதிவ இன்னும் படிச்சிட்டே தான் இருக்கேன், இன்னும் பின்னூட்டம் போடல. அவ்ளோ பிடிச்சு போச்சு உங்களோட இந்தப் பதிவு.
உங்களோட குடும்ப அமைப்பைப் பாத்து உண்மையாகவேக் கொஞ்சம் பொறாமையாத் தான் இருக்கு. உங்களுடையது காதல் திருமணமாத் தான் இருக்கணும்னு எனக்குள்ள ஒரு தீர்மானம். இது தப்பா இருந்த மன்னிச்சிக்கோங்க! ஒரு வேலை காதல் திருமணம் தான் அப்படினா, உங்க கிட்ட "நிறைய" குறிப்பெடுக்கணும் நான். உங்களைப் போல "நல்லப் பொண்ணு"னு பேரெடுக்கணும் அதுக்கு தான் :-)

ப்ரியா கதிரவன் said...

புன்னகை,
ரொம்ப அழகான profile name.
மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எல்லாம் நீங்கள் ஏதும் தப்பா கேட்டுடலை:-)
உங்க பதிவில் அப்பா, அம்மா, அக்கா என்று நீங்க எழுதி இருக்கும் விதத்திலேயே, உறவுகளின் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை தெரிகிறது. கண்டிப்பாக நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்திய உங்கள் அவருக்கு என் நன்றி.

ப்ரியா கதிரவன் said...

தவநெறிச்செல்வன்,
//நல்ல இனிமையாக இருந்தது,
//

Thank you.

//வெசக்குது என்பது பசிக்குது என்று பொருள் என்று நினைக்கிறேன்,
//
மலையாளத்தில் வெஷக்கின்னு என்றால் பசிக்குதுன்னு அர்த்தம்.
இந்த வெசக்குது - வியர்க்கிறது தான்.
:-)

நல்ல சுவையான எழுத்து
திரும்பவும் நன்றி.

Unknown said...

//பதிவை பின்னூட்டதுல எல்லாரும் பின்னி பின்னி எடுத்துட்டாங்க. எனக்கு எடமே இல்ல. //
விஜய்,
உங்களுக்கு இடம் இல்லாமலா?

யாத்ரீகன் said...

unga yeluthu nadai romba super.. iyalbaana thullaludan iruku.. adhil irukum urchagamum magilchiyum padikiravungalaiyum thothikudhu :-) .. romba romba rasithaen..

Mugilan said...

வெள்ளி அதுவுமா சுத்தமா வேலை செய்ய மூடே இல்ல. சரினு வலைபதிவு உலகத்துல எட்டிப் பார்க்கலாம்னு வரப்போ உங்க வலைபதிவு தென்பட்டிச்சு.

தமிழ்மணம் ல இருந்து வந்தேன்னு நினைக்கிறேன்.

ஒரு இருவது பதிவுகள் படித்து விட்டேன் இதுவரை. ரொம்ப அருமை!

நிச்சயம் உங்க பதிவுகள் எல்லாம் இனி தவறாமல் படித்துவிடுவதாக நினைத்திருக்கிறேன்!

ஆரம்பம் முதல் ஒரு புன்முறுவலோடே கடைசி வரி வரை படித்தேன்! You made my day!

Don't know why. But of all those I read today, was tempted to make a comment 1st on this.

ப்ரியா கதிரவன் said...

Thanks a lot Mugilan for the nice comment.

Sara Suresh said...

//"ஊர்ல பாட்டி தாத்தா எல்லாம் சும்மா இருக்காங்களா???" (நல்லா இருக்காங்களா வோட nagerkoil version)//

ஹலோ பிரியா,
உங்களுக்கு correction சொல்றதே எனக்கு முழு நேர வேலையாடுச்சி
அது சும்மா இல்ல. சுகமா-னு கேக்க வேண்டியது "சோமா"-னு மருவி உள்ளது.

pudugaithendral said...

இது என் முதல் வருகை.

அருமையா இருக்கு உங்க பகிர்வு

Vaigai said...

good one

Vaigai said...

good one