பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். இதை விட நல்ல கேள்விகள் இருந்தாலும் அனுப்புங்கள்.
கூகிள் பண்ண கூடாதுன்னு எந்த விதி முறையும் இல்லை:-)
பின்னூட்டங்கள் பிறகு பிரசுரிக்கப் படும்.
பரிசாக புத்தகம், CD ஏதும் அனுப்பி வைக்க மாட்டேன்.
1.அயன் படம் பாத்துட்டீங்களா? அட இது கேள்வி இல்லை.
"அயன்" அப்டின்னா உண்மையான அர்த்தம் என்ன? "சூர்யா" என்ற பதிலும், அந்த படத்தின் டைரக்டர் சொன்ன மாதிரி "பலம் பொருந்தியவன்" அப்டின்னு உதார் விடுற அர்த்தமும், தப்பு என்று இப்போவே சொல்லிக்கறேன்.
மகாபாரதம் படித்து/பார்த்து இருப்பீர்கள். அதில் இருந்து சில கேள்விகள்.
2.பீஷ்மரின் இயற்பெயர் என்ன? "முகேஷ்" என்ற பதில் செல்லாது.
3.ஊர்வசியின் சாபத்தால் அர்ஜுனன் பெண்தன்மையை அடைந்து விடுகிறான். அப்டியா என்று கேட்பவர்கள் அடுத்த கேள்விக்கு போய் விடலாம். அப்போ
அவன்(ள்), எந்த பெயரால் அழைக்க படுகிறான்(ள்)?
4.பாண்டுவின் இரண்டாவது மனைவி பெயர் என்ன? (நல்ல வேளை, இவராவது அண்ணன் மாதிரி ஆட்டம் போடாம , ரெண்டோட நிறுத்தினாரு)
5.கடோத்கஜனோட அப்பா பேர் எல்லாருக்கும் தெரியும் ன்னு நம்பறேன். அம்மா பேர் என்ன??
6.துரோணரின் மகன் பெயர் என்ன?இது ரொம்ப சுலபமான கேள்வி தான், ஆனாலும் ஒரு குட்டி க்ளூ. மகாபாரதத்தில் ஒரு யானைக்கும் அதே பெயர் உண்டு.
The 2018 US Concert Tour and lessons learned
4 years ago
30 comments:
ayan = pure
1) அயன் - பிரம்மா.
2) தேவவ்ரதன் (Devavrath)
3) ப்ரிஹன்னலா (Brihannala)
4) மாத்ரி (Madri)
5) ஹிடிம்பி (Hidimbi)
6) அஸ்வத்தாமன் (Aswattama)
கேள்விகளை யோசிச்சு அடுத்த கமெண்டா போடறேன்.
1."அயன்" அப்டின்னா உண்மையான அர்த்தம் என்ன?
Aiiyo “Surya” illaya?
Hindu/Tamil: Brahma, the God of Creation
Sanskrit: Soaked in the Divine (as in Satyanarayan) . In Sanskrit this also means "Speed" in English or "Gati" in Hindi.
Biblical: Motion, To Arrive (related to Noah); Iian, which is pronounced like Ayan, is the Scottish variation of John
Hebrew: Nothingness, Peace
Persian: Notable
Islam/Arabic: God's Gift
Several African Languages: Center Part of the Soul.
2. பீஷ்மரின் இயற்பெயர் என்ன?
Devavrath
3.ஊர்வசியின் சாபத்தால் அர்ஜுனன் பெண்தன்மையை அடைந்து விடுகிறான். அப்டியா என்று கேட்பவர்கள் அடுத்த கேள்விக்கு போய் விடலாம். அப்போ
அவன்(ள்), எந்த பெயரால் அழைக்க படுகிறான்(ள்)?
Brihannala
4.பாண்டுவின் இரண்டாவது மனைவி பெயர் என்ன?
Madri
5.கடோத்கஜனோட அப்பா பேர் எல்லாருக்கும் தெரியும் ன்னு நம்பறேன். அம்மா பேர் என்ன??
Hidimbi
6. துரோணரின் மகன் பெயர் என்ன?இது ரொம்ப சுலபமான கேள்வி தான், ஆனாலும் ஒரு குட்டி க்ளூ. மகாபாரதத்தில் ஒரு யானைக்கும் அதே பெயர் உண்டு.
Ashwatthaman
அயன்' என்றால், சுத்த தமிழில், "நான்முகன்' என்று அர்த்தம்
பீஷ்மரின் இயற்பெயர் தேவவிரதன்
பாண்டுவின் இரண்டாவது மனைவி பெயர் -மாத்திரி
கடோத்கஜனோட அம்மா பேர் இடும்பி
துரோணர் மகன் அசுவத்தாமன்
கூகுள்ல தேடறதுக்கே நாக்கு தள்ளிப் போச்சு. இதுல ஒரு கேள்விக்கான விடையும் கண்டுபிடிக்கமுடியலை. ஏங்க, பெங்களூர்லயும் வெயில் ஜாஸ்தியா?
1 “அயன்” என்ன அர்த்தம்? பிரம்மா என்று அர்த்தம். சுசீந்திரத்தில் தாணுமாலயன் சுவாமி என்ற கோவில் இருக்கிறது.தாணு
+மால்+அயன் தாணு =சிவன், மால்(திருமால்)=விஷ்ணு அயன் = பிரம்மா
2 பீஷ்மரின் இயற்பெயர் காங்கேயன்
3 பிரகன்நளை
4. பாண்டுவின் இரண்டாவது மனைவி பெயர் -மாத்திரி
5 இடிம்பை
6 அசுவத்தாமா
Ans for Qn 1. Creator ?
Ans for Qn 2. Devavrath
Ans for Qn 3. Brihannala
Ans for Qn 4. Madri
Ans for Qn 5. Hidimba
Ans for Qn 6. Ashwathaman
1. தெரியாது :)
2. தேவ விரதன்
3. பிருஹன்னளை
4. மாத்ரி
5. இடும்பி
6. அஷ்வத்தாமா
1. Brahma
2. Devavratha
3. Birugannalai
4. Madri
5. Idimbi
6. Asvathama
2. தேவவிரதன்
3. ப்ரஹனளை
4. மாத்ரி
5. இடும்பை
6. அஸ்வத்தாமன்
அயனைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது... இதர பாரத் கதைகளின் பெயர்கள் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
6 -> Aswathama ( No google)
5 -> Idumbi
4 -> Maatri
3 -> Brihannala
2 -> DeoBrat
1 -> The one (given in "The Hindu" review)
without google search !
2) devadathan
3) brahannallaa
4) Something like madhavi !!!
6) aswaathamaa
5) i should be able to answer but does not come to my mind now !
1) - don't know.
ஆறு அசுவத்தாமா...
அஞ்சு.... ம்ம் மறந்துருச்சு...
நாலு, மூணு எல்லாம் refer பண்ண புஸ்தகம் இல்ல :(
அப்புறம் ஒரு கேள்வி?!! ஆங்... அர்ஜுனனனோட வில்லு பேரென்ன?? (விஜய் படத்துல வராது!!)
4.Kunthi devi
5.Son of Bheeman and Idumbi
6.Ashvathamma
1) Ayan = mirror
ரெண்டு விஷயம் நெனச்சேன்.
-ரொம்ப நாள் பதிவு பக்கம் போகலை....நம்மள மறந்துருப்பாங்கன்னு.
- mouse, keyboard ன்னு இருக்கிற வாழ்க்கை ல, மகா பாரதத்துக்கு மவுசு இருக்குமான்னு?
ரெண்டுமே தப்பு ன்னு அடி பின்னிட்டீங்க மக்கா...நன்றி நன்றி நன்றி.
ரிதன்யா, காங்கேயனா? அது யாரு? மலையூர் மம்பட்டியான் மம்பட்டியான் மாதிரி இருக்கு? கங்கை புத்ரன் ன்னு அர்த்தமா?
Kartin,
//அப்புறம் ஒரு கேள்வி?!! ஆங்... அர்ஜுனனனோட வில்லு பேரென்ன?? (விஜய் படத்துல வராது!!)
அதுக்கு பேரு காண்டீபம். அதுனால அர்ஜுனன் க்கு காண்டீபன் ன்னு ஒரு பெயரும் உண்டு.
கொசுறு செய்தி: மிதிலைல ராமர் சீதைய கரெக்ட் பண்ண உடைச்ச வில்லுக்கு பேரு, "சிவதனுசு"
//ரிதன்யா, காங்கேயனா? அது யாரு? மலையூர் மம்பட்டியான் மம்பட்டியான் மாதிரி இருக்கு? கங்கை புத்ரன் ன்னு அர்த்தமா?//
ஆமாங்க பிரியா அதேதான்.
அப்புறம் மக்கள என்ன மாக்கள்ன்னு நினைச்சீங்களா, வலையர்கள்(தப்பா எடுத்துக்காதீங்க மக்கா) இப்படி எட(எடைங்க அடையில்ல) போடக்கூடாதுங்க. இதுக்கு தண்டணை உங்களுக்கு வாரம் 3 பதிவாவது போடனும்னு தீர்ப்பளிக்கிறோன். ஒத்து ஊதறவஙக் ஊதலாம். :-)
//உங்களுக்கு வாரம் 3 பதிவாவது போடனும்னு தீர்ப்பளிக்கிறோன். ஒத்து ஊதறவஙக் ஊதலாம். :-)//
Superb :) :) :)
என்ன பாடுபடவேண்டி இருந்தது இதுக்கு ( எதுக்குன்னு தெரியுமில்ல பிரியா!!)
ச்சே ச்சே ச்சே!! எல்லாரும் முந்திட்டாங்களே!! நம்ம அறிவை இங்க பறைசாற்ற வழி இல்லாம போயிடிச்சே!! ( பதில் தெரியாம முட்ட கண்ணால முழிச்சிட்டு இருந்தேன்னு எப்படி ஒத்துகிறது)
சரி நான் தருமி மாதிரி!! கேள்விகளை நானே கேட்கிறேன்........ராமாயணமா மகாபாரதமா உங்களுக்கே தெரியும்ன்னு நினைக்கிறன்
1. ராமன் கழுத்தில் அணிந்த
மாலை பெயர் என்ன??
2. ராமாயணத்தில் ராமன் தன்னுடன் பிறக்காத போதிலும் சகோதரர்களாய் ஏற்ற நபர்கள் எதனை பேர்? அவர்களின் பெயர் என்ன?
3. சீதைக்கு பொய் மான் காட்சி அளித்ததக கருதப்படும் இடத்தின் பெயர் என்ன?
( சேலம் பக்கம் உள்ளது)
4. ராமாயணத்தில் வரும் விமானத்தின் பெயர்?
5. கம்பன் தனது ராமாயண காவியத்தை அரங்கேற்றிய இடம்(கோவில்) எது?
6. ராமனின் சகோதரியின் பெயர் என்ன?
இப்போதைக்கு இது போதும்ன்னு நினைக்கிறன்
3. சீதைக்கு பொய் மான் காட்சி அளித்ததக கருதப்படும் இடத்தின் பெயர் என்ன?
( சேலம் பக்கம் உள்ளது)
மானாக வந்தது மாரீசன். ஆரண்ய காண்டத்துல வரும். ஆனா இடம் பெயர் தெரியாது.
4. ராமாயணத்தில் வரும் விமானத்தின் பெயர்?
சீதையை ராவணன் கவர்ந்து சென்ற விமானத்தை பற்றிய கேள்வியா? குபேரன் குடுத்தது தெரியும். அதுக்கு பெயர் இருக்கா?
6. ராமனின் சகோதரியின் பெயர் என்ன
ஷாந்தா.
அவளுடைய கணவர் ரிஷ்யஸ்ரிங்கர் நடத்திய யாகத்திற்கு பிறகு தான், தசரதனுக்கு மகன்கள் பிறந்ததாக படித்த ஞாபகம்.
//என்ன பாடுபடவேண்டி இருந்தது இதுக்கு ( எதுக்குன்னு தெரியுமில்ல பிரியா!!) //
:-)
someone help with the other answers.
2. LAXMAN, BHARAT & SHATRUGHAN
5. SriRangam Temple
6. Shanta
Hi
4. pushpaka vimana
Raji, Apart from his own brothers Laxman,Bharathan and Shatruganan Rama has adapted few more on his way to lanka during vanavasam.....I asked those people's names..
ஒரு தம்மா தூண்டு மூளைய எம்புட்டு கஷ்ட பட வைக்கறீங்க :)
3. Panchavati
Below are some general questions.
1. What is the product, which has the meaning “PRICELESS” in one of the languages in INDIA?
2. To make this product, over 1000 parts are used from around the world. It is only made by Godrej and Olympus now.....What is the product?
3. What was the earlier name of windows vista?
4. X is defined as a structure (tomb/monument) built in memory of a person or a group whose body lies somewhere else. “X” Please? (Hint: shares its name with a famous road in Chennai).
5. According to a legend an alleged law said that it was illegal for a man to beat his wife with a stick that was thicker than his thumb. Which phrase has its origin from this practice?
அட இது நல்லா இருக்கே!
அஷ்வத்தாமனும், மாத்ரியும் தான் உடனே நினைவுக்கு வந்தது (absent minded professor - me)
மற்றதுக்கு புத்தகத்தை புரட்டலாம்னு நினைச்சு வந்தேன். ஆனால் கீழேயே விடைகள் குவிந்திருந்தன. நன்றி.
அடிக்கடி டெஸ்ட் வைங்க. 20 / 100 ஆவது எடுப்பேங்க
எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.
அட.. என்ன ப்ரியாக்கா இது? அநியாயத்துக்கு அறிவாளியா இருக்கிங்க.. எனக்கு அதுல ஒரு கேள்விக்குக் கூட பதில் தெரியலை.. பின்னூட்டத்துல தான் பார்த்தேன்..
நானெல்லாம் எவ்ளோ மொக்கையா வாழ்ந்துட்டு இருக்கேன் பாருங்க.. :(
Amiable post and this mail helped me alot in my college assignement. Thanks you as your information.
Post a Comment