Tuesday, 12 October 2010

Wasabi

Slide to unlock.

Albums

Playlist Endhiran.

Select track Kaadhal Anukkal.

Play.

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை...
Aiyo...சனா சனா ஒரே வினா..அழகின் மொத்தம் நீயா?
நீ நியூட்டன் நியூட்டனின் விதியா...உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா?
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?
Ho Ho Baby, Ho baby..
செந்தேனில் !@$^%$^%
Ho Ho Baby, Ho baby..
மேகத்தில் பூத்த குலாபி...

Stop! Rewind! Play.

உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா?

நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?

Ho Ho Baby, Ho baby..

செந்தேனில் !@$^%$^%Stop!Rewind! Play.Ho Ho Baby, Ho baby..

செந்தேனில் !@$^%$^%பத்து முறை கேட்டும் கூட அது என்ன வார்த்தை என்று புரிய வில்லை.

சற்று தேடியதில், thanks to twitter@madhankarky அது வஸ்சாபி என்று புரிந்தது.


வஸ்சாபி ஒரு ஜப்பானிய தாவரம்.

குதிரை முள்ளங்கி(horseradish) என்று ஒரு தாவரம் இருக்கிறதாம்.அதை பொதுவாக அப்படியே வாங்கி பொடியாக நறுக்கி உபயோகிப்பார்களாம். அல்லது வஸ்சாபி வேரோடு (இதுவும் முள்ளங்கி மாதிரி) சேர்த்து அரைத்து பேஸ்ட் மாதிரி செய்து சுஷி உணவோடு பரிமாறுவார்களாம். வாசனை சற்று பயங்கரமாக இருக்கும் போலும். சற்று காரமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்
மேலதிக விவரங்களை இங்கே காண்க.

சுஷி பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். சாதமும் சமைக்காத பச்சை மீனும் சேர்ந்த உருண்டை தான் சுஷி உணவு. ஜப்பானில் வெகு பிரசித்தம்.

சில காண்டினெண்டல் உணவகங்களில் சுஷி கவுண்டர் வைத்து இருப்பார்கள். அசைவர்களுக்கே அதை சாப்பிட...இல்லை இல்லை...அந்த பக்கம் போவதற்கே சற்று தைர்யம் வேண்டும். சைவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். சுஷியை பற்றி நினைப்பதையே தவிர்த்தல் நலம். அந்த சுஷியே அப்படி ஒரு பயங்கர வாசனையோடு இருக்கும். அதோடு சேர்த்து இந்த வஸ்சாபி பேஸ்டையும் நினைத்து பாருங்கள்.என் கணவரிடம் நேற்று..."ஏங்க...அது வஸ்சாபி யாம்"...என்றால்..."ஐயோ அதுவா...." என்றார் ஒரு அதி பயங்கர முக பாவத்துடன்.

சரி அது இருக்கட்டும். இந்த வஸ்சாபி செந்தேனில் போட்டால் மட்டும் என்ன விளங்கி விட போகிறது? Hot in Sweet? எந்த அர்த்தத்தில் எழுதி இருக்கிறார்கள் என்று  புரியவே இல்லை.

செந்தேனில் வஸ்சாபி....சேர்த்தால் எப்படி இருக்கும்?
ஏதோ குலாபி, பேபி எல்லாம் மேட்ச் ஆனதும் எழுதி விட்டார்களா என்ன?

12 comments:

Kailash C said...

Hi,

Congratulations on your research paper. I would like to participate in your research too. You had raised a question regarding honey and wasabi connection. I think, it won't be "Hot in sweet". Honey is a natural preservative. Wasabi loses its flavor in 15 minutes when exposed. So, here the poet conveys, Ash is the Wasabi preserved in honey, ever fresh. When I extend my thoughts, it also implies like, Ash is aged, nothing but a preserved specimen. Now, we have good reasons for doubting poet's intentions.

Sanjai said...

yemma thaaye.. pothumma.. unga enthira imsaiku alave illaya? intha maasam enthiran maaaaasamaa? :)

Anu said...

Thaanga mudiyala unga research but good information. Neenga solra madhiri adhu konjam karama irukadhu. oru thuli sapta kooda mandaiku mela erum.Its a good experience though.Andha natham pudicha meen sushi naan sapda maaten. But there are veg sushi available and that tastes good with wasabi. You should try once !

geeyar said...

பிரியா மேம், எனக்கு ஒரு டவுட், என் வீட்டு சுட்டி காலில் கட்டுடன் பள்ளிக்கு சென்றாள். அப்போ....
மிஸ் : what is this?
அனி : this is wound.
மிஸ் : How is it happend?
அனி : சொரிந்து சொரிந்து காலில் புண் வந்து விட்டது.


அனி தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசமுடியாமல் தமிழில் பேசின கையோடு என்னிடம் வந்து கேட்டாள். எனக்கும் தெரியவில்லை. நீங்களாவது எனக்கு உதவி பண்ணுங்க மேடம்.

ப்ரியா கதிரவன் said...

ஆமா சஞ்சய், இது எந்திரன் மாசமே தான்...அடுத்ததும் எந்திரன் பதிவு தான்....வெயிட்டீஸ்.


geeyar,
கூல். இதுக்கே இவளோ டென்ஷனா?அப்போ அடுத்த பதிவுக்கு என்ன சொல்வீங்களோ...இப்போவே பயமா இருக்கு.

Anu, Veg Sushi? Did not know abt it earlier.

Kailash,
ipdi oru connection naan expect panla...:-)

Santhappan சாந்தப்பன் said...

இந்த பதிவை நான் மதன்கார்க்கியிடம் பகிர்ந்ததும், அதற்க்கு அவரின் பதிலும்

http://twitter.com/saandah/status/27627461168http://twitter.com/madhankarky/status/27724833829

ப்ரியா கதிரவன் said...

Thanks சாந்தப்பன்.

Devi said...

Sushi is not worse as much as you have described here Priya, they make it here in China too, it has got a wonderful smell,they have many varieties in sushi too, I've seen lots of Indians eating Sushi here :)

ப்ரியா கதிரவன் said...

Devi,

thanks for the comment; will try to taste sushi sometime...:-)

Priya

Muthu said...

Sushi isn't something to like immediately, but after having it couple of times you are gonna love it :-)

Anonymous said...

Btw,

I was reading on Sunita Williams ( Indian origin American astronaut) . She holds the record for the longest space run by a female astronaut.

Apparently while on her verrrrry long run, she was craving for some spicy food, and gues what she was sent from earth?
The next batch of astronauts brought her a tube of WASABI !!! (along with Punjabi Kadhi pakoda ; curry paste etc)

இதை அவங்க ஒரு "recipe "ல உபயோக படுத்தினப்போ மொத்த வசாபியும் tube லேர்ந்து வெளியே வந்து space shuttle dining area முழுக்க ஒரே பச்சை கலர் மசாலா மிதக்க ஆரம்பிசிருசாம்.
பாவம் அதை clean பண்றதுக்குள்ள தாவு தீர்ந்து போயி இனிமே வசாபியும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்னு முடிவு பண்ணி deep storage- ல போட்டுட்டாங்களாம்

Now – try to connect it to the song lyrics ;-)
Did vairamuthu mean that Sana (Aishwarya) is as spicy or as a very messy person to handle??

- Ag

Anonymous said...

Btw,

I was reading on Sunita Williams ( Indian origin American astronaut) . She holds the record for the longest space run by a female astronaut.

Apparently while on her verrrrry long run, she was craving for some spicy food, and gues what she was sent from earth?
The next batch of astronauts brought her a tube of WASABI !!! (along with Punjabi Kadhi pakoda ; curry paste etc)

இதை அவங்க ஒரு "recipe "ல உபயோக படுத்தினப்போ மொத்த வசாபியும் tube லேர்ந்து வெளியே வந்து space shuttle dining area முழுக்க ஒரே பச்சை கலர் மசாலா மிதக்க ஆரம்பிசிருசாம்.
பாவம் அதை clean பண்றதுக்குள்ள தாவு தீர்ந்து போயி இனிமே வசாபியும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்னு முடிவு பண்ணி deep storage- ல போட்டுட்டாங்களாம்

Now – try to connect it to the song lyrics ;-)
Did vairamuthu mean that Sana (Aishwarya) is as spicy or as a very messy person to handle??

- Ag