Monday 4 May 2015

உத்தம வில்லன். //தயவு செய்து படம் இன்னும் பார்க்காதவர்கள் படிக்க வேண்டாம்//

சாவுற நாள் தெரிஞ்சுட்டா வாழற நாட்கள் நரகமாயிடும் ன்னு சூப்பர் ஸ்டார் சொல்லி இருக்கார். ஆனா அதே சாவுற நாள் தெரிஞ்சுட்டா வாழற நாட்கள்ல என்ன பண்ணனும்ன்னு உலக நாயகன் சொல்லி இருக்கார்.
- எலி துரத்தும் சீன் தெனாலியையும், பையனிடம் கமல் பேசும் இடம் அன்பே சிவம் "நீங்க தான் கடவுள், நானும் கடவுள்" சீனையும், கிஸ்சுக்கே காதலா பாட்டு சுவாசமேவையும் நியாபகம் படுத்தி இருந்தால், உங்களுக்கும் நாடி நரம்பெல்லாம் கமல் படங்கள் ஊறி இருக்குன்னு அர்த்தம்.
- படத்தில் ரெண்டு ம்ருத்யுஞ்ஜெயர்கள். ஒண்ணு மனோ. இன்னொன்னு பாலச்சந்தர். மனுஷர் வர்ற காட்சிகள் எல்லாமே க்ளாஸ். என்னா நடிப்பு. ‪#‎ஒய்‬ ஹீ இஸ் சிகரம் .
- ஒரு மனுஷன் சாவப் போறான்னு தெரிஞ்சதுமே அவன் மேல மத்தவங்களுக்கு இருந்த கோபம், வன்மம், சந்தேகம், அடக்குமுறை எல்லாத்தையும் எல்லாரும் விட்டுடறாங்க. காதலி மூலம் வந்த மகளும் (அய்யோ செம்ம கியூட் RJ சாரா), மனைவி மூலம் பிறந்த மகனும்(யாரு இந்தப்பையன்? why you? ன்னு
கதறும் போது நம்மள உருக்கிடறார்), அக்கா தம்பின்னு சேர்ந்துக்கறாங்க. மாமனார் அவரோட காதலப் பிரிச்சு, குருவப் பிரிச்சு ஹைஜாக் பண்ணிட்டதுக்கு கிட்டத்தட்ட கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கறார். பொண்டாட்டி யாமினி  கிட்ட இருந்து உங்கள சின்னப்பசங்க சாக்லேட்க்கு அடம் பிடிக்கற மாதிரி அடம் பிடிச்சுப் பிடுங்கிட்டேன் ன்னு பாவமன்னிப்பு கேக்குறா. "அந்தப் பொண்டாட்டி என் பேஷன்ட், அவ நிம்மதியா இருக்கணும், அதனால எனக்கும் உங்களுக்கும் உள்ள எக்ஸ்ட்ரா மாரிடல் அஃப்பேர் அவளுக்குத் தெரிஞ்சுடக்கூடாது" ன்னு டாக்டர் ஆண்ட்ரியா சத்தியம் வாங்கிக்கறாங்க. குடுக்காமல் மறைத்த லெட்டர்சை மேனேஜர் குடுத்துக் கதர்றார். ஆக உலகத்தில் அத்தனை பேர் ஆடும் ஆட்டமும் இந்த எண் ஜான் உடம்புக்குள்ள காத்து போயிட்டு வர்ற வரைக்கும் தான்னு முகத்தில் அறையாம சொல்லிடறாங்க.
- கமல், ஊர்வசி, நாசர்லாம் நடிப்புல பின்றது சரி.. இந்த .பூஜா குமார். அடேங்கப்பா.... கமல் தேர்வுன்னா சும்மாவா? பொண்ணு சும்மா பிச்சு உதறுது. அதுலயும் கடசில பிரகலாதன் கூத்து கட்டுறதுல முகபாவம்லாம் செம. ஆனா கமல் விக் கழண்டு விழுந்ததும் "யா அல்லா" ன்னு சொல்லுதே smile emoticon அதென்ன குறியீடு?
இத மாதிரி படத்துல அங்கங்கே பொடி சங்கதிகள். இன்னொரு முறை பார்த்தா நல்லா கவனிக்கலாம்.
- கடசில ஊர்வசி உ.வி கிளைமாக்ஸ் பார்த்து சிரிக்கவும், அப்டியே பேக்க்ரவுண்டுல உள்ள ஆப். தியேட்டர்ல கமல் மூஞ்சிய துணில மூடவும் - படத்தோட மெசேஜ் கன்வேய்டு.
- உத்தம வில்லன் உள்கதை போர்ஷன்ல கடசில நாசரைக் கொல்ல இரணியன் வதத்தை தான் சூஸ் பண்ணி இருக்கார்ன்னதும் மனசுக்குள்ள "கல்லை மட்டும் கண்டால்" ன்னு விசிலடிச்சு சிரிச்சுட்டு இருந்தேன். வெச்சாரு பாருங்க ஒரு ட்விஸ்டு... கமலா கொக்கா..... இதுக்கு இணையத்துல நிறைய கழுவி ஊத்தல்கள் நடந்து இருக்கும் (இன்னும் ஒரு விமர்சனம் கூட படிக்கல) ஆனா பாருங்க ஒரு பிராது உண்டா, ஒரு போராட்டம் உண்டா ஒரு தடை உத்தரவு உண்டா? நீங்கல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்கப்பா... 
smile emoticon
- முதல் பாடலைத் தவிர வேறெல்லாப் பாடலும் கதயோடையே சேர்ந்து வருவது ரொம்பப் பெரிய பலம்.
-ஆரம்பத்துலேர்ந்து யாமினி யாமினி ன்னு பேசிக்கறாங்களே தவிர யாருன்னு காட்ட மாட்றாங்க. கடசில .......... படம் தான் யாமினி ன்னு வரப்போகுதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன். இல்ல வேற யாரோ... smile emoticon

-கடைசியில் "டைரக்ஷன் ரமேஷ் அரவிந்த்" ன்னு போடறாங்க. ஆமா அன்பே சிவம் டைரக்டர் கூட சுந்தர் சி. ('உங்க பேரு கூட மூக்கன்' மாடுலேசஷனில் படிக்கவும்)
- பாபநாசம் ட்ரெயிலர் ஒண்ணும் அவ்ளோ ரசிக்கல எனக்கு. அதுவும் அந்த "யூத் லா" லாம் ‪#‎ஷப்பா‬ frown emoticon த்ரிஷ்யம் கொடுத்த இனிய அதிர்வுகளை மாற்றிக்கொள்ள விரும்பல. அதுனால பாபநாசம் பார்க்கப் போறதில்ல. (எந்திரன் நினைவுகள் போதும்ன்னு லிங்கா, கோச்சடையான்லாம் புறக்கணிச்சுட்டேன்னும் சமூகத்துக்குப் பதிவு செஞ்சுக்கறேன்) ஆனா கமல் அவர்களே, விஸ்வரூபம்-2 க்கு என்னை ரொம்ப வெயிட் பண்ண வெச்சுடாதீங்க.

//பிற்சேர்க்கை 
சற்று ஆற அமர யோசிச்சதில் தோன்றியது. 
- வியாதி வந்து செத்தா தானா? எல்லாரும் தான் சாகப்போறோம் ஒரு நாள். அதுக்காக ஒரு மனுஷன் என்ன வேணா பண்ணலாமா? மொத யாமினி, அப்றோம் வரலக்ஷ்மி. சரி இதுவரை சரி. அவர் கைய மீறி நடந்தது. அப்றோம் ஆண்ட்ரியா வேறயா! ன்னு ஆடியன்சு
க்கு நார்மலா வர வேண்டிய கோவம் கூட "ஐயோ பாவம் சாக போறான்னு" பரிதாபத்துல ஓவர்லுக் ஆகிடறது ரொம்ப டேஞ்சரஸ் மைண்ட்செட் இல்லையா? படத்துல ஒரு சென்செஷனுக்காக தான் இந்த ஆன்டிரியா அஃபேரா? மித்தபடி அவங்க சும்மா கூடவே இருக்கற ஒரு டாக்டர் பிரெண்டுன்னு வெச்சு மனோ இமேஜை இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி பண்ணிருக்கலாமோ?

- மனோ போர்ஷன் ஃ.பைன். ஆனா ஒரு உள்கதை எடுக்கறாங்களே. படம் பண்ணனும்ன்னு மனோ மார்கதரிசிட்ட போறார். "என்கிட்டே கதை இல்ல" ன்னு சொல்றார் அவர். கமல்ட்ட அதிக நேரமில்ல. கதையோ, அதிக நேரமோ இல்லாம நிர்பந்தத்துல, நடு நடுல உடல்நிலை வேற சரி இல்லாம போறப்ப... இதவிட நல்ல படம் எடுக்க முடியாதுன்னே சப்ப கட்டினாலும் கூட, சும்மா நல்ல படம் மக்கள் மனசுல நிக்கற மாதிரி படம் எடுங்கன்னு கேக்கற மாதிரி வெச்சுருக்கலாமோ? "ஆடியன்ஸ் சிரிச்சுட்டே போணும்"ன்னு இல்ல படம் எடுக்க ஆரம்பிக்கறாங்க. ஆனா அது கொஞ்சம்(?) ஊரே கை கொட்டி நவுத்துந்தி ரேஞ்சுக்கு தான் வந்துருக்கோ???

2 comments:

Natarajan Venkatasubramanian said...

மேடம்ஜி,

ஓகேஓகே படம் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும்.

நன்றி.

பெங்களூர் கிளை

ப்ரியா கதிரவன் said...

ஓகே ஓகேன்னா ஒரு கல் ஒரு கண்ணாடி தான? ரொம்ப பழசாச்சே.. பரால்லையா?

//பெங்களூர் கிளை//
யாருக்கு?