இந்த காதல் மலர் வெளில வந்த நாள். 1:38 PM CET.
ஏற்கனவே 10 days overdue.
அப்போ நாங்க Aalborg, டென்மார்க் ல இருந்தோம், ரொம்ப குளிர் நாடு and ரொம்ப குளிரான டைம், so என் பையன் வந்து 'எதுக்கு வெளில போய் குளிர் ல கஷ்ட படணும், இன்னும் கொஞ்ச நாள் warm ஆ உள்ளேயே இருந்துட்டு போலாம் னு முடிவு பண்ணி 10 days extra வா stay பண்ணிகிட்டான், அன்னைக்கும் நான் எவ்ளோவோ வெளில தள்ள try பண்ணியும் , 'நான் வர மாட்டேன்' னு அவன் ஸ்டிரைக் பண்ணி அப்றோம் டாக்டர்ஸ் என்னை கிழிச்சு, (c-sec- ஐ தான் கொஞ்சம் effect குடுத்து சொல்லுறேன்), அவனை வெளில எடுத்தாங்க.
அது வரைக்கும் உலகம் உருண்டை, அது இவ்ளோ பெரிசு அப்டின்னு எல்லாம் நான் geography ல படிச்சதை தான் நம்பிக்கிட்டு இருந்தேன், ஆனா feb 19th க்கு அப்புறம் சில நாட்கள் எனக்கு என்னவோ உலகமே 53cm height,3.47 kg weight னு தான் தோணிச்சு. அப்புறம் இந்த உலகத்துல பால், diaper இது ரெண்டும் தவிர வேற எந்த things ம் முக்கியம் இல்ல னு நெனச்சுகிட்டேன்.
ஏற்கனவே பையன் பொறந்தா Arjun னு பேரு வெக்கணும் னு decide பண்ணிட்டதால் அதே பேரு வெச்சுட்டோம். அவன் பொறந்த டைம் ல Aalborg ல snow storm. one week, பிச்சு வாங்கிடுச்சு. Hospital ல , எனக்கும் அவனுக்கும் window side bed. ஜன்னல் வழியா பாத்தா வெறும் white கலர் தான் தெரியுது, நான் நெனச்சேன் பொண்ணு பொறந்து இருந்த snow white னு வெச்சு இருக்கலாம் னு..:-)
நாங்க one month லேயே இந்தியா க்கு vacation போலாம் னு பிளான் பண்ணிருந்தோம், அதுனால என் புள்ளைக்கு பாஸ்போர்ட் எடுக்கணும்.
அதுக்கு போட்டோ எடுக்க எங்க அம்மாவும் அவனோட அப்பாவும் அவனை தூக்கிட்டு கார் ல studio போனாங்க ... on feb 28th . actually Hospital ல நான் என் பக்கத்து bed ல உள்ள லேடி slight ஆ இருமுணா கூட பயங்கரமா பயப்படுவேன். ஏன்னா என் புள்ள சின்ன sound கேட்டா கூட முழிச்சு ரகளை பண்ணுவான், அப்டி ரவுசு பண்ணுரவன், அன்னைக்கு studio உள்ள நுழைந்த உடனே தூங்கிட்டனாம், எங்க அம்மாவும் அவனோட அப்பாவும் எவ்ளோவோ try பண்ணியும் கண்ணே முழிக்காம இருந்து இருக்கான் அப்றோம் எப்டியோ அவனை முழிக்க வெச்சு போட்டோ எடுத்துட்டு வந்தாங்க,
பாஸ்போர்ட் application ல Signature or thumb impression னு கேப்பாங்களே, ஐயோ என்ன கொடுமை இது சரவணன்!
என் புள்ள கிட்ட thumb impression வாங்குறதுக்குள்ள....
அவன் கையிலே மை தடவி nice ஆ application கிட்ட கொண்டு போவோம், சடார் னு இழுப்பிடுவான் இதே மாதிரி ஒரு 6,7 application கிழிஞ்சது ....கடைசியா அதையும் முடிச்சு அவனுக்கு பாஸ்போர்ட் apply பண்ணோம்.
"ஆமா எவ்ளோ அறிவாளி பிள்ளை அவனை போய் கை நாட்டு வைக்க சொன்னா அவனுக்கு கோவம் வராதா??" - இது என் பெரியப்பா சொன்ன கமெண்ட், நான் இந்த மேட்டர் ஐ அவங்க கிட்ட சொன்னப்போ...
March 21
ஒரு வழியா பாஸ்போர்ட் வாங்கி நாங்க ஊருக்கு கெளம்பிட்டோம், Arjun's first flight!!!
அன்னைக்கு flight ல youngest passenger இவனா தான் இருக்கணும்.
ரொம்ப சமத்தா வந்தான்....ஒரு trouble பண்ல...
ஆனா ஒன்னு, நல்லா தூங்கிட்டு இருப்பான்...எங்களுக்கு food tray குடுக்கும் போது கரெக்ட் ஆ முழிச்சுடுவான் ....பாவம் என்னையும் என் அம்மாவையும் சாப்பிட சொல்லிட்டு என் husband தான் அவனை தூக்கி வெச்சுட்டு இருந்தார்.
இப்படியாக நாங்க மார்ச் 22nd நைட் இந்தியா வந்து சேந்தோம்...
அடுத்த நாளே நம்ம தேசிய வாகனமான ஆட்டோ வில் என் பையனை அழைச்சிட்டு போய் vaccination பண்ணியாச்சு.
April 22
ஏற்கனவே பேரு வெச்சுட்டாலும் கூட relatives எல்லாரையும் அழைத்து naming function னு ஒரு get together வெச்சோம். ஹோட்டல் பரமக்குடி பார்ட்டி ஹால், அண்ணா நகர், சென்னை.
சொந்த காரங்க எல்லாம் அவங்க அவங்க கொண்டு வந்த வளையல், கொலுசு செயின் எல்லாம் அவங்களே போட்டு விட ஆரம்பிக்க என் புள்ள டென்ஷன் ஆயிட்டான். செம கத்து, செம அழுகை. அப்றோம் அவனை சமாதான படுத்தி அந்த gifts எல்லாத்தையும் நானும் அவரும் கையில வாங்கிக்கிட்டோம்.
April 24
என் husband என்னையும் என் புள்ளயும் கொண்டு போய் எங்க அம்மா வீட்டுல விடுறதுக்கு கெளம்பினோம். என் புள்ள train ல சமத்தா தூங்கினான். எந்த பிரச்சினை யும் பண்ல. அடுத்த நாள் காலைல எங்க அம்மா வீட்டுல போய் சேந்தோம். என்னோட தாத்தா பாட்டி க்கு அவங்க முதல் கொள்ளு பேரனை பார்த்த சந்தோஷம் கண்ணில் தெரிஞ்சுச்சு.
இது எங்க அப்பா side தாத்தா பாட்டி. அம்மா side தாத்தா அம்மாச்சி யும் பக்கத்து ஊருல இருக்காங்க. அவங்க வீடு எங்க வீடு விட கூல் ஆ இருக்கும், அந்த தாத்தா வேற கொள்ளு பேரனுக்காக வீட்டுல AC வெச்சாரு. நானும் என் புள்ளயும், எங்க அம்மாவும் அவங்க வீட்டுல போய் one month இருந்தோம்.
என் husband திரும்பி டென்மார்க் போயாச்சு. நான் maternity லீவ் இந்தியா ல இருந்து ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்னு தங்கிட்டேன். என் புள்ள தான் flight ல தொந்தரவு பண்ணலையே so திரும்பி தனியா அவனை தூக்கிட்டு போறதுல பிரச்னை இருக்காது ன்னு நெனச்சு அவரை மட்டும் ஊருக்கு அனுப்பிட்டேன்.
என் புள்ளைக்கு கொசு வலைக்குள்ள மூடி வெச்சா கோவம் வரும்.... காலால ஒரே ஒதை... கொசு வலை வேற எங்கயாச்சும் போய் கெடக்கும், இவன் நல்ல கடி வாங்கிட்டு கிடப்பான்...டிவி பாக்க பிடிக்கும் ஆனா நான் தலைய பிடிச்சு அந்த பக்கமா திருப்பி விட்ருவேன். அவன் என்னை விட பெரிய ஆளு, கண்ண மட்டும் திருப்பி பாப்பான்..
July 10
நான் புள்ளய தூக்கிட்டு டென்மார்க் கெளம்பிட்டேன். flight ல தொந்தரவு பண்ண மாட்டான்னு நான் போட்ட கணக்கு பொய் கணக்கா போச்சு அவன் அழுவ, flight ல இருக்க US போற மாமி லாம் 'பாலு குடு தண்ணி குடு...' ன்னு ஆளாளுக்கு எனக்கு suggestions குடுக்க நான் அழுவ...இப்டி ஒரே scene போட்டு வந்து டென்மார்க் ல அவங்க அப்பா கிட்ட சேந்தோம்...airport ல ஒரே family reunion தான்...:-)
July 30
அவருக்கு Sweden ல job transfer. மறுபடி flight ... மறுபடி அழுகை ஆனா இந்த வாட்டி அவரும் இருந்ததுனால + எனக்கு ஏற்கனவே experience இருக்குறதுனால நான் கொஞ்சம் கூல் ஆ இருந்தேன் ஆனா அவரு ஆடி போய்ட்டாரு. "இவனை எப்டி டீ தனியா தூக்கிட்டு வந்த" னு என்னை பாத்து பாவ பட்டாரு...
" நாங்க இதுக்கு எல்லாம் டென்ஷன் ஆக மாட்டோம் ல" அப்டிங்கற மாதிரி ஒரு லுக் குடுத்தாலும் எனக்கும் உதறலா தான் இருந்துச்சு...
Airhostess அம்மணி வந்து, ' we understand he is only a baby, so do the other passengers, so dont panic that we may feel disturbed , feel comfortable' னு சொல்லிட்டு போச்சு
அதுக்கு அப்பறம் நம்ம ஆளு குழந்தையை தூக்கிட்டு நடக்குறேன்னு சொல்லிட்டு போயி அந்த அம்மணிக்கு ஹலோ லாம் சொல்ல அவங்க கொழந்தைக்கு வெளையாட்டு காட்ட.. என் புள்ள சிரிச்சானோ இல்லையோ இவரு சிரிக்க....எறங்குறதுக்கு முன்னாடி....அந்த அம்மணி நம்ம ஆளு கிட்ட ' i hope to see you in the streets of malmo sometimes' னு சொல்ல நான் மொரைக்க...அது தனி கதை.
இப்படியாக என் புள்ள இன்னொரு நாட்டுக்கு வந்து சேந்தான்.
5½ மாசத்துல தான் குப்புற விழுறதுக்கு பழகினான். ஆனா அதுக்கு முன்னாடியே நான் குப்புற போட்டா தானே மல்லாக்க திரும்பிப்பான்.
பொறந்த டைம் ல இருந்தே நானும் அவரும் மாத்தி மாத்தி அவனை போட்டோ எடுத்து தள்ளி, அவனுக்கு ரொம்ப பழகிடுச்சு, கேமரா வை நாங்க கைல எடுத்தாலே போதும் உடனே smile பண்ணி போஸ் குடுக்க ஆரம்பிச்சுடுவான்:-)
September to December
என் inlaws Sweden வந்தாங்க. ஏற்கனவே நான் டென்மார்க் ல பார்த்த வேலைக்கு maternity லீவ் லேயே tata bye சொல்லிட்டு வந்துட்டேன், so அவங்க வந்தோன Sweden ல வேலைக்கு போக ஆரம்பிச்சேன், வேலைக்கு சேர்ந்த மொதல் நாள் ஆபீஸ் ல இருந்து வீட்டுக்கு வரப்போ 'நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்ச வுடனே அர்ஜுன் எப்டி react பண்ணுவான்னு ஒரே கற்பனை பண்ணிட்டு வந்தேன்...சிரிப்பானா அழுவானா தாவி என்கிட்டே வருவானா அப்டி இப்டி யோசிச்சுட்டு வந்தேன் ... ஆனா அவன் என்னை சுத்தமா கண்டுக்கலை...வந்தியா வா போனியா போ மாதிரி ஒரு neglecting look. எனக்கு ஒரே feelings...
விரக்தி ல 'if someone does not miss you, its good for that someone, so why worry?' அப்டின்னு ஒரு பழமொழி(??) எழுதி அவர்கிட்ட காமிச்சா அவர் தூ னு துப்பாத குறை...
அப்புறம் அவன் இப்டி இருந்தா தான் அவனுக்கு நல்லது ன்னு மனச தேத்திக்கிட்டேன். ஆனா போக போக அவன் என்னை ரொம்ப miss பண்ண ஆரம்பிச்சான். routine ஆ நான் 8-5 வீட்டுல இருக்குது இல்ல னு அவனுக்கு தெரிய ஆரம்பிச்சது. தினமும் அஞ்சு மணி சுமாருக்கு எல்லாம் வாசலையே பாக்குரான்னு என் மாமியார் சொல்லுவாங்க.
அவனுக்கு 8 மாசம் ஆனதும் அவங்க அவனை உக்கார வெக்க try பண்ணாங்க. அவனும் first கீழ கீழ விழுவான். but slowly, steady யா உக்கார ஆரம்பிச்சுட்டான். அதுக்கு அப்புறம் தவழவும் ஆரம்பிச்சான்.
december end ல inlaws இந்தியா போக வேண்டியதா ஆயிடுச்சு. ' நீ job continue பண்ணு, நாங்க அர்ஜுன் ஐ எங்க கூட கூட்டிட்டு போறோம் னு சொன்னாங்க. எனக்கும் அவருக்கும் மனசு வரல. அவ்ளோ சின்ன வயசுல அவனை day care விடுறதுக்கும் பிடிக்கலை. so நான் வேலைய resign பண்ணிட்டேன். அவனுக்கு ஒரே சந்தோஷம் அம்மா எபோவும் கூடவே இருக்குறது.
க்கா , ப்பா இது தான் அவன் மொதல்ல பேசினது. ஒரு நாள் நான் அவன்கிட்ட cheese ஐ காமிச்சு cheese னு சொன்னேன், அவன் அத நல்ல pick up பண்ணிகிட்டான். அப்போலேர்ந்து cheese cheese னு சொல்ல ஆரம்பிச்சான்.
அதுக்கு அப்றோம் தாத்தா, அத்தை, ஹலோ, இட்லி, எல்லாம் சொன்னான். இது கேள்விப்பட்டு என் தம்பி டென்ஷன் ஆகி மாமா சொல்லிகுடு....ன்னு ஊருலேர்ந்து எனக்கு ஒரே pressure.....என் புள்ள என்னடான்னா மாமா அம்மா இந்த மாறி மா இருக்குற எந்த word சொல்லி குடுத்தாலும் bub bub னு சொல்லுவான், நக்கலா ஒரு சிரிப்பு வேற. எனக்கு அவன் பே பே காட்டுற மாறி இருக்கும். இப்போ அம்மா சொல்ல ஆரம்பிச்சுட்டான். வள்ளுவர் சொன்ன யாழ் music லாம் நான் கேட்டது இல்ல. ஆனா என் புள்ள இந்த words லாம் சொன்னப்போ, especially அம்மா சொன்னப்போ எனக்கு புல்லரிச்சது, என் கண்ணுல கண்ணீர் வந்தது இதெல்லாம் நிஜம்.
அவனோட toys எல்லாம் குவிச்சு வெச்சு (ஒரு பொம்மை கடையே வெக்கலாம்) அதுல யானை பொம்மை எங்க, bat எங்க, pussy cat எங்க, போன் எங்க, ball, balloon,monkey எங்க னு கேட்டா இதெல்லாம் கரெக்ட் ஆ எடுத்து காட்டுறான்.
அவங்க அப்பா கைய சொடுக்கு போடறத பாத்து அவனும் போட கத்துகிட்டது ,
comb your hair னு சொன்னா தலைய சீவுறது, brush your teeth னு சொன்னா பல்லு வெளக்குறது, clap your hands னு சொன்ன கை தட்டுறது, flight எப்புடி போகும் , zzzzzzzzzzz
"அப்பா எங்க போயி இருக்காங்க? " ஆபீசுக்கு ....(அவர் வீட்டுல இருந்தாலும் இதே தான் சொல்லுவான் அது வேற விஷயம் )
இதெல்லாம் பாத்தா எங்க பெரியப்பா சொன்ன மாறி அறிவாளி பிள்ளை தானோ னு தோணுது...ஆனா ஒரு சின்ன doubt.
எனக்கும் அவருக்கும் அறிவாளி பிள்ளை எப்புடி............???
hmm...கடவுள் ஒரு குடும்பத்துல எல்லாரையுமா லூசா படைப்பாரு....:-)
இப்போ வரைக்கும் செல்ல மழைய பத்தி தான் சொல்லிக்கிட்டு இருக்கேன், இப்ப சின்ன இடி...
என் புள்ளைக்கு சாப்பாடு ஊட்டுறது மாதிரி ஒரு himalayan job இருக்க முடியாது,
அதாவது என் புள்ள solids சாப்பிட ஆரம்பிக்கற வரைக்கும் எனக்கு பாத்திரம் வெளக்குறது, சமையல் பண்ணுறது எல்லாம் தான் பெரிய வேலையா இருந்துது ...இப்போல்லாம் அர்ஜுன் சாப்பிட்டாச்சுன்னா 'அட எவ்ளோ பெரிய வேலைய முடிச்சுட்டோம், மத்ததெல்லாம் என்ன ஜுஜுபி னு தோணுது...' sniff.
அவனுக்கு ஒவ்வொரு ஸ்பூன் சாப்பாட்டுக்கும் ஏதாவது புதுசா காமிக்கணும்.
அவனோட பொம்மை எல்லாம் bore அடிச்சு, இட்லி தட்டுலேர்ந்து pen drive வரைக்கும் எல்லாத்தையும் காட்டியாச்சு இது வரைக்கும்.
நேத்து வீட்டுக்கு வந்து இருந்த guests க்கு pista குடுத்தோம் snacks. அவங்க போனதும் அவங்க டேபிள் மேல போட்டுட்டு போயி இருந்த pista ஓடு எல்லாம் எடுத்து அவரு dustbin ல போட போனாரு, நான் 'என்னங்க அத தூக்கி போட்ராதீங்கன்னு' கத்த, அவரு இது எதுக்கு னு look. ' இத வெச்சு ஒரு நாலு வாய் சாப்பாடு குடுத்துடுவேன்னு' நான் அந்த ஓடு எல்லாம் சேத்து வைக்குறத பாத்து எங்க ஆளு அழுவுறதா சிரிக்குறதா னு தெரியாம முழிக்குறாறு...பாவம்.
actually அதுல நெறைய tactics இருக்கு.
-first of all, நான் காட்டுற thing வந்து அவன் ஒரு spoooooooooooooooooon சாப்பாடு வாயில வாங்கிக்குறதுக்கு, worth ஆனதான்னு பாத்து யோசிச்சு decide பண்ணுவான். அப்டி அவனுக்கு ஓகே னு தோணிச்சுன்னா அந்த thing ஐ கையில வாங்குவான் அப்டி வாங்குறப்போ அவன் வாய் open ஆகும், அந்த சைக்கிள் gap ல நான் ஸ்பூன் ஐ அவன் வாயில திணிச்சுடுவேன்.
அப்படி WORTH இல்லன்னு அவன் நெனச்சான்னா செல்லாது செல்லாது னு சொல்லாம சொல்லிட்டு போய்கிட்டே இருப்பான். இல்லாட்டி அந்த thing ஐ கைல வாங்கி தூக்கி கடாசிடுவான்..:-(
-முதல் ஸ்பூன் கும் ரெண்டாவது ஸ்பூன் கும் காமிக்குற things ல variety காமிக்கணும், அதாவது முதல் ஸ்பூன் க்கு ஒரு பூனை பொம்மை காமிக்குறேன்னு வெய்யுங்க...ரெண்டாவது ஸ்பூன் க்கு பூனைக்கு எந்த வித சம்பந்தமும் இல்லாத வேற ஒண்ணு, அதாவது நிறம், shape, texture இப்டி எல்லாத்துலயும் வேற மாறி இருக்குற ஒரு போன் பொம்மை, இல்லாட்டி ஒரு ever silver டம்ளர் இது மாறி.
-by chance நான் எதாச்சும் costly சமாசாரங்களை (for ex: மொபைல் போன்) அவன் கைல குடுத்து ஒரு ஸ்பூன் food அவன் வாயில குடுத்து , அதான் வாயில வாங்கிட்டானே னு நெனச்சு அந்த போன் ஐ திரும்பி வாங்கினேனோ...தொலஞ்சுது ....அவன் என்னை விட கில்லாடி....அந்த சாமானை நான் அவன் கையில விட்டு வைக்குறேனா திரும்பி பிடுங்கிக்குறேனா செக் பண்ணுறதுக்கு அவனும் அந்த சாப்பாட உள்ள தள்ளாம வெயிட் பண்ணுவான்....நான் வாங்கிட்டேன்னா அவனும் பட்டுனு சாப்பாட வெளிய துப்புவான் பாருங்க ...அப்போ எனக்கு வர்ற கோவத்துக்கு ரெண்டு drained battery எடுத்து என் ரெண்டு காதுலயும் சொருகிட்டா அது பாட்டுக்கு சார்ஜ் ஆயிடும் full ஆ...
என் வீட்டுகாரர் aalborg கிளப் ல கிரிக்கெட் ஆடுவார். அங்க அவங்க bat குடுத்தாலும் இவர் இந்தியா ல இருந்து 10000rs க்கு ஒரு MRF bat வாங்கினார். சின்ன வயசு ஆசையாமாம். அவர் வாங்கினப்போ 10000rs க்கு ஒரு bat ஆ?? னு பொருமலா இருந்தேன். ஆனால் இப்போ அந்த bat எனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணுதுன்னு தெரியுமா? Brett Lee, முரளிதரன் லாம் bowling போட , எங்க ஆளு 4,6 னு பட்டைய கெளப்ப, பின்னாடி harsha's commentary வேற வரும்...(கற்பனை bowling ல, பேட்டிங், commentary ரெண்டுமே பின்னுவாரு அவரு....பாக்குறது நானும் என் புள்ளயும் ) இவரும் சச்சினும் ஆடுரதாவும் இவர் சச்சின் விட நெறைய runs குவிக்குறதாவும் commentary பண்ணி வெறுப்பேத்துவாரு.என்ன பண்ணி தொலைக்குறது ? என் புள்ள சாப்புடுரானே ன்னு நானும் இந்த கொடுமை எல்லாம் சகிச்சுக்குவேன்..அவரு கரெக்ட் ஆ ball ஆ timing பண்ணி strike பண்ணா மட்டும் என் பையன் ஆ னு வாய தொறப்பான்...unconscious ஆ .நான் அத கரெக்ட் ஆ timing பண்ணி அவன் வாயில அந்த ஸ்பூன் ஐ நுழைப்பேன். நான் கொஞ்சம் timing miss பண்ணா கூட முடிஞ்சு போச்சு. அந்த ball எனக்கு வேஸ்ட் ஆயிடும்.
முந்தா நாள் ஆஹா fm கேட்டுட்டு இருந்தேன். அதுல பிருந்தா னு ஒரு ஒருத்தவங்க வந்து டிப்ஸ் குடுத்தாங்க. "கொழந்தைங்க முன்னாடி சாப்பாடு போட்டு வெச்சுடனும் அது தன்னால சாப்பிட பழக்கணும்...அது first கொஞ்ச நாளைக்கு சாப்பாட நாலு பக்கமும் இறைக்கும் ஆனா நம்ம கோபப்படக்கூடாது "அப்டி ன்னு...
சாப்பாடை இறைக்குறது பத்தி சொல்லுறாங்க ஆனா தட்டை தலை கீழா கவுக்குற பய புள்ள பத்தி சொல்லலை...:-(
நானும் ஒரு மாசத்துக்கு மேலேயே தினமும் அவனுக்கு முன்னாடி சாப்பாடு போட்டு வைக்குறேன்...அவன் தட்டு எடுத்து தலை கீழா கவுத்துட்டு என்னை பாப்பான், அதுலயும் இன்னைக்கு afternoon, அவனை off-diapers, விட்டு இருந்தேன். அவன் தட்டையும் கவுத்து அந்த பூவா மேல சுச்சு வும் போயி வெச்சுட்டு என்னை பாக்குறான்...மறுபடியும் எ கொ இ ச ....அதாங்க என்ன கொடுமை இது சரவணன்.
இதெல்லாம் இல்லாம அவனை அவனே கண்ணாடி ல தொட்டு பாக்குறது , ஓடி பிடிச்சு sorry தவழ்ந்து பிடிச்சு வெளாடுறது, என் தலைய முட்டுறது, அப்பா கண்ணாடி எடுத்து தூக்கி போடுறது, ஜன்னல் வழியா கார் பாக்குறது, bread ஐ பிச்சு பிச்சு போடுறது, hide and seek, blocks லாம் நான் அடுக்கி வெச்சா கலைச்சு போடறது, bath tub ல தண்ணி ல நாலஞ்சு duck, fish பொம்மை லாம் போட்டு அது கூட velaaduradhu , இருக்கிற எட்டு எலிப்பல்லை வெச்சு என்னை கடிக்குறது,pram ல வெளில போறது இதெல்லாம் அவனுக்கு ரொம்ப பிடிச்சது. rhymes CD கேப்பான். அவன் கேக்குறானோ இல்லையோ, நான் கேட்டு கேட்டு எனக்கு நாற்பது rhymes மனப்பாடம் ஆயிடுச்சு. chubby cheeks and twinkle twinkle are his favourites....இப்போதைக்கு எனக்கும் அதே தான்:-)
pram ல வெளில கூட்டிட்டு போறப்போ கூட கார், பஸ் போற வழியா போனா எனக்கு நல்லது, தப்பி தவறி residential streets வழியா போனேன், அவ்ளோ தான் அவன் கத்துற கத்துல, பாக்குறவங்க நான் அவன் அம்மாவா இல்ல புள்ள புடிக்குறவ புள்ளய கடத்திட்டு போராளா அப்டின்னு கண்டிப்பா நெனைப்பாங்க.
அர்ஜுன் க்கு 4½ months இருக்கும் போது அழகு குட்டி செல்லம் (சத்தம் போடாதே) பாட்டு எங்க வீட்டுல அடிக்கடி ஓடிக்கிட்டு இருக்கும். அத திருப்பி திருப்பி கேட்டதுனாலயோ என்னவோ அவனுக்கு அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். அது எங்க கேட்டாலும் திரும்பி பாப்பான். இப்போ, சகானா, தீ தீ, பார்த்த முதல் நாளே, ரகசிய கனவுகள் ல வர்ற சலலலலேலா theme, Dhoom chale, யாரோ யரோடீ ல வர்ற டும்டும்டமக்க இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்.
தூங்க வெக்குறதுக்கு ஆயர்பாடி, கற்பூர பொம்மை ஒன்று, லாலீ லாலீ, புல்லாங்குழல் குடுத்த, ஸ்ரீரங்க ரங்கா ..இதெல்லாம் பாடிக்கிட்டே 30 minutes நடையா நடக்கணும். என் பாட்டு கேட்டு தூங்குறது விட நடக்குறதுல தூங்குறது தான் உண்மைன்னாலும் என் satisfaction காக பாடிப்பேன்.அவர் அப்பப்போ டிவி ல வர மியூசிக் competitions ல யாராச்சும் ரொம்ப கேவலமா பாடினா 'உன்னை மாறியே பாடுறாங்க பாரு' ன்னு அசிங்கப் படுத்துவாரு....
நமக்கு இதெல்லாம் சகஜமப்பா!!!!
இந்த year அவனோட first birthday க்கு இந்தியா போனோம். போயி கொஞ்ச நாளைக்கு யாரை பாத்தாலும் உதட்டை பிதுக்கி பிதுக்கி ஒரே அழுகை. train ல அம்மா வீட்டுக்கு போறப்போ பக்கத்து seat பையனை பார்த்து இவன் உதடு பிதுக்க, அவன் நான் எதாச்சும் திட்டிட போறேன்னு பயந்து வேற seat க்கு ஓடிட்டான்,
எறங்கும் போது அவன் கூட வந்த மத்த பசங்க எல்லாம் அவனை பூச்சாண்டி பூச்சாண்டி னு கலாசிட்டாங்க...
இந்தியா ல என் cousin ஷாலினி கல்யாணத்துக்கு போயிருந்தோம்.
போனோம் னு பேரு தான், நானும் எங்க அம்மா வும் பாதி நேரம் என் புள்ளய தூக்கிட்டு மண்டபத்துக்கு வெளில தான் நின்னோம். பின்ன என்ன? அங்கே டும் டும் பீப்பீ னு எல்லாம் sound ஆ வாசிக்குறாங்க, எல்லாரும் வந்து கன்னத்தை தொட்டு பாக்குறாங்க...இதெல்லாம் அர்ஜுன் க்கு பிடிக்காதுல்ல...அந்த டும் டும் பீப்பீ sound எல்லாம் overtake பண்ணிட்டான்...:-(
அவனுக்கு first birthday க்கு blazer வாங்கினோம் ...என் husband எங்க வெட்டிங் reception அன்னைக்கு தான் மொதல் தடவையாக life ல blazer போட்டாரு...:-)
எது எடுத்தாலும் வாயில வெக்குறான். முன்னாடில்லாம் அவன் எதையாவது வாயில வெச்சா, நான் no,no னு சொன்ன உடனே கீழ போட்ருவான். அப்புறம் கொஞ்சம் முன்னேறி, நான் பாக்குறேனா னு nice-ஆ check பண்ணிட்டு வாயில வெப்பான்.
இப்போல்லாம் இன்னும் முன்னேறி, என் முன்னாடி வந்து, வாயில எதாச்சும் வெச்சுக்கிட்டு நான் no சொல்றேனான்னு check பண்றான்...:-(
என் தம்பி ஒரு பொம்மை வாங்கி குடுத்தான்....ஒரு அம்மா கரடி 3 குட்டி கரடிங்களை வெச்சு வண்டி ஓடும், 2 நாளைக்கு தான்.....அதுக்கு அப்றோம் இப்ப அம்மா கரடி மட்டும் பாவமா தனியா ஓட்டுது..அதுவும் steering இல்லாம... ....பின்ன? நாங்க தான் அத ஓடச்சுட்டோம்ல?? ....
இந்தியா போறதுக்கு முன்னாடி furnitures பிடிச்சு நிக்க ஆரம்பிச்சவன் , திரும்பி வந்த பிறகு எல்லா furnitures ளையும் ஏற ஆரம்பிச்சுட்டான்...ரெண்டு கையையும் விட்டுட்டு மேல தூக்கிட்டு ஒரு second நிப்பான். அப்றோம் டமால் ....ஆஆஆஆஆஆஆஆ...
furnitures பிடிச்சுட்டு 2,3 steps எடுத்து வைக்குறான்.
இப்படியாக அர்ஜுனின் அட்டகாசங்கள் தொடர்ந்து வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கின்றன. இதை பற்றி இன்னும் blog-குவேன்.
எங்க அம்மா ஏதோ சின்னப்புள்ளத் தனமா இல்ல எழுதி இருக்காங்க?? நீங்களே சொல்லுங்க....என்னைய பாத்தா அப்புடியா இருக்கு???
This blog is dedicated to (no price for guessing), my little brat.
Thanks to Kaviperarasu for, blog title...அவரோட பாட்டுலேர்ந்து சுட்டது தான்...).
பி.கு நீங்கள் இதை படிக்கும் போது 'அட, ஆமா' இப்படி எல்லாம் நினைத்து ஒரு புன்னகையோடு தலை அசைத்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஒன்று அல்லது ரெண்டு புள்ளங்க இருக்குன்னு அர்த்தம்.
'அட எல்லா புள்ளயும் இப்டி தன் பொறந்து வளரும், இதுக்கு எதுக்கு பிரமாதமா இப்டி ஒரு blog' இப்டி உங்களுக்கு தோணிச்சுன்னா கண்டிப்பா நீங்க இன்னும் குழந்தை பெற்று கொள்ள வில்லை என்று அர்த்தம், என்னா குழந்தை பெற்று கொள்ள முன்னாடி குழந்தை உள்ள என் friends என்னிடம் சதா சர்வ காலமும் குழந்தை பற்றியே பேசும் போது நானும் circastic ஆ நினைத்து இருக்கிறேன். ஆனா இப்போ நான் அதையே தான் செய்கிறேன். especially என் bachelor or இன்னும் குழந்தை பெற்று கொள்ளாத couple friends ஐ நான் மீட் பண்ணும் முன்னால் 'அர்ஜுன் பத்தியே பேசி அவங்களை bore அடிக்காமல் வேற எதாச்சும் பேசணும் னு concsious ஆ decide பண்ணுவேன் ஆனா சுத்தி சுத்தி பேச்சு அர்ஜுன் கிட்ட தான் போகும். so நீங்களும் அப்டி ஆயிடுவீங்க னு என்னால கண்டிப்பா சொல்ல முடியும்.
19 comments:
Hey Pri,
i could imagine every act of Arjun, ur writing skills r excellent......keep it going.As a new mom I understand that v luv to talk abt our child non-stop........its a grt feeling......
Priya,
It was like reading a interesting story. Great write up. The cricket commentary strategy to feed was the best piece. Cool one. Guess you got to come with lot of more innovation as he grows. Keep on writing.
Nice to know about Arjun ka! Kudus to you for your excellent narration.
- "Arjun fan" Manikandan
Hi Priya....
Nice write up...enjoyed reading it!!! keep blogging !!
Hi priya,
excellent blog. When i read about your blog my mind already thinks about my own kids. I can very well understand your feelings as i felt the same with my kids. you are right we can never stop thinking or talking about our world our kids.
I am very much impressed with your decision to take a break and be a home maker. i have been wanting to do this myself but never been able to. I am now working towards making that happen.
keep blogging...
Kavitha
(Mother of two girls Triya & Varna)
Pri,
Just got time to read your entire post. Excellent write up dee!!! I enjoy each and every part of your writing. Its really interesting to read abt Arjun's bringing p from the first day of your delivery.
Keep blogging Pri!!!
Hello Priya,
Unga Kathal malarum nee, Karuvil mullum nee padichen. Great writing. itthu ellaamm apdiye thaaanaaa varathu than illaaa.....?(Michal mathana kamarajan padathula fire service Kamal style la padikavum)
Through JayashreeGopalan blogla irunthu than unga siteku vanthen. Aavanga one time tamilla blogga etho site solli irunthanga..ippo again athu enga solli irunthangannu kandu pudika mudiyalai. Neenga recentaa tamil typing kathukittinganu therinjuthu. enakum tamil typewriting theriyathu...Tanglish than....Murasu helping this type. but athukum full details ideas illa. Can you help me.
Thanks Vijay.
For tamil typing, check out this site.
http://www.google.com/transliterate/indic/Tamil#
Thanks Priya. Try pannitu thirubi varuven. In between I got a link to "சுரதாவின் 'புதுவை' தமிழ் editor" and tried there to type in english to send message to Jayshree Gopalan. Eluthum pothu nalla than translate achi. Roomba santhosama copy pannikittu avanga commentla poi paste panna kasamusa kasamusanu itho ippudi iruku...
வாரே வா!!!! தத்தி குத்தி தட்டு தடுமாறி நாங்களூம் தமிழ்ல தட்டச்சு செய்ய கத்துகிட்டோம்ல. இனி ரகள ரகளா தான். ஆம்ம்ம்மா.....ம்...வந்துடோம்ல....
adanga...ennanga ithu....appo vera vera etho eluthu ellam vanthuchinga..ippo seriya varuthe...ada...onnum puriyalai ponga..seri parava illa...anyway work aana seri than..ada naan een innum இங்கிலீஷ்ல டைப் அடிச்சிகிட்டு இருக்கேன். அதான் தமிழ்ல நல்லா வருதே. ஒகே பா. டாங்ஷ் fபார் எவிரி திங்கு. பை பா.
vijay,
தமிழில் கலக்க, கலாய்க்க வாழ்த்துக்கள்.
FYKI,
அவங்க பேரு ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
அய்யோ!!!!! அய்யோ!!!! சாரிங்க!!!! எழுதும்போது தப்பாயிருச்சி. (மாமா, டேய்ய்ய்......மானம் போய்டுச்சிடா......பேசும்போது நல்லா வக்கணையாதான் பேசுற....அப்புறம் எழுதும்போது மட்டும் ஏன்டா கோட்டை விட்டுட்ர,) அவங்க பேமஸ் கமண்ட்டு "“உலகம் கோயிஞ்சாமிகளால் ஆனது!!” படிச்ச பிறகும் எப்டிங்க தப்பாச்சி? இதுல கலக்க கலாய்க்க வேற வாழ்த்து சொல்லி இருக்கிங்க. போற போக்கை பார்த்தா அடி வாங்காம இருக்கறத்துக்கே பிரம்ம பிரயத்தனம் செய்யனும் போல இருக்கே!!!!!! ஏதோ உங்களை மாதிரி தமிழ் பெரியவங்க பின்னாடி ஒளிஞ்சிகிட்டு அப்போ அப்போ எட்டி பார்த்து காலம் தள்ள வேண்டியதுதான் போல. நன்றிபா. தவறை சுட்டி காட்டியதற்கு. என்னை மன்னிக்க சொல்லி என் சார்பாக மேடத்துகிட்ட ஒரு சின்ன ரெக்கமண்ட் பண்ணுங்கபா.
ஹலோ பிரியா அக்கா!
ரொம்ப அருமையா அழகா ரசிச்சு எழுதி இருக்கீங்க. எனக்கு குழந்தைங்கன்னா உயிர். எங்க அண்ணா பசங்கதான் எனக்கு இபோ எல்லாம். நா கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைபடுறதே குழந்தைக்காகத்தான்...உங்க blog அந்த ஆசையா இன்னும் அதிகமா ஆகிட்டுது. நா கட்டாயம் சொல்ல வேண்டியது, ரோம்ப இயல்பா நகைச்சுவையோட எழுதினத பாத்தா, உங்களுக்கு sense of humour அதிகம்னு தோணுது . இப்போ இந்தியா வில் இருக்கிற நிறைய பெண்களிடம் இல்லாத நல்ல குணங்கள் (குழந்தை வளர்ப்பில் )உங்களிடம் இருப்பது மகிழ்ச்சி.
... எங்கு வயசு 28 தான். ஆனா உங்க அனுபவம் காரணமாக எனக்கு அக்கா ஆகிட்டீங்க (உங்க வயசு என்னை விட குறைச்சல்னு நா guess பண்ணிகிட்டேன் ...உங்க அர்ஜுன் வயசை வச்சி)..அப்புறம் ஒரு important matter.. நீங்க தமிழ் ல டைப் பண்ண ஈசியா google la ஒரு tool இருக்கு. இதோ link http://www.google.com/transliterate/indic
ok அக்கா, எங்க PM இங்கேதான் இருக்கார், நா work பண்ற மாதிரி scene போடணும். ok.. byee. அர்ஜுன் கு இன்னொரு மாமா இருக்கன்னு சொல்லுங்க..:)
எனக்கு 29 ங்க.
so,
நான் அக்கா தான்.
உங்க மறுமொழிகளுக்கு ரொம்ப நன்றி.
நானும் அதே tool use பண்ணி தான் தமிழ் typing தூள் கெளப்புறேன்....
PM கிட்ட scene போட்டுகிட்டே browse பண்றது ஒரு அலாதி சுகம் தான்.
நடக்கட்டும்....
அதான் 'அக்கா' ன்னு சொல்லிட்டீங்களே அப்புறம் ஏன் 'ங்க' எல்லாம் சொல்றீங்க? ஒருமையிலே கூப்பிடலாம். but நான் respect குடுத்துதான் பேசுவேன் :) அடேங்கப்பா!!! வயச டக்குன்னு சொல்லிட்டீங்க. இது உங்க நிஜமான வயசுதானா? (ச்ச்சும்மா ).. ஒரு வழியா என் application a முடிச்சிட்டேன். இந்த வாரம் நான் தப்பிச்சேன். நித்திய கண்டம் பூரண ஆயுசா போச்சு இந்த developer job. இன்னும் testing அது இதுன்னு ஏகப்பட்ட இம்சை இருந்தாலும் எல்லாம் அடுத்த வாரம்தான் :))... அப்படியே fine tune பண்றேன்னு 2 நாளையும் ஓட்டிடுவேன் ok அர்ஜுன் எப்படி இருக்கார்? அவர பத்தி ஒரு பதிப்பையும் காணோம்???
was a lengthy post, but the kind of events you had described and the language flow was really very interesting.. enjoyed this post very much :-)
நல்ல ரசனையான படைப்பு. நல்ல எழுத்து நடை.
I am at your next post about Mr.Arjun. Do well.
With regards,
Krishna Prabhu
Thanks Yaathreekan and Enadhu Payanam.
Mam,
I am really enjoyed this Post..
Its really fine..
Congrats
Post a Comment