Sunday, 31 March 2013

விசாம்ரூபம்-விளக்குக

போன முறை கீழ விழுந்தப்போ டிப்ரசனை சரி பண்ண சிக்கன் பிரியாணி! இந்த முறை விஸ்வரூபம் பிவிஆரில்; பெங்களூரில் இன்னும் அன்-எடிட்டட்
வெர்சன் தான் ஓடுகிறதென்பதை அறிக!

படத்தில் எனக்கு சில "புரியலை"கள் ... இன்னொரு முறை பார்த்தால் புரியுமோ என்னவோ. படத்தை / கமலை நன்கு புரிந்தவர்கள் விளக்கினால் பலனடைவேன்.(டக்கு, காந்தி தாத்தா முதலான மொக்கை கமெண்ட்டுகள் மாடரேட் செய்யப்படும்)

- இந்த விசாம் யாரு ? இந்திய ரஹசிய உளவாளியா இல்ல அமெரிக்க ரஹசிய உளவாளியா? இ.உ என்றால் அவன் ஏன் ஆப்கன் தீவிரவாதிகள் நியூயார்க் நகரத்தில் நடத்தற சதிய முறியடிக்க அவ்வளோ போராடறான்? அ. உ ன்னா எப் பி ஐ காரனுங்க அடிச்சு ஒதைச்சு நாற்காலில இருந்து தள்ளி விட்டு விசாரிக்கரப்போ ஐடிகார்டு எடுத்து காமிக்காம, பல்ராம் நாயிடுகிட்ட மாட்டிக்கிட்ட அந்த சைண்டிஸ்ட் கமல் (பேரை மறந்துட்டேன்) மாதிரி ஏன் விளக்கிட்டு இருக்கான்?

-ஆண்ட்ரியாவும் கமலும்  மட்டும் தனியா வீட்டில் இருக்க காட்சில கூட "சாஃட்டுப்போ" ன்னும், அப்பறம் வேர்ஹவுஸ் பக்கத்துல இருந்து அந்த மாமா கிட்ட போன்ல "மாமா நிரூபமா அனுப்பிச்ச  ஆள் என்னை தொரத்தறான்" ன்னும் ஏன் விஸ்வநாத் ( விசாம் மாதிரி  பேசாம)மாதிரி பேசறார்?

- ஓமர் சாகனும் இல்ல நான் சாகனும் ன்னு ரெண்டாவது பார்ட்க்கு அடி போடறாரே ...இவரும் அந்த இமிட்யாசும்(that சார் அல்லா ஒங்களை மட்டும் தான் மன்னிக்க மாட்டார் guy) சேர்ந்து அசந்த நேரமா பார்த்து அந்த ஓமர், சலீம் எல்லாத்தையும் ஆப்கானிஸ்தான்ல வெச்சே போட்டுருக்கலாமில்ல?இத்தனைக்கும் வேர்ஹவுசில் அத்தினி பேரை ஒத்தை ஆளா....(அந்த சண்டை செம;குடுத்த காசுக்கு அந்த சண்டையும்  கிருஷ்ணா டான்சும் போதும்....இப்ப இலவச காட்சிகளுக்கு தான் பல் பிடிச்சுட்டு இருக்கேன்)

- இந்த ஆண்ட்ரியா, விஸ்வநாத் வேஷம் போட்ட விசாம், அந்த மாமா, டெக்கின்ஸ்  இவங்கல்லாம் ஓமர்-தீபக் கனெக்சன், நியூக்ளியர் பாம் மேட்டரை
எல்லாம் எப்புடி கண்டுபிடிச்சாங்க? "உங்க மொத்த ஆபீஸையும் பக் பண்ணிருக்கோம் கண்ணா" என்று ஆண்ட்ரியா பூஜாகிட்ட சொல்லும் அந்த ஒத்தை லைன்ல மொத்த இன்வேச்டிகேசனையும் முடிச்சுட்டீங்களே? இது என்ன நியாயம் ? காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்டுக்கு எல்லாம் தெரியுமே அந்த மாதிரியா? (பை த வே ஆண்ட்ரியா பூஜாவை திரும்ப திரும்ப கலாய்ப்பதாக காண்பிக்கும் அந்த சீக்வன்ஸ் எனக்கு ரசிக்கவேயில்லை)

- சரி Omar&Co அந்த "திசை திருப்பி" பாம் வெடிக்க வைப்பாங்களே.அன்னைக்கே பேசாம அந்த ந்யூக்ளியர் பாமை வெடிச்சு இருக்கலாமில்ல?இதுக்கு எதுக்கு ஒரு நைஜீரியன் ஷேவிங் பண்ணி மட்டன் சமைச்சு... அப்றோம் குடம் குடமா ரத்தம் கக்கி....(நல்லவேளை நைஜீரியா நாட்டு மக்கள் கேஸ் போடலை)

- கேசுன்னதும் நினைவு  வருது ;
"Who is your God?
My God has....mmm...err...four hands"
"A God with four hands? How will you crucify Him?"
"We dont crucify him; we only dunk him in the sea"
இந்த ரெண்டு க்ரூப்புமே படம் எப்ப வரும்ன்னு பாத்துட்டு இருக்கப்போ அந்த இருவத்து நாலு பேர் கொண்ட குழு (இத்தனைக்கும் கமல் மூணு நாலு
வாடி படத்துல தொழுகை பண்றார் ) படத்துக்கு ஸ்டே கேட்டதென்ன மாயம்? ஒரு வேளை அந்த "எந்த கடவுள்" நிஜமாவே இருக்காரோ ?

படம் பார்த்தா அனுபவிக்கனும் ; ஆராயக்கூடாது அதும் கிச்சனில் நின்னு ஆராயவே கூடாது இல்லன்னா வெந்நீர் காலில் கொட்டி.....ப்ச் பட்ட கால்லயே
படுது.

6 comments:

சுபத்ரா said...

கொஞ்ச நஞ்சம் புரிஞ்சிருந்த (அப்படினு நினைச்சிட்ருந்த) படத்தையும் உங்க கொஸ்டீன்ஸ் குழப்பி விட்டுருச்சு..

“அந்த சண்டை செம;குடுத்த காசுக்கு அந்த சண்டையும் கிருஷ்ணா டான்சும் போதும்....”

இது 200% உண்மை!

Anonymous said...

விசாம் - இந்திய ரஹசிய உளவாளி. he is the only live Indian agent as told by Shekar kapur. He tracks Omar and goes to Afganisthan from India. He lives in US to track his activities and meanwhile other stuffs happens. Since he is a Indian agent, unable to prove with American\'s.

ஆண்ட்ரியாவும் கமலும் மட்டும் தனியா வீட்டில் இருக்க காட்சில கூட \"சாஃட்டுப்போ\" - there only they both were there.. so no one to monitor them.
but while Peter Manivannan is following, many where there to monitor him and kamal is faking the follower as if he is a coward.
but its bit confusing..

அந்த சண்டை செம;குடுத்த காசுக்கு அந்த சண்டையும் கிருஷ்ணா டான்சும் போதும்.- this is the only reason for repeated audience and the mass hit. else its a normal hit only.

உங்க மொத்த ஆபீஸையும் பக் பண்ணிருக்கோம் கண்ணா - yes it must have been more stuffed instead of single dialog.

நைஜீரியன் - first salim will ask the Nigerian to do so. For tat the Nigerian asks \" y so soon\". Means it was planned for later purpose.. but pre poned. with a day delay.
He cooked mutton for his last meal. but the real fact is.. he wants Nirupama to find the Micro wave oven for the \"Paradise Shield\" concept.

\"எந்த கடவுள்\" - sorry could not get u..

I too accept few scenes can be defined in a bit clear manner.

There are many good scenes. you have already told 2 scenes.. dance and fight (core of the movie). Even in the dance.. in one scene. you can see a small idol face and in other side of mirror u can see the other face.. depicting tat kamal has another face in the song itself..
there are many more good scenes like tat.. any how.. I liked the movie. Kamal efforts for this movie is not in vain.. so I am happy with tat part.

There are many


Anonymous said...

விசாம் - இந்திய ரஹசிய உளவாளி. he is the only live Indian agent as told by Shekar kapur. He tracks Omar and goes to Afganisthan from India. He lives in US to track his activities and meanwhile other stuffs happens. Since he is a Indian agent, unable to prove with American\\\'s.

ஆண்ட்ரியாவும் கமலும் மட்டும் தனியா வீட்டில் இருக்க காட்சில கூட \\\"சாஃட்டுப்போ\\\" - there only they both were there.. so no one to monitor them.
but while Peter Manivannan is following, many where there to monitor him and kamal is faking the follower as if he is a coward.
but its bit confusing..

அந்த சண்டை செம;குடுத்த காசுக்கு அந்த சண்டையும் கிருஷ்ணா டான்சும் போதும்.- this is the only reason for repeated audience and the mass hit. else its a normal hit only.

உங்க மொத்த ஆபீஸையும் பக் பண்ணிருக்கோம் கண்ணா - yes it must have been more stuffed instead of single dialog.

நைஜீரியன் - first salim will ask the Nigerian to do so. For tat the Nigerian asks \\\" y so soon\\\". Means it was planned for later purpose.. but pre poned. with a day delay.
He cooked mutton for his last meal. but the real fact is.. he wants Nirupama to find the Micro wave oven for the \\\"Paradise Shield\\\" concept.

\\\"எந்த கடவுள்\\\" - sorry could not get u..

I too accept few scenes can be defined in a bit clear manner.

There are many good scenes. you have already told 2 scenes.. dance and fight (core of the movie). Even in the dance.. in one scene. you can see a small idol face and in other side of mirror u can see the other face.. depicting tat kamal has another face in the song itself..
there are many more good scenes like tat.. any how.. I liked the movie. Kamal efforts for this movie is not in vain.. so I am happy with tat part.

There are many

ப்ரியா கதிரவன் said...

திரு அனானிமஸ்:
இவ்வளவு பொறுமையாக பதில் கொடுத்ததற்கு நன்றி. நீவிர் யாராயினும் வாழ்க! :-)

Anu said...

Hey u...I saw the movie too last wkend. Enaku mattum dhan padam puriyalayonu nenachu feel aanen.. unga blog paathu sandhoshama iruku..Enaku first half padam puriyala.. Neraya dialogues kooda cleara illa ..adhule vishnu vera veetule kathite irundhan..epdiyo padam paathu mudichu sasi kitte kadha solla solli ungala madhiri neraya doubts ketten... Should watch it once more so i can relate..Neenga anavasiyama yosichu accident mela accident pannikadheenga puriyudha..

Anonymous said...

நான் கூட மெனக்கெட்டு பல குறை கண்டு பிடிச்சேன் விஸ்வரூபத்துல http://wp.me/P2lQCi-h9 ஆனா
//-ஆண்ட்ரியாவும் கமலும் மட்டும் தனியா வீட்டில் இருக்க காட்சில கூட "சாஃட்டுப்போ" ன்னும், அப்பறம் வேர்ஹவுஸ் பக்கத்துல இருந்து அந்த மாமா கிட்ட போன்ல "மாமா நிரூபமா அனுப்பிச்ச ஆள் என்னை தொரத்தறான்" ன்னும் ஏன் விஸ்வநாத் ( விசாம் மாதிரி பேசாம)மாதிரி பேசறார்?
//

இத கவனிக்கலையே... !

இந்த பதிவு மட்டுமல்ல வேறு சில பதிவுகளும் படித்தேன் ரசிக்க வைக்கும் நடை.....

@_santhu
(லாஓசி)