Thursday, 14 May 2009

போகன்வில்லா



"கள்ளத்தனம் ஏதுமில்லா புன்னகையோ போகன்வில்லா"
இது எந்த பாட்டுல வர்ற வரிகள்?



By the way, போகன்வில்லான்னா "காகிதப்பூ" தானே? இது என்ன உருவகம்? பெயரிலேயே பூவை வைத்து இருக்கும், கவிஞருக்கு, அந்த 'சூப்பர்' சிரிப்புக்கு உவமை சொல்ல காகிதப்பூ தான் கிடைத்ததா? 'botanical' பெயரை வைத்து உவமை சொல்லிட்டா "ஆஹா நல்ல lyrics' என்று சொல்லிடுவோமா??? "இல்ல இல்ல காகிதப்பூ ன்னா வாடாம, கலர் மாறாம இருக்கும்" அப்டின்னு ஏதாவது விளக்கம் இருந்தா, பின்னூட்டத்தில் சொல்லுங்க.

சக்கை போடு போட்ட, 'வசீகரா உன் நெஞ்சினிக்க', 'பார்த்த முதல் நாளே', பாடல் வரிகள் முதல் தடவை கேட்ட பொழுது என்னை சிரிக்க வைத்தது,
அடுத்து அடுத்து கேக்கும் போது எரிச்சல் ஊட்டியது. மக்கா பாடுறீங்களா?, பேசறீங்களா?

வசீகரமா மொத்த பாட்டிலும் 'முடிவிலி' என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டும் பிடித்தது. அதுவும் "பாரதியார்" கிட்ட சுட்டதுன்னு யாரோ சொன்னாங்க. அப்படியா?
ஹாரிஸ்,பாம்பே ஜெயஸ்ரீ, மாதவன், கமல் களால், அந்த பாட்டுகள் பிழைத்தன ன்னு நான் நெனைக்குறேன். அப்போ உன்னி மேனன் ? ன்னு கேக்குறவங்களுக்கு....மன்னிக்கவும், எனக்கு அவர் ஏதோ "விதியே" ன்னு பாடற மாறி தான் இருக்கும்.
ஹரிஹரன், மதுபாலகிருஷ்ணன் போன்ற (மலையாளக் ?) குரல்களில் பொங்கி வழியும்
feel(உபயம்: சூப்பர் சிங்கர் :-) ), உன்னியிடம் missing என்று எனக்கு வருத்தம் உண்டு. மாற்றுக்கருத்து இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.

சரி போகன்வில்லாவுக்கே வருவோம். இணைய நண்பர் ஒருவர், திரைப்படங்கள், பாடல்கள் குறித்து பொதுவாக நல்ல ரசனை உடையவர்(?) , மேல சொன்ன அந்த போகன்வில்லா பாட்டை கேட்டு, "ஆஹா, வைரமுத்து மாதிரி பாட்டு எழுத வந்தாச்சு இன்னொருத்தர்" ன்னு என்கிட்டே பெரிய பிட்டை போட்டார்.
'என்ன கொடுமை இது 'க....?'

'என் பாடல்களில் தமிழ் வார்த்தைகள் மட்டும் தான் பயன்படுத்துவேன்' என்கிற அந்த அழகான பிடிவாதம் ரொம்ப பிடித்து இருக்கிறது. ஆண் கவிஞர்கள் மட்டுமே ஆண்டு கொண்டு இருக்கும் தமிழ் திரை உலகில், தனக்கு ஒரு சிம்மாசனம் போட்டுவைத்து இருக்கும் கம்பீரம் பிரம்மிக்க வைக்கிறது.ஆனாலும், "as a lyricist, we expect more from you Madam".

பின்குறிப்பு: புன்னகை குறித்தது ஒரு நல்ல lyrics கேக்க வேணும்னா, இருவர் படத்துல வராத, CD ல மட்டும் இருக்குற பாட்டு, "பூங்கொடியின் புன்னகை" . P.சுசீலா அவர்கள் பாடிருப்பாங்க, கேட்டு பாருங்க.

Friday, 1 May 2009

கொஞ்சம் தாமதமான நன்றி

கண்ணன் 'அபியும் நானும்' பற்றி என்ன நெனைக்குறீங்கன்னு கேட்டு நான் எழுதிக்குடுத்த நாலு வரிகள்.




அபியும் நானும் படம் பத்தி நான் எழுதினா, அது ரொம்ப biassed ஆக இருக்கும். காரணம் -



1.அப்பாக்கும் மகளுக்கும் உள்ள உறவை சொல்ற படம்.

2.ராதாமோகன்.

3.டூயட் மூவிஸ்.

4. த்ரிஷா.



ஆனா அந்த படத்த பத்தி நெனச்சதும் சட் ன்னு எனக்கு ஞாபகம் வந்த மூணு விஷயங்கள்.



1.'மூங்கிலை விட்டு பிரிந்த பிறகு பாட்டுக்கும் மூங்கிலுக்கும் என்ன உறவு' 'மகள் தனியறை புகுந்த போது ஒரு பிரிவிற்கு ஒத்திகை பார்த்தேன்' என்று தன்னால் மட்டும்தான் இப்டி எல்லாம் எழுத முடியும் என்று நிரூபித்து இருக்கும் கவிஞர் வைரமுத்துவின் வரிகளும், 'அம்மா பத்தின பாட்டுன்னா கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் உங்க எல்லார் ஞாபகத்துக்கும் வர்ற மாதிரி, பொண்ணு பத்தின பாட்டுன்னா என் ஞாபகம் வரணும்' ன்னு ஒரு முடிவோட அந்த பாட்டை பாடி இருக்குற மதுபாலகிருஷ்ணன் குரலும்.



2. "எனக்கு பிகினி மட்டும் தான் டிசைன் பண்ண தெரியும்னு நெனைக்காதீங்க, இப்டி அழகா அம்சமா டிரஸ் டிசைன் பண்ணுவேனாக்கும்" என்று (பில்லா புகழ்) அனு வர்தன், த்ரிஷாக்கு டிசைன் பண்ணி இருக்கும் costumes.



3. "Children grow up, Sometimes parents must too" என்ற பொருத்தமான caption.



அவருடைய 'விமர்சனத்தில்' லிங்க்கியிருந்தார். அன்றைக்கே நன்றி சொல்லணும்ன்னு நெனச்சு விட்டு போனது.