"What? All set to be decked up for 10 days?"
Yeah Yeah...Leaving tomorrow...planned fully...one function on saturday and one on sunday...bought a new face cream from lakme...5th anniversary is also falling in vacation time; may be we will chill out in the beaches of Kerala..."
நீண்ட விடுமுறைக்கு செல்வதற்கு முதல் நாள்,இப்படி கூகிள் சாட்டில் யாரிடமும் பீட்டர் விடுவதற்கு முன், சற்று யோசித்தல் நலம்.ஒருவேளை
வந்ததும் இப்படி ஒரு பதிவு எழுதும் விதி நமக்கு வாய்த்திருக்கலாம்.
"அந்த ப்ளூ கலர் குர்தா நல்லா இருக்கு. ஆனா அவ்வளவா வொர்க் இல்லை.இந்த பச்சை கலர் சுமார்.ஆனா அர்ஜுன் சைஸ்க்கு பெரிசா இருக்கே...அந்த மரூன் ஏதோ கொஞ்சம் பரவால்ல.லைனிங் இருக்குல்ல?புள்ளைக்கு குத்தக்கூடாது பாருங்க. ஸ்டோன்ஸ் கூட கொஞ்சம் வெச்சு
வொர்க் பண்ணி இருக்கலாம்...கொள்ளை வேலை வெச்சு விக்கறீங்க.வெளில பிரஷ்ஷர் குக்கர் ப்ரீ ன்னு போட்ருக்கே அந்த offer இன்னும் இருக்குல்ல?" இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு ஆயிரம் ரூபாய்க்கு கலாமந்திர் கடையில் வாங்கிய பையனின் குர்த்தாவை பெங்களூரிலேயே வைத்து விட்டு ஊருக்கு போய்விட நேரலாம். அதை போய் இறங்கியதும் உணர்ந்து விட்டாலும், "வந்ததும் பெட்டியில் என்ன குடைஞ்சுட்டு இருக்க?" என்ற கேள்விக்கு "ஒன்னும் இல்லையே" என்று பொதுவில் சொல்லி விட்டு, தனியாக கணவர் நல்ல மூடில் இருக்கும் சமயமாக பார்த்து, "என்னங்க I did one blunder" அப்படி ஆரம்பித்து, "நீங்க திட்டலைன்னா சொல்றேன்" மற்றும் இன்ன பிற முன், பின் இடை செருகல்களுடன், கணவரிடம் மேட்டரை உடைக்கும் போது, அவர் கத்தாமல், திட்டாமல், ஒரு முறைப்புடன் இந்த பிரச்சனையை கடந்து சென்றால் அன்னைக்கு கிரக நிலை சாதகமாக இருக்கிறது என்று அர்த்தம்....அன்று எந்த காரியத்தையும் நம்பி துவங்கலாம்.
ஊரில் நடக்கும் விஷேஷங்களுக்கு மட்டுமே நகை அணியும் வழக்கம் என்பதால், அவை ஊர் லாக்கரில் தூங்கிக்கொண்டு இருக்கும். வியாழக்கிழமை காலையே ஊரில் போய் இறங்கி இருந்தாலும், சனியும் ஞாயிறும் தானே விசேஷம், லாக்கருக்கு நாளைக்கு போய் கொள்ளலாம் நகை எடுக்க....என்று அலட்சியமாக இருந்து விட, வியாழன் இரவு தான் உறைக்கும், வெள்ளிக்கிழமை ரம்ஜான், சனி விநாயகர் சதுர்த்தி, அடுத்து ஞாயிறு விடுமுறை என்று லாக்கர் திறக்க வழியே இல்லை. "அப்பாடா bank போகும் வேலை மிச்சம்" என்பதான நிம்மதியும், "ஆமா நகை எல்லாம் போட்டுக்கொண்டால் மட்டும் என்ன புதிதாக...." என்பதுமாக கலந்து கட்டி கணவர் விசில் அடித்து சிரிக்கும் காட்சியை எல்லாம் சமாளிக்க நிறைய பொறுமையையும் பெங்களூரில் இருந்தே KPN இல் லக்கேஜ் காசு கொடுத்தாவது அள்ளிக்கொண்டு போய்விடுதல் முக்கியம்.
'சரி அர்ஜூன்க்கு,நல்ல பெருமாள்ல போய் ஒரு டிரஸ் வாங்கி சமாளிப்போம்' என்று அவரே பிரச்சனைக்கு தீர்வும் கண்டு கூட்டி போய், ஒரு டிரஸ்ஸையும் செலக்ட் பண்ணி விட்டு "pack பண்ணிட்டு வா..நான் பில்லிங்ல இருக்கேன்", என்று கிளம்பி விட, 'இதான் டைம்' என்று யாரும் கவனிக்கிறார்களா என்று உறுதி படுத்தி கொண்டு அப்படியே அங்கே இருக்கும் பெரிய கண்ணாடி பக்கம் போய் முகம் பார்த்தால் பார்த்தால் ஐயோ! அதிர்ச்சி...முகம் முழுக்க ஏதோ அலர்ஜி ஆனது போல...புதிதாக ட்ரை பண்ணிய lakme பல்லை இளித்து :-(
பேசாம முகம் கழுவினோமா, பொட்டு வைத்தோமா என்றில்லாமல் எதுக்கு இந்த க்ரீம் முயற்சி எல்லாம்.சரி நேரம் அப்படி.சுத்தி சுத்தி அடிக்கிறது.
அடுத்த நாள் அதிகாலை, 'குழந்தையும் கணவரும் தூங்கறாங்களே' என்ற (டூ மச்)அக்கறையில் லைட் போடாமல் நைட் லாம்ப் வெளிச்சத்தில் நாம ஏதோ வேலை செய்ய, கணவரின் மிக முக்கிய பொருள் ஒன்றை பாழ் படுத்தி விட நேரலாம்.தூங்கி முழித்ததும் முதலில் அதை தான் தேட போகிறார். "ஐயோ என்ன சொல்வது? எப்படி reaction இருக்குமோ" என்று யோசித்தது கொண்டே அவர் விழிக்கும் வரை வெயிட் பண்ணும் அவஸ்தை இருக்கிறது பாருங்கள்.அதெல்லாம் அனுபவித்தால் தாங்க புரியும்.
ஒரு வழியா எல்லாவற்றையும் சமாளித்து பங்க்ஷன் எல்லாம் முடிந்து அசதியும் அலுப்புமாக குழந்தைக்கு எதையோ ஒன்றை ஊட்டி தூங்க வைத்து, வேலையை முடித்து அக்கடா என்று தலை சாய்க்கும் போது, அது தூக்கத்திலேயே இருமி, சாப்பிட்ட கொஞ்சூண்டையும் பெட்ஷீட்டிலேயே வாந்தி பண்ணி வைக்கும்.அப்போது நம் ஒவ்வொரு செல்லிலும் படபடப்போ... சுயபச்சாதாபமோ... கோவமோ... ஏதோ ஒன்று சர்ரென்று ஏறும். வயிற்றில் ஒன்றும் இல்லாமல், காலை மூன்றரைக்கு 'அம்மா பசிக்குது' என்று அழுகை வேறு.சரி விடுங்க, இனிமேல் தான் ஹைலைட்டே இருக்கிறது.
மறுநாள் கேரளா கிளம்பலாம்,என்று ரிசார்ட்டுக்கு போன் செய்தால், "sir,id is reyiningg here. we dond suggest you com this time" என்று ஒருவர் மலையாளங்கிலத்தில் சொல்லிவிடலாம். "சரி வேறு என்ன பண்ணலாம்" என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே...கணவரின் அலுவலக விஷயமாக, மெயில் வந்து, விடுமுறை பத்து நாளில் இருந்து ஐந்தாக இளைத்து,நாளைக்கே பெங்களூர் கெளம்ப வேண்டும் என்ற நிலைமை கூட வரலாம்.
"டைம் என்பது சூர்யா படம் மாதிரி; ஓடிக்கிட்டே இருக்கும். ஆனா (கல்யாண) வாழ்க்கை என்பது விஜய் படம் மாதிரி. அத நாம தான் ஓட்டனும்"
ஐந்தாண்டாக ஓ(ட்)டிக்கொண்டு இருக்கும் வெற்றியை கொண்டாடுவதற்காக, கேரளா ப்ளான் எல்லாம் சொதப்பி விட்ட நிலையிலும், அப்படியே பைக்கில் கன்யாகுமரி போய், கால் நனைத்து விட்டு, மாங்கா சுண்டல் சாப்பிட்டு, முத்து தோடு சிப்பி வளையல் எல்லாம் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பலாம். காலங்கார்த்தால எழுந்து, போன முறை முறைத்து கொண்ட முருகனை பார்த்து ராசியாகி விட்டதும் நிம்மதி.
எது எப்படியோ, பாதி லீவில் பேக்கப் பண்ணி பஸ்ஸில் வந்து உட்கார்ந்ததும் ஆபீஸ், ஸ்கூட்டி, பெங்களூர், ப்ளாக் என்று மண்டையில் அடிபட்டவனுக்கு பழைய ஞாபகம் திரும்புவதை போல் நியாபகம் வரும் விஷயங்கள்... லேசாக தலைவலிக்கும்...
"ஏங்க தீபாவளிக்கு ஊருக்கு வர டிக்கட் கிடைக்குமான்னு ட்ரை பண்ணுவோமா..."
The 2018 US Concert Tour and lessons learned
4 years ago
7 comments:
மூச்சுவிடாம எல்லாம் கொட்டித் தீத்துட்டீங்க...பாவமா இருக்கு..:)
You are living feared life. why?
//டைம் என்பது சூர்யா படம் மாதிரி; ஓடிக்கிட்டே இருக்கும். ஆனா (கல்யாண) வாழ்க்கை என்பது விஜய் படம் மாதிரி. அத நாம தான் ஓட்டனும்" //
செம பஞ்ச் டய்லாக் ..ஹா..ஹா..
என்னவோ கணவருக்கு பயப்படற மாதிரி என்னா பில்ட் அப் :)-
/நாஞ்சில் பிரதாப் said...
You are living feared life. why?
//
இயல்பிலேயே நான் கொஞ்சம் பயந்த சுபாவம்ங்க...அதான்...
:-)))))))))))))))))
ஜெய்லானி said...
//செம பஞ்ச் டய்லாக் ..ஹா..ஹா..
ஓசி.
//மணிகண்டன் said...
என்னவோ கணவருக்கு பயப்படற மாதிரி என்னா பில்ட் அப் :)-
//
அட நம்புங்க.
நாகர்கோயிலில உங்கள நான் பாக்கலியே.
nalla narration .. ukaandhu yosichirupeenga pola ;)
ipdilaam idhuku yosicha apram arjun dress epdi gnabagam irukumaam ?? :P he he ..
enaku oru doubtu ....
adhu yaen kalyanam aanadhuku apram mattum vaazhkai otta vendiyadha irukunu ellarum solraanga ?
i have met very rare passionate
drivers for this life vehicle .. so sad huh ..
Your narration is so good :)
Post a Comment