வருடா வருடம் "இந்த வருடம் வாசித்த புத்தகங்கள்" என்று ஒரு பதிவை எழுத நினைப்பதும் பின்ன சோம்பேறித்தனத்திடம் தோற்றுகொண்டே இருப்பதுமாக இருந்துவிட்டு , இந்த வருடம் எழுத ஆரம்பிக்கிறேன். முடிப்பேனான்னு தெரியலை (பிற்சேர்க்கை: முடிச்சுட்டேன்).
******
விண்ணைத்தாண்டி வருவாயா பார்த்ததில் இருந்தே, Central Park மீது ஒரு பிரேமை. என்றாவது ஒரு நாள் இந்தப் பார்க்கில் போய் உட்கார்ந்து, ஜெஸ்ஸியையும் கார்த்திக்கையும் நினைத்து ஒரு துளி கண்ணீர் சிந்தனும்ன்னு ஒரு ஆசை துளிர்விட்டது (By the way, VTVயில் ஒரே ஒரு பாடல் தான் தேர்வு செய்யணும்ன்னு ஒரு நிலைமை வந்தால், என் தேர்வு "அன்பில் அவன் ..." தான் ).
"The Big Short" ன்னு ஒரு படம். ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன் முதல்முறை பார்த்திருப்பேன். பின்ன ஐந்தாறு முறைக்கு மேல திரும்பத் திரும்ப பார்த்தாச்சு. ஒவ்வொரு முறை பார்க்கும்போது ஏதோ ஒன்றைப் புதிதாகக் கற்றுத் தரும் படம்.
(பெங்களூரில் இருந்த போது அஞ்சலியை ஸ்ரீதேவி என்ற ஒரு குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்வோம். அவருடைய கணவரும் மருத்துவர். அண்ணனும் மருத்துவர். "வீட்டிலையே மருத்துவ மொழியில் தான் பேசிக்கொள்வோம்" என்பார். அண்ணன் போன் பண்ணும் போது, குழந்தைக்கு Rhinopharyngitis என்று சொல்வாராம். ஒன்றுமில்லை. அவங்க குழந்தைக்கு சளி 😌. எங்களுக்குள்ளும் telecom wireless மொழி உண்டு. வெளியில் சொல்ல முடியாத ரகம் 🙈. மேலும், அவ்வப்போதைய "media consumption" பொறுத்து மொழி அகராதியில் சொற்கள் சேரும்)
Coming back to The Big Short, இந்தப் படம் பார்த்த பிறகு, "லோகத்தில் யாருக்கும் பொறுப்பில்லை" என்று நான் அம்பி மாதிரி புலம்பும் நேரங்களில் கதிர் என்னை "நம்ம வீட்டு Mark Baum" என்று சொல்ல ஆரம்பித்தார். அதற்கு முன்பிருந்தே அவரை நான் "நம்ம வீட்டு Mike Burry" என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தேன். அந்தளவு அந்தப்படம் எங்களுக்கு ஒரு குடும்பப்படம் ஆகிவிட்டது என்று சொல்லலாம். அந்தப்படம் பார்த்த பிறகு, Wall Street மீது ஒரு பிரமிப்பு. மேல சொன்ன 'Central Parkல உட்கார்ந்து ஒரு துளி கண்ணீர் சிந்துற ...' ஆசை, சிந்திட்டு அப்படியே 'Wall Streetல ஒரு walking-கும் போகணும்'ன்னு தன்னை நீட்டித்துக் கொண்டது.
"அப்ப நீ இந்த புத்தகத்தைப் படிச்சே ஆகணும்" ன்னு சில வருடங்கள் முன் "One up on Wall Street" என் கையில் கொடுக்கப்பட்டது. வாங்கி வைத்து விட்டு வாசிப்பதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன். இந்த வருடம் இரண்டு வாரங்கள் தினமுமாய் உக்கார்ந்து அந்தப் புத்தகத்தை படித்து முடித்தே விட்டேன்.
20 வருடங்களுக்கு மேலாக market-டைக் கூர்ந்து கவனிப்பவர் யாராகினும், தம் வெற்றி தோல்விகள், missed opportunities அனுபவங்களை வைத்து இதைப்போல் ஒரு புத்தகம் எழுத முயற்சி செய்யணும்பார் கதிர். (Oh, on a main note, Conversations are the best thing between a couple. "பேசிப்பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே" is real! 💓 )
*************
எனக்கு சில இரானிய colleagues இருக்கிறார்கள். அவர்கள் மீது ஏதோ ஒரு ஆர்வமும் ஈர்ப்பும் எனக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு ஒரு சிறந்த தீனியாகக் கிடைத்தது இந்த புத்தகம். "Persepolis".
"இந்தப்புத்தத்தை வாசித்தேன். உங்கள் நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் புரிதல் கூடியது"ன்னு ஒரு colleague கிட்ட சொன்னேன். "சரியான புத்தகத்தைத்தான் வாசிச்சுருக்கீங்க" என்றாள்.
***********
இந்த நாட்டுக்கு வந்த புதிதில் Torontoவில் ஒரு கம்பெனியில் 3 மாதங்கள் வேலை பார்த்தேன். அங்கு அனு என்றொருவர். நைஜீரியர் (ஆண்; முழுப்பெயர் கூப்பிட சிரமமானதால் அனு-வானார்) அவரும் புதிதாகக் குடிபெயந்தவர். அதனால் வேறு நண்பர்கள் இல்லாமல் என்னோடு தான் மதியம் சாப்பிடுவார். இங்கு அவர் குடியிருந்த basementடில் வாழைக்காய் வறுக்கும்போது fire alarm அடித்து விட்ட கதையை, நைஜீரிய ஆங்கில உச்சரிப்பில் சொல்லி, புரையேறும் அளவுக்கு சிரிக்க வைத்தார். தன் girl friend ஊரில் இருப்பதாகவும் தான் ஓரளவு இங்கு காலூன்றியதும் அவரைத் திருமணம் செய்து இங்கு அழைத்து வரவேண்டும் என்றும் சொல்லிக்கொண்டு இருப்பார். பின்பு நான் வேலை மாறி, ஊர் மாறி இங்கு வந்து விட்டேன். அவரும் வேறு வேலை மாறியதாகவும், திருமணம் செயது கொண்டதாகவும் linked-in message மூலம் அறிந்து கொண்டேன்.
பின்பு இப்போது இருக்கும் வேலைக்கு வந்த முதல் வருடம் ஒரு நைஜீரிய internஐச் சந்தித்தேன். பனிரெண்டாம் வகுப்பிற்கு அவனுடைய அப்பா நைஜீரியாவில் இருந்து இங்க அனுப்பி விட்டார் என்பான். பேசும்போது உச்சரிப்பில் அனுவை நினைவு படுத்துவான். அவன் back-to-school போன பிறகு அவனையும் அனுவையுமே மறந்துவிட்டிருந்தேன்.
"The thing around your neck" என்று ஒரு நைஜீரியச் சிறுகதைகள் தொகுப்பு. இந்நாட்டுக்காரர்களின் வலி நிறைந்த சிலபக்கங்களை நமக்கும் புரட்டிக் காண்பிக்கும் புத்தகம். சில பக்கங்கள் படிக்க ஆரம்பித்ததுமே முதல் வேலையாக , அனுவை linked in இல் தேடினேன். ஏனோ அவருடைய profile தென்பட வில்லை.
******
என் friends நிறைய பேருக்கு Shopping ஒரு Stress buster. எனக்கு shopping என்பது stress. கிளம்பிக் கடைக்குப் போவதும் பொருட்களை வாங்கிக் குவிப்பதும், sale/deal என்று பேசுவதும், ஏன்? இவைகளைப் பற்றி நினைப்பதே எனக்கு மிகவும் களைப்பைத் தரும்.
Sophie Kinsella என்றொரு author. Shopping என்ற ஒரே ஒரு themeமை வைத்து அத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கிறார். Relaxed reading. ஒரு விடுமுறையில் freeயாகக் கிடைத்த புத்தகத்தில் அறிமுகம் ஆகி, இப்போது "Stressed? take Shopaholic series" என்பதாய் ஆகி இருக்கிறார். மகளும் இதை வாசிக்கும் போதே விழுந்து விழுந்து சிரிப்பாள். லண்டன் பின்னணியில், உச்சக்கட்ட சுயபகடியோடு இவர் எழுதிய கதைகளில் சிலது இவ்வருடம் வாசித்தேன். (இவரை முதல் முதலில் publish செய்த Penguin Publishers இல் என் friend சுபாஷினி சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்து இருக்கிறாள் 😇).
***********
1984
நியாயப்படி இப்புத்தகத்தை நான் இந்தப் பதிவில் குறிப்பிடக்கூடாது. ஏன்னா நான் வாசிச்சு முடிக்கலை.
முந்தைய வாசிப்புகளில் "The Animal farm" "The Giver" புத்தகங்களை நான் வெகுவாக சிலாகிப்பதைப் பார்த்து என் பையன் 1984ஜக் கொண்டு வந்து கொடுத்து "இது "George Orwell" +"Dystopia" . அதனால உங்களுக்குப் பிடிக்கலாம்"ன்னு சொன்னான். சில அத்தியாயங்களுக்கு மேல "முடியலடா" என்று திருப்பிக் கொடுத்துட்டேன்.
"இந்த சில பக்கங்கள மட்டுமாச்சும் நீங்க வாசிச்சே ஆகணும்" ன்னு வலியுறுத்தினான். அப்பக்கங்களை மட்டும் வாசிச்சுட்டு திரும்ப கொடுத்துட்டேன். "What's your room 101?" என்றொரு புகழ்பெற்ற பதம் இருக்குல்ல? இந்த புத்தகத்தில் இருந்து வந்தது தான்.
**********
பின்ன மகள் வீட்டுப்பாடத்திற்குன்னு கொண்டு வந்த ஒரு புத்தகம். "The little prince".
**********
இன்றைய corporate மற்றும் social media "நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், நகர்த்தி வைக்கும் ஒவ்வொரு துரும்பும் காசாக வேண்டும்" என்ற எண்ணத்தை நம் மனதில் ஏற்றி வைத்து இருக்கிறார்கள். We are too seasoned to always look for quantifiable benefits from each of our actions, how much ever trivial they may be.
எங்கு திரும்பினாலும் உலகில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பது போலவும், ஒருவர் கடினமாக (சாமர்த்தியமாகவும்) உழைக்க மட்டும் தயாராக இருந்தால், வெற்றிகளைக் குவிக்க முடியும் என்பது போலுமான ஒரு கட்டமைப்பு நிலவுவது போல் தோன்றுகிறது. சுற்றி இருக்கும் எல்லாரும் "AI, Start-up, Entrepreneurship, Authoring, Publishing, MBA, Stock-market என்று ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். எல்லார் மனத்திலும் குறைந்த பட்சம் ஒரு $1billion கனவு இருக்கிறது.
இப்படியான சூழலில் ஒரு ஓரமாக நோகாமல் உக்கார்ந்து கொண்டு மனம் போன போக்கில் வாசிப்பது அம்மஞ்சல்லிக்குப் பலனில்லாதது போல தோன்றுகிறது. But a wise man once said "Read; Read anything. For every few pages you turn, you become a bit wiser. The dots will connect some day".
Dots will connectங்கறதெல்லாம் கேட்க நல்லா இருக்கு. நானோ ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத புள்ளிகள் வைத்துக்கொண்டு இருக்கிறேன்.
கோலமாகிறதா என்றெல்லாம் யோசிக்காமல் முடிந்த வரை புள்ளிகளாவது வைத்துக்கொண்டே இருக்கும் மனநிலை வாய்க்க வேண்டும்.
முக்கியக் குறிப்பு:இதென்ன தலைப்பு என்பவர்கள் இந்த வீடியோவைப் பார்க்கவும். https://www.youtube.com/watch?v=Te65WML6C9Y
No comments:
Post a Comment