Monday 12 January 2009

கருவாச்சியும் நானும்!!!

கல்லூரியில் படிக்கற வரைக்கும் ஏதாவது புத்தகத்தைப் பாத்தா போதும், அத கைல எடுத்துட்டா சாப்பாடு வேணாம், தண்ணி வேணாம், தூக்கம் வேணாம், டிவி வேணவே வேணாம்.....அந்த புத்தகத்தை கடைசி வரைக்கும் படிச்சு முடிச்சுட்டா தான் 'ஜென்ம சாபல்யம்' அடைஞ்ச மாறி இருக்கும்....அதுக்கு அப்றோம் அவ்ளோ வெறியோட படிக்குறது கொறஞ்சுடுச்சு....நண்பர்கள் ரொம்ப ரொம்ப recommend பண்ற புத்தகங்கள் மட்டும் என்கிற அளவில் என்னுடைய புத்தக உலகம் சுருங்கி தான் போனது....'நேரம் இல்லை' ன்னு சொன்னால் அது ஒரு சறுக்கு மட்டுமே.....நண்பர்கள் "மெயில் பண்ண... போன் பண்ண....மீட் பண்ண.... நேரம் இல்லன்னு" சொல்றப்போ எல்லாம் மனசுக்குள்ள அவங்கள வைது இருக்கேன்...."மனசு இருந்தா நேரம் எல்லாம் நம்மளா உருவாக்கிக்கலாம்" ன்னு நெனச்சு இருக்கேன்.....எனக்கும் அது பொருந்தும் தானே?அதுனால படிக்க நேரம் இல்லன்னு சொல்ல மாட்டேன், 'my prioritieis have changed ' ன்னு உண்மைய ஒத்துக்குறேன்.




இப்படியான என்னுடைய குட்டி புத்தக உலகத்துல,
இப்போ கவிஞரின் கருவாச்சி....:-)..:-(
இந்த இடத்துல நான் படிக்குறதுக்காக சிரிக்குற smiley போடனுமா இல்லாட்டி கருவாச்சி படுற பாட்டை நெனச்சு அழுவுற smiley போடணுமான்னு கொஞ்சம் கொழப்பமா இருக்கு....அதுனால ரெண்டையும் போட்டுட்டேன்.

அர்ஜுன் தூங்கின அப்றோம் நைசா எந்திருச்சு ஹால் க்கு போனா அடுத்த அஞ்சாவது நிமிஷம் ஓஓ ன்னு ஒரு அழுகை சத்தம் கேக்கும்....பயபுள்ள பக்கத்துல அம்மா இல்லன்னு எப்டித்தான் கண்டு புடிக்குறானோ.........
அவன் பக்கத்துலையே நம்ம presence ஐ feel பண்ண வெச்சுகிட்டே சின்ன லைட் வெளிச்சத்துல... அந்த லைட் வெளிச்சம் அவன் மூஞ்சிலயோ,அவங்கப்பா மூஞ்சிலயோ படாம அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டும், கம்பெனி வரப்போ போறப்போ cab லையும்.... இப்டியாக கருவாச்சியும் நானும்....

கவிஞரின் கவிதை தொகுப்புகள் எனக்கு நெறைய உதவி செஞ்சு இருக்கு....
'"இமயத்திற்கும் சரிவு உண்டு இருபுறமும்...இளைய தோழா எழுந்து வா..."
"நீ எறும்பாய் இருந்தால் என்ன? ஊர்ந்து கொண்டே இரு...இரும்பும் தேயும்...." ன்னு அவர் வரிகளை என் பள்ளி நாட்களில் பல போட்டிகளில் பயன் படுத்தி இருக்கிறேன்...
தலைவர் பாரதியும், கவிப்பேரரசும் என்னோட ஸ்கூல் competition prizes க்கு எல்லாம் ராயல்டி claim பண்ற அளவுக்கு ஆட்டம் போட்டு இருக்கேன்...:-)

தமிழ் சினிமா பாடல்களை பொறுத்த வரை ரெண்டு ரகமானவர்கள் இருக்காங்கன்னு நான் நெனைக்குறேன்....
ஒரு ரகம் வைரமுத்து ரசிகர்கள், மறுரகம் தமிழ் சினிமா பாட்டு கேட்காதவர்கள் / புரியாதவர்கள் .
உண்மையில் அவருடைய வார்த்தை விளையாடல்களுக்கு மயங்காதவர்களை நான் இன்னும் சந்தித்ததில்லை....
எந்த ஒரு உணர்வுக்கும், உறவுக்கும் உயிரோட்டமுள்ள எழுத்து வடிவம் கொடுக்க முடிந்தவர். தமிழ் படித்த கவிஞரின் trendy technical language ம், ஒட்டு மொத்த காமத்துப் பாலையும் ஓரிரு வரிகளுக்குள் திணிக்க முடிந்து விடும் திறமையும் நான் மேற்கோள் காட்டி ஞாபகப் படுத்த வேண்டிய அவசியம் அவரை படிக்கும், கேட்கும் யாருக்கும் இருக்க போவதில்லை....
ஆனால் கவிஞருக்கு "சமுத்திரம் கடக்க ஆசை பட்டவன் நான்...ஒரு சிப்பிக்குள் நீச்சல் அடித்து கொண்டு இருக்கிறேன்" ன்னு தன்னுடைய தேடல் சினிமாவில் முடங்கி இருப்பதாக ஒரு குறை உண்டு....அந்த தேடலுக்கு வடிகாலாக அவருடைய படைப்புகளில் ஒரு முழுமையை கொண்டு வர முயற்சிக்கும் தீவிரம் கருவாச்சியிலும்....

தண்ணீர் தேசத்திலும், கள்ளிக்காட்டிலும் எப்படி ஒவ்வொரு விஷயத்தையும் கண்டு, அறிந்து, அனுபவித்து எழுத்தில் கொண்டு வந்தாரோ அதே மாதிரி இங்கயும் ஒவ்வொரு விஷயத்தையும் வெறும் ஏட்டறிவை கொண்டு எழுதாமல், கண்டு கேட்டு அனுபவித்து எழுதி இருக்காரு......
கள்ளிக்காட்டில் பேயத்தேவர் ஒரு பசுவுக்கு பிரசவம் பார்க்கறப்போ, இங்க படிக்கறவங்களோட தொண்டைக்கும் வயித்துக்கும் ஏதோ ஒண்ண அடைக்க வெச்சவரு, இங்க ஒரு படி மேல போயி, கருவாச்சிய அத்துவான காட்டுல தன்னந்தனியா பிரசவிக்க விட்டு, கருவாச்சி பெத்து பொழச்சதும் படிக்குற நமக்கு வயித்துச் சுமை இறங்கிட்ட மாறி பெருமூச்சு வரவழைக்குறாறு.
கருவாச்சி கருவாட்டு கொழம்பு வைக்கும் போது நமக்கு நாக்கு ஊருது....
கருவாச்சிக்கு அவங்கம்மா உடம்பு பிடிச்சு விட, நமக்கு சொகமா இருக்கு....இப்டி காவியம் முழுக்க அவரோட ராஜ்யம்....

ஆனா அத்தியாயத்துக்கு அத்தியாயம் கருவாச்சி படும் கஷ்டங்கள் தாங்க முடியலை....பக்கம் பக்கமா அவள பாடாப்படுத்தி வெக்குறப்போ "சொல்லுங்க கவிஞரே! what next is waiting for her????" ன்னு ஒரு அலுப்பு வருது...அலுப்பு ன்னு சொல்லுறதுக்காக வைரமுத்து maniacs என்னை மன்னிக்கட்டும்....I myself is one by the way.

தமிழ் ரோஜாவையும், கலைவண்ணனையும் உயிரோட கரையேத்தி, தண்ணீர் தேசத்தை கண்ணீர் தேசமாக்காமல், புண்ணியம் சேர்த்துக்கொண்ட கை தான், பேயத்தேவரைக் கொன்று போட்டு மொக்கராச அனாதையா ஆக்கிச்சு....கருவாச்சில இன்னும் ஒரு முப்பது பக்கம் பாக்கி இருக்கு.......என்ன பண்ண காத்துருக்காரோ கவிஞர்????






13 comments:

Maddy said...

உங்கள் ஏக்கம் புரியுது. நீங்க சொன்னது போல priorities change அப்பபோ!! ஆனால் படிக்கனும்ன்னு ஒரு தாகம் இருக்கும்போது நிச்சயம் அதை விட போறதில்லை. பெருமைய ஒன்னும் சொல்லலை, இங்கே தமிழ் புத்தகங்கள் கிடைக்காததனால் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்து சில நல்ல எழுத்தாளர்கள் படைப்புகளை படிக்க நேரிட்டது!! தமிழ் இப்போ இங்கே நிறைய பதிவர்களின் படைப்பை படிக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு.

Truth said...

நீங்க சொன்ன எல்லா கதைகளும் படிச்சிருக்கேன். கருவாச்சி தவிர, ஏன்னு தெரியல. படிக்கனும்.
வில்லோடு வா நிலவு படிச்சிருக்கீங்களா?

Anonymous said...

நேற்று கூட "கருவாச்சி காவியம்" வாங்க வேண்டும் என்று தோன்றியது...கவிஞரின் தமிழுக்கு அடிமையாய் இருந்தாலும் ஏனோ "கருவாச்சி காவியம்" மிகவும் சோகம் என்று கேள்விப்பட்ட பொழுதில் இருந்து ஒரு தயக்கம் இருக்கிறது... ஆனாலும் அவரின் வார்த்தை ஜாலத்தை படிக்கவாவது நான் படிக்க வேண்டும்...
தண்ணீர் தேசம் - எத்தனை முறை படித்தாலும் திரும்ப படிக்க தோன்றும்...

இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள், சிற்பியே உன்னை செதுக்குகிறேன், கொஞ்சம் தேநீர் ...... இப்படி சொல்லி கொண்டே போகலாம்...

பிரியா அக்கா... அது அந்த பயம் இருக்கட்டும் :) :) :) .... அடிக்கடி உங்க writing post பண்ணல fans club சார்பா ஆள் அனுப்புவோம்ள...

ரிதன்யா said...

இரண்டு மூன்று தொடர்கள் மாட்டும் படித்தேன். அப்புறம் நிறுத்திவிட்டேன். படித்தால் முழுதும் படிக்க வேண்டும் என்பதால்.
புத்தகம் வாங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிறது, இன்னும் தொடவில்லை.
ஆமா இந்தியா வந்தபின்னாடி 2,3 பதிவுதான் போல. எழுதுங்க...

Anonymous said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

ரிதன்யா said...

PDF கோப்பு இருக்கு, வேணும்னா என் வலைப்பூவில் இருக்கு இறக்கிக் கொள்ளுங்கள்.

Anonymous said...

Off Topic:
Don't miss Cho's speech on Annual Day to be telecast in Jaya TV: Saturday, 17th Jan at 11AM

Appadiye Arjun-n latest photo onnu podunga!

ப்ரியா கதிரவன் said...

Maddy, Raji, Truth, Rethanya,
Thanks a lot for commenting here.

Truth,
வில்லோடு வா நிலவு படிச்சதுல்ல...படிக்குறேன்.

Raji,
Thanks for ur pongal wishes.

நவீன பாரதி,
முதல் முறை வந்துருக்கீங்க போல...வாங்க.
சோ பேச்சு பத்தி prompt பண்ணதுக்கு ரொம்ப நன்றி.

உங்க பேரு நல்லா இருக்கு....
பாரதின்னாலே நவீனம் இல்லையா??? அதென்ன நவீன பாரதி????

ப்ரியா கதிரவன் said...

To all,

அர்ஜுன் latest photo, blogger profile ல போட்டுருக்கேன்:-)

Anonymous said...

Priya Akka..

Cho sweet :) :)

ஒரு வழியா எங்க கண்ணுல cute kutty ஓட latest போட்டோ காட்டியாச்சு.
thanks..

ஆனா நாங்க இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் :) :) எங்களின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும்

Anonymous said...

அப்புறம்?

புன்னகை said...

உங்களோட "கோயில் கொஞ்சம் போர் அடிச்சா..." பதிவப் படிச்சிட்டு தான் மத்த பதிவுகள படிக்க ஆரம்பிச்சேன். உங்களோட எழுத்து நடை ரொம்பவே பிடிச்சுப் போச்சு.
கருவாச்சிய முழுசா படிச்சு முடிச்சீங்களா இல்லையா? :-)

ப்ரியா கதிரவன் said...

படிச்சுட்டேன் புன்னகை.
ஆனால் முடிவு எனக்கு அவ்ளோ சுகம் இல்லை.