Wednesday, 29 October 2008

ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி BMTC பஸ் ல ஏறினேன். நான் எறங்க வேண்டியது just ரெண்டு stops தள்ளி. 5Rs டிக்கெட் cost. கண்டக்டர் கிட்ட அஞ்சு ரூபாவை நீட்டுனேன். அவரு டிக்கெட் குடுப்பாருன்னு எதிர் பாத்தா , ரெண்டு ரூபா மீதி குடுத்துட்டு பேசாம போய்ட்டாரு. 'ஒரு வேளை, சாதா பஸ், ஸ்பெஷல் பஸ் மாறி இருக்கும் போல....இந்த பஸ் ல மூணு ரூவா தான் டிக்கெட் போல' ன்னு நெனச்சுட்டு 'அவர் அவசரத்துல டிக்கெட் குடுக்காம போயிட்டாரோ என்னவோ, செக்கிங் ஏதும் வந்துற போறாங்க' ன்னு தவிப்பா இருந்தேன். நடுவுல ஒரு சிக்னல் ல கொஞ்சம் பேரு ஏறினாங்க. அவங்களுக்கு டிக்கெட் குடுக்க வந்தப்போ தான் கவனிச்சேன். யாருக்குமே அந்த ஆளு டிக்கெட் குடுக்கலை....என் stopping பேரு சொல்லி டிக்கெட் கேட்ட எல்லாருக்குமே, 2Rs மீதி குடுத்துட்டு போய்ட்டாரு.அப்போ தான் எனக்கு மேட்டர் வெளங்கிச்சு....அதாவது அந்த அஞ்சு ரூவாக்கு கணக்கு இல்ல......no ticket. 60-40 ன்னு அவரா ஒரு (அ)நியாய கணக்கு போட்டு மூணு ரூவா அவருக்கு, ரெண்டு ரூவா passenger க்கு பிரிச்சு குடுக்குறாரு. எனக்கு தாங்கலை...


BMTC பஸ் ல பயணம் செய்றது எதுக்கு சமம் ன்னு அதுல பிரயாணம் பண்ணவங்களுக்கு தான் தெரியும்.2002 செப்டம்பர் ல இருந்து 2004 மே வரைக்கும், BTM ல வாசம். ஆபீஸ் domlur ல...அப்போல்லாம் ஆட்டோ என்பது எனக்கு அவசரத்துக்கு மட்டும். அதோட, ரிங் ரோடு ல ஆட்டோ ல தனியா போகாதேன்னு நெறைய பேரு அட்வைஸ் பண்ண போக, கஷ்டமா இருந்தாலும் எப்போதும் BMTC யிலேயே போவது வழக்கம்,
201G,205,411,412 இந்த பஸ் ல எல்லாம் ரெண்டு வருஷம் travel பண்ணதுல BMTC conductors கிட்ட நெறைய கசப்பான அனுபவங்கள் எனக்கு உண்டு.....அதுனால அந்த கண்டக்டர் கிட்ட ஏதும் கேக்குறதுக்கும் திகிலா இருக்கு.....ஆனா அத அப்படியே விட்டுட்டு போறதுக்கும் மனசு இல்ல...அந்நியன் கிளைமாக்ஸ் ல சுஜாதா எழுதின மாறி, இப்படி டெய்லி அஞ்சு அஞ்சு ரூவாயா.....etc etc...government ஐ ஏமாத்தினா.....அப்டின்னு மனசுக்குள்ள குமுறிட்டேன். next ஸ்டாப் வந்துச்சு, அதுக்கு அடுத்த ஸ்டாப் ல நான் எறங்கனும். இந்த stop ல ஏறினவங்களுக்கு ticket குடுக்க அந்த ஆளு வந்தாரு. அவரு குடுத்த ரெண்டு ரூவாயை எடுத்து அவர்கிட்ட நீட்டி,"பேடா, நன்கே 5Rs ticket கொடி"ன்னு சொன்னேன். நான் கேட்பதாய் நெனச்சு மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டேனா இல்ல அவருக்கு கேக்கலையா தெரியலை..... கேட்டதையே காதுல வாங்காத மாறி போயிட்டாரு....எனக்குள் இயலாமை பொங்கியது.....ஆனா உண்மையில் என்ன செய்வதென்று தெரியலை....எனக்கு இதற்கு முன் ஏற்பட்ட BMTC அனுபவங்கள் என்னை ஏதும் பேச விடவில்லை...பேசாமல் இறங்கி வந்துட்டேன். ஆனால் மனதில் இன்னும் லேசான வருத்தம் இருக்க தான் செய்கிறது.

டென்மார்க் போறதுக்கு முன்னாடி நான் கூட, fake medical bills எல்லாம் submit பண்ணிருக்கேன், tax exemption காக. ஆனா அங்க உள்ள system பார்த்துட்டு(அப்படி ஒரு trust..... government வந்து யாரையும் tax கட்டுங்கன்னு கேக்குறதில்ல...மக்கள் லாம் அவங்களே ஒழுங்கா கட்டுறாங்க... அதுனால தான் அவ்ளோ பணக்கார நாடா இருக்காங்க....) நானும் அவரும் முடிவு பண்ணோம், இனி எந்த காரணத்துக்காகவும் 'ஒரு சல்லி காசு ஏமாத்தக் கூடாதுன்னு'.

எங்க things லாம் சென்னை ல இருந்து பெங்களூர் move பண்றப்போ, packers and movers கேட்ட மொத கேள்வி, "பில் எவ்வளவு ரூபாய்க்கு வேணும்?"
"உள்ள amount க்கு குடுங்க, எக்ஸ்ட்ரா ஏதும் போட வேணாம்" ன்னு சொன்ன எங்களை "சரியான கேனையனா இருப்பாய்ங்க போலிருக்கு" ங்குற மாறி ஒரு பார்வை பார்த்தாங்க...

furnitures வாங்க போனா, "bill இல்லாம தரோம், அப்போ நீங்க VAT pay பண்ண வேணாம்...ஆனா guarantee க்கு எந்த problem ம இல்லாம பாத்துக்குறோம்" ன்னு சொல்லுறாங்க...
"வேணாம், VAT குடுத்தே வாங்கிக்கிறோம், bill போடுங்க" ன்னு சொன்னா எரிச்சலா பாக்குறாங்க.

எலக்ட்ரானிக்ஸ் கடைல ,"cash pay பண்ணுங்க, discount தரோம் " ன்னு சொல்லுறாங்க. "card ல pay பண்றோம், discount வேணாம்" ன்னு சொன்னா, "லூசாய்ய்யா நீ" ன்னு கேக்காம பாக்குறாங்க....

"எல்லாரும் tax கட்டிண்டு தான் இருக்கா, அவஸ்தை பட்டுண்டு தான் இருக்கா"
"எல்லாரும் செய்றதுனால தப்பு சரியா ஆயிடாது நந்தினி"

எனக்கு மிக மிக பிடித்த சுஜாதாவின் வசனம். அட்லீஸ்ட் நம்ம ஒழுங்கா இருக்கணும், மத்தவங்களை மாத்த முடியாட்டியும்.

16 comments:

Truth said...

நானும் உங்க club தாங்க.
பாதி படிக்கும் போதே எனக்கு ஞபகத்துக்கு வந்த dialogue இது தான்.
"எல்லாரும் செய்றதுனால தப்பு சரியா ஆயிடாது நந்தினி"

சரியா சொல்லியிருக்கீங்க.

~உண்மை.

Raji said...

BMTC bus ல இந்த மாதிரி நடக்குதா... நான் சென்னை ல இந்த பிரச்சனை பார்த்தது இல்ல ஆனா நம்ம ஊரு பக்கம் நிறைய நடக்கும். எதுவும் கேட்க முடியாது . நாம கேட்டா நாம தான் அசிங்க படனும் வேற யாரும் வாய திறக்க மாட்டங்க. இந்த மாதிரி அனுபவம் எங்களுக்கும் இருக்கு. இங்கயாவது பரவாயில்லை நம்ம பக்கம் எல்லாம் அவங்க திட்டுறத கேட்க முடியாது

Priya உங்களின் நேர்மைக்கு Hats Off!

But பொதுவா MTC Bus ல Chinamyi எழுதுன மாதிரியான problem தான் ரொம்ப அதிகம் ...

ப்ரியா said...

Truth alias Kiran,
thanks for commenting.


நேர்மையா?? ரொம்ப பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க ராஜி.
actually நானும் தான் fake medical bills தந்துருக்கேன்னு எழுதிருக்கேனே....
எனக்கு டென்மார்க் ல போய் ஞானம் பொறந்துச்சு.அதுனால இப்போ ஒழுங்கா இருக்க முயற்சி பண்றேன்.

Raji said...

அது அப்போ .. ஆனா இப்போ :) :)

Maddy said...

முதல்ல உங்க முந்தய கமெண்ட் கேள்விக்கு பதில்.......

இந்தியா ட்ரிப் நல்லாவே இருந்தது. எல்லோரும் நலம். நீங்களும் நலமா இருப்பிங்கன்னு நம்புறேன்.

ராஜி,
நான் இந்தியா வந்திருந்தேன், அதனாலே இங்கே வரவில்லை.

கமெண்ட் டு திஸ் போஸ்ட்::
நேர்மையாய் இருக்க நினைக்கறதும் நேர்மையாய் இருக்கறதும் எந்த காலத்திலும் நமக்கு நிம்மதியை கொடுக்கும். எனவே, அய்யயோ தப்பு பண்றோமேன்னு நினைக்கவேண்டாம். அப்படி உங்களுக்கு மனசு உறுத்தினா, நிவாரண நிதிக்கு கொடுத்துடுங்கோ எப்போவது. உங்க கடன் அடைச்ச சந்தோசம் கிடைக்கும்.
வரி கட்டமயோ, விதியை மீறி நாம் செய்யற காரியங்கள் நம்மள indirect ஆ பாதிக்குதுன்னு யாரும் நினைக்கிறது இல்லை. ஒவ்வொருத்தரும் உங்கள மாதிரி சிந்திச்ச இந்தியா இன்னும் எவ்வளவோ நல்ல இருக்கும். வாழ்த்துக்கள்.

""எனக்கு டென்மார்க் ல போய் ஞானம் பொறந்துச்சு.அதுனால இப்போ ஒழுங்கா இருக்க முயற்சி பண்றேன்""........நானும் கொஞ்ச நாளா இந்தியா விட்டு வெளியே உள்ளதால் புரிஞ்சக்க முடியுது... இந்தியா-ல எல்லோரையும் ஒரு ஒன் இயர் foreign trip அனுப்பினா மாற்றம் வருமா?

Maddy said...

பிரியா உங்க கமெண்ட் portion use பண்ணறதுக்கு மன்னிக்கவும்.........ராஜி, உங்க போஸ்ட் படிக்க ஏதாவது வாய்ப்பு இருக்க?

Raji said...

Maddy,

நாங்க படிச்சிட்டு comments போடுறதோட சரி. priya blog படிச்சிட்டு ரொம்ப impress ஆகி தான் இப்போ எழுதினேன்.. நான் தான் இப்போ யோசிச்சிட்டு இருக்கேன்..கூடிய விரைவில் ஆரம்பிக்கலாம் :) :) நன்றி உங்களின் ஆர்வத்திருக்கு

Merce said...

Pri,

I showed this post to Livi and happily (proudly) said, "See! How my PRI is nu!"

மணிகண்டன் said...

salute the spirit priya.

ப்ரியா said...

Thanks Merce and Manikandan.
But honestly, I dont find this something great. I feel its all our duty.

ப்ரியா said...

//டென்மார்க் போறதுக்கு முன்னாடி நான் கூட, fake medical bills எல்லாம் submit பண்ணிருக்கேன், tax exemption காக.

இத படிச்சுட்டு அவர் சொல்றாரு,
'இப்படி வாக்குமூலம் குடுத்து இருக்கியே.....வீட்டுக்கு போலீஸ் வரப்போகுது..." ன்னு...
:-)

Suresh Kumar said...

Bangalore BMTC buses are worst in Priya mentioned subject.There are not ready to give ticket for passengers.They started giving tips to us, to close our mouth to hide the mistake.
I have faced the same situation in Bangalore, where in I got the ticket finally but to see the conductor's face was horrible.That was good day for me, so I was cool, otherwise there would have been a war.
We need to do something for this, to change the situation!!!!!!

dskathir said...

பிரியா, உங்கள் நல்லெண்ணம் வரவேற்கத்தக்கதுதான். நானும் பெங்களூர் வந்த புதிதில் இப்படியெல்லாம் feel பண்ணியதுண்டு. but நான் நல்ல யோசிச்சதுல ஒன்னு தோணிச்சு. அதுகுட சரியாதான் இருக்கும்னு நெனைக்கிறேன். என்னதான் நாம மாஞ்சி மாஞ்சி வரி கட்டினாலும் அது directa govt. கிட்ட போனாலும் திரும்பி ஏதாவது திட்டத்துக்குனு வரும்போது எப்படியும் politicians கிட்ட ஒரு round இளைச்சிட்டுதான் அந்த fund வரும். வெறும் சொத்துக்காக பணம் செக்கிரவன்கிட போறத விட conductor மாதிரி ஒரு சாதரண ஆள்கிட்ட போன போயிடு போதுன்னு நினைப்பேன். இது just ஒரு comparision தான். எந்த விதத்திலயும் நியாயப்படுத்த முடியாது. தெரியாத திருடன் கிட்ட பரி குடுக்காத விட தெரிஞ்ச திருடன்கிட்ட விட்டுகுடுத்தொம்னு நினைச்சுக்க வேண்டியதுதான். எனகென்னவோ drivers, conductors, post men, security, hotel servers இந்த மாதிரி நம்ம life ஓட நேரடியா தொடர்புள்ள வேலையில இருக்கவங்க மேல ஒரு soft-corner உண்டு. but இதையே advantage ஆ எடுத்துகிட்டு திமிரா இருந்தவங்க கூட சண்டை எல்லாம் போட்டுருக்கேன் என்பது வேறு.

Padma said...

Pri,

(enna mudhalla mannikanum... tamil font illai... tamila english scriptla padikra kodumaiya sagitchikkitu padinga.)
Unga ennam unnadhamaanadhu,...
Ipdi veli naadugalukku poittu vandhu namma naata kurai sollitu eppa paarthaalum angalam apdi , ipdi,sooper soopernu chumma comparison mattumm solli,verum petchu petchaa irukravanga mathiyila...namma naatlayum edho nammala mudinja alavukku emaathama actionla kondu vandha unga seyala nenatchu na peruma padren...ofcourse this is ur duty , i agree ...aana inga neraya peru avanga dutya ozhunga senjaale namma naadu enniko muneri irukkume.... Self discipline irundhaale podhum...ellame smootha pogum...(again from anniyan) chumma for example(abroadlalaam theruvila oru paper podradhukku kuda romba yosippanglam..they used to carry a separate bag to dispose the unwanted things , adhukkaprama adhai kuppai thottila podhuvaanglaam...inga enganaalum spit panradhu enga naalum edhavenumnaalum pottukittu....) thani manidha ozhukkam konjam kuranjidhaan irukku namma naatla....idhularundhe podhu nalam vandhrumngaradhu ennoda chinna karuthu....sorry if am wrong !

Kadaisiya, dskathir avanga sonnnadha naanum konjam aadharikren...
neraya vasadhi irukkravanga makkala epdi epdiyo emathi innum sothu sethukittudhaan irukkanga..avangakittalam namma kannukku therindho theriyamalo periya levela emaandhukkitudhaan irukkom....anna theruvila..paavam anju pathunu laabam vatchi vikkra kaaigarai thalluvandi vyaabaarikkita.. 2 roobai kooti sollitaana pongi ezhara neraya pera naama paathrukkom... adhukkaga emathravangalukku suppport panla..... namma react panradhukku munadi konjam yosiklaam...

nalla topic..en karuthai ezhudhaama control panna mudiyalai... thavarugal irundha mannikavum :-)

Anonymous said...

I found this site using [url=http://google.com]google.com[/url] And i want to thank you for your work. You have done really very good site. Great work, great site! Thank you!

Sorry for offtopic

Anonymous said...

Who knows where to download XRumer 5.0 Palladium?
Help, please. All recommend this program to effectively advertise on the Internet, this is the best program!